Monday, June 05, 2023

தெய்வ மச்சான் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேண்ட்டசி காமெடி மெலோ டிராமா)

       


விமல்  இதுவரை  நடித்த  படங்களில்   மெகா  ஹிட்  2010 ல்  வெளியான  களவாணி . விமர்சன  ரீதியாக  பாராட்டுக்களை  அள்ளிய  படம்  வாகை  சூடவா (2011) மேலும்  தமிழக  அரசின் சிறந்த  நடிகருக்கான  விருதைப்பெற்றுத்தந்தது , இவரை  பி  அண்ட்  சி  செண்ட்டர்களில் ஹிட்  அடிக்க  வைத்தது  கேடி  பில்லா  கில்லாடி ரங்கா (2012)  , கலகலப்பு ( 2012).  2004  ஆம்  வருடமே  சினி  ஃபீல்டுக்கு  வந்தாலும் 19  ஆண்டுகள்  போராடி   பெயர்  சொல்லும்  படங்களாக நான்கு  படங்களில்  முத்திரை  பதித்திருக்கிறார்.   விலங்கு  வெப் சீரிசும்  இவரது  பேர்  சொன்னது . இந்தப்படமும்  கமர்ஷியலாக  பி  அண்ட்  சி  செண்ட்டர்களில்  ஹிட்  படம் தான் 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  ஒரு  தங்கை , அவளுக்கு  திருமணம்  ஏனோ  தள்ளிப்போய்க்கொண்டே  இருக்கிறது . வில்லனான  ஜமீன்  தாரர்  தன்  தம்பிக்காக  நாயகனின்  தங்கயைப்பெண்  கேட்டு  வந்தபோது  கிழ  போல்ட்டும்   வழுக்கைத்தலையனும்  ஆன  மாப்பிள்ளையை  ஏளனம்  செய்து    நாயகன்  திருப்பி அனுப்பி  விடுகிறார். உன்  தங்கைக்கு  திருமணம்  எப்படி  நடக்குதுனு  நானும்  பார்க்கிறேன்  என  வில்லன்  சவால்  விடுகிறான் \


 நாயகனுக்கு  சின்ன  வயசில்  இருந்தே  அடிக்கடி  கனவு  வருகிறது . அந்தக்கனவில்  ஒரு  ஆள்  இன்னார்  இறக்கப்போகிறார்  என  சொல்வார் . அது  கச்சிதமாக பலித்து  விடும் 


நாயகனின்  தங்கைக்கு  இப்போது  நல்ல  இடத்தில்  ஒரு  சம்பந்தம்  வருகிறது . அன்று  இரவு  நாயகனுக்கு  கனவில்  மச்சான்  இறக்கப்போகிறார்  என கனவில்  அந்த  ஆள்  சொல்ல  நாயகனுக்கு  அதிர்ச்சி 


நாயகனின்  தங்கைக்கு  நிச்சயிக்கப்பட்ட  திருமணத்தை  நிறுத்த வில்லனான  ஜமீன் தார்  தன்  ஆட்கள்  மூலம்  சில  சதி  வேலைகள்  செய்கிறார். நாயகனோ  தங்கையின்  கணவனை  தாங்கு  தாங்கு  என  தாங்குகிறார்.  ஒரு  கட்டத்தில்  கனவில்  மச்சானுக்கு  ஆபத்து  என  சொல்லப்பட்ட  தகவல்  தன்னைத்தான்  குறிக்கிறது  என  நாயகன்  உணர்கிறான். இதற்குப்பின்  கதையில்  நிகழும்  காமெடி  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  விமல் .  நடிப்பில்  எந்த  மாற்றமும்  இல்லை . அதே  அலட்டல்  இல்லாத  டயலாக்  டெலிவரி , கிராமத்தானின்  உடல் மொழி , அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார்


அவரது  அப்பாவாக  ஆர்  பாண்டியராஜன்  ,  பெரிய  அளவில்  காமெடி  பண்ண  வாய்ப்பில்லை   வில்லன்  ஜமீன்  தாரராக  ஆடுகளம்  நரேன் , டம்மி  ரோல் 


 நாயகனின்  நண்பனாக   பால  சரவணன்   அங்கங்கே  காமெடி  செய்கிறார். நாயகி  ஆக  கெஸ்ட்  ரோலில்  நேஹா  ஜா . சமீபத்தில்  கடந்த  50  வருடங்களில்  நாயகியையே  கெஸ்ட்  ரோலில்  வர  வைத்தது  இப்படத்தில்  தான் 

 நாயகனின்  தங்கை  ஆக  புதுமுகம்  அனிதா  சம்பத்  கச்சிதமான  பங்களிப்பு 

கனவில்  வரும்  சாட்டைக்காரனாக  வேல  ராமமூர்த்தி  சில  காட்சிகள்  என்றாலும்  மிரட்டல்  நடிப்பு 


கேமில்  ஜெ  ஆலெக்ஸ்  சின்  ஒளிப்பதிவில்  கிராமிய  அழகைக்கண்  முன்  நிறுத்துகிறார். அஜேஸ்  தன்  இசையில்  இருன்  பாடல்களை  ஹிட்  ஆக்கி  உள்ளார் 


 மார்ட்டின்  நிர்மல்  குமார்  திரைக்கதை  எழுதி  இயக்கி  உள்ளார்  . இரண்டு  மணி  நேரம்  12  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . எங்கும்  போர்  அடிக்கவில்லை 



சபாஷ்  டைரக்டர்



1   நாயகனுக்கு  தபால்  கார்த்தி  என்ற  பட்டப்பெயர்  ஏன் வந்தது  என்பதற்கான  விளக்கத்தை  சில  பல   பில்டப்களுக்குப்பின்  சொல்லும் விதம்  அருமை 

2  நாயகனுக்கு  கனவில்  அடிக்கடி  யாரோ  இறப்பதாக  செய்தி  சொல்லப்படுவதும் அது  அப்படியே   நடப்பதும் 2007 ல்  ரிலீஸ்  ஆன  புலி வருது  படத்தில் இருந்து பட்டி  டிங்கரிங்  செய்யப்பட்ட  காட்சி தான்  என்றாலும்  சுவராஸ்யத்துக்குப்பஞ்சம் இல்லை  

3  அடிக்கடி  அய்யய்யோ  என   அபசகுண டயலாக்  பேசும்  அத்தை  கேரக்டர்  டிசைன்  அருமை . அந்த  நடிகை  உடல்  மொழி , டயலாக்  டெலிவரி  எல்லாம்  அசத்தல் 

4  திருமணத்துக்குப்பின்  நடக்கும்  விருந்து  சாப்பாடு  வைபவத்தில்  ஆளாளுக்கு  அழ   அதற்கு  அவர்கள்  ஒவ்வொருவரும் சொல்லும்  காரணங்கள்  காமெடி 

5  நீயும்  என்  பொண்ணு  மாதிரிதான்மா  என  ஆர்  பாண்டியராஜன்  வீட்டு  வேலைக்காரியிடம்   ஒரு  பேச்சுக்கு சொல்ல  நாயகன்  அவரிடம் , அப்பா  அம்மாவுக்கு  துரோகம் பண்ணிட்டியா? என  கேட்கும்  காட்சி 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1  கல்யாண  மேளம் 

2  பட்டு  வேட்டி  சந்தனம் 


  ரசித்த  வசனங்கள் 


1  மாப்ளை  ஃபோட்டோ ல  பார்த்ததுக்கும்  நேர்ல  பார்க்கறதுக்கும்  ரொம்ப வித்தியாசமா   இருக்காரே?  ஃபோட்டோ  எப்போ  எடுத்தது ?

  25  வருசத்துக்கு  முன்னால 

அய்யோ , அப்போ   என்  தங்கச்சி  பிறக்கவே  இல்லையே ? 


2    உன்  தங்கச்சிக்கு  கல்யாணம்  ஆகறதுக்குள்ளே  உன்  அத்தை  ஒரு  மளிகைகக்டையே  ரெடி  பண்ணிடும்  போல , ஒவ்வொரு  டைம்  இங்கே  வந்துட்டுப்போகும்போதும்  ஏகப்பட்ட  பொருட்களை  இங்கே  இருந்து  ஆட்டையைப்போட்டுட்டுப்போகுது 


4  சரக்கு  அடிக்கத்தான்  உன்  கூடப்பழகுனேன்னு  சொல்றியா? 

அப்போ ஆர்டரைக்கேன்சல்  பண்ணிடவா? 

இல்ல  இல்ல  இருக்கட்டும் 

\5   ஜமீன் தாரர்  பொண்ணு  என்னைப்பார்த்து  சிரிச்சுதேன்னு சந்தோஷப்பட்டா  கடைசில   அது ஜமீன்  தாரரோட சம்சாரமாம் 


6  சாமிக்குப்பொங்கல்  வைக்க  கூட்டிட்டுப்போறியா? எங்களுக்குப்பொங்கல்  வைக்க  கூட்டிட்டுப்போறியா?


7  ஹனிமூனுக்கு  எங்கே  போகப்போறீங்க ?  

கொடைக்கானல்தான்

\அடடா, அங்கே  போனாக்குளிருமே? 


8   உங்க  குடும்பத்தை  அசிங்கப்படுத்தாம  விட  மாட்டேன்

 ஆல்ரெடி  உங்க  குடும்பம்  அசிங்கப்பட்டுதானே  இருக்கு ? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   கிராமத்து  இளைஞரான  நாயகன்  நைட்  தூங்கும்போது ஜீன்ஸ்  பேண்ட்  ஃபுல்  ஹேர்ண்ட்  சர்ட்  போட்டு  தூங்கறார். லுங்கி , வேட்டி  எல்லாம்  கிராமங்களில்  புழக்காட்டம்  இல்லையா? 

2 வில்லனான    ஜமீன் தாரர்  அவரது  இரண்டு  அடியாட்களை  நாயகன்  வீட்டில்  வேலையாட்களாக  சேர்ந்து  அப்பப்ப  அங்கே நடப்பதை  இங்கே  அப்டேட்டவும்  என  அறிவுறுத்துகிறார். திருமணத்தை  தடுக்க. ஆனால்  அவர்கள் எதையும்  அப்டேட்டவே  இல்லை . திருமணத்தை  தடுக்க  சின்ன  சின்ன  வில்லத்தனங்களைத்தான்  செய்கின்றனர். அது  அவர்களுக்குக்கொடுக்கப்பட்ட  டாஸ்க்  இல்லையே ? 


3  ஒரு  கல்யாணத்தை  நிறுத்தனும்னா  மாப்ளை  அல்லது  பெண்ணைக்கடத்தனும், இந்த  பேசிக்  நாலெட்ஜ்  கூட  இல்லாத  மஞ்ச  மாக்கான்  வில்லன்  பெண்ணின்  அண்ணன்  தலையில்  ஒரு  அடி  போட்டு  மயக்கம் அடைய  வைத்து விட்டால்  திருமணத்துக்கு  அண்ணன்  இல்லாததால்  திருமணம்  நிற்கும்  என  நினைப்பது  கொடுமை 


4  படத்துக்கு  இண்ட்டர்வெல்  பிளாக்  சீனாக  கனவில்  வரும்  ஆள்  மச்சான்  உயிருக்கு  இரண்டு  நாளில்  ஆபத்து  என்று  சொன்னதோடு  கட்  பண்ணி  இருக்க  வேண்டும் , அதை  விட்டு  விட்டு  உப்பு  சப்பில்லாத  மாடு  முட்ட  வரும்  காட்சியில்  இண்டர்வல்  பிளாக்  வைத்தது  ஏனோ ? 


5  வாமிட்  எடுக்கும்  காட்சிகளில்  பொதுவாக  கேமராவை லாங்க்  ஷாட்டில்  பேக்  ஷாட்டாக  இருப்பது  நல்லது, ரியாலிட்டியாக  வைக்கறோம்னு  க்ளோசப்  ஷாட்டில்  முன்னால்  கேமராவை  வைப்பது  உவ்வேக்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பி  அண்ட்  சி  செண்ட்டர்  ரசிகர்களைக்கவரும்  எளிமையான  கிராமத்துக்காமெடி  கதை . பார்க்கலாம்  ரேட்டிங் 2.75 / 5 


சென்னிமலை சி.பி. செந்தில்குமார்
நன்றி - அனிச்சம் மின் இதழ் ஜூன் 1


தெய்வ மச்சான்
தெய்வ மச்சான்.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்மார்ட்டின் நிர்மல் குமார்
எழுதியவர்மார்ட்டின் நிர்மல் குமார்
உற்பத்தி
  • உதய குமார்
  • கீதா உதயகுமார்
  • எம்.பி.வீரமணி
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுகேமில் ஜே. அலெக்ஸ்
திருத்தியவர்எஸ் இளையராஜா
இசை
  • மதிப்பெண்:
  • அஜேஷ்
  • பாடல்கள்:
  • காட்வின் ஜே. கோடன்
உற்பத்தி
நிறுவனங்கள்
  • உதய் புரொடக்ஷன்ஸ்
  • மேஜிக் டச் பிக்சர்ஸ்
வெளிவரும் தேதி
  • 21 ஏப்ரல் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்



0 comments: