Thursday, May 25, 2023

லாலாகுண்டா பொம்மைகள் - ராஜூ முருகன் - MODERN LOVE CHENNAI (2023) -மாடர்ன் லவ் சென்னை - தமிழ் - வெப்சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி )@ அமேசான் பிரைம்


ராஜூ முருகன்  ஒரு  பத்திரிக்கையாளர் . ஆனந்த விகடனில்  இவர்  எழுதிய   வட்டியும் , முதலும்  செம  ஹிட்  அடித்தது . இயக்குநர்  என்  லிங்குசாமியிடம் உதவி  இயக்குநராகப்பணிபுரிந்து  3  வருடங்கள்  அனுபவம்  கிடைத்த  பின்  2014 ஆம்  ஆண்டு  குக்கூ  என்ற  படத்தை  இயக்கினார்.2016  ஆம்  ஆண்டு  இவர்  இயக்கத்தில்  வெளி வந்த  ஜோக்கர்  சிறந்த  படத்திற்கான  விருது  பெற்றது . கார்த்தியின்  நடிப்பில்  இப்போது  ஜப்பான்  என்ற  படத்தை  இயக்கி  வருகிறார்


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி   ஒரு  பேக்கரி  கம்பெனில  பேக்கிங்க்  செக்சன்ல  வேலை  பார்க்கிறாள் . ஓப்பனிங்  ஷாட்லயே  அவள்  ஒரு  ஹாஸ்பிடலில்  அபார்ஷன்  செய்ய  வந்திருக்கிறாள் /. யாரிடமோ  ஏமாந்து  விட்டாள் . அவன்  ஒடி  விட்டான். டாக்டர்  திட்டிக்கொண்டே  அவளுக்கு  அபார்ஷன்  செய்கிறார்


 நாயகி  தன்  சித்தி , சித்தப்பாவுடன்  வாழ்ந்து  வருகிறாள் . அவர்கள்  இருக்கும்  ஏரியாவில்  ஒரு   சாமியாரிடம்   நாயகியை  சித்தி  அழைத்துச்செல்கிறாள். அந்த  சாமியார்  உனக்கு  வடக்கன்  ஒருவன்  கணவனாக  வருவான் , ஆனால்  அவன் ஒரு  திருட்டுப்பயலாக  இருப்பான்  என  ஜோசியம்  சொல்கிறான்


 ஆனால்  அதை  நம்பாத  நாயகி  சாமியாரை  திட்டி  விட்டு  வீட்டுக்கு  வந்து  விடுகிறாள் . அவர்கள்  இருக்கும்  ஏரியாவில்  பானி  பூரி  கடை  வைத்திருக்கும் நாயகன்  நாயகி  மீது  ஆசைப்படுகிறான். ஆரம்பத்தில்  முறைத்தாலும்  நாளடைவில்  நாயகியும்  பச்சைக்கொடி  காட்டுகிறாள் 


காதல்  வளர்ந்து  வரும்போது  நாயகன் வேறு  ஒரு  பெண்ணை  கர்ப்பம்  ஆக்கி  விட்டு  ஓடி  விடுகிறான். இதனால்  மனம்  உடைந்த  நாயகி  கொஞ்ச  நாள்  சோகமாக  இருந்து  விட்டு  பின்  அரேஞ்சுடு மேரேஜ்க்கு  சம்மதிக்கிறாள்


திரும்ணத்துக்குப்பின்  இரண்டு  ட்விஸ்ட். கணவனாக  வந்திருப்பது  அந்த   ஜோசியம்  சொன்ன  சாமியார் தான். தாடி  இல்லாத  கெட்டப்பில்  நாயகிக்கு  முதலில்  அடையாளம்  தெரியவில்லை . இரண்டாவது  திருப்பம்  பானிபூரிக்கடைக்காரனான  நாயகனை  நாயகி  தன்   கணவனுடன்  சந்திக்கிறாள் .  இந்த  இரண்டு  ட்விஸ்ட்களிலும்  நாயகி  என்ன  முடிவு  எடுத்தார் என்பதே  க்ளைமாக்ஸ்


 நாயகியாக ஸ்ரீ  கவுரி  ப்ரியா அகலமான  பெரிய  விழிகள் , குடும்பப்பாங்கான  முகம்  என சில  பிளஸ்  பாய்ண்ட்களுட்ன்  நன்றாக  நடித்திருகிறார்


நாயகன்  ஆக  சேட்டுப்பையனாக    வாசுதேவன்  முரளி  காதல்  தேசம்  குணால்  முகச்சாயலில்  இருக்கிறார். நல்ல  நடிப்பு , வசீக்ரமான  சிரிப்பு 


 சாமியாராக  வரும்  பிரசன்னா  ராம்குமார்  கலகலப்பான  நடிப்பு . சித்தியாக  வருபவரின்  டயலாக்  டெலிவரி  அசத்தல் 


 ராஜூ  முருகனுக்கு  கவிதையாக  காதல்  காட்சிகளும்  எடுக்க  வருகிறது . காமெடியும்  இயலபாக  வருகிறது 


  3  பாடல்களில்  2  செம  ஹிட் . வசனங்களில்  இயக்குநர் முத்திரை  பதிக்கிறார்



சபாஷ்  டைரக்டர்


1  வசுந்த்ரா வின்  கேரக்டர்  டிசைன் , நடிப்பு  இரண்டும் அபாரம், நாயகியை விடக்குறைவான  காட்சிகளில்  வந்தாலும்  மனதில்  இடம்  பிடிக்கிறார். கணவனுடன்  சரக்கு  அடிப்பது  ஆண்கள்  பற்றி  டயலாக்  விடுவது  எல்லாம்  செம 


2 ஷான்  ரோல்டனின்  இசை படத்தின்  தரத்தை  ஒரு  படி  உயர்த்துகிறது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


 1  அவ  பந்தயப்புறா  நான்  சிங்கிள்  சுறா 


2  ஒரு  முறைதான்  மழை  வ்ருமா?  யாரிடம்  கேட்பது ?



 ரசித்த  வசனங்கள் 


1    உணவு  விமர்சகர்  அப்டின்னா  என்ன?


நீ  ஹோட்டலுக்குப்போனா  சாப்பிட்டுட்டுப்பணம்  கொடுத்துட்டு  வருவே , இந்த  ஃபுட் ரிவ்யூவர்  சாப்ட்டுட்டு  பணம்  வாங்கிட்டு  வருவாரு 


2    காதல்  தோல்வியா? கவலைப்படேல், ஓரன்பு  போனா  ஈரன்பு , ஈரன்பு  போனா  பேரன்பு 


3   காதல்  தந்த  காயத்தை  இன்னொரு  காதல்  வந்துதான் ஆத்தும்


4  இடுக்கண்  வருங்கால்  வடக்கன் வருவான்


5  உடம்புல  தழும்பும், மனசுல  பாரமும்  இல்லாத  பெண்  இங்கே  எங்கே  இருக்கா? 


6  குருஜி , கிளம்பி  வாங்க , ஜனங்க  சேர்ந்துட்டாங்க 


 இருடா , இங்கே  இன்னும்  ரம்மி  சேரலை 


7  இந்தக்கால  லவ்  எல்லாம்  என்ன? அட்ராக்சன் , அபார்சன், அதானே? 


8  இந்த  ஆம்பளைங்க   கூட   வாழ  முடியாது  இந்த  ஆம்பளைங்க  இல்லாம  யும்  வாழ  முடியாது


9  இந்தக்காலத்துப்பொண்ணுங்க  அவங்க  இஷ்டப்படிதான்  முடிவெடுப்பாங்க , உங்க  அரிப்புக்கு  எல்லாம்  அவங்க  சொரிஞ்சுக்கிட்டு  இருக்க  முடியாது 


10  பொம்பள  கூட  வாழ  முடியாது , ;பொம்பள  இல்லாமலும்  வாழ  முடியாது , பொம்பள  சிங்குலர்.. புரிஞ்சுதுல்ல? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - குறும்படமாக  இருந்தாலும்  கவிதை  மாதிரி  தரத்தில்  தர  முடியும்  என  மென்மையாக  நிரூபித்திருகிறார்  ராஜூ  முருகன். ரேட்டிங் 3.5 /5 

0 comments: