தமிழ் சினிமா வில் சைக்கோ கேரக்டர் ஏற்று நடிப்பதில் விற்பன்னர்கள் மூவர். புரியாத புதிர் ரகுவரன் , கல்கி பிரகாஷ் ராஜ் , நெஞ்சம் மறப்பதில்லை எஸ் ஜே சூர்யா . இவை போக தான் ஏற்று நடிக்கும் வேடங்களில் அந்த கேரக்டராகவே மாறி விடுபவர்கள் பட்டியல் பார்த்தால் கமல் , விக்ரம். இது போல ஒரு சினிமா நடிகை அந்த கேரக்டராகவே மாறினால் என்ன ஆகும் என்பதுதான் இந்தப்படத்தின் கதை
1986ல் ரிலீஸ் ஆன ஃபேண்ட்டசி காமெடி துருக்கிப்படமான ஆ பெளிண்டா படம் தான் இப்போது ஓ பெளிண்டா என ரீமேக் ஆகி உள்ளது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு சினிமா நடிகை . ஒரு குளியல் சோப் விளம்பரத்துக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் தலைக்கு குளிக்கும்போது ஷாம்பூ போட்டுக்கொண்டே தேய்த்துக்குளிக்க வேண்டும் ,இதுதான் ஷாட், ஆனால் டேக் ஓக்கே ஆகவில்லை , மீண்டும் மீண்டும் ரீ டேக் வாங்கிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான நாயகி ஒரு சாதாரண சீனை எத்தனை டேக் எடுப்பீங்க? என கத்தி விடுகிறார். அப்போது இயக்குநர் நீங்க இன்னும் நடிகையாகத்தான் இருக்கீங்க . அந்த கேரக்டரா மாறலை. நீங்க முழுக்க முழுக்க அந்த கேரக்டரா மாறுனாத்தான் நடிப்பில் ஜீவன் வரும் என்கிறார்
இப்போதுதான் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. நாயகி அந்த கேரக்டராக மாறி விட்டதாக உணர்கிறார். அவரை நடிகையாக யாருக்கும் தெரியவில்லை .அந்த சோப் விளம்பரப்படத்தில் கணவனாக நடித்தவன் தான் நிஜமாகவே கணவனாக இருக்கிறான் . அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் வேற. நாயகி அதிர்ச்சி அடைகிறாள்:
நாயகிக்கு ஒரு காதலன் உண்டு /. அவனைப்போய்ப்ப்பார்க்கலாம் என டாக்சியில் போகிறாள் , அங்கே அடுத்த அதிர்ச்சி , காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கிறான், நாயகியை யார் என்றே தெரியவில்லை
மீண்டும் நாயகி அதே டாக்சியில் ஏறி தன் அப்பார்ட்மெண்ட் செல்கிறாள் . ஆனால் அங்கே வேறு யாரோ இருக்கிறார்கள் . இப்போது நாயகியிடம் டாக்சி டிரைவருக்கு கொடுக்கக்கூட கைவசம் பணம் இல்லை
வேறு வழி இல்லாமல் தன் கணவனாக நடித்தவனின் வீட்டுக்கே வந்து தங்குகிறாள் . இதற்குப்பின் நாயகி நிலைமை என்ன ஆனது ? என்பதுதான் மீதி திரைக்கதை
நாயகியாக பிரபல நடிகையாக நடித்த நெஸ்லிஹன் அட்டாகுல் நடிப்பு மிரட்டல் ரகம் , ஆரம்பத்தில் கெத்தான நடிகையாக பந்தா காட்டும்போதும் சரி , தன்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையே என திகைக்கும்போதும் சரி , ஒரு கட்டத்தில் சைக்கோ மாதிரி நடந்துகொள்ளும்போதும் சரி பாராட்டத்தக்க விதத்தில் நடித்திருக்கிறார்
நாயகியின் கணவனாக படத்தில் நடித்தவர் நிஜ் வாழ்விலும் கணவன் ஆவதும் குழந்தைகளை சமாளிப்பது , மனைவியுடன் சண்டை போடுவது என சராசரி குடும்பஸ்தன் அவஸ்தைகளை உணர்ந்து நடித்திருக்கிறார்
நாயகியின் காதலனாக வரும் நடிகர் கிட்டத்தட்ட வில்லன் மாதிரி ரோல். ஆனால் அதிக ஸ்கோப் இல்லாத கேரக்டர்
இயக்கம் டெனிஸ்.. விறுவிறுப்பாக படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். க்ளைமாக்சில் ட்விஸ்ட்டை எதிர்பார்த்து ஏமாறுகிறோம். பார்க்கத்தக்க இந்தப்படம் நெட் ஃபிளிக்சில் கிடைக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 நடிக்க சான்ஸ் கேட்கும் நாயகி டைரக்டர் முன் பல வித முக பாவனைகளைக்காட்டி உருக்கமாக நடிப்பது சபாஷ் போட வைக்கும் காட்சி , தமிழில் ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி நடிக்கும் காட்சி நினைவு வருகிறது
2 நாயகியின் இரு குழந்தைகளில் அந்தப்பெண் குழந்தை மட்டும் நாயகி மேல் சந்தேகப்பட்டு உளவு பார்க்கும் காட்சிகள் ரசமானவை
3 ஒரு நடிகை நடிக்க எத்தனையோ சவாலான சீன்கள் இருக்கும்போது கிளாமருக்காக நாயகி தலைக்கு ஷாம்பூ போட்டுக்குளிப்பதையே 15 தடவை ரீ டேக் எடுக்கிறேன் எனும் போர்வையில் மார்க்கெட்டிங் கை பலப்படுத்திய லாவகம்
ரசித்த வசனங்கள்
1 மேடம், நீங்க செல்லப்பிராணியா நாய் வளர்த்தறது எல்லாம் ஓக்கே, ஆனா அது அடிக்கடி சத்தம் ஓவரா போட்டா எங்க தூக்கம் கெடுது , பார்த்துக்குங்க ..
நிச்சயம் கவனிக்கறோம், அதே மாதிரி உங்க வீட்டு பெட்ரூம்ல இருந்தும் நைட் டைம்ல சவுண்ட் வருது , அதை கரெக்ட் பண்ணிடுங்க . தானிக்கு தீனி
2 நீ என் கிட்டே நாணயமா இருக்கனும்னு நான் எதிர்பார்க்கலை , அதே சமயம் என் கிட்டே பொய் சொல்றே அல்லது எதையாவது மறைக்கறேன்னா என்னால தாங்கிக்க முடியாது
3 என்னை அடையாளம் தெரியுதா? நான் தான் உன் புருசன்
வாட்?
அதாவது ஒரு படத்துல உனக்கு புருசனா நடிச்சிருக்கேன், நினைவிருக்கா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
இதில் உள்ள லாஜிக் மிஸ்டேக்கை பட்டியல் இட்டால் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உட்பட பல விஷய்ங்களும் ரிவியல் ஆகி விடும் என்பதால் தவிர்க்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- ஒரே ஒரு இடத்தில் 18+ காட்சி ஒன்று வருகிறது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி முழுக்க பரபரப்பு , விறுவிறுப்பு , ஆனால் பின் பாதியில் ஸ்லோ ஆகி க்ளைமாக்சில் சப் என முடிகிறது . சுமார் ரகம் ரேட்டிங் 2 / 5
Aaahh Belinda | |
---|---|
Directed by | Atıf Yılmaz |
Written by | Barış Pirhasan |
Produced by | Cengiz Ergun |
Starring | Müjde Ar Yılmaz Zafer Macit Koper Güzin Özipek |
Cinematography | Orhan Oğuz |
Edited by | Odak Film |
Music by | Onno Tunç |
Release date | 1986 |
Running time | 100 minutes |
Country | Turkey |
Language | Turkish |
0 comments:
Post a Comment