மொத்தம் ஆறு எபிசோடுகள் , ஒவ்வொரு எபிசோடும் 40 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை . ஆக மொத்தம் நாலரை மணி நேரம் ஆகும் இந்த பாகம் 1 ல் வரும் ஆறு எபிசோட்கள் பார்க்க . த அஃஃபேர் , சீன்ஸ் ஃப்ரம் எ மேரேஜ் ஆகிய இரு படைப்புகளும் என்ன கதைக்களமோ , என்ன காட்சி அமைப்புகளோ ஏறக்குறைய அதே தான் இந்த வெப் சீரிசும் . நெட் ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு ரைட்டர் . உள்ளூரில் இருக்கும் ஒரு யுனிவர்சிட்டில மாணவர்களுக்கு நாவல் எழுதுவது மற்றும் எழுத்து பற்றிய வகுப்பு எடுப்பவர் , இவருக்கு ஒரு மனைவி உண்டு . மனைவி ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் ,. இருவருக்கும் மணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றன. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் கருத்தொருமித்த தம்பதியினர்
நாயகி 20 வயது ஆன மாணவி . நாயகன் வகுப்பு எடுக்கும் யுனிவர்சிட்டியில் நாவல் எழுத பயிற்சி எடுப்பவர் . மற்ற மாணவ , மாணவிகளை விட நாயகியிடம் எழுத்துத்திறமை அதிகம் இருப்பதாக நாயகன் உணர்கிறார்
ஒரு நாள் யுனிவர்சிட்டியில் நாயகிக்கு ப்ரீத்திங் ட்ரபிள் வருகிறது , அப்போது நாயகன் அவளை ஆசுவாசப்படுத்தி சரி செய்கிறார். இந்த சம்பவம் பாத்ரூமில் கை கழுவும்போது நிகழ்கிறது . யுனிவர்சிட்டியில் இருக்கும் வேறு ஒருவர் அந்த சம்பவத்தைப்பார்த்து விடுகிறார்
நாயகன் வீடு திரும்பியதும் அந்த சம்பவத்தை ஒளிவு மறைவு இல்லாமல் தன் மனைவியிடம் சொல்லி விடுகிறார்
மனைவிக்கு உடலில் ஒரு பிரச்சனை உண்டு . பிசியோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொள்பவர். நாயகனின் மனைவிக்கு பிசியோதரபி சிகிச்சை செய்யும் நபர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது . இது பற்றி நாயகனிடம் சொல்ல வருபவர் பின் ஏனோ சொல்லாமல் தவிர்க்கிறார்
கணவன் , மனைவி இருவரும் அவரவர் பாதையில் தலா ஒரு அஃபெக்சன் வைத்திருப்பதால் பிரச்சனை எப்படி எல்லாம் வருகிறது ? எப்படி அதை சரி செய்கிறார்கள் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக ரைட்டர் ஆக வருபவர் கண்ணாடி அணிந்ததால் முதிர்ச்சியான நபர் ஆக காட்டிவிடலாம் என நினைத்தால் அந்த நினைப்பில் மண், இவரே காலேஜ் ஸ்டூடண்ட் போலத்தான் இருக்கிறார்
இவரது மனைவியாக வருபவர் இவருக்கு அக்கா மாதிரி வயதில் மூத்தவராக இருக்கிறார்
நாயகியாக வரும் மாணவி அப்சரஸ் போல அழகு , கதைப்படி 20 வயது மாணவி என சொல்லப்பட்டாலும் 16 வயது பாலகியாகவே தோற்றம் அளிக்கிறார். ஆனால் இவர் பேசும் வசனங்கள் எல்லாம் அகத்தியன் இயக்கிய படங்களில் வரும் நாயகி போல அவ்வளவு மெச்சூரிட்டி
மனைவிக்கு மசாஜ் செய்பவர் சாரி பிசியோதெரபி செய்பவருக்கு அதிகம் வேலை இல்லை . வரும் காட்சிகள் 90% ல் அவர் மசாஜ் மட்டும் தான் செய்கிறார்
ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங் போன்ற தொழில் நுட்பங்கள் கச்சிதம்
சபாஷ் டைரக்டர்
1 ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய சாதாரண கதையை என்னமோ காவியக்காதல் கதை மாதிரி 6 எபிசோடுகள் ஜவ்வு இழுப்பாக ஆனால் சுவராஸ்யமாக இழுத்த விதம்
2 நாயகன் , மனைவி கேரக்டர் செலக்சன்களில் சொதப்பினாலும் நாயகி தேர்வில் முதல் வகுப்பில் பாஸ் ஆனது
3 மனைவி - பிசியோதெரஃபிஸ்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஐந்து வெவ்வேறு காட்சிகளில் ஒரே சம்பவத்தை மாற்றி மாற்றி காண்பித்த புத்திசாலித்தனம்
4 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லா விட்டாலும் நாயகியின் அம்மா தற்கொலை செய்து கொள்ளும் காட்சி , நாயகனின் மாமியார் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகும் காட்சி ஆகிய எக்கஸ்ட்ரா ஃபிட்டிங்குகளை சாமார்த்தியமாக இணைத்த விதம்
ரசித்த வசனங்கள்
1 ஒரு ஆர்ட்டிஸ்ட்டை , ஒரு கலைஞனை கல்யாணம் பண்ணிக்கறது ரிஸ்க்கியான இன்வெஸ்ட்மெண்ட் \
2 என்ன சொல்ல நினைச்சேனோ அதை கரெக்டா சொல்லிட்டேன்
என்ன சொல்லனும்னு நீ முதல்லயே முடிவு பண்ணி வெச்சுட்டியோ ?
3 உன்னுடைய உறவை உன்னுடனான உறவை எப்படி முடிச்சுக்கறது?னு எனக்கு இன்னும் ஒரு ஐடியா வர்லை
4 எதையும் மறைக்காதே. உன் கிட்டே உன் துணை எப்படி நடந்துக்கனும்னு நீ நினைக்கிறாயோ அதே போல் நீயும் உன் துணையிடம் நடந்துக்கனும்
5 எதை வெச்சுக்கலாம் ? எதை தூக்கிப்போடலாம்னு ஒர்க் அவுட் பண்ணிட்டு இருக்கேன்
6 ஒரு பெண் தனக்கு என்ன வேணும்னு நினைக்கிறாளோ அதை அடைய தேவையானதை செய்தே தீருவாள்
7 நாம ரெண்டு பேரும் நடனம் ஆடலாமா?
எதுக்கு ஊரெல்லாம் சுத்தி என் பேரு முத்தினு உலகத்துக்கே நம்ம உறவு வெளில தெரியவா?
8 ஒவ்வொரு திருமணமுமே நெருக்கடியானதுதான்
9 ஈர்ப்பு என்பது தற்காலிகமானது எ;ல்லா உறவுகளும் ஒரு நாள் அதன் முடிவை சந்தித்தே ஆக வேண்டும்
10 நீ காத்திருக்கலாம், ஆனால் பிஸ்னெஸ் உனக்காகக்காத்திருக்காது \\
11 எதிர்பாராத தோல்வி நேரும்போது நாம் எப்படி நம் பாதையை மாற்றிக்கொள்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கி இருக்கிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அவ்வளவு பெரிய யுனிவர்சிட்டியில் நாயகனும் நாயகியும் அடிக்கடி சேர்ந்து ஜோடியாக சுற்றுவது அதை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது நம்பும்படி இல்லை
2 கேட் அடைக்கப்பட்ட பார்க்கில் நைட் டைமில் கேட் ஏறிக்குதிக்கும் நாயகன் நாயகி இருவரில் நாயகன் மட்டும் போலீசிடம் மாட்டிக்கொள்வது
3 காலேஜில் பணிபுரியும் நாயகன் ஐ டி கார்டு இல்லாமல் போலீசிடம் மாட்டும் காட்சி நம்பகத்தன்மை இல்லை
4 நாயகனின் மனைவி தன் அப்பாவுக்கு ஒரு அஃபேர் இருந்திருக்கு என்ற உண்மையை பெரிய ஜேம்ஸ்பாண்ட் போல கண்டு பிடிப்பது . மெயின் கதைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என சொல்லாமலேயே இழுத்தது
5 நாயகனின் மனைவி தன் கணவனைப்பழி வாங்க இரு வேறு ஆண்களுடன் அஃபேர்ல ஈடுபடுகிறாரா? அல்லது நிஜமான காதலா? என்பதை தெளிவாக சொல்ல வில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - இது ஒரு 16+ காட்சிகள் கொண்ட படம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காலம் காலமாக நாம் கண்டு வரும் கள்ளக்காதல் கதைதான் , வழக்கமாக ஜோடியில் யாரோ ஒருவர் தப்பு பண்ணுவாங்க, பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதால் இதில் இருவரும் தப்பு பண்றாங்க அவ்ளோ தான் , ரேட்டிங் 2 / 5
0 comments:
Post a Comment