Wednesday, April 05, 2023

AMIGOS (2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


அமிகோஸ்  என்ற  சொல்லுக்கு  நண்பர்கள்  என  அர்த்தம். 10/2/2023  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  கலவையான  விமர்சனங்களைப்பெற்றது . குறைந்த  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  இந்தப்படம்  பாக்ஸ்  ஆஃபீசில் 12  கோடி  வசூலித்தது  2022  ஆகஸ்ட்டில் பூஜை  போடப்பட்ட  இந்தப்படம்  ஒரு  குறுகிய  கால  தயாரிப்பு .,ஹைதராபாத் , பெங்களூரு , கொல்கத்தா , கோவா  ஆகிய  இடங்களில்  ஷூட்டிங்  நடந்தது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


இந்த  உலகத்தில்  ஒரே  மாதிரி  உருவத்தோற்றத்தில் 7  பேர்  இருப்பார்கள்  என்று  காலம்  காலமாக    சொல்லப்படுகிறது , டாப்பிள்  கேங்கர்ஸ்  என்னும்  ஒரே  சாயல்  கொண்ட  நபர்களை  ஒரு வரை  ஒருவர்  அறிந்து  கொள்ள  டாப்பிள்  டாட்  காம்  என்னும்  வெப்சைட்  இருக்கிறது . நாயகன்  அந்த  வெப்சைட்  மூலம்  தன்னைப்போலவே முக  சாயல் உள்ள  இருவர்  இருப்பதை  அறிந்து  கொள்கிறான்.  இருவரையும்  சந்திக்க  விரும்புகிறான். அவர்கள்  திட்டப்படி  கோவாவில்  மூவரும்  சந்திக்கிறார்கள் 


நாயகன் நாயகியை  திருமணம்  செய்ய  மீதி  இருவரும்  உதவுகிறார்கள் . ஆள் மாறாட்டக்காமெடி ,  கலாட்டா , காதல்  என  முதல்  பாதி  ஜாலியாக  நகர்கிறது 


இப்போதுதான்  ஒரு  ட்விஸ்ட் , நாயகனின்  முகச்சாயலில்  இருக்கும் இருவரில்  ஒருவன்  போலீசால்  தேடப்ப்டும்   கேங்க்ஸ்டர்  கம்  ட்ரக்  டீலர்  கம்   டெரரிஸ்ட். இவன்  தான்  வில்லன் 


 இப்போ  கதை  யு  டர்ன்  அடிக்கிறது. வில்லன்  தன்  முகச்சாயலில்  இருக்கும்  இருவரில்  ஒருவரை  தான்  தான்  என  போலீசை  நம்ப வைத்து   போலீசிடம்  மாட்ட  வைத்து  தான்  தப்பிக்க  நினைக்கிறான் . இந்த  கேட்  அண்ட்  மவுச்  கெமில்  யார்  ஜெயித்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன் சித்தார்த் , மஞ்சுநாத் , மைக்கேல் என்னும்  பிபின்  ராய்  என்ற  மூன்று  மாறுபட்ட  கேரக்டர்களில் நந்தாமுரி  கல்யாண்  ஒரு  ஆக்சன்  ஹீரோவுக்கே  உரிய  பில்டப்களுடன்  வருகிறார். 


 முதல்  பாதி  முழுக்க  காதல், கலாட்டா , காமெடி  என  முடிவானதால்  நாயகன்  சித்தார்த்  ரோல்  தான்  முன்னிலைபடுத்தப்படுகிறது . . அப்பாவியாக  வரும்  மஞ்சுநாத்  கேரக்டருக்கு  அதிக  வேலை  இல்லை . 


 வில்லனாக  வரும்  மைக்கேல்  எனும்  பிபின்  ராய்  கேரக்டர் தான்  பவர்  ஃபுல்லாக  டிசைன்  செய்யப்பட்டிருக்கிறது . கலக்கலான  , மிரட்டலான நடிப்பு.சில  இடங்களில்  வாலி  வில்லன்  அஜித்  கேரக்டர்  நினைவு  வருகிறது 


நாயகியாக  ஆஷிகா  ரங்கநாத்  அழகாக  வந்து  போகிறார். முதல்  பாதியில்  மட்டுமே  இவருக்கு  வாய்ப்பு , வில்லன்  ரோல்  டேக்  ஆஃப்  ஆன  பிறகு  நாயகன், நாயகி  யாருக்கும்  வேலை  இல்லை 


நாயகனின்  அப்பாவக  ஜெயப்பிரகாஷ்  நமக்குத்தெரிந்த  முகம், ஆனால்  அதிக  வாய்ப்பில்லை 


ஜிப்ரானின்  இசையில்  இரண்டு  பாடல்கள்  ஓக்கே  ரகம் . பின்னணி  இசையில்  மிரட்டுகிறார். குறிப்பாக  வில்லனுக்கான  தீம்  மியூசிக்  கலக்கல்  ரகம் 


சவுந்தர்  ராஜனின்  ஒளிப்பதிவில் ஹைதராபாத் , பெங்களூரு , கொல்கத்தா , கோவா  ஆகிய  நகரங்களின்  அழகை  அள்ளிக்கொண்டு  வருகிறார். தம்மிராஜூவின்  எடிட்டிங்கில் 137  நிமிடங்களில்  ஷார்ப்பாக  கட்  பண்ணி  இருக்கிறார்கள் . 


திரைக்கதை  , இயக்கம்  ராஜேந்திர  ரெட்டி .ஒரு  கமர்ஷியல்  மசாலா  த்ரில்லரை  எப்படி  கொண்டு  போக வேண்டுமோ  அப்படிக்கொண்டு  போய்  இருக்கிறார்


முதல்  பாதி  காதல், காமெடி  என  ஜாலியாகப்போகும்  படம்  பின்  பாதியில்;  ஆக்சன்  , ட்விஸ்ட்  என  விறுவிறுப்பாக செல்கிறது .


 பார்க்கத்தகுந்த  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது  

சபாஷ்  டைரக்டர்


1  ரஜினி - கவுதமி  நடிப்பில் 1991ல்  ரிலீஸ்  ஆன  தர்ம துரை  படத்தில்  இருந்த  இளையராஜா  இசையில்  உருவான  பாடலான  மாசி  மாசம் ஆளான  பொண்ணு  மாமன்  எனக்குத்தானே  பாட்டின்  மெட்டை  ஒரு இம்மி  அளவு  கூட  மாற்றாமல்  அட்லீ  ஒர்க்  செய்த  ஜிப்ரானைக்கண்டு  கொள்ளாமல்  விட்டது 


2  அஜித் - ஜோதிகா- சிம்ரன்  நடிப்பில்  எஸ்  ஜே  சூர்யா  இயக்கத்தில்  1999ல் உருவான  வாலி  படத்தில் வில்லன்  அஜித்  நாயகி  சிம்ரனை  தம்பி  மனைவி  என்றும்  பாராமல்  அடைய  முயற்சிக்கும் காட்சிகளை  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  கமர்ஷியலுக்காக  வலுக்கட்டாயமாக  புகுத்தியது 


3  டூயல்  ரோலில்  எடுத்தாலே  போதுமாணா  இந்தக்கதையை  2005 ல்  ரிலீஸ்  ஆன அந்நியன்  டைப்பில்  3  கெட்டப்  ரோல் ஆக  மாற்றி  இழுத்தது ( அப்பாவி  அம்பி - ரெமோ, அந்நியன்) 


4   1991 ல்  ரிலீஸ்  ஆன  கேப்டன்  பிரபாகரன்  படத்தில்  பின்  பாதியில்  தேடுதல்  வேட்டையில்  ஈடுபடும்  ஃபாரஸ்ட்  ஆஃபீசர்ஸ்  அனைவரும்  தலையில்;  டார்ச்  லைட்டை  நெற்றியில்  கட்டிகொண்டு  தேடும்  சீனை  சாமார்த்தியமாக  அட்லீ  ஒர்க்  செய்தது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   Enno Ratrulosthayi"  (  மாசி  மாசம்  உல்டா  சாங் ) 

Yeka Yeka"


  ரசித்த  வசனங்கள் 

       

1   எநத  ரத்த  சம்பந்தமும்  இல்லாத , டி என்  ஏ  டெஸ்ட்  வைத்தாலும்  சேராத  ஒரே  உருவத்தோற்றம்  கொண்டவர்கள்  எட்டு  லட்சம் பேர்  இதுவரை  அவரவர்  அதே  சாயல்  ஆளை  கண்டறிந்திருகிறார்கள் 


2   மிஸ்!  எந்த  மாதிரி  ஆள்  உங்களுக்கு  வேண்டும் ?


எனக்கு  வரப்போற  ஆள்  மூன்று  தகுதிகள்  கொண்டவனா  இருக்கனும்


1  எனர்ஜி  லெவல் ல  டாப்பா  இருக்கனும், காலை 9  டூ  நைட் 7  ஒர்க்  பண்ணினாலும்  ஆஃபீசில்  இருந்து  வீட்டுக்கு  வரும்போது  டயர்ட்  ஆகாமல்  இருக்கனும் 


2  மல்ட்டி டாஸ்க்கிங்கில்  வல்லவனா  இருக்கனும் ,  ஆஃபீஸ்  வேலை  பார்த்துக்கிட்டே  நான்  சொல்ற  வேலையையும்  முடிக்கனும், என்  கூட  பேசனும் 


3   ஸ்பீட்.. நான்  ஏதாவது  ஆபத்தில்  மாட்டிக்கிட்டா  எங்கே  இருந்தாலும்  ஓடி  வந்து  காப்பாத்தனும்  (  அதுக்கு  எம் ஜி ஆர்  தான்  பிறந்து  வரனும் ) 



3  என்னைத்தேடறது  உன்  இறப்பைத்தேடுவது  போல 


4  என்னை  நீ  மிரட்றியா? 


அது  எனக்கு  பழக்கமே  இல்லை ., கொல்றது  மட்டும் தான்  என்  வேலை 


5 பணத்துக்காக  உன்  சொந்த  நாட்டையே அழிக்க  தயார்  ஆகிட்டியா?


 வேற்றுக்கிரக  வாசிகள்  வந்து  டிமாண்ட்  பண்ணினா  இந்த  உலகத்தையே  அழிக்க  தயாரா  இருக்கேன்   (  அதுக்குப்பின்  இவரு  எங்கே  வசிப்பாரு ?}


6   உன்க்கு  எதிரான  எல்லா  எவிடென்சையும்  உன்  கிட்டே  ஒப்படைக்கிறேன், என்னைக்கொன்னுடாதே


 நீயே  ஒரு  எவிடென்ஸ்  தான்


7   என்னை  எதுவும்   செஞ்சுடாத , நான்  உன்  ஃபிரண்ட்


 ஆனா  நீ  எனக்கு  எதிரான  எவிடென்ஸ் 


8   ஹிஸ்  டெத்  ஈஸ்  மை  பிரேக் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 தீவிரவாதியைத்தேட  வரும்  போலீஸ்  கைல  துப்பாக்கியோட  தானே  வருவாங்க? வில்லன்  லைட்ஸ்  எல்லாம்  ஆஃப்  பண்ணிடுவான்னு  முன்  கூட்டியே  யூகித்து டார்ச்  லைட்  , செயின் ,  எல்லாம்  பக்காவா  ரெடி  பண்ணிக்கொண்டு  வருவது  எப்படி ? 


2  நாயகியை  சந்திக்க  குறிப்பிட்ட  இடத்துக்கு  போவதாக  இருந்த  நாயகன்  திடீர்  என  திட்டத்தை  மாற்றி  லொக்கேஷனை  மாற்றுகிறான், அந்த  விபாத்தை  மீதி  இரண்டு  சக  நாயகர்களிடம்  ஏன்  சொல்லவில்லை ? ஒரே  சாயலில்  மூவர்  அங்கே  வந்தால்  குழப்ப,ம்  வரும்  என  தெரியாதா?


3  நாயகி,   வீட்டில்  இருப்பவர்கள் யாரும்   டி வி  நியூஸ்  பார்த்து  நாயகனைப்போலவே  உருவ  ஒற்றுமையில்  ஒரு  தீவிரவாதி  இருக்கிறான்  என்பதை அறிய  மாட்டார்களா? 


4  ஹாஸ்பிடலில்  ஆக்சிசன்  மாஸ்க்  உடன்  இருக்கும்   நாயகன்  திடீர்  என  எதுவும்  இல்லாமல்   பாத்ரூமில்  ரகசியமாக  ஃபோன்  பேசுவது  எப்படி ?


5   பொதுவா  வில்லன்  கனவு  காணும்போது  நாயகியை  ரேப்  பண்ற  மாதிரி  தானே  கனவு  காண  வேண்டும்? அவன்  என்னடான்னா  நாயகி  கூட  டூயட்  பாடற  மாதிரி  கனவு  காண்கிறான் .வில்லனின்  கேரக்டர்  டிசைனுக்கு  சுத்தமாக  இந்த  ட்ரீம்  சாங்  செட்  ஆகவே  இல்லை , அதை  ரேப்  சாங்  ராப்  சாங்காக  மாற்றி  இருக்கலாம் 


6   நாயகியை  ஹைதராபாத்  அனுப்பிட்டேன்  என  நாயகன்  ஏன்  வாலண்ட்ரியாக  சொல்கிறான்? அதை  ரகசியமாக  வைத்திருக்கலாமே?


7  நாயகனின்  அப்பா  சில  ரகசிய  வேலைகள்  செய்ய  வேண்டி  இருக்கிறது ,  செல்  ஃபோனில்  மெசேஜ்  அனுப்ப  வேண்டி  இருக்கிறது , அவர்  ஏன்  வில்லனுடன்  அருகில்  கார்  முன்  சீட்டில்  அமரனும் ?> பின்  சீட்டில்  அமர்ந்தால்  ஈசியாக  அதை  செய்திருக்கலாமே? பயந்து  பயந்து  செய்து  ஏன்  மாட்டிக்கொள்ள  வேண்டும் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  இது  ஏ  படம்  தான், ஆனால்  18+  காட்சிகள்  ஏதும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கமர்ஷியல்  மசாலாப்படத்தை கிண்டல்  பண்ணி  ஜாலியாக  ரசிப்பவர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங்  2. 5 / 5 


Amigos
Amigos Telugu film poster.jpg
Theatrical release poster
Directed byRajendra Reddy
Written byRajendra Reddy
Produced byY. Ravi Shankar
Naveen Yerneni
StarringNandamuri Kalyan Ram
Ashika Ranganath
CinematographySoundararajan
Edited byTammiraju
Music byGhibran
Production
company
Release date
  • 10 February 2023
Running time
137 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box officeest. ₹11.70 crore[2]

0 comments: