1983ல் ராஜசேகர் இயக்கத்தில் தியாகராஜன் - சரிதா நடிப்பில் வெளி வந்த மலையூர் மம்பட்டியான் , 1986 ல் ராமநாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த்-நளினி நடிப்பில் வெளி வந்த கரிமேடு கருவாயன் , 1990 ல் மனோஜ்குமார் இயக்கத்தில் ராம்கி - சீதா நடிப்பில் வெளியான மருத பாண்டி , 1994 ல் பிரதாப் போத்தன் இயக்கி நெப்போலியன் -சரண்யா நடிப்பில் வெளியான சீவலப்பேரி பாண்டி , 1999 ல் வின்செண்ட் செல்வா இயக்கத்தில் முரளி -மீனா நடிப்பில் வெளியான வாட்டாகுடி இரணியன் ( பின் சென்சார் பிரச்சனையால் டைட்டில் இரணியன் ஆனது ) ஆகிய படங்களில் எல்லாம் போலீசாரால் தேடப்படும் ஒரு ஆள் ( போராளி , அல்லது கொள்ளைக்காரன் அல்லது திருடன் ) மக்களால் நேசிக்கப்படுபவனின் கதையை தந்திருந்தார்கள் , இவை எல்லாமே உண்மை சம்பவங்கள் , வாழ்ந்த கதா பாத்திரங்கள்
அது போல வாத்தியார் என்று அழைக்கப்படும் பெருமாள் என்ற நபரின் கதையைத்தான் இதில் படமாக்கி இருக்கிறார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் போலீஸ் இலாகாவில் பணி புரியும் சாதாரண ஜீப் டிரைவர் அருமபுரி என அழைக்கப்படும் மலையூரில் கனிமவள சுரங்கம் தோண்ட நம் இந்திய அரசாங்கம் பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கிறது . ஆனால் மலை வாழ் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் அனுமதிக்காத மக்கள் படை என்னும் புரட்சிக்குழு வை வழி நடத்தும் தலைவன் வாத்தியார் என்னும் பெருமாள் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறான்.
பாலத்தில் ரயில் வரும்போது குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது . இந்த தீவிரவாத செயலை செய்தது வாத்தியார் தான் என போலீஸ் நினைக்கிறது . அவனைப்பிடிக்க போலீஸ் சிறப்புப்படை அங்கே முகாம் அடிக்கிறது. ஊர் மக்களை விசாரணை என்னும் போர்வையில் போலீஸ் கொடுமைப்படுத்துகிறது
மனசாட்சி உள்ள போலீசான நாயகன் உயர் அதிகாரியால் பழி வாங்கப்படுகிறான் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் குணம் உடைய நாயகன் அந்த ஊர்ப்பெண் ஒருத்தியை காதலிக்கிறான் , அவளும் தான்
போலீஸ் விசாரணைக்கு ஊர் மக்களை பிடித்து சித்ரவதை செய்யும் போலீஸ் நாயகியையும் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்கிறது . நாயகியைக்காப்பாற்ற நாயகன் அந்த போராளிக்குழு தலைவன் வாத்தியாரைக்கைது செய்ய போலீசுக்கு உதவுகிறான்
இது தான் முதல் பாகத்தின் கதை
கதையின் நாயகனாக சூரி . வெண்ணிலா கபாடிக்குழுவில் புரோட்டா சூரி ஆக புகழ் பெற்ற காமெடி நடிகரான இவர் இப்படத்துக்காக ஜிம் பாடி டெவலப் பண்ணி சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஆக்சன் ஹீரோ போல க்ளம் இறங்கி இருக்கிறார். ஆனால் எங்கும் யதார்த்தத்தை மீறிய ஓவர் ஆக்சன் , பறந்து பறந்து அடித்தல் எல்லாம் இல்லை . அருமையான நடிப்பு
நாயகி பாப்பு என்கிற தமிழரசியாக பவானி ஸ்ரீ கிராமத்து அழகியாக கச்சிதமாக நடித்திருக்கிறார். இரு பாடல்காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கைங்கரியத்தில் பள பளப்பான் மின்னுகிறார் . இவர் இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷின் உடன் பிறந்த சகோதரி
நாயகனுக்கு உயர் அதிகாரியாக சேத்தன் வெறுப்பை ஏற்படுத்தும் பாத்திரம் , கச்சிதமாக நடித்திருக்கிறார்
இயக்குநர் கவுதம் மேனன் ஸ்பெஷல் ஆஃபீசராக கம்பீரம் காட்டி இருக்கிறார்
வாத்தியார் எனும் பெருமாள் கேரக்டரில் இந்த பாகத்தில் விஜயசேதுபதிக்கு அதிக வேலை இல்லை . அடக்கி வாசித்து இருக்கிறார்
தலைமைச்செயலாளராக ராஜீவ்மேனன் அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது உடல் மொழி பிரமாதம்
இசைஞானி இளையாராஜாவின் மெலோடி இசையில் செம ஹிட்டான இரு பாடல்கள் மனதைத்தொடுகின்றன . பின்னணி இசையும் அருமை , ஆர்வேல் ராஜின் ஒளிப்பதிவு மலைப்பிரதேசங்களின் அழகை , கானகத்தின் இருளை அற்புதமாக பதிவு செய்திருக்கிறது
150 நிமிடங்கள் ஓடும் படத்தில் ஒரு இடத்தில் கூட சலிப்புத்தட்டவில்லை என்பது பிளஸ்
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங் ஷாட் ஆன ரயில் விபத்து காட்சி சிங்கிள் ஷாட்டில் அருமையான படப்பிடிப்பு . சமீபத்தில் எந்த ஒரு படத்திலும் இது போல தத்ரூபமான விபத்துப்பதிவு வந்ததில்லை ( கடைசியாக அன்பே சிவம் )
2 நீ செஞ்சது தப்பில்லையா? என சேத்தன் கேட்கும்போது தப்பு தான்யா ஆனால் அந்த நிலைமைல நான் செஞ்சது தப்பில்லைய்யா என நாயகன் சொல்லும் காட்சி அதகளம்
3 எப்போப்பாரு சவ் சவ் தானே உங்க போலீஸ் கேம்ப்ல சாப்பிடறே? ஒரு நாள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டுப்பாரு என நாயகி நாயகனிட்ம் சொல்லும்போது ஒரு செக்ண்டில் வந்து போகும் இளையராஜாவின் பிஜிஎம்
4 வேற வழியே இல்லை , மன்னிப்புக்கடிதம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும்போது லெட்டர் எழுதி கொண்டு போய் கொடுக்க முற்பட்டு பின் மனசை மாற்றி லெட்டரை நாயகன் கிழித்துப்போடும் இடம்
5 டீ அல்லது காபி டம்ளரை ஜிவிஎம் இடம் கொடுக்க நாயகன் அல்லாடும் காட்சி அவரது உடல் மொழி அபாரம், சார்லி சாப்ளின் சாயல் தெரிந்தாலும் செம நடிப்பு
செம ஹிட் சாங்க்ஸ்
1 ஒன்னோட நடந்தா.... ( தனுஷ் -அனன்யா பாடிய பாடல் ) ( என்ன சொல்லி பாடுவதோ, என்ன வார்த்தை பேசுவதோ என்ற என் மன வானில் பாட்டின் பட்டி டிங்கரிங் ஆக இருந்தாலும்.. சிறப்பான பாட்டு
2 வழி நெடுக வாசமல்லி காட்டு மல்லி ( இளையராஜா-அனன்யா பாடிய பாடல் )
3 அருட்பெருஞ்சோதி ( இளையராஜா பாடிய பாடல் )
ரசித்த வசனங்கள்
1 வன்முறை என்பது எங்களுடைய மொழி அல்ல, ஆனா அந்த மொழில தான் நீங்க பேசுவீங்கன்னா அந்த மொழில யும் எங்களுக்குப்பேசத்தெரியும் ,ஏன்? நீங்க எந்த மொழில பெசினாலும் அந்த மொழில பேசத்தெரியும்
2 இவ்ளோ கஷ்டத்திலும் சந்தோஷமாக இருக்க உன்னாலமட்டும்தான்யா முடியும்
சில பேரைப்பார்க்கப்போறோம்கறதே சந்தோஷம் தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 போலீசை ஜென்ம விரோதியாகப்பார்க்கும் ஊர் , போலீஸ் யூனிஃபார்மைக்கண்டாலே நடுங்கும் மக்கள் இருக்கும் ஊர் அங்கே போய் அப்பப்ப ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம் ல ஹீரோயின் கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கார் . ஊர் மக்கள் கண்டுக்கவே இல்லை
2 நாயகனுக்கு அவன் உயர் அதிகாரிக்கும் ஆகாது ., கண் வைக்கிறார். பழி வாங்கப்படுகிறார். ஆனால் அடிக்கடி மட்டம் போட்டுட்டு நாயகி பின்னால சுத்திட்டு இருக்கார் . இத்தனைக்கும் ஜீப் டிரைவர் , எப்படி டிமிக்கி கொடுத்துட்டு வர முடியும் ?
3 படம் முழுக்க யதார்த்த நாயகானக காட்டி விட்டு க்ளைமாக்சில் 20 நிமிடங்கள் ஆக்சன் ஹீரோவாக மாறி விக்ரம் கமல் போல அங்கேயும் இங்கேயும் எறி இறங்கி விழுந்து புரண்டு சாகசம் எல்லாம் நாயகன் செய்வது தனித்துத்தெரிகிறது
4 பல இடங்களில் டாகுமெண்ட்ரித்தனம் தெரிகிறது, மெலோ டிராமா மாதிரி காட்சிகள் அதிகம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - ஊர் பெண்கள் அனைவரையும் நிர்வாணப்படுத்தும் காட்சி ஒரு பெண் நிர்வாணமாக ஓடி வரும் காட்சி என ப்ளர் செய்யப்பட்ட இரு காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வெற்றி மாறனின் வழக்கமான டச்சிங் காட்சிகள் குறைவு தான் என்றாலும் சூரியின் யதார்த்த நடிப்புக்காகவும், இளையராஜாவின் இசைக்காகவும், வேல்ராஜின் ஒளிப்பதிவிற்காகவும் பார்க்கலாம் , ரேட்டிங் 3 / 5 ஆனந்த விக்டன் மார்க் 45 . மார்ச் 31 2023 திரையில் வந்த படம் இப்போது ஜீ 5 ல் கிடைக்கிறது
நன்றி - அனிச்சம் மின்னிதழ்
Viduthalai Part 1 | |
---|---|
Directed by | Vetrimaaran |
Written by |
|
Based on | Thunaivan by B. Jeyamohan |
Produced by | Elred Kumar |
Starring | |
Cinematography | R. Velraj |
Music by | Ilaiyaraaja |
Production companies | |
Distributed by | Red Giant Movies (Tamil Nadu), Ahimsa Entertainment (UK & Europe) |
Release date |
|
Running time | 150 minutes[2] |
Country | India |
Language | Tamil |
Budget | est. ₹40 crore[3] |
Box office | est. ₹28 crore[4] |
0 comments:
Post a Comment