Sunday, April 30, 2023

KISS KISS (2023) -GORZKO GORZKO- (POLISH) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி) @ நெட் ஃபிளிக்ஸ்

 


ஏற்கனவே  வேறு  ஒருவருடன்  திருமணம்  நிச்சயிக்கப்பட்ட   பெண்ணைக்காதலிக்கும் நாயகனின்  கதை  யை சொல்லும்  தமிழ்  சினிமா  பட்டியல்  என்ன?அஜித்தின்  காதல்  ,மன்னன் ., மாதவனின்  மின்னலே , விஜயின்  வசீக்ரா, யூத் , தனுஷின்  யாரடி  நீ  மோகினி . சிவகார்த்திகேயனின்  ரெமோ  என  பட்டியல்  நீளுகிறது .  இந்த  மாதிரி  கதை  அம்சம்  உள்ள  ஃபாரீன்  படம்  தான்  இது . நமக்குப்பழகிய  திரைக்கதை.. காமெடி  மெலோ டிராமா 


    ஸ்பாய்லர்  அலெர்ட்

 பார்க்கும்  பெண்களை  எல்லாம்  வளைத்து  விடும்  வல்லமை  கொண்ட  மன்மதன், வல்லவன்  தான்  பெண்  பித்தன்  ஆன  நாயகன் .அவனுக்கு  ஒரு  சகோதரன் .சகோதரனுக்கு  பூக்கடையில்  பணி  புரியும்  பெண்  மீது  காதல், ஆனால்  அதை  வெளிப்படுத்ததெரியவில்லை.  தமிழ்  சினிமாக்களில்  வருவது  போல  பல  டிராமாக்கள்  போட்டு  சகோதரனின்  காதல்  வெற்றி  பெற  நாயகன்  உதவுகிறான் .. இது  ஒரு  டிராக் ல  போகிறது 


 நாயகி க்கு  திருமணம்  நிச்சயம்  ஆகி  உள்ளது . நிச்சயிக்கப்பட்ட  இடம்  மிகப்பெரிய  இடம் . மாப்பிள்ளையின்  அப்பா  ஒரு  மினிஸ்டர் .மாப்பிள்ளை  துபாயில்  இருக்கிறார். அவர்  வரும்  முன்   திருமண்  நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளின்   ரிகர்சல்  நடக்கிறது . அதில்  நாயகனின் சகோதரன்  தான்  கேமராமேன். தனக்கு  ஒரு  அசிஸ்டெண்ட்  வேண்டும்  என  நாயகனையும்  உடன்  அழைத்துச்செல்கிறான்


நாயகனுக்கு  நாயகி  மீது காதல் நாயகியின்  தந்தை  ஒரு  பிரபல  கேங்க்ஸ்டர். நாயகனை  கடத்தி  மிரட்டி  என்   மக்ள்  வாழ்வில்  தலையிடாதே  என எச்சரித்து  விடுவிக்கிறார்.

 இதற்குப்பின்  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்  திரைக்கதை 


நாயகன்  ஆக  மேத்யூஸ்  கோசிக்விஸ்   அட்டகாசமாக  நடித்திருக்கிறார். அவரது  உடல்  மொழியில்  தெரியும்  தன்னம்பிக்கை  அபாரம். தன்  சகோதரனுக்கு  லவ்  ஐடியாக்கள்  கொடுக்கும்  இடம்  எல்லாம்  ரகளையான  காட்சிகள் 


நாயகி ஆக ஜோஃபியா  டொமாலிக். அழகுப்பதுமை. ஆரம்பத்தில்  நாயகனை  லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  செய்யும் நபராக  இருந்து  அவர் தான்  இனி  நம்ம  ரைட்  ஹார்ட்  என  மாறும்  இடங்கள்  எல்லாம்   நல்ல  கெமிஸ்ட்ரி 

நாயகனின்  சகோதரனாக , சகோதரனின்  காதலியாக  வருபவர்  நடிப்பும்  அருமை. எளிமையான  மனதைத்தொடும்  காதல்  க்தை  அவர்களுடையது 


 நாயகியின்  வருங்கால  மாமியாராக   வருபவர்  நாயகனை  வளைத்துப்போட  எடுக்கும்  முயற்சிகள்  காமெடி  கலாட்டாக்கள் எனில்    ரிகர்சல்  ஹாலில்  நாயகன்  நாயகியைக்கவர  எடுக்கும் முயற்சிகள்  எல்லாமே  ரசிக்க  வைப்பவை 


 



சபாஷ்  டைரக்டர் ( டோமாஸ்  கோனக்கி ) 

1   முக்கியமான  மீட்டிங்கில்  கலந்து  கொள்ள  இருக்கும்  நாயகன்  நாயகியை  முதல்  முறை  பார்த்ததுமே  அவர்  பின்னாலேயே  போய்  பஸ்சில்  டிக்கெட்  செக்கரிடம்  மாட்டிக்கொள்ளு ம் காட்சி  காமெடி


2   நாயகனின்  சகோதரனின் காதல்  போர்ஷன்  கவித்துவம்  வாய்ந்தவை . மெயின்  கதையை  விட  இவர்களைது  சைடு  டிராக் லவ்  ஸ்டோரி  அபாரம் 


3  நாயகியின்  வருங்கால  மாமியார்  நாயகனை  வளைத்துப்போட  முய்ற்சிக்கும் இடமும்  அப்போது  நாயகன்  உங்க  புருசன்  மினிஸ்டர்  எதுவும்  என்னை  பண்ணிடுவாரா? என  பயத்துடன்  கேட்கும்போது  அவர்  என்னையே  சரியா  பண்ணலை  என  டைமிங்  ஜோக்  அடிக்கும்  இடம்  கலக்கல்  ரகம்  

 ரசித்த  வசனங்கள் 

1   மிஸ்!  உங்களுக்கு  மேரேஜ் ஆகப்போகுதா? என்  ஆழந்த  அனுதாபங்கள் 


2  யோவ், திடீர்னு  என்னை  கிஸ் பண்ணின  உனக்கு  பளார்னு  ஒண்ணு  குடுத்தேன்  கன்னத்துல , ஆனா  கொஞ்சம்  கூட  சுரணை  இல்லாம  சிரிக்கறே?


 எல்லாக்காதல்  கதைகளும்  இப்படி  மோதலில்  தான்  ஆரம்பிக்கும், அதை  நினைச்சேன் சிரிச்சேன் 


3   நீ  செஞ்ச  தப்பை  நினைச்சு  எத்தனை  நாட்களுக்குத்தான்  கவலையோடயே  இருப்பே? அவளுக்காகப்போராடு .  சந்தோஷம்  வேணும்னா  போராடனும் 


4  அந்தப்பொண்ணுக்கு  மேரேஜ்  ஆகப்போகுது. நீ  என்னடான்னா  அவளை  லவ்  பண்ண  ட்ரை  பண்ணிட்டு  இருக்கே?


  மேரேஜ்   ஃபிக்ஸ்  ஆன  பொண்ணுங்களை  லவ்  பண்ணக்கூடாதுனு  சட்டம்  இருக்கா? என்ன? 


5   நான்  அவளை  லவ்  பண்றேன், டிராமா  போட்டு  ஏமாத்த  விரும்பலை 


 ஏமாத்தனும்னு சொல்லலை . உன்  மேல  ஒரு  பொறாமையை  அவளுக்கு  வர வைக்கனும், அது  போதும்  லவ்  பண்ண 


6  உன்  டிரஸ்சிங்   எல்லாம்  ஹாலிவுட்  ஸ்டைல்ல  இருக்கு , குறிப்பா  டைட்டானிக்  ஹீரோ  டி  காப்ரியோ  மாதிரி  இருக்கே?


 எம்மா  மின்னல் , நீ என்னை  பாராட்றியா? கலாய்க்கறியா? 


7 காதல்  ஒரு  மனுசனை , அவன்  கேரக்டரை  மாத்தும்னு  நான்  நம்பறேன்


8 காதலிக்கும்போது  முன்  இருந்ததை  விட  நாம்  சிறந்தவர்கள்  ஆவோம், இந்த  உலகம்  முன்பிருந்ததை  விட  அழகாகத்தோன்று,ம் 


9  மேரேஜ்  பற்றி  நீங்க  என்ன  நினைக்கறீங்க?


 முன்  பின்  அறிமுகம்  இல்லாத  நபருடன்  பயணிக்கப்போகும்  உல்லாச  காதல்  பயணம்


10  காதல்  என்பது  பெறுவதல்ல , அளிப்பது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மேரேஜ்  ரிகர்சல்  ஹாலில்   நாயகிக்கு  மாப்பிள்ளையாகப்போகிறவர்  இன்னும்  வரவில்லை , அதற்காக  டான்ஸ்  ரிகர்சலுக்கு  நாயகியின்  வருங்கால  மாமியார்  நாயகனை  நாயகியுடம்  டான்ஸ்  ஆடச்சொல்லும்  காட்சி  எல்லாம்  ஒவர்.


2  நாயகியின்  அப்பவான  கேங்க்ஸ்டர்  டாண்  நாயகனை  கடத்தி  வைத்து  பயப்படாதே , மேரேஜ்   முடிந்ததும்   உன்னை  ரிலீஸ்  பண்ணிடுவேன்  என்கிறார். ஆனால்  நாயகி  அவரிடம்  வந்து  அவரை  எதும்  செய்ய  வேண்டாம், ரிலீஸ்  பண்ணிடுங்க  எனும்போது  நாயகனிடம்  சொன்ன  அதே  பதிலை  சொல்லாமல்  ரிலீஸ்  செய்ய  ஒத்துக்கொள்வது  ஏன் ? 


3  நாயகன் - நாயகி  திருமணம்  நடைபெற  வேண்டும்  என்பதற்காக    நிச்சயிக்கப்பட்ட  மாப்பிள்ளைக்கு  ஒரு  ஹோமோ  லவ்  இருக்கிற்து  என  ஒரு  சமாளிஃபிகேஷன்  ஸ்டோரி  சொல்வது  படு  செயற்கை  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  ஒரே  ஒரு  இடத்தில்    அடல்ட்  கண்ட்டெண்ட்  இருக்கிறது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மொழியே  தேவை  இல்லாமல்  ஒரு  தமிழ்ப்படம்  பார்ப்பது  போலவே  இருக்கும்  திரைக்கதை  அமைப்பு  படத்தின்  பலம் 105  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படத்தின்  எடிட்டிங்  கனகச்சிதம், நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி டி யில்  காணக்கிடைக்கிறது . அடல்ட்  கண்ட்டெண்ட்  ஒரு  இடத்தில்  இருக்கிறது 

0 comments: