Friday, June 30, 2023

CHARLES ENTERPRISES (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

 



சுபாஷ்  லலிதா  சுப்ரமணியம்  திரைக்கதை  இயக்கத்தில்  கலையரசன் , பாலு வர்கீஸ் , ஊர்வசி  நடித்த  இந்தப்படம்  2023  மே 19  அன்று  திரையரங்குகளில்  வெளியாகி  சுமார்  வசூலைப்பெற்றது , இப்போது  அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


புராதன  மதிப்பு  மிக்க  வினாயகர்  சிலை  எப்படியோ  நாயகனின்  குடும்பத்தாருக்குக்கிடைக்கிறது . பரம்பரை  பரம்பரையாக  அந்த  சிலை  அவர்கள்  வீட்டில் தான்  இருக்கிறது . நாயகன்  சின்னத்தம்பி    படத்தில்  கவுண்டமணி  போல  மாலைக்கண்  நோய்  உள்ளவர். இதனால்  மாலை  6  மணிக்கு  மேல்  இவருக்குக்கண்  தெரியாது . இந்தக்காரணத்தால்  இவருக்கு  திருமணம்  செய்ய  பெண்  கிடைக்காமல்  தள்ளிக்கொண்டே  போகிறது . இவர்  ஒரு  கடையில்  பணீயாளாக  வேலை  பார்க்கிறார் 


 நாயகனின்  கண்  ஆபரேஷனுக்கு  பணம்  தேவைப்படுகிறது . அதே  போல்  சொந்தமாக  பிஸ்னெஸ்  செய்ய  நினைக்கிறார்  , அதற்கும்  பணம்  தேவைப்படுகிறது . இந்த  நேரத்தில்  தான்  வில்லி  நாயகனிடம்  அறிமுகம்  ஆகி  ரூ 50 லட்சம்  ரூபாய்  தருகிறேன். அந்த  வினாயகர்  சிலையை  எனக்குத்தந்து  விடு  என்கிறார். நாயகன்  மறுக்கிறார்


 ஒரு  கட்டத்தில் நாயகன்  மனம்  மாறி  அந்த  சிலையை வீட்டில்  யாருக்கும்  தெரியாமல்  திருடி  ஒளித்து  வைத்து  விட்டு  வில்லியைத்தேடுகிறார் , வில்லியைக்காணவில்லை . வேறு  ஒரு  நபருடன்  சேர்ந்து  அந்த  சிலையை   இல்லீகல்  ஆக  விற்க  முனைகிறார். இதற்குப்பின்  என்ன  நிகழ்ந்தது  ? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக   பாலு  வர்கீஸ்  ஒரு  சராசரி  இளைஞனைப்பிரதிபலிக்கிறார். திருமணத்துக்குப்பார்த்த  பெண்  செல்  ஃபோனில்  நாசூக்காக  திருமணத்துக்கு  மறுப்புத்தெரிவிக்கும்  காட்சியில்  முக  பாவனைகளை  அழகாகக்காட்டுகிறார்


நாயகனின்  அம்மாவாக  ஊர்வசி   லொட  லொட  என  பேசும்  கேரக்டர். அவருக்குப்பழக்கமான  ரோல் , ஊதித்தள்ளி  இருக்கிறார்


 நாயகனுக்கு  உதவி செய்யும்  தமிழராக  கலையரசன் . நாயகனை  விட  இவர்  வரும்  காட்சிகளில் தான்  உயிரோட்டம்  , கலகலப்பு  இருக்கிறது . ஒரு வேளை  தமிழ் நாட்டுக்காரர்  என்ற  பாசமோ  என்னமோ ? அப்பாவாக  குருசோமசுந்தரம்   குட், ஆனால்  அதிக  வாய்ப்புகள் , காட்சிகள்  இல்லை \\ வில்லி  ஆக   அபிஜா  சிவகலா   அசால்ட்  தோரணையில்  கலக்குகிறார்., வில்லிக்கு  உதவியாளராக  வரும்  மணிகண்டன்  ஆச்சாரி  கச்சிதம் , கலையரசனுக்கு  ஜோடியாக  வரும்   மிருதுளா  குட்  செலக்சன் 


ஸ்வரூப்  பிலிப்பின்  ஒளிப்பதிவு  அழகு , சுப்ரமணியன்  பின்னணி  இசையில்  கவனம்  ஈர்க்கிறார் 

கதையில்  அனைத்து  கேரக்டர்களூம்  அறிமுகம்  ஆகி  மெயின்  கதைக்கு  வரவே  50  நிமிடங்கள்  ஆகிறது , அதற்குப்பின்  ஒரு  மணி  நேரத்தில்  படமே  முடிகிறது . இன்னும்  விறுவிறுப்பாக  படத்தை  கிரிஸ்ப்  ஆக  கொடுத்திருக்கலாம் .  சின்ன  சின்ன  டைரக்சன்  டச் களில்  கவனம்  ஈர்த்தாலும்  ரொம்ப  ஸ்லோ  டிராமாவாக  நகர்வதை  உணர  முடிகிறது 


சபாஷ்  டைரக்டர்


1 போலீஸ்  ஸ்டேஷனில்  நாயகனும் , கலையரசனும்  அறிமுகம்  ஆகும்  காட்சி . முன்  பின்  பழக்கம்  இல்லாமல்  போனாலும்  மனித நேய  அடிப்படையில்  புகாரை  வாபஸ்  வாங்கும்  காட்சி 


2   வில்லியின்  தோரணையான  உடல்  மொழி \\


3    ஊர்வசியின்  பண்பட்ட  நடிப்பு \\

4  படம்  முழுக்க  ஆங்காங்கே  வரும்  நகைச்சுவை  இழைகள் 


5  படத்தின்  முழுக்கதையை  விட  டைட்டில்  போடும்போது  பாட்டில்  சொல்லப்படும்  வினாயகர்  சிலை  பின்னணி  கதை  செம  சுவராஸ்யம் 


  ரசித்த  வசனங்கள் 


1  உங்க    பேரு  சங்கீதாவா?  செல்லமா  சுருக்கி  சங்கி  என  கூப்பிடலாமா?


 அய்யோ  , வேணாம்ங்க 

2  லாட்டரிக்கடைக்காரரே!  உங்க  கடைல  விற்கற  லாட்டரில  எது  பரிசு  அடிக்கும் ?


 யோவ், அது  தெரிஞ்சா  நானே  அதை  எடுத்து  வெச்சுக்க  மாட்டேனா? 


3   ரேஷன்  கடைல  சிசிடி வி  கேமரா  சீப்  ரேட்ல  கிடைக்குமா?


4  எல்லாத்தையும்  கல்யாணத்துக்கு   முன்பே  பண்ணிட்டம்னா  கல்யாணம்  பண்ணிய  பின்  என்ன  செய்ய?


  லவ்  பண்ணலாம் \\


5   பாய்சன்  வாங்கக்கூட  கைல  காசில்லாம  கஷ்டப்பட்டு  அலைஞ்சிட்டு  இருக்கேன்  என்  கிட்டே  வந்து  பஞ்ச  உலோக  சிலை  இருக்கு  வாங்கிக்கறியா?னு  கேட்டா  எப்படி ? 


6  அவனவன்  கடவுள்  கிட்டே  வரம்  கேட்பான் , உனக்கு  கடவுளே  வரமா  கிடைச்சிருக்கே ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மாலைக்கண்  வியாதிக்கு  இந்தியாவிலேயே   ட்ரீட்மெண்ட்  இல்லை  என்று  வசனம்  வருகிறது . இது  தவறான  தகவல்  , கோவை  அர்விந்த்  ஹாஸ்பிடலிலேயே  வசதி  இருக்கிறது . நல்ல  தரமான  சிகிச்சை 


2  நாயகனின்  அப்பா , கலையரசன்  இருவரும்  சந்திக்கும்போது   எங்கேயோ  பார்த்த  முகம்  மாதிரி  இருக்கே  என  இருவரும்  சொல்லிக்கொள்கிறார்க:ள், அதை  வைத்து  ஏதாவது  ட்விஸ்ட்  இருக்கும்  என  எதிர்பார்த்ததில்  ஏமாற்றமே


3  ஏற்கனவே   போலீஸ்  ரெக்கார்டுகளில்  கலையரசன்  பெயர்  இருக்கிறது . ஆல்ரெடி  லாக்கப்பி,ல்  போலீசிடம்  அடி  வாங்கிய  கலையரசன்  கூட  நாயகன்  சுற்றிக்கொண்டு  இருக்கிறார். போலீசுக்கு  நாயகன்  மீது  சந்தேகம்  வராதா ? 


4  இரவு  நேரத்தில்  கண்  தெரிய  டாக்டர்  தந்த  கண்ணாடியைப்போட்டுக்கொண்டு  இருக்கும்போதும்  ஏன்  நாயகன்  அவ்வளவு  தடுமாறுகிறார் ? 


5  வெயிட்டே  அதிகம்  இல்லாத  சின்ன  சிலையை  எதற்கு  காரில்  மறைத்து  வைக்க  வேண்டும் ?    வீதியில்  நிற்கும்  காரில்  ஒளித்து  வைப்பதை  விட  வீட்டில்  ஈசியாக  ஒளித்து  வைக்கலாம், அதுதான்  சேஃப்டியும்  கூட 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - ஒரே  ஒரு  இடத்தில்  லிப்  லாக்  சீன்  இருக்கிறது , மற்றபடி  யூ படம்தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுவராஸ்யமான  ஒன்  லைன்  தான்,  ஆனால்  ரொம்ப  ஸ்லோவான  சராசரி  மெலோ  டிராமாவாகத்தந்திருக்கிறார்கள் , இன்னும்  மெருகேற்றி  இருக்கலாம்   ரேட்டிங்  2.25  / 5 


Charles Enterprises
Charles Enterprises.jpg
Official poster
Directed bySubhash Lalitha Subrahmanian
Written bySubhash Lalitha Subrahmanian
Produced byDr. Ajith Joy
Achu Vijayan
Starring
Production
company
Joy Movie Productions
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageMalayalam
Box office 

0 comments: