Friday, June 16, 2023

CUSTODY(2023) -தெலுங்கு - கஸ்டடி -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


   2007 ஆம்  ஆண்டு  சென்னை 28  என்ற  பிரம்மாண்டமான  வெற்றிப்படம்  கொடுத்து  சினி  ஃபீல்டுக்கு  வந்த  இயக்குநர்  வெங்கட் பிரபு   இதுவரை  12  படங்களை  இயக்கி  இருந்தாலும் செம  ஹிட்  ;படங்கள்  லிஸ்ட்  எடுத்தால்  சரோஜா (2008)  , கோவா  ( 2010)   மங்காத்தா  (2011)    மாநாடு (2021)   என  நான்கு  பட்ங்கள்  தேறுகிறது . இது  13  வது  படம் ., தமிழ் , தெலுங்கு  ஆகிய  இரு  மொழிகளில்  எடுக்கப்பட்ட  படம் என  வெளியில்  சொல்லிக்கொண்டாலும்  இது  தெலுங்குப்படமாக  எடுத்து  தமிழில்  டப்  செய்யப்பட்டது  போலத்தான்  தோன்றுகிறது. இது  வசூல்  ரீதியாக  தோல்விப்படம்  என்றாலும்  பார்க்கத்தகுந்த  படமே 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


மாநிலத்தின்  முதல்வர்  செய்த  ஊழல்  ரகசியத்தை  வைத்து  அவரை  மிரட்டும்  ஐ ஏ எஸ்  ஆஃபீசரை  சி எம்  அடியாட்கள்  மூல்ம்  போட்டுத்தள்ளுகிறார்/. அது  கொலை  என  தெரியாமல்  மறைக்க  போலியான  கலவர  சம்பவம் , வெடிகுண்டு  சம்பவம்  நிகழ்த்துகிறார். . அந்த  வெடிகுண்டு  சம்பவத்தில்  உயிர்  இழந்தவனின்  தம்பி  தான்  நாயகன் 


 நாயகன்  ஒரு  சாதாரண  போலீஸ்  கான்ஸ்டபிள் .  ஒரு  நாள்  இவர்  நைட்  டியூட்டியில்  இருக்கும்போது  ஒரு  அடிதடி  கேஸ்  விஷயத்தில்  மாட்டிய  இருவரை  லாக்கப்பில்  தள்ளுகிறார்.  அந்த   இருவரில்  ஒருவர்  சிபிஐ  ஆஃபீசர். அவர்  கைவசம்  இருக்கும்  ஆள்  பல  கொலை  வழக்குகளில்  தேடப்படும்  ஆசாமி . அடுத்த  நாள்  காலை  பெங்களூர்  கோர்ட்டில்  அவனை  ஆஜர்படுத்த  வேண்டும். செய்தால்  மாநில  முதல்வர்  பதவி  காலி.  முதல்வரின்  ரகசியங்கள்  அனைத்தும்  தெரிந்தவன்  அவன் 


 விடுவாரா  முதல்வர்? போலீஸ்  படையை  அனுப்பி  அவனைப்போட்டுத்தள்ள  முயல்கிறார். போலீஸ்  கான்ஸ்டபிள்  ஆன  நாயகன்  அவனை  கோர்டில்  ஆஜர்ப்ப்படுத்த   சிபிஐ  ஆஃபீசருக்கு  உதவ  முயற்சிக்கிறார். இதற்குப்பின்  நிகழும்  ஆக்சன்  சீக்வன்ஸ்  தான்  திரைக்கதை 


படத்தின்  முதல்  36  நிமிடங்கள்  நாயகன்  நாயகி  அறிமுகம், காதல் , கல்யாண  முயற்சி என  ஸ்லோவாகச்செல்கிறது. லாக்கப்பில்  இருவர்  அடைபட்ட  பின்  திரைக்கதை  சூடு  பிடிக்கிறது 


நாயகன்  ஆக  நாகார்ஜூன்  மகன்  நாக  சைதன்ய. அப்பாவைப்போலவே   உணர்ச்சிகளை  வெளிக்காட்டாத  முகம், குரல் .. தமிழ்  ரசிகர்களைப்பெரிய  அளவில்  கவர  வாய்ப்பில்லாத  முகம் 


 நாயகியாக  கீர்த்தி  ஷெட்டி. அழகிய  முகம், நடிப்பும்  , முக  பாவனைகளும்  கச்சிதம் 


 முதல்வராக   பிரியாமணி அசத்தல்  நடிப்பு , காமெடிய்னாக  வரும்  பிரேம்ஜி நம்மை  சிரிக்க  வைத்ததை  விட  வில்லன்  அர்விந்த்சாமி  சிரிக்க  வைத்தது  அதிகம் , நல்ல  டைமிங்  சென்ஸ்  டயலாக்  டெலிவரி 


முதல்வரின்  சொல்பேச்சு  கேட்கும்  ஆஃபீசராக  சரத்குமார்  கச்சிதமான  கம்பீரமான  நடிப்பு ., சிபிஐ  ஆஃபீசராக  சம்பத்  கச்சிதம் 


இசை  இளையராஜா  + யுவன்  சங்கர்  ராஜா . பெரிய  அளவில்  ஒன்றையும்  காணோம் 

வெங்கட்  ராஜன்  எடிட்டிங்கில்  இரண்டரை  மணி  நேரம்  படம்  ஓடுகிறது. முதலில்  வரும்  35  நிமிட  ஜவ்வு  இழுப்பை  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 

சபாஷ்  டைரக்டர்


1  போலீஸ்  ஸ்டேஷனில்  குண்டு  திசை  மாறி  வில்லனின்  வயிற்றில்  இறங்க , என்னை  ஏண்டா  சுட்டே? என  வில்லன்  காமெடி  பண்ணும்  காட்சி ? 


2  நாயகி  காமெடியனை  ஏமாற்றி  லிஃப்ட்  கேட்டு  நாயகனிடம்  வர  காமெடியனுக்கு  நாயகியின்  அப்பா  ஃபோன்  பண்ணி  மாப்ளை , பொண்ணு மிஸ்சிங்  என  தகவ்ல்  சொல்வதும்  அப்போது  காமெடியன்  சமாளிக்கும்  காட்சியும் 

3  காமெடியன்  செய்யும்  காமெடியை  விட  வில்லன்  செய்யும்  யதார்த்தக்காமெடி  ஒர்க்  அவுட்  ஆகி  இருப்பது 


  ரசித்த  வசனங்கள் 


1   அப்பா , ஒரு  முக்கியமான  விஷய்ம்  பேசனும்

‘’ 

சரி பேசு 


 சின்ன  வயசுல இருந்து ஒரு  பெண்ணை  லவ்  பண்ணிட்டு  இருக்கேன்


 ஏதோ  முக்கியமான  விஷய்ம்   பேசனும்னியே , அதைச்சொல்லு 


2   வில்லன் = என்னய்யா  நடக்குது  இங்கே ? பொலீஸ்காரன்  நேர்மையா  இருக்கான் , சிபிஐ  நேர்மையா  இருக்கு , மார்ச்சுவரி  டிரைவர்  கூட நேர்மையா  இருக்கான் , மோசமான  ஆளுங்களா  சுத்தியும்  இருக்காங்களே? பேடு  வைப்ரேசனா  இருக்கே? 


3    நீ  அவங்களுக்குக்கல்யாணம்  பண்ணி  வைக்கப்போறியா? உனக்கு  முதல்ல  கல்யாணம்  ஆகிடுச்சா?


4  கார்  ஏன்  ஸ்டார்ட்  ஆகலை ?


 ரேடியேட்டரில்  தண்ணீர்  ஊற்றாம  பெட்ரோல்  டேங்க்ல  ஊத்திட்டானா?


5   உன்னைப்போட்டுத்தள்ளிட்டா  அவந்தான்  அடுத்த  ராஜூன்னாங்க . வேற  யாரோ  ராஜூ  ஆகறதுக்கு  நானே  ஆகிட்டுப்போறேனே?

அதுக்கு  ஏண்டா  இங்கே  குத்துனே? லிவர்  இங்கே  இருக்கு . எங்கே  குத்தனும்னு  கூட  தெரியல, நீ  ராஜூ  ஆகப்போறியா? 

6  உண்மைதான்  ஜெயிக்கும், கொஞ்சம்  லேட்  ஆகும், ஆனா  ஜெயிக்கும். ஒருவாட்டி  உண்மையின்  பக்கம்  நின்னு  பாரு , உன்  வாழ்க்கையே  மாறும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  ஒரு  போலீஸ்.  அவனை  அலைக்கழிக்க  இன்ஸ்பெக்டர்  பகல்  முழுக்க  ஜீப்  டிரைவராக  பணி  செய்யச்சொல்லி  விட்டு நைட்  டியூட்டி  ஸ்டேஷனில்  பார்  என்கிறார்.  நாயகன்  ஸ்டெஷனுக்கு  வந்து  டிரஸ்  மாற்றிக்கொள்கிறார். நைட்  ட்யூட்டி  ஸ்டெஷனில்  பார்க்கும்போது  யூனிஃபார்ம்  போடக்கூடாதா? 


2   செயின்  ஸ்மோக்கரான  வில்லன்  எல்லோரிடமும்  வத்திப்பெட்டி  இருக்கா? எனக்கேட்டு  ரக்ளை  செய்வதும்  வத்திப்பெட்டி  கூட  இல்லாம  எதுக்குடா  பார்ட்டிக்கு  வர்றீங்க? எனக்கேட்பதும்  காமெடி .. அவங்கவங்க  தம்  அடிக்க  அவங்கவங்கதான்  லைட்டரோ , மேட்ச்  பாக்சோ  வெச்சுக்கனும் 


3   சிபிஐ  ஆஃபீசர்  தன்  வசம்  ஐடி  கார்டு  வெச்சுக்க  மாட்டாரா? போலீஸ்  லாக்கப்ல  கெஞ்சிட்டு  இருக்காரு?


4    சரத்  குமார்  வில்லனை  சுடும்போது  துப்பாக்கியில்  புல்லட்  இல்லை  என்பதை  உணர்கிறார். அனுபவம்  மிக்க  ஆஃபீசருக்கு  தன்  கன்  வெயிட்டை  வைத்து  புல்லட்  இல்லை  என்பதை  உணர  முடியாதா? 


5  வயிறில்  துப்பாக்கிக்குண்டு பாய்ந்தும்  பிறகு  தண்ணீரில்  நனைந்தும்  செஃப்டிக்  ஆகிட்யும்  வில்லனுக்கு  ஒன்றுமே  ஆகவில்லை , எப்படி ?


6  க்ளைமாக்ஸில்  ரயில்  எந்த  ஸ்டேஷனிலும்  நிற்காமல்  வேகமாகப்போகிறது . கன் பாயிண்ட்டில்  நாயகி  ரயில்  டிரைவரை  மிரட்டி  வேகமாக  ஓட்ட  வைக்கிறார். சிக்னல்  கிடைத்தால்தானே  ரயில்   போக  முடியும் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ  படம்  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  36  நிமிடங்கள்  ஸ்லோ என்றாலும்  அதற்குப்பின்  வேகம்  தான்  , ஒன்  டைம்  வாட்ச்சபிள்  ரேட்டிங்  2.5 / 5 


Custody
Custody 2023 film poster.jpg
Theatrical release poster
Directed byVenkat Prabhu
Written byVenkat Prabhu
Abburi Ravi (Telugu dialogues)
Produced bySrinivasaa Chituri
StarringNaga Chaitanya
Krithi Shetty
Arvind Swamy
Priyamani
R. Sarathkumar
Sampath Raj
CinematographyS. R. Kathir
Edited byVenkat Raajen
Music bySongs:
Yuvan Shankar Raja
Ilaiyaraaja
Score:
Yuvan Shankar Raja
Production
companies
Srinivasaa Silver Screen
Anji Industeries
Release date
12 May 2023[1]
Running time
148 minutes[2]
CountryIndia
LanguagesTelugu
Tamil
Box office26.8 crore[3]

0 comments: