2020 ல் ரிலீஸ் ஆன லாக்கப் எனும் மிஸ்ட்ரி த்ரில்லர் படத்தை இயக்கிய எஸ் ஜி சார்லஸ் இப்போது காமெடி படம் ஒன்றை எடுத்திருக்கிறார். 2023 ஏப்ரல் 14 அன்று திரைக்கு வந்த இப்படம் இப்போது டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ரிலீஸ் ஆக வந்துள்ளது. படத்தின் டைட்டில் கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி காமெடி டிராக் ஆன காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்காங்க என்ற வரியிலிருந்து உருவானது . இது போக சொப்பன சுந்தரி நாந்தானே சொப்பன லோகத்தில் தேன் தானே ( வீர சிவாஜி) செம ஹிட் பாடல் வரியிலும் வருகிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி தன் அம்மா, அக்கா , நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்திருக்கும் அப்பா உடன் வசித்து வருகிறார் அண்ணன் லவ் மேரேஜ் பண்ணி தனிக்குடித்தனம் போய் விட்டான். குடும்பத்தைக்காப்பாற்றும் பொறுப்பு நாயகிக்கு இருக்கிறது .ஒரு நகைக்கடையில் வைத்த போட்டி கூப்பன் மூலம் நாயகிக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் கிடைக்கிறது
கார் கைக்கு கிடைத்ததும் அக்காவுக்கு ஒரு வரன் அமைகிறது . மாப்பிள்ளை வீட்டாரின் வரதட்சனைக்கோரிக்கையாக அந்த கார் டார்கெட் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாயகனின் அண்ணன் மூலம் பிரச்சனை வருகிறது
மாப்பிள்ளை அவர்தான் , ஆனா அவர் போட்டிருக்கும் சட்டை என்னுது என்ற படையப்பா பட காமெடி போல கூப்பனில் நாயகி பெயர் தான் இருக்கிறது , ஆனால் நகையை வாங்கியது நாயகியின் அண்ணன். அதுவும் அவருக்காக வாங்க வில்லை , கமிஷனுக்கு ஆசைப்பட்டு வேறு ஒருவருக்கு வாங்கித்தந்தது
அக்காவின் மாப்பிள்ளை ஒரு ரைடு போய்ட்டு வரலாம்னு காரில் போகும்போது ஒரு விபத்து ஏற்பட்டு அடிபட்ட ஆள் டெட் பாடி காரில் டிக்கியில் மறைக்கபப்டுகிறது.
போலீஸ் ஸ்டேஷனில் கார் இருக்கிறது. இந்தப்பிரச்சனைகளை எல்லாம் நாயகி எப்படி சமாளிக்கிறார் என்பதே மீதி கதை
நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஸ் காமெடி , செண்ட்டிமெண்ட் என எல்லாக்காட்சிகளிலும் அசத்துபவர் க்ளைமாக்ஸில் ஆக்சன் சீக்வன்சிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்
நாயகியின் அக்காவாக லட்சுமிப்ரியா சந்திரமவுலி அமைதியாக வந்து போகிறார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக வரும் இவர் முக பாவனைகள் , கண்களாலேயே பேசி விடுகிறார்
அம்மாவாக தீபா சங்கர் லொட லொட என வாய் பேசும் வாயாடிக்கேரக்டரில் அதகளம் பண்ணி இருக்கிறார்
அண்ணனாக கருணாகரன் அடக்கி வாசித்து இருக்கிறார். இவரின் மச்சானாக வரும் மைம் கோபிக்கு வில்லன் ரோல், ஓக்கே ரகம்
ரெடின் கிங்க்ஸ்லி காமெடி ரோலில் களை கட்ட உதவுகிறார்
நடிக்ர்கள் தேர்வும் அவர்களது கச்சிதமான நடிப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கியக்காரணங்கள் . கோல மாவு கோகிலா படம் போல தர வேண்டும் என்ற முனைப்பு இயக்குநரிடம் தெரிகிறது
விஷால் ச்ந்திர சேகர் இசையில் 2 பாடல்கள் ஓக்கே ரகம், அஜ்ம்ல பின்னணி இசையில் கலக்கி விட்டார்
கே சரத் குமாரின் எடிட்டிங்கில் 2 மணி நேரத்துகு 3 நிமிடம் குறைவாக டைம் டியூரேஷன் வரும்படி ட்ரிம் பண்ணி இருக்கிறார்
பால முருகன் , விக்னேஷ் கோபாலன் இருவ்ரும் ஒளிப்பதிவில் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கின்றனர்
சபாஷ் டைரக்டர்
1 பின்னணி இசை பிரமாதம், ஒரு த்ரில்லர் படத்துக்குத்தேவையான மூட் பிஜிஎம் மில் நல்லாவே கிடைக்கிறது
2 திருடனுக்குக்கூட கல்வி அறிவு முக்கியம் என உணர்த்தியபாங்கு
3 நாயகியின் அம்மா கேரகடர் , கிங்க்ஸ்லீ கேரக்டர் இரண்டும் ப்டத்தில் காமெடி களை கட்ட முக்கியக்காரணங்கள்
ரசித்த வசனங்கள்
1 நான் வாங்குன காசையே திருப்பித்தர மாட்டேன் , இவன் என்னடான்னா வட்டிக்காசை கேட்கறான்
2 யார் கூப்ட்டாலும் பிசியா இருக்கற மாதிரி காட்டிக்கனும்னு நீதானே சொன்னே?
அதுக்காக போலீஸ் ஸ்டேஷன்ல எதுக்கோ கூப்ட்டு விட்டிருக்காங்க , இன்ஸ்பெடரை வெய்ட் பண்ணச்சொல்லுங்க , வேலையை முடிச்ட்டு வர்றோம்னு சொல்றதா?
3 நான் சொல்லப்போகும் விஷயத்தைக்கேட்டு ஷாக் ஆகிடாதே
ஆ
மச்சான் நான் இன்னும் சொல்லவே இல்லை
4 கார் எங்கே? காணோம் ?
அதுவாக்கிங் போய் இருக்கு
5 எதுக்கும்மா இப்போ தலைல முக்காடு போடறே?
போலீஸ் ல மாட்டாம இருக்க மாறு வேஷம்
4 டேய் எதுக்குடா வீடு புகுந்து திருடுனே?
கார் பில்லை எடுக்க போனேன் சார்., பில் இருந்தாதான் கார் தருவேன்னு ஒரு கூமுட்டை சொன்னானாம்
யோவ், அந்த கூமுட்டை இந்த இன்ஸ்பெக்டர்தான்
அய்யய்யோ
5 அவன் ஒரு நாள்தான் இங்கே இருக்க முடியும், அவன் ஊருக்குபோகனும், அவன் ஆயா செத்துப்போச்சு
எனக்குதான் ஆயாவே இல்லையே?
உனக்கு ஆயா இருந்துச்சு , இப்போ செத்துப்போச்சு
ஓ, நீ அப்படி வர்றியா?
6 எலெக்சன் வர இன்னும் நாலு வருசம் இருக்கே? அதுக்குள்ளே பணம் கேட்டா எப்ப்டி ?
அட்வான்சா தரலாமில்ல> ‘
ஜனங்களை ரொம்ப கெடுத்து வெச்சிருக்காங்க
7 பொண்ணுங்க அப்பாவை நம்பி மட்டும் வாழ்றதில்லை , அண்ணன், தம்பி எல்லாரயும் நம்பி தான், இது உனக்கு புரிஞ்சா சரி
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள் \
1 பொதுவாக ஒரு நிறுவனம் நடத்தும் பரிசுப்போட்டியில் அதில் பணி புரியும் நபர்கள் கலந்து கொள்ள முடியாது . நகைக்கடையில் பணி ஆற்றும் நாயகிக்கு பரிசு எப்படி விழுந்தது ?
2 ஓப்பனிங் ஷாட்டில் நகைக்கடை ஊழியர் நாயகிக்கு பரிசு விழுந்த தகவலை தெரிவிக்க நாயகியின் வீட்டுக்கு வரும்போது விசாரித்துத்தான் வருகிறார். சக ஊழியரை அவருக்கு ஏன் அடையாளமே தெரியவில்லை ?
3 நகை வாங்கியது அண்ணன் , ஆனால் பரிசுக்கூப்பனை ஃபில்லப் செய்து அனுப்பி பரிசு பெற்றது நாயகி . இந்தக்குழப்பத்தில் பரிசு தரும்போது பில் கேட்கனுமே? கேட்கவே இல்லை , பிறகுதான் பில் பிரச்சனை வருகிரது . கார் பரிசு தரும்போதே பில் கேட்டிருக்க வேண்டும்
4 நாயகியின் அண்ணனின் மச்சினன் நாயகியை நடு ரோட்டில் பளார் என அடிக்கிறார். டொமெஸ்டிக் வயலென்ஸ் கேசில் உள்ளே போடலாமே? ஏன் புகாரே தரவில்லை ?
5 கார் டிரைவிங் பழகுபவர்கள் பழைய காரில் தான் பழகுவார்கள் , பரிசாக விழுந்த புத்தம்புது காரில் பழகி காரைகண்டம் பண்ணுவாங்களா?
6 பில் ஒரிஜினல் நகை ஒனரிடம் இருக்கும், ஆனால் பில் காப்பி கடைல இருக்குமே? அந்தப்பேரும், கூப்பன் பேரும் ஒரே பேரா?னு செக் பண்ண மாட்டாங்களா?
7 கார் ஒரு விபத்து ஏற்படுத்துனா ஒண்ணா அதை போலீஸ்ல இன்ஃபார்ம் பண்ணனும், அல்லது நைசா ஓடிப்போய்டனும், இதுதான் ரெகுலரா செய்வது . யாராவது கார் இடிச்ச ஆள் இறந்துட்டான்னு அவன் டெட் பாடியை அதே காரில் உள்ளே வைப்பார்களா?
8 வீடு புகுந்து கார் பில்லை தேடி திருடுவது தேவை இல்லாத ரிஸ்.க் அதுக்கு ஓனர்ட்ட ஏதாவது பொய்யைச்சொல்லி பில்லை நேரடியாவே வாங்கி இருக்கலாம்
9 பில்லை திருடும்போது அதை கசக்கி உருண்டை ஆக்கி தூக்கிப்போட்டுட்டு மீண்டும் கிங்க்ஸ்லீ கைல பில் அயர்ன் பண்ணின அரிசி மாதிரி இருப்பது எப்படி ?
10 பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கிடையில் கிடக்கும் ஒரு குடிகாரனின் கிட்னியை எப்படி விற்க முடியும் ? ஆல்ரெடி குடிகாரன் கிட்னி சட்னி ஆகி இருக்குமே?
11 அவசர பனத்தேவை உ:ள்ள நாயகியை அடைய நினைக்கும் போலீஸ் ஆஃபீசர் ரூ ஒரு லட்ச ரூபாயை நாயகி கையில் கொடுத்து நீ கேட்டதை நான் கொடுத்துட்டேன், நான் கேட்டதை நீ எனக்கு தா அப்டினு கெஞ்சிட்டு இருக்கார். நினைத்தபடி இணங்கினால்தான் ப்ணம்னு மிரட்டுவதுதானே போலீஸ் வழக்கம் ?
12 போலீஸ் ஆஃபீசர் முன் நாயகி ஆதாரம் உள்ள செல் ஃபோனைக்காட்டி இதை பிரஸ்க்கு அனுப்பிடுவேன்னு மிரட்றாரே? அவர் அதை பிடுங்கி இருந்தால் என்ன ஆகும் ?
13 என்னதான் காமெடிக்கு என்றாலு ம் நாயகியின் அப்பாவின் கிட்னியை விற்பதும் அதை வைத்து மொக்கை காமெடி பண்ணுவதும் கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க என சொல்ல வைக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - லாஜிக் மிஸ்டேக்ஸ் எல்லாத்தையும் மறந்துட்டுப்படம் பார்த்தா 2 மணி நேரம் டைம் பாஸ் மூவி . சீரியல் பார்க்கும் பெண்கள் தவிர அனைவருக்கும் பிடிக்கும் ரேட்டிங் 2.75 / 5
Soppana Sundari | |
---|---|
Directed by | SG Charles |
Written by | SG Charles |
Produced by |
|
Starring | |
Cinematography |
|
Edited by | K. Sarath Kumar |
Music by |
|
Production companies |
|
Release date |
|
0 comments:
Post a Comment