ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் கதையை உல்டா பண்ணி லோ பட்ஜெட்டில் ரெடி ஆக்கிய திரைக்கதை என்பதாலோ என்னவோ டைட்டிலில் இயக்குநர் ஷங்கருக்கு க்ரெடிட் கொடுத்திருக்காங்க . நான்கு வெவ்வேறு காதல் கதைகளை இணைத்து காமெடி பண்ண முயற்சித்து இருக்கிறார்கள் , அதில் அவர்கள் முழு வெற்றி அடைந்தார்களா? என பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் காலேஜ் படிக்கும்போது ஒரு பெண்ணைக்காதலித்தான், அவளும் தான், ஆனால் நாயகனின் நண்பனும் அதே பெண்ணைக்காதலித்ததால்; நாயகன் இன்சிடெண்ட் தியாகி ஆகி காதலியை நண்பனுக்கு விட்டுக்கொடுத்து அவர்களை சேர்த்து வைத்து விட்டான்.
நாயகனின் அம்மா சின்ன வயதில் இறந்து விட்டதால் நாயகனின் அப்பா தனியாகவே இருக்கிறார். எதேச்சையாக ஒரு நாள் டெலிஃபோன் மூலம் முகம் அறியாத பெண் நட்பு உருவாகிறது . அந்தப்பெண்ணை அவர் காதலிக்கிறார்
நாயகன் இப்போது ஃபுட் டெலிவரி பாய். டிக் டாக் மற்றும் இன்ஸ்டாவில் பிரபலமான ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலிக்கிறார்.அடாது அலட்சியம் செய்தாலும் விடாது துரத்திக்காதலிக்கும் நாயகனின் காதலை நாயகி ஏற்றாரா?
ஒரு சயிண்ட்டிஸ்ட் கண்டுபிடித்த ரோபோ லேடி உள்ள செல் ஃபோன் எதேச்சையாக நாயகன் கையில் சிக்குகிறது. அந்தப்பெண் நாயகனை பல வழிகளில் சந்தோஷப்படுத்துகிறாள் ., பணக்காரன் ஆக்குகிறாள் , ஆனால் அவள் நாயகன் தன்னைக்காதலிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாள். நாயகனோ நீ வெறும் விர்ச்சிவல் இ,மேஜ் தான் நாம் சேர முடியாது என மறுத்ததும் கோபம் ஆகி நாயகனைப்பழி வாங்க மேலே சொன்ன மற்ற மூன்று கதைக்களில் சில கசமுசா வேலைகள் செய்கிறாள் . இறுதியில் என்ன ஆனது என்பதை திரையில் காண்க
நாயகனாக மொக்கை காமெடி நாயகன் சிவா. முகத்தில் உணர்ச்சியே காட்டாத ஹீரோக்களில் முக்கியமானவர். இவர் லேட்டஸ்ட் அப்டேட்டட் காமெடிகளை வழங்கினால் தேவலை . மதுரை முத்து , ஈரோடு மகேஷ் , பழைய ஜோக் தங்கதுரை போல 1980களில் பத்திரிக்கைகளில் வந்த பழைய மொக்கை ஜோக்ஸ்களை ஒப்பிப்பது கடுப்படிக்கிறது
நாயகியாக அஞ்சு குரியன்.அழகாகத்தான் இருக்கிறார், ஆனால் அதிக வாய்ப்பில்லை
இன்னொரு நாயகியாக மேகா ஆகாஷ் . இவர் முதல் பாதி முழுக்க சர்க்கஸ் லேடி போல குறவர் இனப்பெண்கள் போடுவது போல ஏதோ ஒரு ஜிகினா டிரஸ் மாதிரி போட்டு வந்து கடுப்படிக்கிறார்.இடைவேளைக்குப்பின் மாடர்ன் டிரசில் நீட்டாக இருக்கிறார்
காலேஜ் காதலியாக திவ்யா கணேஷ் மூன்று நாயகிகளில் இவர்தான் குடும்பப்பாங்கான அழகு , ஆனால் இவரது கேரக்டர் டிசைன் கள்ளக்காதலி போல அமைத்து இருக்கிறார்கள் ., இவருக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறது
நாயகனின் அப்பாவாக பாடகர் மனோ ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். வ்ல்லனாக பகவதி பெருமாள் ஓக்கே ரகம் .. போலீசாக மொட்டை ராஜேந்திரன் கல கல
லியோன் ஜேம்சின் இசையில் மூன்று பாடல்களுமே கேட்கும்படி இருக்கின்றன . ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவில் இது லோ பட்ஜெட் படம் என்பது தெளிவாகத்தெரிகிறது பூபதி செல்வராஜ் எடிட்டிங்கில் ரெண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது., இன்னும் ஷார்ட்டாக ட்ரிம் பண்ணி இருக்கலாம். திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் பி என் விக்னேஷ ஷா. முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் காலேஜ் காதலி - நாயகன் செல் ஃபோன் மெசேஜ் குழப்படிகள் நல்ல காமெடி முயற்சி. குறிப்பாக காலேஜ் காதலியின் கணவன் சந்தேகப்பட்டு செய்யும் அலப்பரைகள் குட்
2 நான்கு காதல் கதைகளையும் ஒரே புள்ளியில் இணைக்கும் கடைசி 20 நிமிட காட்சிகள் குட்
செம ஹிட் சாங்க்ஸ்
1 சோறுதான் முக்கிய்ம பிகிலே
2 ஸ்மார்ட் ஃபோன் சென்ன ரீட்டா
3 சோடி சேரலாம்
ரசித்த வசனங்கள்
1 செத்த நாயை செருப்பால அடிச்ச மாதிரி வாடிப்போய் இருக்கியே? இன்னா மேட்டரு ?
2 சாஃப்ட்வேர் கம்ப்பெனில வேலை செய்வேனு பார்த்தா சாப்பாட்டுக்கம்பெனில வேலை செய்யறியே?
3 என்னடா? வாராவாரம் ஒரு புத் ஆண்ட்டியைக்கூட்டிட்டு வர்றே?
4 நான் மட்டும் கரெக்ட் டைம்க்கு வந்து காப்பாத்தலைன்னா...
வேற யாராவது வந்து காப்பாத்தி இருப்பாங்க
5 உன்னை சந்தோஷமா வெச்சுக்க நான் என்ன செய்யட்டும் சொல்லு ?
என்னாலயே என்னை சந்தோஷமா வெச்சுக்க முடியல, நீ என்ன பண்ணபோறே?
6 காசு சம்பாதிப்பது ஈசி , பேர் சம்பாதிப்பதுதான் கஷ்டம்
7 வாங்க மிஸ், என் கூட உக்கார்ந்து சாப்பிடுங்க , கும்பலா உக்காந்து சாப்பிட்டாதான் சீக்கிரம் டைஜெஸ்ட் ஆகும்
8 வாழ்ற அளவுக்கு காசு இருந்தா போதும் , வாரி எடுத்துட்டுப்போற அளவுக்கு தேவை இல்லை
9 நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதும் முத வேலையா என் அப்பாவை டைவர்ஸ் பண்ணிடறேன்
10 எவரிதிங்க் ஹேப்பன்ஸ் ஃபார் எ ரீசன்
11 என்னடா புது பொம்மைக்காரு.,?
அம்மா ஹேப்பி யா இருந்தாங்க அதான் வாங்கிகொடுத்தாங்க
என்னைக்கல்யாணம் பண்ணின நாளில் இருந்தே அம்மா ஹேப்பிதானே?
அதெல்லாம் இல்லை , ரெண்டு அங்கிள்ஸ் வீட்டுக்கு வந்தாங்க ,அ தனால அம்மா ஹேப்பி
12 அப்பா , இத்தனை நாளா உனக்கு ஒரு பொண்ணு பார்க்கெறேன்னு சொன்னிங்களே, அது எனக்குன்னு நினைச்சேன்ம் ஆனா உங்களுக்கா>
13 தனியா போய் திருடுனாதான் மாட்டிக்கறோம், சேர்ந்து போய் திருடுனா?
ஆமா ஒன்று பட்டால் குண்டு பல்பு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் இங்கே மழை வருதுனு சொல்லிட்டு பைக்கை எடுத்துட்டு நாயகி வீட்டுக்கு வர்றார், ஆனா அவர் கொஞ்சம் கூட நனையவே இல்லை
2 பூஸ்ட் ? ஹார்லிக்ஸ்? எது வேணும்னு அனிதா கேட்கும்போது தண்ணி மட்டும் போதும்னு சிவா சொல்றார். டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்குது. தண்ணி கொண்டு வர எதுக்கு 2 மினிட்ஸ்?
3 வில்லன் கிட்டே வட்டிக்கு கடன் வாங்கும் ஹீரோ அவ்ளோ பணத்தையும் பணத்தை அள்ளிட்டு வர்றார்? ஒரு பேக் கொண்டு போக மாட்டார்??
4 மனோ பேங்க் லோனை அடைக்கும்போது அவர் நினைத்திருந்தால் அந்த டெலிஃபோன் காதலி ஃபோட்டோவைப்பார்த்திருக்கலாமே?
5 செல் ஃபோன் சிம்ரன் தனக்கு துரோகம் செய்வதாக சிவா சந்தேகப்படும்போது அவரது பெங்க் அக்கவுண்ட் டீட்டெய்ல்ஸ் உள்ள அல்லது ஓ டி பி வரும் ஃபோன் நெம்பர் உள்ள சிம் கார்டை வேறு ஒரு ஃபோனில் மாற்றி வைத்திருந்தால் அவரது பணம் சேஃப்டியாக இருந்திருக்குமே/ ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சமூக வலைத்தளங்களில் கலாய்த்த அளவு ஓவர் மொக்கை எல்லாம் இல்லை . ஓரளவு காமெடியாகத்தான் இருக்கிறது .
ரேட்டிங் 2.25 / 5
Single Shankarum Smartphone Simranum | |
---|---|
Directed by | Vignesh Sha P. N |
Written by | Vignesh Sha P. N |
Screenplay by | Vignesh Sha P. N Boopathi Selvaraj |
Produced by | K. Kumar |
Starring | |
Cinematography | Arthur A Wilson |
Edited by | Boopathi Selvaraj S.N. Fazil |
Music by | Leon James |
Production company | Lark Studios |
Distributed by | 11:11 Production |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment