படம் முடிந்த பின் பாலுமகேந்திராவுக்கு காணிக்கைனு டைட்டில் போட்ட பின் தான் இது பாலுமகேந்திராவின் சொந்த வாழ்க்கை சம்பவமாக இருக்கக்கூடும் என்ற விஷயம். நடைமுறை வாழ்வில் இவ்வளவு சாத்வீகமான , அமைதியான , பொறுமையான மனைவி இருப்பது , வாய்ப்பது மிகவும் அரிதுதான். அதனாலேயே அந்த மனைவி கேரக்டர் மேல் ஒரு ஆச்சரியம் ஒட்டிக்கொள்கிறது
ஆறு குறும்படங்களில் இது ஐந்தாவதாக அமைந்தாலும் தர வரிசையில் மூன்றாம் இடம் பிடிக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் திருமணம் ஆனவன் , மனைவி , இரண்டு குழந்தைகள் உண்டு . அமைதியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்போது நாயகனின் வாழ்வில் அடுத்த காதல் எட்டிப்பார்க்கிறது . ரயில் பயணம் மூலம் அறிமுகமாகும் ஒரு பெண்
இவளும் திருமணம் ஆகி விவாகரத்து ஆனவள்தன். இருவரும் பழகி பரஸ்பரம் காதலை வெளிப்படுத்திய பின் ஒரு நள் மாலை நாயகி நாயகனின் வீட்டுக்கு நாயகனின் மனைவியின் அழைப்பின் [பேரில் வருகிறாள்
நாயகன் தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து விடுகிறான், இது சம்ப்ந்தமாக எதிர்காலம் பற்றிப்பேச நாயகனின் மனைவி நாயகி இருவருக்கும் இடையே உருவாகும் உரையாடல்தான் மீதிக்கதை
நாயகன் ஆக கிஷோர் அமைதியாக நடித்து தன் உனர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். ஓப்பனிங் ஷாட்டில் மெட்ரோ ரயில் பயண காதலி சந்திப்புகளை மாண்ட்டேஜ் பாடலாக என் இனிய பொன் நிலாவே பாடலை பயன்படுத்தி இருப்பது அருமை
நாயகி ஆக விஜயலட்சுமி அகத்தியன் டீச்சர் போன்ற கண்ணிய,மான தோற்றத்தில் வந்து மனதில் இடம் பிடிக்கிறார்
நாயகனின் மனைவியாக ரம்யா நம்பீசன் பொறுமையின் சிகரமாய் தன் குணச்சித்திர நடிப்பை பாங்காய் வெளிப்படுத்தி இருக்கிறார். நாங்களும் லவ் மேரேஜ் தான் என்ற ஒரே வசனத்தில் இயலாமையை வெளிப்படுத்தும் இடம் ஆகட்டும் டைவர்ஸ் ஃபார்மாலிட்டி எல்லாம் கோர்ட்ல எவ்ளோ டைம் எடுத்துக்குவாங்க என எதார்த்தமாய் கேட்டு விட்டு அந்தப்பெண்ணும் ஆல்ரெடி டைவர்ஸ் ஆனவர் என்பதால் குத்திக்காட்டுவதாய் நினைத்து விடக்கூடாது என சாரி கேட்கும் இடம் அட்டகாசம்,
டெல்லி கணேஷ் நாயகனின் அப்பாவாக சில காட்சிகளில் வந்தாலும் அனுபவம் மிக்க நடிப்பு
பொதுவாக இன்னொரு பெண்ணின் தொடர்பு இருப்பதாகத்தெரிந்தால் வீட்டையே அமளி துமளி ஆக்கும் பெண்களையே பார்த்துப்பழக்கப்பட்ட நமக்கு இந்த அமைதி ஆச்சரியத்தையும் , வலியையும் ஒருங்கே கடத்துகிறது
ஜீவா சஙக்ரின் ஒளிப்பதிவு அட்டகாசம் , மெட்ரோ ரயில் பயணங்கள் , அப்பார்ட்மெண்ட் வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சக்காட்சிகள் , செல்ஃபி எடுக்கும் காட்சி என படம் முழுக்க ஒளிப்பதிவும் இசையும் ஜீவனாக அமைந்திருக்கிறது
இளையராஜா வுக்கு விடுதலை படத்துக்குப்பின் இது மீண்டும் ஒரு கம் பேக் படம்
கிராமத்துக்காதலைப்படைப்பதில் வல்லவரான பாரதிராஜா நகரக்காதலை நாகரீகமாக்சொன்ன விதத்தில் மனம் கவர்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நாயகி தங்கள் குழந்தைகளிடம் சமாளிப்பாக சொல்லும் தண்டனைக்கதை அருமை . சிலேட்டில் ஒவ்வொரு சிகரெட் பிடித்த எண்ணிக்கையை அப்டேட் பண்ணி 1000 வந்ததும் நிறுத்துவதாக சொல்வதை கதையைத்தாண்டிய நீதி போதனஒ
2 எங்களுக்குள்ளே இதுவரை சண்டைனு பெருசா வந்ததில்லை என மனைவி நாயகியிடம் ஆதங்கமாக சொல்லி விட்டு உங்களுக்குள் அப்படி சண்டை வந்திருக்கா? என விசாரிக்கும் நாசூக்கு அருமை
3 டெல்லி கணேஷ் நாயகியை நைசா தலை முழுகி விடு என்ற போது நாயகன் இதே பெண் உங்க மகளா இருந்தா அப்படி சொல்லி இருப்பீங்களா? என மடக்கும் காட்சி
4 ,மெட்ரோ ரயில் பயணங்களில் நாயகன் நாயகி சந்திக்கும் அனைத்துக்காட்சிகளிலும் இளமை துள்ளுகிறது . மணிரத்னம் , கவுதம் மேனன் படங்கள் போல காட்சிகளில் இளமை பூரிப்புகள்
ரசித்த வசனங்கள்
1 விருந்தாளிங்க போன பின் தான் அவங்க கொடுத்த பரிசுப்பொருளை ஓப்பன் பண்ணனும், அதான் ரூல்
2 கதவை சாத்தினா போதும், பத்திரமா இருந்துப்போம்கற அளவில் தான் எங்க வீடு இருக்கு
3 உங்க இடத்துல நான் இருந்திருந்தா இந்த அளவு பக்குவமாவும், ஸ்ட்ராங்காகவும் இருந்திருப்பேனானு தெரியல
4 [புது மரம் வளர கிளைய கட் பண்ணிதான் வைக்கறோம், ஆனா வெட்டுவதன் வலி இருக்கத்தானே செய்யும் ?
5 நமக்கு எப்போ யாரைப்பிடிக்கும்? எதுக்கு பிடிக்கும்னு சொல்ல முடியலையே?
6 இத்தனை ஆயிரம் வருடங்கள் க்டந்தும் மனித மனம் என்ன நினைக்கும்? ஏன் அப்படினு யாரும் கண்டு பிடிக்க முடியலையே?
7 உங்க கணவர் , குழந்தைகள் , வீடுனு எல்லாத்தையும் எனக்கு விட்டுக்கொடுத்துட்டிங்க . உங்களுக்குத்திருப்பித்தர என்கிட்டே எதுவுமே இல்லை , வெறும் வெறுமை மட்டும்தான் இருக்கு
அந்த வெறுமையை நான் எடுத்துக்கறேன்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பாரதிராஜா தனது அடையாளமான கிராமத்துக்காதலில் இருந்து வெளியே வந்து நகரத்துக்காதலை நாகரீகமாக சொன்ன விதம் கவிதை . மெட்ரோ ரயில் பயணங்களில் என டைட்டில் வைத்திருக்கலாம் . ரேட்டிங் 3.25 / 5
0 comments:
Post a Comment