த்ரில்லர் படங்களில் தொடர்ந்து நடிக்கும் அருள் நிதிக்கு இது ஒரு சறுக்கல் படம் . ஏப்ரல் 14 2023 அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது நெட் ஃபிளிக்சில் 12/5/2023 முதல் காணக்கிடைக்கிறது , அறிமுக இயக்குநர் ஹரீஸ் பிரபுவின் முதல் படம் இது . 42 நாட்களில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படம் இது . முழுக்க முழுக்க ஹாஸ்பிடலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம். அதைத்தொடர்ந்து இதுதான்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனோட அப்பா ஒரு விபத்தில் சிக்கி தலைல அடிபட்டு ஜிஹெச் ல அட்மிட் ஆகறார். அந்த ஜி ஹெச் ல பணி புரியும் கடை நிலை ஊழிய்ர்கள் நான்கு பேரில் ஒருவர் கூட நாயகனுக்கு மோதல் உண்டாகிறது . அந்த நான்கு பேரும் சமூக விரோதிகள் , வில்லன்கள் , கொலை , கொள்ளை போன்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிட்டீசில் ஈடுபடுபவர்கள் , நாயகன் மேல் காண்டாகி நாயகனைப்பழி வாங்க நாயகனின் அப்பாவுக்கு விஷ ஊசி போட்டு விடுகிறார்கள் . இது போக இவர்கள் நான்கு பேரும் செய்த வேறு ஒரு கொலையை நாயகனின் அக்கா மகள் பார்த்து விடுகிறாள் . அவளை போட்டுத்தள்ள வில்லன்கள் திட்டம் தீட்டுகிறார்கள் , இவர்களை நாயகன் எப்படி முறியடித்தான் என்பதே கதை
படம் போட்டு முதல் 30 நிமிடங்கள் கேரக்டர்கள் அறிமுகம். ஓப்பனிங் சாங் , ஒப்பனிங் ஃபைட் என வேகமாக நேரத்தை இழுத்து விடுகிறது . மீதி ஒன்ற்ரை மணி நேரம் தான் படம் . ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் இருப்பதால் கதையுடன் ஒன்ற முடியவில்லை , ஆனா படம் ஸ்பீடு
நாயகனாக அருள் நிதி , வாய் பேச முடியாத செவி கேளாத மாற்றுத்திறனாளி , ஆனால் கோபக்காரன் ( அப்போதானே நிறைய ஃபைட் சீன் வைக்க முடியும் ?
படத்தின் கதைக்கும், நாயகனின் கேரக்டர் டிசைன்க்கும் சம்பந்தம் இல்லை . பூ விழி வாசலிலே படத்தில் அந்த பேபி சுஜிதாவுக்கு வாய் பேச முடியாது என்றால் திரைக்கதைக்கு அந்த விஷயம் உதவியது ., இதில் அப்படி இல்லை
நாயகியாக ஆத்மிகா அதிக வேலை இல்லை , ஒரு டூயட் உண்டு . அப்பாவாக பாரதிராஜா படம் முழுக்க படுத்த படுக்கையாக இருக்கிறார், ஆனால் அவர் நடிப்பு அருமை
வில்லன் அஷ்ரப் நடிப்பும் உடல் மொழியும் அபாரம் . பொதுவாக வில்லன் என்றால் கடோத்கஜன் மாதிரி இருக்க வேண்டியதில்லை , ஒல்லி கில்லி ஆகவும் இருக்கலாம் என்பதை நிரூபிக்கும் தோற்றம் . இவர் வரும்போது போடும் பிஜிஎம் கூட மிரட்டல் ரகம்
இசை அமைப்பாளர் சாம் சி எஸ் இன் பின்னணி இசை மிரட்டல் ரகம், வில்லன்கள் வரும்போதெல்லாம் ஒரு பிஜிஎம் போட்டு அசத்துகிறார்
2பாடல்களில் ஒன்று தேறுகிறது
ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் வழக்கமான மசாலாப்படங்கள் போல
சபாஷ் டைரக்டர்
1 ஒரே ஒரு ஹாஸ்பிடல் செட்டிங் போட்டு மொத்தப்படத்தையும் முடித்தது
2 டயலாக் ரைட்டருக்கு வேலை இருக்கக்கூடாது என நாயகன் கேரக்டர் டிசைனை வாய் பேச முடியாதவராக அமைத்தது
3 கார்த்தி நடித்த நான் மகான் அல்ல கதை போல ரெடி செய்தது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இரவு நேரம் லேடீஸ் உடன் காரில் வருபவ்ர்கள் யாரோ பைக் ரிப்பேர் என்று சொன்னதற்காக இறங்கி அருகே போவார்களா? பகல்லயே பசுமாட்டுக்கு ஹெல்ப் பண்ணாடவங்களா ராத்திரில எருமை மாட்டுக்கு ஹெல்ப் பண்ணபோறாங்க ?
2 நாயகன் நைட் டைம்ல நாயகியை தனியா ஜி ஹெச்க்கு ஆட்டோல அனுப்பறாரே?ஜிஹெச் ல டிராப் பண்ணிட்டு அப்றமா சைட்க்கு போலாமே? ஃபோன் செஞ்ச ஆள் இங்கே வந்தா பரவால்லைனுதான் சொல்றான், உடனே வ்ந்தாகனும்னு சொல்லலையே
3 காரில் வரும் கறுப்புப்பணம் பற்றிய தகவல்முன்னுக்குப்பின் முரணாக உள்ளது . 3 கோடி ரூபாய் என இரு இடங்களில் ஒரு கோடி ரூபாய் என 2 இடங்களில் மாற்றிமாற்றி சொல்கிறார்கள்
4 ஒரு தவறான ஊசியை பேஷண்ட்டுக்குப்போட டாக்டர் மனைவி வீட்டுக்குப்போய் மிரட்டி படிய வைக்க முயற்சிக்கறது காதைச்சுற்றி மூக்கைத்தொடும் வேலை , 1000 ரூபா கொடுத்து நர்ஸ் மூலமா போடலாம், நான்கு வில்லன்களில் ஒருத்தன் கம்பவுண்டர் ம் அவனே கூட ஊசி போடலாம்
5 போலீசுக்கு ஃபோன் செய்து கர்ப்பிணிப்பெண் எனக்கு ஒரு ஆள் மேல டவுட்டா இருக்கு என சில தகவல் சொல்ல முயலும்போது டிராஃபிக்கில் இருக்கும் போலீஸ் ஆஃபீசர் நீ பேசறது எதுவும் கேட்கலை என்கிறார். திருப்பித்திருப்பி சொன்னதையே சொல்கிறார் அந்தப்பெண் , வாட்ச்சபில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கலாமே?
6 படம் முழுக்க வில்லன்கள் மேல் நாயகன் கரும்பால் அடிப்பது , பிளாஸ்டிக் சேரால் அடிப்பது என்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இரண்டிலும் அடி பிடிக்காது என்பதுதான் உண்மை . ஸ்டீல் சேர் அல்லது மர நாற்காலி எனில் அடி பிடிக்கும். பிளாஸ்டிக் சேர் உடைஞ்சு தான் போகும், அதே போல ஆல மர விழுது கிளை எனில் அடி பிடிக்கும் , ஆலைக்கு போகும் கரும்பு எல்லாம் சின்னப்பசங்களை அடிக்கக்கூட உதவாது
7 க்ளைமாக்ஸ் ல ஒரு வில்லன் நாயகனை கட்டையால தாக்கி மயக்கம் அடைய வெச்சுடறான். அதே கட்டையால நாயகன் தலைல 3 அடி போட்டா வேலை முடிஞ்சிருக்கும், அவன் கிறுக்கன் மாதிரி அந்த கட்டையைத்தூக்கி எறிஞ்சுட்டு பொருளை எடுங்கடானு மத்த ஆள் கிட்டே சொல்ல ஸ்லோமோஷன்ல அவனுங்க போய் கத்தி அரிவாள் எல்லாம் எடுத்துட்டு வ்ர்றதுக்குள்ளே நாயகன் விழிச்சுடறான், வடை போச்சா?
8 வில்லன்கள் செய்யும் கொலையை நாயகனின் அக்கா மகள் பார்த்து விடுகிறாள், ஆனால் கடைசி வரை யாரிடமும் அதை அவர் சொல்லாதது என் ?>
9 கொலையைக்கண்ணால் கண்ட சாட்சியான அக்கா மகளை வில்லன்கள் விட்டு வைப்பது ஏன் ?
10 லிஃப்ட் ஆபரேட்டரான வில்லன் இப்போ போலீஸ் வரும் பாரு , நம்ம இடத்துக்கு அவன் வரப்போறான் பாரு
11 நாயகனின் அப்பாவுக்கு இரங்கும் க்ளுக்கோஸ் பாட்டிலில் தான் விஷ ஊசி போட திட்டம், அதை கம்பவுண்டரே ஈசியா போடலாமே? எதுக்கு டாக்டரோட ஒயிஃப் வீட்டுக்குப்போய் மிரட்டி ஊசி போட வைக்கனும் ? இது ரிஸ்க். திட்டம் வெளி ஆட்கள் இருவருக்கு தெரிந்து விடும்
12 லிஃப்ட்டுக்குள்ளே சிசிடிவி கேமரா இருக்குமே? வில்லன்கள் எப்படி தைரியமா டெட் பாடி டிஸ்போஸ் பண்ண லிஃப்டில் எடுத்துட்டு வர்றாங்க ?லிஃப்டில் கொலையே பண்றாங்க
13 வில்லன்கள் நாலு பேரும் பகல் ட்யூட்டியா ஜிஹெச்ல ஒர்க் பண்றாங்க, நைட் ட்யூட்டியா கொலை , கொள்ளை போன்ற குற்றச்செயல்களிலீடுபடறாங்க . எப்போத்தான் தூங்குவாங்க ?
14 க்ளைமாக்சில் வில்லன்கள் நான்கு பேரின் மறைவிடம் நாயகனுக்கு எப்படி தெரிந்தது ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 18+ காட்சிகள் இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மூளையைக்கழட்டி ஓரமாக வைத்து விட்டு கார்னர் சீட்டில் படம் பார்த்தால் பார்க்கலாம், போர் அடிக்காமல் போகிறது ரேட்டிங் 2/ 5
0 comments:
Post a Comment