Tuesday, May 30, 2023

KATHAL - A JACKFRUIT MYSTERY (2023) - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( காமெடி க்ரைம் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


டைட்டில்  உச்சரிப்பு  எல்லாரும்  நினைப்பது  போல  காதல் அல்ல கட் ஹல் . ஹிந்தியில் கட் ஹல்  என்றால் பலாப்பழம்  என்று  அர்த்தம் . பொதுவாக  மலையாளப்பட  உலகில்தான்  சாதாரண   ஒன் லைன் ஸ்டோரியை  சுவராஸ்யமான  திரைக்கதையால்  ஹிட்  ஆக்குவார்கள், இந்த  முறை  அதைச்செய்திருப்பது  பாலிவுட். 2023  மே  19  அன்று  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

   ஸ்பாய்லர்  அலெர்ட்

 ஒரு  எம் எல் ஏ  வீட்டில்  தோட்டத்தில்  இருந்த  பலாப்பழங்கள் இரண்டு  காணாமல்  போய் விடுகின்றன. அதைக்கண்டு  பிடிக்க  போலீஸ்  டீம்  களம்  இற்ங்குகிறது . காணாமல்  போன  பலாப்பழம்  இருந்த  தோட்டத்தின்  இன் சார்ஜ்  தோட்டக்காரனின்  மகள்  காணாமல்  போகிறாள் , ஆனால்  ஏழை என்பதால்  அந்த  கேஸ்  சீரியசாக  எடுத்துக்கொள்ளப்படவில்லை 


‘ நாயகி  ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டர், அந்த  ஊரில்  இது போல ஏராளமான  ஏழைப்பெண்கள்  காணாமல்  போன  கேஸ்கள்  பல  இருக்கின்றன . எம் எல் ஏ  வீட்டில்  காணாமல்  போன  பலாப்பழத்தைத்திருடியது  தோட்டக்காரனின்  மகள்  தான்  என  பொய்யாக  கேஸ்  எழுதி   அந்தப்பெண்ணைக்கண்டு  பிடிக்க  களம்  இறங்குகிறார்  நாயகி 


நாயகி   இன்ஸ்பெக்டர்  என்றாலும்  இவர்  போலீஸ்  கான்ஸ்டபிளாக  இருந்தபோது  சக  கான்ஸ்டபிளை  காதலித்து  வந்தார் , இப்போது  பிரமோசனில்  நாயகி  போலீஸ்  இன்ஸ்பெக்டர் ..  அவரது  காதலன்  இன்னும்  அதே  கான்ஸ்டபிள்தான் . இதனால்  ஏற்படும்  காமெடி  கலாட்டாகள் ., அந்த  பலாப்பழ  கேஸ்  விசாரனை  என   நாயகி   எப்படி  எல்லாவற்றையும்  டீல்  செய்தாள்  என்பதே  மொத்தக்கதை 


கதை , திரைக்கதை  எல்லாம்  காமெடி  டிராக்கில்  இருந்தாலும்  இயக்குநர்  இந்தக்கதையில்  ஜாதிய  வேறுபாடுகள் , அரசியல்வாதிகளின்  முட்டாள்  தனம் , போலீசின்  அதிகார  துஷ்பிரயோகம்  என  சமூக  அவலங்களை  சாடி  இருக்கிறார்


 நாயகி  ஆக  சான்யா  மல்ஹோத்ரா  போலீஸ்  இன்ஸ்பெக்க்டர்  ஆக படம்  முழுக்க  தன்  நகைச்சுவை  நடிப்பால்  தாங்கிப்பிடிக்கிறார். காதலன்  கூட  யூனிஃபார்மில்  கொஞ்சும்  காட்சிகள்  எல்லாம்  கலக்கல்  ரகம் 


 எம் எல்  ஏ  வீட்டில்  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  அடி  பொலி. பலாப்பழம்  திருடு போன  கேஸ் க்காக  போலீஸ்  ஃபோர்ஸ்  வெட்டியாக  வேலை  செய்யும்  காட்சிகள்  செம  காமெடி 


இரண்டு  மணி  நேரம்  ஓடும்  அளவு  ஷார்ப்  ஆக கட்  செய்திருக்கிறார்  எடிட்ட்ர்   பிரேமா.


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர் ய்சோவர்தன்  மிஸ்ரா

சபாஷ்  டைரக்டர்

1  வீட்டோட  மாப்பிள்ளையாய் இருக்கும்  மானம்  கெட்ட  மாடசாமியை  ஒவ்வொரு  முறை  எம் எல் ஏ  வான  மாமனார்  மட்டம்  தட்டும்போதும்  கைப்புள்ள  மாதிரி  அவன்  பம்முவதும்  ஆள் இல்லாதப்ப  உதார்  விடுவதும் கலக்கல்  காமெடி 


2   நாயகி ஒரு  இன்ஸ்பெக்டர் , அவரது  காதலன்  சாதா  போலீஸ்  கான்ஸ்டபிள் . அடிக்கடி  நாயகி  பப்ளிக்  பிளேசில்  அவரைக்கொஞ்ச  முயல்வதும்  காதலன்  பதறி மீடியா  பார்த்துடப்போறாங்க   என  எஸ்கேப்  ஆவதும்  சுவராஸ்ய  சம்பவக்கோர்வைகள் 


3   சிசிடிவி  காமரா  இருப்பதால்  லஞ்சத்தை  கையால்  வாங்க மறுக்கும்  போலீஸ்  பணத்தை  மரப்பொந்தில்  வைக்கச்சொல்லும்  காட்சி 


4  புகார்  கொடுக்க  போலீஸ்  ஸ்டேசன்  வந்த  தோட்டக்காரனை  லாக்கப்ல  தள்ளி   ஹையர்  ஆஃபீசருக்கு  ஃபோன் பண்ணி  குற்றவாளியைப்பிடிச்ட்டோம்  சார்  , லாக்கப்ல  தள்ளியாச்சு  என  கெத்து  காட்டும்  சீன்

5  மெயின்  கதையான  பலாப்பழ  திருட்டு கேசை  விட  நாயகி - நாயகன்  காதல்  கதை , பதவியால்  ஜாதியால்  காதல்  பாதிக்கப்படும்  காட்சிகள்  மனதைத்தொடுவதாய்  இருந்தது 


6  தோட்டக்காரனின்  மகள்  காணாமல்  போன  கேசை  சாமார்த்தியமாக  நாயகி  திருப்பி  விடுவது . அவள் தான்  பலாப்பழத்தை  திருடி  இருக்க வேண்டும், எனவே  முதலில் அவளைக்கண்டுபிடிப்போம்  என  மீடியாவில்  பேட்டி  கொடுப்பது 


7  சைபர்  கிரைம்  ஆஃபீஸ்ல  நாயகன்  ஒரு  டேட்டா  கலெக்ட்  பண்ணப்போகும்போது  அங்கே  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  வெடிச்சிரிப்பு 


8  இந்த  கீழ்  ஜாதிக்காரங்களுக்கு  எதையாவது  திருடித்திங்கலைன்னா  தூக்கமே  வராது , சரிதானே  இன்ஸ்பெக்டர்  என  ஒருவன்  கேட்கும்போது நாயகி  நானும்  அந்த  ஜாதிக்காரிதான், ஆனா  திருட்டைக்கண்டு  பிடிக்கும்  போலீஸ்காரி  என  கெத்து  காட்டும் காட்சி 


9  காணாமல்  போன  காரைப்பற்றிப்புலம்பும்  போலீஸ்காரர்  ஒருவர்   எந்த  கேஸ்  வந்தாலும்  இது  என்  திருடு  போன  காரா ? என  கேட்கும்  காமெடி  டிராக்  படம்  நெடுக  வருவது 


10  நாயகி  தான்  விபரம்  தந்ததால் செய்தி  வெளியிட்ட  மீடியா நபரை  கைது  செய்ய  வேண்டிய  சூழல்  வரும்போது  சங்கடத்துடன்  விஷயத்தை  அந்த  ஆளிடம்  சொல்ல   நானும் ரவுடி தான்  ஃபேமஸ்  ஆகப்போறேன்  என  பெருமையுடன் ட் உதார்  விட்டுக்கிளம்பும்  காட்சி  


  ரசித்த  வசனங்கள் 


1  சட்டப்படி  போலீசாகிய  நாம்  இந்தியன்  பீனல்  கோடைதான்  ஃபாலோ  பண்ணனும், ஆனா  யூனிஃபார்ம் போட்டுட்டா இண்டியன்  பொலிடிக்கல்  கோடை ஃபாலோ  பண்றோம்

2  வேட்டை  ஆடுன  பின்  கழுதைப்புலியும், களவாடிய  பின் களவாணிப்பயலும்  கண்டிப்பா  கம்பியை  நீட்டிடுவாங்கனு ட்ரெயினிங்க்ல  சொல்லி இருக்காங்க 

3  பலாப்பழத்தை  திருடன்  தான்  திருடி  இருப்பான்னு  எப்படி  சொல்றீங்க ? பெண்களுக்கு  பலாப்பழம்  பிடிக்காதா? ஒரு  திருடி  அதை  திருடி இருக்கக்கூடாதா? 

பலாப்பழத்துல  ஏகப்பட்ட  கொட்டைகள்  இருக்கும்  சார் . லேடீஸ்க்குப்பிடிக்காது 

4  குயில்  எப்படிக்கூவனும்னு  காக்கா  சொல்லித்தருது 

 என்  கிட்டே  அவ  பருப்பு  வேகாது . நாமெல்லாம்  உயர்ந்த  ஜாதியாக்கும்

5   மாப்ளை , ஏன்  இப்படி  லூஸ்  மாதிரி  நடந்துக்கறிங்க? 

எங்கப்பா  எக்ஸ்  எம் எல் ஏ  . நான்  போய்  பலாப்பழம்  திருடுவேனா? 

 எம் எல் ஏ   அப்படின்னாலே  திருடன் தானே?


6  சார், பலாப்பழத்திருட்டைக்கண்டுபிடிக்க  இவ்ளோ  போலீஸ்  ஃபோர்சை  வீணாக்குவதை விட  நைசா  மார்க்கெட்ல  2  பலாப்பழம்  வாங்கி எம் எல் ஏ  க்கு  கிஃப்ட்டா  குடுத்துட்டா  என்ன?

திருடு  போனது  அரிதான  அங்கிள்   வ்கை  பலாப்பழம், மார்கெட்ல  கிடைக்காது 

7  இந்த  அரசியல்வாதிஙக  எப்பவுமே  இப்படி  முட்டாள்தனமா தான்  ந்டந்துக்குவாங்களா?

மத்துரா   ல  இருக்கனும்னா  ராதே  ராதேனு  கூவித்தான்  ஆகனும்


8  உனக்கும்  எனக்கும்  இடையில்  ஒரு பெரிய  தடுப்புச்சுவர்  இருக்கு , அதைஉடைக்க  நான்  முயற்சி  பண்றேன், ஆனா  நீ? புதுசு புதுசா  ஒரு  செங்கல்லை  அடுக்கிட்டு  இருக்கே


9   சாதா  கேசை  இப்படி  சிக்கல்  ஆக்கிட்டே.. எங்களை  மாதிரி  பெரிய  ஆஃபீசர்ங்க  கிட்டே  கன்சல் ட்  பண்ணி  இருக்கலாமில்ல?


 சார்தான்  சொன்னாரு . லீடர்  மாதிரி  நடந்துக்கனும்னா  நீயே  முடிவெடு 


10  புழு பூச்சியாக்கூட  பிறக்கலாம், ஆனா  இந்த  உலகத்துல  கான்ஸ்டபுளா  இருந்தா  முன்னேறவே  முடியாது 


சதுரங்கத்துல  சாதா  சிப்பாய்  ராஜாவுக்கே  செக்    வைக்கும்  தெரியுமா?


11   மணி  அடிச்சா  சோறு  மாமியார்  வீட்டு  சீரு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அப்பாவி  ஏழை  மக்களை  அடிக்கக்கூடாது என  நாயகனான போலிஸ்  கான்ஸ்டபிள் இடம்  கடிந்து  கொள்ளும் நாயகி  பின்  ஒரு  சந்தர்ப்பத்தில்  குற்றவாளிகளிடம்  அடி   வாங்கி  வந்த  நாயகனிடம்  அவங்களை  நீ  ஏன்  அடிக்கலை ? என  கேட்கும்போது  நீதானே  யாரையும்  அடிக்கக்கூடாது  என  அன்று  சொன்னாய்  என  நாயகன்  வெள்ளந்தியாய்  கேட்கும்போது  என்  மேல்  உனக்கு  அவ்வளவ்  அன்பா?    என  நாயகி  உருகுவது  மிஸ்  மேட்ச்  ஆன  ஒரு  செண்ட்டிமெண்ட்  காட்சி .  ஏன்  முட்டாள்  தனமா  நடந்துக்கறே?  அப்பாவிகளைத்தான்  அடிக்க  வேணாம்னேன். கிரிமினல்களை  அடிச்சா  என்ன  என்று  தானே  கோபமாகக்கேட்டிருக்க  வேண்டும் >  


2  மீடியாவிடம்  உண்மையை  சொல்லி விடும்  தோட்டக்காரன்  பின்  நாயகியிடம்  எனக்கு  பொய்  பேச  வராது  என  செண்ட்டிமெண்ட்  ஆகபபேசும்  க்காட்சியும்  மிஸ்  மேட்ச்  தான் .  உண்மையை  சொல்லனும்னா  தோட்டக்காரனின்  மகள்  காணாமல்  போன  கேசை  கண்டு  பிடிக்கனும்னா  பலாப்பழத்தைத்திருடியது  அவள்  தான்  என  கேசை  ஜோடித்தால்தான்  ஆகும் என  முழு  உண்மையையும்  தானே  சொல்லி  இருக்க  வேண்டும் ? அரை  குறையா  என்  பொண்ணு  திருடலை  என்பதை  மட்டும்  சொன்னா  எப்படி ? 


3  போலீஸ்காரரின் காரை திருடிச்சென்ற  ஆள்  நெம்பர்  பிளேட்டை  மாற்றாமல்  ஓட்டிக்கொண்டிருப்பது  எப்படி ? 

4  படத்தின்  பின்  பாதி முழுவதும்  இன்ஸ்பெக்டர் ஆன  நாயகி  ஜீப்  டிரைவரை அருகில்  உட்கார  வைத்து  தானே  ஜீப் ஓட்டுகிறார். எதற்கு ? 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  எல்லாத்தரப்பு  ரசிகர்களுக்கும்  பிடிக்காது , மொக்கைக்காமெடி , பிளாக்  ஹியூமர்  காமெடிப்படங்கள்  ரசிப்பவர்கள்  மட்டும் பார்க்கலாம் , ரேட்டிங் 3 / 5 


Kathal
Kathal film poster.jpg
Official release poster
Directed byYashowardhan Mishra
Written byAshok Mishra
Yashowardhan Mishra
Produced by
Starring
CinematographyHarshvir Oberai
Edited byPrerna Saigal
Music byRam Sampath
Production
companies
Distributed byNetflix
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageHindi

0 comments: