இந்தப்படம், பார்க்கும் முன் படத்தைப்பற்றிய மக்கள் கருத்துக்கள் 36 பக்கமா படிச்சேன், அதுல பெரும்பாலான கமெண்ட்ஸ் இப்படித்தான் இருந்தன, ஜெயசூர்யா, குஞ்சாக்கா போபன் போன்ற அனுபவம் மிக்க நடிகர்கள் எப்படி ஒரு சாதாரண கதையில் நடிக்க ஒத்துக்கறாங்க . ? வாவ் ஃபேக்டர்ஸ் ஒன்று கூட இல்லை , வசனம் எழுத வசனகர்த்தா ரொம்ப சிரமப்படலை , பைபிள்ல இருந்தே எடுத்து அடிச்சு விட்டிருக்காரு .கிறிஸ்துவ மதத்தில் அபார நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே ரசிக்கக்கூடிய படமாக இருக்கும்
சில கமெண்ட்ஸ் மட்டும் இந்த டைப்பில் -- இது ஒரு ஃபீல் குட் மூவி . ஸ்லோ மெலோ டிராமா, ரொம்ப எதிர்பார்த்துப்போக வேண்டாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
கேரளா - இடுக்கி மாவட்டம்- தொடுபுழா - இல்லிக்கல் கிராமம் தான் கதை நிகழும் களம் . நாயகி அந்த ஊரில் வசிக்கிறார். இவருக்கு திருமணம் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது . அந்த ஊரில் டாக் ஆஃப் த டவுன் அல்லது டாக் ஆஃப் த வில்லேஜ் இந்த விஷயம் தான் . நாயகிக்கு ஏன் மேரேஜ் அமையலை ? எப்போ நடக்கும் ?
யாராவது நலம் விசாரிக்க வந்தாக்கூட இந்த லேட் மேரேஜ் பற்றித்தான் துக்கம் விசாரிக்கறாங்க . இதனால செம காண்ட் ஆன நாயகி ஒரு நாள் சர்ச்சுக்குப்போய் ஏசுவிடம் முறையிட 2008 ல் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான அறை எண் 305 ல் கடவுள் படத்தில் வருவது போல இறைவன் ஆன ஏசு மனித ரூபத்தில் நாயகி முன் தோன்றி பேசுகிறார்
இதனால் மிக ஆச்சரியம் அடைந்த நாயகி ஏசுவிடம் பிரமிப்புடன் பேசுவதும் நாயகிக்கு மட்டும் ஏசு தரிசனம் தருவதும் அடிக்கடி நாயகி தனிமையில் இருக்கும்போதெல்லாம் ஏசு எழுந்தருளுவதும் நடக்கிறது
நாயகி தான் விரும்பும் நபர் பற்றி ஏசுவிடம் சொல்கிறார். திருமணம் விரைவில் நிகழும் என ஏசு ஆசீர்வதிக்கிறார். இப்போதுதான் ஒரு திருப்பம், ஏசுவின் சிலையை யாரோ ஒரு திருடன் அது ஐம்பொன் சிலை என்பதை அறிந்து திருடிச்சென்று விடுகிறான். அதை யார் திருடியது ? என்பதை நாயகி கண்டுபிடித்தாரா? அவரது திருமணம் நிகழ்ந்ததா? என்பதை தைரியம் இருப்பவர்கள் கண்டு மகிழுங்கள்
நாயகியாக நிவேதா தாமஸ் உற்சாக குவியல் ஆக வருகிறார். 50 ரூபாய் வாங்கிக்கொண்டு 5 லட்ச ரூபாய்க்கு நடிக்கும் ஜோதிகாவுக்கே சவால் விடும்படி 5 ரூபாய் வாங்கிக்கொண்டு 5 கோடி ரூபாய்க்கான நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார்
ஏசுவின் மனித அவதாரம் ஆக குஞ்சாக்கா போபன் கச்சிதமாக வந்து போகிறார். நிஜம் தான் நடிக்க அதிக வாய்ப்பில்லை , அதனால் சும்மா செட் பிராப்பர்ட்டி போல் வந்து போகிறார்
நாயகியின் வருங்காலக்கணவன் ஆக ஜெயசூர்யா எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் விவேக் காமெடி போல ஆகி விட்டார்
2 மணி நேரம்தான் படம் ஓடுகிறது , ஆனால் நான்கு மணி நேரம் ஓடியது போல ஒரு டயர்ட்னெஸ்
காட்ஃபி சேவியர் பாபு) தான் இயக்கம், கதை , திரைக்கதை எல்லாம் . சுமார் ஆன இப்படம் அமேசான் பிரைம்ல காணக்கிடைக்கிறது
சபாஷ் டைரக்டர் ( காட்ஃபி சேவியர் பாபு)
1 இந்தப்படத்துல கதை இருக்குனு நம்ப வெச்சு தயாரிப்பாளரை ரெடி பண்ணுனது அபாரம்
2 அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய குறும்படத்தை ஜவ்வு இழுப்பாக 2 மணி நேரம் இழுத்தடித்த லாவகம்
ரசித்த வசனங்கள்
1 மிஸ், இன்னைக்கு சர்ச்சுக்கு வந்து எக்ல்ஸ்ட்ரா அரை மணி நேரம் இருங்க \\
அய்யோ , நாட் பாசிபிள்
நான் ஒரு பாட்டு பாடப்போறேன்
அதுக்குத்தான் முடியாதுன்னேன், மீ எஸ்கேப்
2 கடவுளே நேரில் வந்தாக்கூட இந்தப்பொண்ணுங்க கடவுள் போட்டிருக்கும் டிரசைப்பார்த்து இது எங்கே எடுத்ததுது?னு ஜவுளிக்கடை டீட்டெய்ல்சை விசாரிப்பாங்க
3 கடவுளே! இது தங்கமா?
ஆமா
916 கோல்டா?
4 கடவுளே! எத்தனை வருசமா இந்த சர்ச்ல இருக்கீங்க ?
100 வருசமா
\ ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் இல்லையா? ஒரே சர்ச் ல எப்படி இவ்ளோ வருசம்?
5 எப்பவுமே ஆண்கள் தான் தங்கள் காதலை பெண்ணிடம் வெளிப்படுத்துகிறார்கள் , அதுதான் உலக வழக்கம், இப்போ கொஞ்சம் நிலைமை மாறி பெண்களும் காதலை அங்கங்கே வெளிப்படுத்துகிறார்கள்
6 அந்தப்பொண்ணு கடவுள் கிட்டே தன் மேரேஜை நிறுத்துனு ஏன் வேண்டிக்கறா?
அவளுக்கு ஃபாரீன் மாப்ளை ஃபிக்ஸ் ஆகி இருக்கு ஆனா அவளுக்கு ஆல்ரெடி அஞ்சு லவ்வர்ஸ் இருக்கு , அதுல ஒருத்தன் ஃபாரீன், அவன் கூட மேரேஜ் ஆகனும் இந்த மேரேஜ் நிக்கனும்னு வேண்டிக்கறா
\\ எண்டே கர்ததாவே!
7 ஒரு மைல் தூரம் என்னுடன் ஓடி வா என யாராவது உன்னைக்கட்டாயப்படுத்தினால் நீ அவர்கள் கூட 2 மைல் தூரம் ஓடு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இந்தப்படத்திலும் லாஜிக்மிஸ்டேக்ஸ் இருக்கு , ஆனா அதை எல்லாம் கண்டு பிடிக்க தூங்காமல் படத்தை முழுசாப்பார்க்கனும்..
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - படத்தில் கண்ட்டெண்ட்டுக்கே பஞ்சம், இந்த லட்சணத்துல அடல்ட் கண்ட்டெண்ட் ஏது ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அரசியல் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்களுக்கு 1000 ரூபாய் பணமும், 3 வேளை சாப்பாடும் கொடுப்பாங்க . அந்த மாதிரி யாராவது கொடுத்தா வேணா படம் பார்க்கலாம் . நல்லா தூக்கம் வருது ரேட்டிங் 1.5 / 5
Enthada Saji | |
---|---|
Directed by | Godfy Xavier Babu |
Story by | Godfy Xavier Babu |
Produced by | Listin Stephen |
Starring | |
Production company | Magic Frames |
Release date |
|
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment