ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன், அவன் நண்பன் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் , நண்பர்கள் . இருவரது குடும்பமும் நட்புடன் பழகி வருகிறார்கள் நாயகனின் நண்பன் ஒரு அம்மா பிள்ளை. அம்மா எது சொன்னாலும் கேட்டுக்கொள்பவன். இதனால் மனைவி கூட சண்டை . எல்லா வீட்டிலும் இருக்கும் மாமியார் , மருமகள் பிரச்சனை
நாயகனின் தங்கைக்கு திருமணம். அதற்கான நிச்சயதார்த்த விழாவுக்கு ஃபாரீனில் இருந்து நண்பன் வருகிறான். நண்பனது ஸ்கூட்டியை கல்யாண வீட்டில் யாரோ எடுத்துச்சென்று விபத்துக்குள்ளாக்கி ஸ்க்ராட்ச் ஆன இடத்தில் அது தெரியாதவாறு ஸ்டிக்கர் ஒட்டி பழையபடி கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள்
இது நாயகனுக்கோ , நாயகனின் நண்பனுக்கோ தெரியாது. நாயகனின் நண்பன் அந்த ஸ்கூட்டியை ஆல்ரெடி விலை பேசி அட்வான்ஸ் எல்லாம் வாங்கி விட்டான். ஸ்கூட்டியை ஓட்டிச்சென்ற புது ஓனர் அதை திருப்பிக்கொண்டு வந்து தந்து விடுகிறான், சண்டையும் போடுகிறான், ஸ்கூட்டியில் ஸ்க்ராட்ச் இருப்பதை மறைத்து விட்டாயா? என்கிறான். பெரிய அமளி துமளி ஆகிறது
இதனால் நண்பர்கள் இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்படுகிறது . அதை யார் செய்தது என்பதை நாயகன் கண்டு பிடிப்பதுதான் கதை
விடுத்லை படத்தில் ரஜினி ஒரு டயலாக் பேசுவார் .ஃபூ.. இதெல்லாம் ஒரு பூட்டா? அது போல இதெல்லாம் ஒரு கதையா? என்று ஒன்லைன் கேட்டதும் தோன்றினாலும் எடுத்துக்கொண்ட கதையை எந்த அளவு சுவராஸ்யமாக சொல்ல முடியுமோ முடிந்த வரை முயற்சி செய்து இருக்கிறார்
நாயகனாக சவுபின் சாஹிர் மாமனார் வீட்டில் தன்னை யாரும் மதிக்கவில்லை என மனம் கலங்குவது , நண்பன் தன்னை சந்தேகப்படுகிறான் என மனம் வெதும்புவது என குணச்சித்திர கேரக்டரில் நன்கு நடித்துள்ளார், அதே சமயம் கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் காமெடி செய்யவும் தவறவில்லை
நாயகனின் நண்பனாக பினு பாப்பு , அம்மாவுக்கு பயப்படும் காட்சி , மனைவியிடம் பம்மும் காட்சி அனைத்திலும் முத்திரை பதிக்கிறார்
நாயகனின் மனைவியாக லிஜோமோல் ஜோஸ் குடும்பப்பாங்கான நடிப்பு.
நாயகனின் நண்பனின் மனைவியாக நிகிலா விமல் அதிக ஸ்கோர் பண்ண வாய்ப்பு , கச்சிதமாக 3நடித்திருக்கிறார்
லோ பட்ஜெட் படத்தில் வரு ம் பபிள் கம் பாட்டு , டான்ஸ் இரண்டும் கலக்கல் ரகம்
திரைக்கதைஎழுதி இயக்கி இருப்பவர் இர்ஷாத் பராரி . எடுத்துக்கொண்ட கதைக்கரு மிக சாதாரணம் என்பது பலவீனம் தான் என்றாலும் முடிந்தவ்ரை திரைக்கதையாக சுவராஸ்யப்படுத்த முனைந்திருக்கிறார்
ஆனால் ஸ்கூட்டியில் ஒரு ஸ்க்ராட்ச் ஆன மேட்டருக்காக க்ரைம் இன்வெஸ்டிகெஷன் த்ரில்லர் பாணியில் கதையை நகர்த்துவது ஓவர் ஒன்றரை மணி நேரம் தான் படம் , ஆனால் பொறுமையை சோதிக்கிறது . ரேட்டிங் 2.25 / 5
ரசித்த வசனங்கள்
1 என்னோட அனுபவத்தில் சொல்றேன் , நல்லவங்களோட வாழ்றது ரொம்ப கஷ்டம் ,அது பக்கத்து வீட்டுக்காரங்களோ , கூட வேலை செய்யறவங்களோ
2 ஓப்பனா பேச இப்படி ஒரு ஓப்பன் பிளேஸ் வேணும்
3 ரெண்டு கிலோ வாழக்கா, ஒரு கிலோ டால்டா வாங்கிட்டு வாங்க ‘’
நர்ஸ் , என்ன சொல்றீங்க ?
புரியுதுல்ல? இது சந்தைக்கடை இல்லை , ஹாஸ்பிடல், கொஞ்சம் அமைதியா இருங்க
ஓ , கலாய்க்கறீங்களா?
4 நல்ல மனசு இருக்கறவங்க சந்தோஷமா வாழ்வாங்கனு சொல்வாங்களே? அந்த மாதிரி ஒரு பொய்யை நான் கேட்டதே இல்லை
5 நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா? இந்த உலகத்துல 50% பொய்கள்திருடர்களால்சொல்லப்படுதுன்னா ,மீதி 50% நேர்மையானவர்களால் சொல்லப்படுது
Ayalvaashi | |
---|---|
Directed by | Irshad Parari |
Written by | Irshad Parari |
Produced by | Ashiq Usman Muhsin Parari |
Starring | |
Cinematography | Sajith Purushan |
Edited by | Siddique Hyder |
Music by | Jakes Bejoy |
Production companies | Ashiq Usman Productions Local Agenda Motion Pictures |
Release date |
|
Country | India |
Language | Malayalam |