Sunday, April 02, 2023

CONGRADULATIONS (2023) (குஜராத்தி) - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

 


பெண்களுக்கு  இணையாக  ஆண்களுக்கும்  எல்லா  உரிமைகளும்  , வசதிகளும் , வாய்ப்புகளும்  கிடைக்க  வேண்டும்  என  எதிர்காலத்தில்  ஆண்கள்  போராடக்கூடிய  சூழ்நிலை  வரலாம். ஒரு  ஆண்  கர்ப்பமானால்  என்ன  ஆகும் ? என்ன என்ன  பிரச்சனைகளை சந்திக்க  நேரும்  என்பதுதான் கதையின்  ஒன்  லைன் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  தம்பதிகள் . திருமணம்  ஆன  சில  நாட்களிலேயே  குழந்தைக்காக  தவம்  இருக்கிறார்கள் , நாயகி  கர்ப்பம்  ஆனதும்  குடும்பத்தில்  ஒரே  கொண்டாட்டம் , ஆனால்   சீமந்த  விழாவில்  நாயகி  கால்  வழுக்கி  குப்புற  விழ  கர்ப்பம்  கலைகிறது 


 ஒரு  அதிர்ச்சி  செய்தியும்  வருகிறது.  நாயகி  கர்ப்பப்பை  பலவீனம்  அடைந்து  விட்டது  , இனி  அவர்  குழந்தை  பெற்றுக்கொள்ளும்  வாய்ப்பு  அறவே  இல்லை 


வாடகைத்தாய்  முறையில்  குழந்தை  பெற பல  லட்சங்கள்  செலவாகும்  என்பதால்  அந்த  ஐடியா  கை  விடப்படுகிறது 

 வேறு  ஏதாவது  குழந்தையை  தத்து  எடுத்துக்கொள்ளலாம்  என  தம்பதி  நினைக்கும்போது  நாயகனுக்கு  ஒரு  ஐடியா தோன்றுகிறது. பல  சாதனை   பரிசோதனை  முயற்சிகளை  எடுத்து  வரும்  ஒரு  டாக்டரை  சந்தித்து   ஒரு  ஆணான  தன்னால்  கர்ப்பம்  ஆக  முடியுமா:? என  கேட்கிறான் 

 டாக்டர்  ஓக்கே  சொல்கிறார். மனைவியின்  கரு  முட்டை ,  கணவனின் உயிர்  அணு  இரண்டையும்  இணைத்து  நாயகனின்  வயிற்றில்  வைக்கப்படுகிறது


இந்த  விஷயம்  மீடியா  மூலம்  பரவி இயற்கைக்கு  எதிரானது  என  எதிர்ப்பு  கிளம்புகிறது. 25  கோடி  ரூபாய்  செலவில்  ஆராய்ச்சி  செய்த  நிறுவனம்   அந்த  குழந்தைக்கு  தாங்கள்  தான்  சொந்தம்  என  உரிமை  கோருகிறார்கள் 


நாயகனுக்கு  குழந்தை  பிறந்ததா? இல்லையா? என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆதித்யாவாக  ஷர்மான்  ஜோஷி  மிகப்பொறுமையான  கேரக்டரில்  கச்சிதமாக  நடித்துள்ளார் . குறிப்பாக  அந்த  ரேடியோ  இண்ட்டர்வ்யூ  சீனில்  கோக்குமாக்கான  கேள்விகளுக்கு  அவரது  மனதைத்தொடும்  பதில்  பிரமாதம் .


நாயகி  ராகிணிஆக  மான்சி  பரேக். கர்ப்பம்  ஆன  விஷயத்தை  தன்னிடம்  மறைத்த  கணவனைக்கண்டு  கோபம்  கொள்ளும்  அவர்  ரேடியோ  பேட்டியில்  தன்னை  உயர்த்தி  அவர்  பேசியது  கண்டு நெகிழ்வது  நல்ல  தருணம், சிறப்பாக  செய்திருக்கிறார் 


ஆபரேஷன்  செய்யும்   டாக்டர்களாக  நடித்த  இருவரின்  நடிப்பும்  கச்சிதம் . நாயகனின்  பெற்றோராக  நடித்தவர்கள்  குணச்சித்திரம், காமெடி  என  இரு  கோணங்களிலும்  நல்லா  ஸ்கோர்  செய்து  இருக்கிறார்கள் 


132  நிமிடங்க்ள்  டியூரேஷன்  என  விக்கி பீடியா  சொல்கிறது , ஆனால்  112 நிடங்கள் தான்  படம், மிகச்சுருக்கமாக  ட்ரிம்  செய்து  எடிட்  செய்து  இருக்கிறார்கள்


பாவிக்  ஹிராலை   சராணியா  உறுத்தாத  ஒளிப்பதிவில்  காட்சிகளைப்படம்  பிடித்து  இருக்கிறார்

ராஹன் சவுத்ரி  திரைக்கதை  இயக்கம்,ஒரு  மாறுபட்ட  ஃபேமிலி  காமெடி  டிராமை  தந்த  விதத்தில்  அவ்ரை  பாராட்டலாம் .


 அமேசான்  பிரைம் ல  காணக்கிடைக்கிறது 

சபாஷ்  டைரக்டர்

1   நாயகனின்  வீட்டின்  முன்    ஆண்  கர்ப்பம்  ஆவதை  எதிர்த்துப்போராட  வந்த  மாதர்  சங்க  அமைப்பின்  தலைவியிடம்  நாயகனின்  அப்பா  பேச்சுக்கொடுத்து கடலை  போட்டு கரெக்ட்  பண்ண  முயற்சிக்கும்  காமெடி கலாட்டாக்கள்


2  நாயகனின்  எம் டி  அவங்க  ரேடியோ  ஸ்டேஷன்  சார்பாக  ஒரு  இண்டர்வ்யூ  கேட்க  அதற்கு  மறுக்கும்  நாயகனிடம்  அவன் அப்பா  தன்  தரப்பு  விளக்கத்தை  அளித்து இண்டர்வ்யூ  பண்ண  ஓக்கே  வாங்கும்  காட்சி  வசனம் , நடிப்பு  அனைத்தும்  கச்சிதம் 


3  ரேடியோ  ஸ்டெஷனில்  கேள்விகளுக்கு  பதில்  அளிக்கும்  காட்சியில்  இயக்குநர்  டச்  தெரிகிறது 


 ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  மருமகளா  உன்  கிட்டே  எங்க  வீட்டு  லாக்கர்  சாவி  ஒப்படைககனும்னு  எனக்கும்  ஆசைதான், ஆனா  எங்க  வீட்ல  லாக்கர்  இல்லையே?


2 ஒரு  நல்லது  நடக்க  எப்பவும்  தாமதம்தான்  ஆகும், இது  இயற்கையின்  விதி 


3   கடல்  குதிரை  ஆண்  பால்  தான்  கர்ப்பம்  தரிக்கும், அதை  கடல் நீருக்கு  அடியில் தான்  பார்க்க  முடியும் 


4  பயம்  என்பது  நல்ல  விஷயம்  தான், அது  பல  விஷயங்களை  ஃபோகஸ்  பண்ண  வைக்கும் . ஒவ்வொரு  விஷயத்தையும்  நீ  ஃபோகஸ்  பண்ணும்போது  உன்  முன்னேற்றத்துக்கு  அது  வழி  வகுக்கும் 


5  நான்  அப்பா  ஆகப்போறேன்னு  சொல்லவா? நான்  அம்மா  ஆகப்போறேன்னு  சொல்லவா? சரி, நான்  கர்ப்பமா  இருக்கேன்,  உலகின்  முதல் ஆண்  கர்ப்பவதன் 


6  நான்  ஒரு  பயங்கரமான  கனவு கண்டேன், நம்ம  மகன்  கர்ப்பமா  இருக்கான் 


 அடியே  அது  கனவு  இல்ல  , நிஜம் தான், ஆந்த  தகவலை  மகன்  சொன்னதும்தான்  மயங்கி  விழுந்தே 


7  நான்  உன்  கிட்டே  பொய்  சொல்லலை , ஒரு  ரகசியத்தை  மறைத்தேன், அவ்வளவுதான்


 ரகசியத்தை  மறைப்பது பொய்  சொல்வதை  விட மோசமானது 


8  உனக்காகத்தான் , உனக்காக  மட்டும் தான்  நான்  இந்த  குழந்தையை  பெத்துக்கபோறேன்


 அதுதான்  பிராப்ளம். நம்ம  இரண்டு  பேருக்காகவும்தான்  நான்  குழந்தை  பெத்துக்க  நினைச்சேன், ஆனா  நீங்க  எனக்காக  மட்டும்  குழந்தை  பெத்துக்கறதா  சொல்றீங்க,, ரெண்டுக்கும்  வித்தியாசம்  பார்த்தீங்க  இல்ல ? 


9 நம்ம  வீட்டுக்கு  முன்னால  பலர்  கோஷம்  எழுப்பிப்போராட்டம்  பண்றாங்க, நான்  உடனே  போலீஸ்க்கு  ஃபோன்  பண்றேன்


 வேண்டாம் ,வந்தது ஆண்கள்னா  நானே  போலீஸ்க்கு  ஃபோன்  பண்ணி  இருப்பேன். வ்ந்தது  பூரா  பெண்கள் . ஹிஹி 


10  ஆண்  கர்ப்பம்  ஆவது  இயற்கைக்கு  எதிரானதுனு  உங்களுக்கு  தோன்றவில்லையா?


 இல்லை . எதிர்காலத்தில்  ஒரு  வீட்டில்  இரண்டு  குழந்தைகள்  எனில்  ஒரு  குழந்தை  மனைவி  பெற்றதாகவும்  ஒரு  குழந்தை  கணவன்  பெற்றதாகவும்  இருக்கும்


11  அன்பு  இருக்கும் இரு  இதயங்களிடையே  மிஸண்டர்ஸ்டேண்டிங்  வரலாம், ஆனா  வெறுப்பு  வராது 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்  ஷாட்ல  டைனிங்   டேபிளில்  உட்கார்ந்து  குடும்பம்  சாப்பிடுது. புது  மருமகளின்  முதல்  நாள் .மருமகள்  ஸ்லீவ்லெஸ்  ஜாக்கெட் , பேக்  ஃபுல்  ஓப்பன்  மாடல்  ஜாக்கெட்  போட்டுட்டு  கிளாம்ரா  இருக்கு புது  வீட்ல  சகஜமா  பழக  அட்லீஸ்ட்  10  நாட்கள்  ஆகாதா?  அதே  போல்  மாமியார்  தன்  கணவருக்கு  சப்பாத்தி  சர்வ் பண்ணும்போது  இடது  கைல  எடுத்து  பரிமாறுகிறார். வலது  கைல  தானே   பரிமாறுவாங்க ?


2  கல்யாண  முகூர்த்தம்  நல்ல  நாள்  குறிக்கும்போது    சாந்தி  முகூர்த்தத்துக்கு  உகந்த  நாள்  பார்த்துத்தான்  தேதி  குறிப்பாங்க , அதாவது  குழந்தை  உருவாக  தோதான  சமயம்  மென்சஸ்  தேதி  முடிந்து  12 வது  நாள்  இப்படித்தான்  முகூர்த்தம்  வரும் , ஆனால்  நாயகி  முதல்  இரவில் சாரி  இன்னைக்கு  எனக்கு  மென்சஸ்  டேட்  என  சொல்கிறார்  எப்படி ?                                                                                                                              

3  நாயகியின்  மாமியாருக்கும்  , நாயகிக்கும்  ஆகாது , கர்ப்பமா  இருக்கும்போது  பிறந்த  வீட்டுக்கு  அழைத்துச்செல்ல  வ்ந்த  அம்மாவிடம்  எல்லா  வசதியும்  வேணா  நம்ம  வீட்டில்  இருக்கலாம், ஆனா  ஃபேமிலி  இங்கே  தான்  இருக்கு  வர  மாட்டேன்  என  சொல்வது  டி வி  சீரியல்  டிராமா  பார்ப்பது  போல  இருக்கு 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  பாதி  பார்த்துப்பழகிய  கதை , பின் பாதி  காமெடி  + சுவராஸ்ய  நிகழ்வுகள் ..  பார்க்கலாம் . ரேட்டிங்  2. 5 / 5 


thanx to    anicham minnidhazh  1/4/2023 

நன்றி - அனிச்சம்  மின்னிதழ் 1/4/2023


Congratulations
Directed byRehan Chaudhary
Written by
  • Rehan Chaudhary
Produced by
Starring
CinematographyBhavik Hiralal Charania
Music byKedar - Bhargav
Production
companies
  • Sharman Joshi Productions
  • Rehan Chaudhary Films
Distributed byRupam Entertainment Pvt Ltd
Release date
  • 3 February 2023
Running time
132 minutes
CountryIndia
LanguageGujarati

0 comments: