Saturday, June 17, 2023

மாலை நேர மல்லிப்பூ(2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிரமா ) @ ஆஹா தமிழ்

 


  சஞ்சய் நாராயணன்  இயக்கத்தில்  உருவான  இப்படம்   திரை  அரங்குகளில்  வெளியாகும்  முன்  நேரடியாக  ஆஹா    தமிழ் ஓ டி டி யில்  ஜூன் 9  முதல்  வெளியாகி  இருக்கிறது . இது  ஓடிடி யில்  ரிலீஸ்  ஆவதற்கு  முன்பே  பல  திரைப்பட  விழாக்களில்  கலந்து  கொண்டு  பல  விருதுகளை  வென்றதாகத்தெரிகிறது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  பாலியல்  தொழிலாளி. அவருக்கு  ஒரு  மகன். பள்ளியில்  படிக்கிறான். அவனுக்கு  அம்மா  பற்றிய  உண்மை  விபரங்கள்  தெரியாது. அடிக்கடி  என்  அப்பா  யாரு? எங்கே  இருக்காரு ? எப்போ  வருவாரு ? எனக்கேட்டுக்கொண்டு  இருக்கிறான், அவனிடம்  உண்மையை  சொல்லாமல்  ஒரு  மாதிரி  சமாளித்துக்கொண்டு  இருக்கிறார்  நாயகி   


வீட்டு  வாடகை  கேட்டு  ஹவுஸ்  ஓனர்  தொந்தரவு  செய்து  கொண்டு  இருக்கிறார். நாயகிக்கு  பணக்கஷ்டம். தவணை , வாய்தா  கேட்டு  சமாளிக்கிறார். பட்ட  காலிலே  படும் , கெட்ட  குடியே  கெடும்  என்னும்  பழமொழிக்கு  ஏற்ப  அந்த  நேரத்தில்  தான்  கொரானா  லாக்  டவுன்  வருகிறது. 


கடுமையான  ஊரடங்கு  அமலில்  இருப்பதால்  நாயகி  தன்  தொழிலைத்தொடர  முடியாத  சூழ்நிலையில்  இருக்கிறார். இதற்குப்பின்  நாயகி  என்ன  செய்தார் ? எப்படி  தன்  பணத்தேவையை  பூர்த்தி  செய்தார் ? மகனுக்கு  உண்மை  தெரியாமல்  பார்த்துக்கொண்டாரா? என்பது  மீதி  திரைக்கதை  


நாயகி  ஆக  வினித்ரா  மேனன். கச்சிதமாக  நடித்துள்ளார். மகனிடம்  உரையாடும்  காட்சிகளில் பாசம்  மிகு  தாய்  ஆகவும்,  ஹவுஸ்  ஓனரிடம்  ஃபோனில்  கெஞ்சும்போது ஒரு  அபலையின்  முகம்  ஆகவும்  மாறுபட்ட  முக  பாவனைகளை  வெளிக்காட்டி  நடித்திருக்கிறார்


மகனாக  வரும்  அஸ்வின்  வயதுக்கு  மீறிய  நடிப்பெல்லாம்  தராமல்  இயல்பாக  கொடுத்த  கேரக்டருக்கு  உண்மையாக  நடித்துள்ளார். 


பெரும்பாலான  காட்சிகள்  வீட்டுக்குள்ளேயே  நடப்பதாக  இருப்பதால்  ஒளிப்பதிவு கச்சிதமாக  தன்  பணியை  நிறைவேற்றி  இருக்கிறது .  பின்னணி  இசை கதை  கூடவே  பயணிக்கிறது 


  2  மணி  நேரம்  ஓடும் அளவு  எடிட்டிங்  செய்திருக்கிறார்கள் . இன்னும்  ட்ரிம்  செய்து  இருக்கலாம

18+  படம்  என்றாலும் முத்தக்காட்சியோ, அரை  நிர்வாணக்காட்சிகளோ  இல்லை . கண்ட்டெண்ட்டுக்காகத்தான்  ஏ  சர்ட்டிஃபிகேட் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகி  சிவப்பு  விளக்குப்பெண்  என்பதை  உணர்த்த  பல  காட்சிகளில்  அவர்  சிவப்பு  உடை  அணிந்திருப்பதாகக்காட்டியது 


2  நாயகிக்கு  க்ளோசப்  ஷாட்ஸ்  அதிகம்  வைத்தால்  நடிப்பு  பற்றிய  விமர்சனம்  எழலாம்  என  யூகித்து  லாங்க்  ஷாட்களாக  வைத்தது 


3  மகன்  தன்  அப்பா  யார்  எனக்கேட்கும்போது  தன்  மனம் கவர்ந்த  கஸ்டமர் ஒரு  சினிமா  புரொடியூசர்  என்பதால்  அப்பா  ஒரு  தயாரிப்பாளர்  என  சொல்வது   


  ரசித்த  வசனங்கள் 


1  இப்ப  இருக்கற பசங்களுக்கு  எல்லா  விபரமும்  தெரியுது , குறிப்பா  கெட்ட  வார்த்தைகள் 


2  நாளை  எல்லாமே சரி  ஆகிடும்


 எப்படிம்மா?

 அது  தெரியாது , ஆனா  சரி  ஆகிடும் 


3  நாளை  முதல்  லாக்டவுன், கை  கூட  குலுக்கக்கூடாதாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 எனக்கு  இதை  விட்டா  வேற  தொழில்  தெரியாது  என  நாயகி  சொல்வதை  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை , ஜவுளிக்கடைகளில்  சேல்ஸ்  கேர்ள் ஆக , கார்மெண்ட்ஸ்  நிறுவனங்களில்  செக்கர்  ஆக  போகலாமே? அனுபவம்  தேவை  இல்லை 


2  நாயகி  ஆடம்பரப்பிரியை  மாதிரி  கேரக்டர்  டிசைன்  செய்யப்படவில்லை. பின் எதற்கு  அந்தத்தொழில்  என்ற  விளக்கம்  இல்லை 


3  ஒரு  கஸ்டமருக்கு  ரூ 2000  என  சார்ஜ்  செய்வதாக  ஒரு  காட்சி  வருகிறது . 30 நாட்களில்  அட்லீஸ்ட்  10  நாட்கள்  என்றாலே  ரூ  20000   ஆகி  விடுது . ஆனால்  ரூ 6000  கூட   வாடகை  கட்ட  முடியாதது  ஏன்? 


4 நாயகி  ஆண்ட்ராய்டு  கேமரா  ஃபோன்  தான்  வைத்திருக்கிறார், ஆனால்  கூகுள்  பே  அக்கவுண்ட்  இல்லை  என்கிறார்


5  வீட்டு  வாடகை  2  மாதம்  பாக்கி  இருக்கும்போது  யாரோ  கேட்டார்கள்  என  ரூ 10,000  கடனாகத்தருகிறார். பின்  ஏமாறுகிறார். 


6 மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாமல் கஞ்சா  கடத்தல்  காட்சிகள்  இடம்  பெறுகின்றன 

7  ஒரு  காட்சியில்  மகனிடம்  அம்மாவுக்கு  வேலை  இருக்கு , என  அறைக்குள்  போய்  கதவைத்தாழ்  இடுகிறார். பின்  ஒரு ஆளிடம்  சேட்  செய்கிறார்/ அப்போது மகன்  திறந்த  கதவு  வழியாகப்பார்க்கிறான். கதவை  யார்  திறந்தார்கள் ? 


8  மகனுக்கு  ஆன்  லைன்  கிளாஸ்  நடக்கிறது , அப்போது  நாயகி  தன்  ஃபோனைக்கொடுக்கிறாள் . அப்போது  அவரது சமூக  வலைத்தளப்பக்கங்களை  லாக்  செய்ய  மாட்டாரா? அதே  போல்  கஸ்டம்ர்ஸ்  யாராவது ஃபோன்  செய்தால்  ஆபத்து , மகனுக்கு  தெரிந்து  விடும்  என  இன்கம்மிங்  கால்ஸ்  லாக்  பண்ண  மாட்டாரா?   


9  ஒரு  கஸ்டமர்  கூகுள்  பே  ஆக  ரூ  2000  தருவதை  நாயகியிடம்  ஜி பே  அக்கவுண்ட்  இல்லாததால் வேறு ஒரு  அக்காவின் அக்கவுண்ட்டில்  பணம்  கட்டி  விடச்சொல்கிறார். அந்தப்பணத்தை  அவர்  வாங்கிக்கொண்டதாக  காட்சி  வரவில்லை, ஆனால்  பக்கத்து  வீட்டில்  300  ரூபாய்  கடன்  வாங்குகிறார்


10  அப்பாஎங்கே  என  அடிக்கடி  கேட்கும்  மகன்  அப்பா  ஃபோட்டோ காட்டுங்க என்றோ , அப்பாவுடன்  ஃபோனில்  பேசவேண்டும்  என்றோ  அடம்  பிடிக்காதது  எப்படி ? ன் , ஆனால்  கிளாமர்   காட்சிகள் எதுவும்  இல்லை . வறுமை  நிலையை  சித்தரிக்கும்  காட்சிகள்  தான்  இருக்கின்றன்




அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  படம்தா


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஒரு  குறும்படமாக  40  நிமிடத்தில்  முடிக்க  வேண்டிய  கதையை  ஜவ்வாக  இழுத்து விட்டார்கள் . ஒரு வேளை  அவார்டுப்படம்னா  அப்படித்தான்  இழுக்கனும்  ; போல ,  ரேட்டிங்  2 /5 

0 comments: