ஹீரோ யாரு ? வில்லன் யாரு? என்ற குழப்பம் க்ளைமாக்ஸ் வரை நீடித்து க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் உண்மை முடிச்சு அவிழும் ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று . இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் ஏற்கனவே கேட்டிருந்தாலும் அது இந்தப்படம்தான் என தெரியாமலே இருந்திருப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் பெரிய எஸ்டேட் ஓனர் ,, ஆனால் அனாதை . காலேஜில் படிக்கிறார். நாயகி அதே காலேஜில் படிக்கிறார். ஒரு நாள் நாயகி விளையாடும்போது கீழே விழுந்து கால் கெண்டைக்கால் சுளுக்கிக்கொள்ள நாயகன் அங்கே வந்து கோவை சிங்கிரிபாளையம் டாக்டர் போல நாயகி காலைப்பிடித்து நீவி விட்டு சுளுக்கு எடுக்கிறார். (கெண்டைக்காலில் சுளுக்கு வருமா? என கூகுள் சர்ச் பண்ணிப்பார்த்தேன், விடை கிடைக்கவில்லை )
நாயகிக்கு நாயகன் மீது காதல் . ஒருதலையாய்க்காதலித்தாலும் ஒரு நாள் தன் மனதில் உள்ள காதலை வெளீப்படுத்துகிறாள்: நாயகன் ஏற்றுக்கொண்டு நாயகியைத்தன் பங்களாவிற்கு அழைத்துச்செல்கிறான். அங்கே எஸ்டேட் பங்களாவில் நாயகனிடம் பணி புரியும் ஒரு ஆள் நாயகியிடம் நாயகனைப்பற்றி இல்லாததும், , பொல்லாததுமாகச்சொல்கிறான்
இந்த பங்களாவிற்கு இது போல பல பெண்கள் வந்து போய் இருக்கிறார்கள் , நீ நினைப்பது போல நாயகன் நல்லவன் இல்லை வில்லன் எப்படியாவது தப்பிப்போ என எச்சரிக்கிறான். இதனால் குழப்பம் அடைந்த நாயகி நாயகனைப்பிரிந்து செல்கிறாள்
நாயகியைப்பிரிந்த சோகத்தில் குடித்துக்குடித்து நாயகன் தன்னை அழித்துக்கொள்கிறான். நாயகியின் வீட்டில் வேறொரு மாப்பிள்ளை பார்த்துத்திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் , ஆனால் கல்யண முகூர்த்தம்தான் நடந்ததே தவிர சாந்தி முகூர்த்தம் நடக்கவில்லை . ஏன் ? அதைத்தடுக்கும் சக்தி எது ?
உண்மையில் நாயகன் நல்லவனா? வில்லனா? நாயகியைத்திருமணம் செய்த மாப்பிள்ளை தான் வில்லனா? எஸ்டேட்டில் பணி புரிந்த ஆள் எதற்காக நாயகனைப்பற்றி அபாண்டமாகப்பொய் சொன்னான் ? எல்லாக்கேள்விகளுக்கும் க்ளைமாக்சில் பதில் உண்டு
நாயகன் ஆக சுமன். அந்தக்காலத்தில் கமல், மோகன் , சுரேஷ் போல இவரும் செம ஹிட் ஆகி இருக்க வேண்டியவர். நீலப்பட விவகாரத்தில் மாட்டிக்கொண்டு ஜெயிலுக்குப்போனதால் அவரது வாழ்க்கையே மாறியது . இதில் நடிப்பில் குறை வைக்கவில்லை \\
நாயகி ஆக சுமலதா . அழகான முகம் . நிறைவான நடிப்பு வில்லன் ஆக நிழல்கள் ரவி , சாமார்த்தியமான வில்லத்தனம்
இளையராஜாவின் இசை பின்னணி இசை இரண்டும் அருமை . 2 பாட்டு செம ஹிட்டு
சபாஷ் டைரக்டர்
1 ரொமாண்டிக் ஸ்டோரியில் சாமார்த்தியமாக பில்லி சூன்யம் என புகுத்தி திகில் படம் ஆக எடுத்த விதம் \\
2 நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன விதம்
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
செம ஹிட் சாங்க்ஸ்
1 ஜெயிச்ச கட்சி நம்ம கட்சிண்ணே, தோத்த கட்சி எதிர்க்கட்சிண்ணே ( காலேஜ் எலக்சன் வின்னிங் கொண்டாட்டப்பாடல் )
2 இளம்பனித்துளி விழும் நேரம் \
இலைகளில் மகரந்தக்கோலம் ( நாயகன் - நாயகி டூயட் )
3 ஒரு குங்குமச்செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம் ( வில்லன் - நாயகி டூயட்)
ரசித்த வசனங்கள்
1 பதவிக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு, என்ன செஞ்சிருக்கீங்க ?
வெற்றிகரமான 60 வது நாள் போஸ்டர் வேணா ஒட்டவா?
2 மாந்தரீகம், தாந்தரீகம் எல்லாம் அணு சக்தி மாதிரி , அதை வெச்சு ஆக்கவும் செய்யலாம், அழிக்கவும் செய்யலாம்
3 என் மனசு எழுதப்படாத ஒரு வெள்ளைக்காகிதம் \\
அதுல என்னைக்குமே அழியாத ஓவியமா நான் இருக்க ஆசைப்படறேன்
4 ஊர்ல நிலம் இருக்கா? \\
ஊருன்னு இருந்தா நில புலன் இல்லாம இருக்குமா?
ஊருல இருக்கு , உனக்கு இருக்கா?
5 ஒரு சாதாரண பெண்ணை அடைவதற்காக இந்தக்கேவலமான பில்லி சூன்யம், வசியம் இதை எல்லாம் யூஸ் பண்ணனுமா?
6 விஞ்ஞானத்துக்கும் பகுத்தறிவுக்கும் புலப்படாத புரிபடாத தெய்வ சக்தி இருக்கு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் அம்மாவும் அப்பாவும் திருமணம் பற்றி அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் . பின் ஒரே ஷாட்டில் கேமரா நாயகியின் பெட் ரூமுக்கு வருகிறது . அப்போது பெற்றோரிடம் நாயகி நீங்க பேசறதை எல்லாம் கேட்டுட்டுதான் இருந்தேன் என்கிறார் , அது எப்படி ? அப்படிக்கேட்டுக்கொண்டிருந்தால் அங்கேயே அப்போதே பதில் சொல்லி இருக்கலாமே?
2 வில்லனும் , நாயகியும் முதல் இரவு அறையில் சேரும் முன் அதைத்தடுக்க தீய சக்தி முனைவது ஓக்கே . ஆனால் இரண்டாவது முகூர்த்தத்தில் இரண்டு பேரும் அசதியாகத்தூங்கும்போது தீயசக்தி டமார் டமார் என ஜன்னல் கதவுகளை ஆட்டுவது ஏன் ? விழித்தால் சேர்ந்து விடுவார்கள் , எழுப்பி விடாமல் இருந்திருக்கலாமே?
3 வில்லனின் கழுத்தில் வேம்ப்பயர் அட்டாக் பண்ணி இருக்கும் காயத்தடத்தை வில்லன் அந்த மாந்திரிகவாதியிடம் காட்டுவது ஓக்கே ஆனால் காயத்துக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளவே இல்லையே?
4 நாயகியிடம் தனியாக சில கேள்விகள் கேட்க வேண்டும் என மந்திரவாதி சொன்னதும் வில்லன் ஒத்துக்கொண்டு ஒரு அறையில் இருவரையும் அனுப்புகிறான், ஆனால் கதவில் கரெக்டா ரவுண்ட் ஷேப்ல அவ்ளோ பெரிய ஓட்டை வழியா பார்க்கிறான், எந்த வீட்டில் கதவில் அரை மீட்டர் ஆரத்தில் சரியான வட்ட வடிவில் ஓட்டை இருக்கிறது ?
5 நாயகன் நாயகி இருவரும் தெய்வீகக்காதலர்கள் போல் இருந்து விட்டு திடீர் என கெட்ட வார்த்தையில் இருவருமே பரஸ்பரம் திட்டிக்கொள்வது ரொம்ப செயற்கை
5 நாயகன் தன்னிடம் விசுவாசமாகப்பணியாற்றிய எஸ்டேட் மேனேஜர் கம் கணக்குப்பிள்ளையை தன் எல்லா சொத்துக்களுக்கும் வாரிசாக நியமிக்கும் காட்சி நம்ப முடியவில்லை , நாயகனே குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகி ஒரே அறையில் அடைந்து கிடக்க எப்படி பாண்டு பேப்பரில் உயில் எல்லாம் தனியாக ரெடி செய்தார்?
6 மேனேஜர் அன சாருஹாசன் அதிகாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்ததாகவும் எல்லாக்கதவுகளும் திறந்தே இருந்தது ஏன்? என்றும் வேலைக்காரன் கவுண்டமணியை சத்தம் போடுகிறார். ஆனால் அதிகாலை 5 மணிக்கு அவருக்கு அங்கே என்ன வேலை ? எதுக்கு வந்தார்? அவர் ட்யூட்டி டைம் காலை 8 மணி தானே?
7 வில்லன் - நாயகி இருவரும் இருக்கும் அறையில் வாசலில் கதவைத்திற என சத்தம் கேட்டு நாயகி அறைக்கதவின் தாழ்ப்பாளைத்திறந்து கதவை வெளிப்பக்கமாகத்திறப்பது எப்படி ? எல்லா அரைகளீலும் தாழ்ப்பாள் மேல்பக்கம் இருந்தால் அந்தக்கதவை உள் பக்கமாகத்தானே திறக்க முடியும்? ?
8 க்ளைமாக்சில் மந்திரவாதி பூஜை செய்யும்போது அம்பிகையே முனீஸ்வரனே சரணம் சரணம் என்கிறார், ஆனால் அங்கே சாமியே சரணம் ஐயப்பா என எழுதி இருக்கிறது . முனீஸ்வரனுக்கும் அம்பிகைக்கும் என்ன சம்பந்தம் ? ஐயப்பன் இங்கே எப்படி வந்தார் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான படம் தான் பார்க்கலாம் . சுமலதா அழகு , இளையராஜாவின் இசைக்காகப்பார்க்கலாம் ரேட்டிங் 2.75 / 5
ஆராதனை | |
---|---|
இயக்கம் | பிரசாத் |
தயாரிப்பு | ராதா பாலகிருஷ்ணன் டிம்பிள் கிரியேஷன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுமன் சுமலதா |
வெளியீடு | செப்டம்பர் 11, 1981 |
நீளம் | 3899 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
0 comments:
Post a Comment