1997ல் அர்விந்த்சாமி நடிப்பில் தேவராகம் எனும் மலையாளப்படம் ரிலீஸ் ஆனது, மிக நீண்ட இடைவெளிக்குப்பின் கேரள தேசத்துக்கு அர்விந்த்சாமியின் கம் பேக் படமாக இது அமைகிறது . மலையாள நடிகர் குஞ்சக்கா போபன் நடிப்பில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் இது. அதாவது மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் தயாரான படம் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவனின் கதைதான் இது . ஒரு வித்தியாசமான முயற்சியாக சேப்டர் 2 தான் இப்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. சேப்டர் 1 சேபடர் 3 இனிமேல் தான் ரிலீஸ் ஆகும். 2 வது பாகத்தை தனியாகப்பார்த்தாலும் புரியும்படிதான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது
.மலையாளத்தில் சுமாராகப்போன படம் தமிழில் படு சுமாராகத்தான் ஓடியது தெலுங்கு நடிகையான ஈஷா ரேபா தான் படத்தின் நாயகி , ஹிந்தி நாயகனான ஜாக்கி ஷெராப் தான் வில்லன். தமிழ் , தெலுங்கு , மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக எடுக்க திட்டம் இட்டிருக்கிறார்கள் போல , நடிகர் ஆர்யா வின் சொந்தப்படம் இது
2022 செப்டம்பர் 8 அன்று கேரளாவிலும், 2022 செபடம்பர் 22 தமிழகத்திலும் ரிலீஸ் ஆனது இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஃபாரீன் போக ஆசைப்படுபவன், அதற்கு 25 லட்ச ருபாய் பணம் தெவைப்படுகிறது , நாயகனின் மாமா ஒரு கும்பலிடம் கோர்த்து விடுகிறார். அந்த கும்பல் நாயகனுக்கு ஒரு அசைன்மெண்ட் தருகிறது . அதை செய்து முடித்தால் அவர் விரும்பிய பணம் கிடைக்கும்
அந்த கும்பல் சொல்லும் ஃபிளாஸ்பேக் இது -மும்பை கேங்க்ஸ்டர் ஒருவனின் வலதுகரமாக செயல்பட்டவன் அசைனர் என்ற தாதா இந்த அசைனர்க்கு வலது கரமாக கம் கார் டிரைவராக செயல்பட்டவன் தாவூத் என்பவன் . 30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வரும்போது ஒரு விபத்து நடந்தது , அதில் அசைனர் இறந்து விடுகிறான். பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த தாவூத் இப்போது பழைய நினைவுகளை இழந்து ஒரு நடைப்பிணமாக வாழ்கிறான்
நாயகனுக்குக்கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் நாயகன் அந்த தாவூத் உடன் பழக வேண்டும், அவனுக்கு பழைய நினைவுகளைக்கொண்டு வர வேண்டும், அந்த தங்கம் இருக்கும் இடம் அறிய வேண்டும்
நாயகன் ஒத்துக்கொள்கிறான், நாயகனுக்கு ஒரு காதலி உண்டு . அவள் சொல்லை மீறி இந்த அசைன்மெண்ட்டில் நாயகன் இறங்குகிறான். அந்த தாவூத் இப்போது ஒரு தியேட்டர் கேண்ட்டீனில் வேலை பார்க்கிறான்
அவனுடன் சினேகமாகி கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டை நிறைவேற்றினாரா? என்பது மீதிக்கதை
நாயகன் ஆக குஞ்சாக்கா போபன். மிக இயல்பான நடிப்பு . மிக நல்லவராக முதல் பாதியில் வருபவர் பின் பாதியில் ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்
இன்னொரு நாயகனாக அர்விந்த்சாமி . பாட்ஷா படத்தில் மாணிக்கம் கேரக்டர் போல அமைதியாக முதல் பாதியில் வருபவர் பின் பாதியில் கேங்க்ஸ்டர் நினைவு வந்ததும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் காட்சியில் கலக்குகிறார்
நாயகனுக்கு ஜோடியாக , காதலியாக ஈஷா ரேபா . அதிக வாய்ப்பில்லை , ஆனால் லட்சணமான முகம், கண்ணியமான் உடைகள்
வில்லனாக ஜாக்கி ஷெராப் க்ளைமாக்சில் 10 நிமிடங்கள் மட்டுமே வருகிறார். மிரட்டல் நடிப்பு
நாயகனின் மாமாவாக ஆடுகளம் நரேன் சில காட்சிகள் வந்தாலும் மனதில் தங்குகிறார்
க்வுதம் ஷங்கரின் ஒளிப்பதிவு வெளிப்புறக்காட்சிகளை குளிர்ச்சியாக படம் ஆக்கி இருக்கிறது அருள் ராக் கென்னடியின் இசையில் ஆறு பாடல்கள் . 2 பாட்டு செம ஹிட்டு . பிஜிஎம் சில காட்சிகளில் மிரட்டுகிறது
கேங்க்ஸ்டர் ஆக்சன் மசாலா படங்களில் இது தனித்துத்தெரிகிறது. ரோடு சைடு ட்ராவல் படமாக முதல் பாதியும் , ஆக்சன் த்ரில்லராக பின் பாதியும் டேக் ஆஃப் ஆகிறது
இரண்டு மணி நேரம் ஓடும் படமாக ட்ரிம் செய்யப்பட்ட இந்தப்படம் அமேசான் பிரைம் ல கிடைக்கிறது
சபாஷ் டைரக்டர் ( பெல்லினி )
1 வெற்றி விழா படத்தில் கமல் ஒரு டயலாக் சொல்வார். எனக்கு கார் ஓட்டத்தெரியுமா? தெரியாதா? என்பதே எனகு தெரியலை.. இது செம ஹிட் ஆன டயலாக். அதே போல் காட்சியமைப்பை சாமார்த்தியமாக அமைத்த விதம்
2 பின் பாதியில் வரும் அட்டகாசமான , யாராலும் யூகிக்க முடியாத இரண்டு திருப்பங்கள்
3 அர்விந்த்சாமி அந்த ரெஸ்டாரண்ட்டில் போடும் அதகளமான அந்த ஃபைட் சீக்வன்ஸ்
4 க்ளைமாக்ஸ் காட்சியில் நாயகன் குஞ்சக்கா போபன் ட்ரான்ஸ்ஃபர் மேஷன் சீனில் நிகழ்த்தும் ஆக்சன் அதிரடி
ரசித்த வசனங்கள்
1 கஷ்டமோ , பயமோ தரும் எந்த ஒரு விஷயமும் அவன் மனசுல நிக்காது
2 படம் படு மொக்கை ,ஆனா நம்மூர் படங்களுக்கு இது தேவலை
எல்லாத்தையும் இண்டர்வெல் வரை பார்த்துட்டு கருத்து சொல்றது
3 யாருமே எப்பவுமெ நாம நினைச்ச மாதிரி இல்லை
4 எவ்வளவு விபரங்கள் தெரியாம இருக்கோ அவ்வளவு நல்லது
5இதெல்லாம் தப்பான ரூட்டா? தப்பெல்லாம் நடக்கற ரூட்டா?
6 குடிச்சுட்டு கடலுக்குப்போகாதே
சரி , அப்போ நான் கடலுக்குப்போய் குடிக்கறேன்
7 ஒரு மனுசன் எதை மறந்தாலும் ஒண்ணை மட்டும் மறக்க முடியாது , உயிரா பழகியவன் செஞ்ச நம்பிக்கை துரோகம் , உண்ட வீட்டுக்கு பண்ணின ரெண்டகம்
8 ஒருத்தன் கண்ணைப்பார்த்துக்கொல்றதுலதான் தில் இருக்கு
9 உயிரா வளர்த்த உன்னை விட்டுட்டு எபோ என்னைத்தேடி இவன் வந்தானோ அப்பவே நான் ஜெயிச்சுட்டேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 க்ளைமாக்சில் நாயகர்கள் இருவரும் வில்லனின் பங்களாவில் நுழைந்து பண்ணும் அதகள ஆக்சன் காட்சிகள் நம்ப முடியாதவை . நூற்றுக்கணக்கான பேர்களை அசால்ட்டாக போட்டுத்தள்ளுவது ஓவர்
2 தனியாக மாட்டிகொண்ட வில்லன் பதட்டமே படாமல் நாயகர்கள் இருவரையும் உபசரிக்கும் காட்சி நம்ப முடியாத காட்சி
3 க்ளைமாக்சில் திடிர் என அர்விந்த் சாமி ஆள் அட்ரசையே காணவில்லை . நாயகன் குஞ்சக்கா போபன் சோலோ பர்ஃபார்மென்ஸ் நடத்திக்கொண்டு இருக்கிறார்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18 + காட்சிகள் இல்லை , வன்முறை இருக்கிறது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - எதிர்பாராத அந்த இரண்டு செம ட்விஸ்ட் சீன்களுக்காகவே படம் பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5
Ottu | |
---|---|
Directed by | Fellini T. P. |
Written by | S. Sanjeev |
Produced by | Arya Shaji Nadesan |
Starring | |
Cinematography | Gautham Sankar |
Music by | ArulRaj Kennady |
Production companies | |
Release dates | |
Country | India |
Languages | Malayalam Tamil |
0 comments:
Post a Comment