டெம்பிள் மங்கீஸ் என்ற யூ ட்யூப் சேனல் மூலம் பிரபலமானவர் இயக்குநர் விஜய் வ்ரதராஜ், இவர் மொக்கைக்காமெடி ரசிகர் போல. சி செண்ட்டர் அடியன்சுக்கான அடல்ட் க்ண்ட்டெண்ட் உள்ள மொக்கைக்காமெடி படத்தை எடுத்து வைத்துள்ளார். கெடுத்து வைத்துள்ளார் என்றும் சொல்லலாம், 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ப்ட்ட படம் 2023 ல் தான் ரிலீஸ் ஆகி உள்ளது, டி வி ல போட்டு பார்ப்பவர்களுக்கு தலா ரூ 1000 பரிசு என அறிவித்தாலும் பார்க்க வேண்டாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியின் தந்தை ஒரு விஞ்ஞானி. சாகா வரம் போல என்ன நோய் வந்தாலும் அதை சரி செய்யும் மருந்தை கண்டு பிடிக்கிறார், ஆனால் அரசாங்கம் , ராணுவம் எல்லாம் அதை கொத்து கொத்தாக மனிதர்களை சாகடிக்கும் வைரசாக மாற்றுகிறார்கள் . போர் செய்ய இது புது யுக்தியாக உருவெடுக்கிறது . உண்மை அறிந்த இவர்களை அழிக்க முயற்சி நடக்கிறது . இந்த ஆராய்ச்சிக்கூடம் இருக்கும் இடத்தை மனிதர்கள் யாரும் அறியாதவாறு ரகசியம் காக்கிறார்கள்
வெவ்வேறு காரணங்களுக்காக வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள ஒரு இடத்துக்கு வரும் ஆறு பேர் ஜாம்பிகள் இருக்கும் ஒரு காட்டுக்குள் மாட்டுகிறார்கள் . அவர்களை நாயகி காப்பாற்றுகிறாள்
ஆராய்ச்சியின் சைடு எஃபக்ட் ஆக அந்தக்கால ஹிட்லர் உயிர்த்தெழுகிறார். இதற்குப்பின் நிகழும் நம்ப முடியாத சம்பவங்களே படம்
நாயகனாக அட்டக்கத்தி தினேஷ், எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே? என கேட்கத்தோன்றுகிறது. நாயகியைத்துரத்தி துரத்தி லவ்வும் கேரக்டர் தான், எடுபடவில்லை
நாயகியாக சஞ்சிதா ஷெட்டி டைட் ஃபேண்ட் , டைட் பனியன் என கிளாமர் காஸ்ட்யூம்ஸ் மட்டுமே இவரது பிளஸ்
காமெடியன் ஜெகன் இதில் திருநங்கை மாதிரி ஏதோ ஒரு கேரக்டரில் கேவலமாக தோன்றி உள்ளார். சென்சாரில் எப்படி இவரது காட்சிகளை அனுமதித்தார்களோ?
2 மணி நேரம் ஓடும் படத்தில் பார்க்கும்படியாக 20 நிமிடக்காட்சிகள் மட்டும் இருக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 பலரின் ஃபிளாஸ்பேக் கதைகளில் அந்த ஒரே ஒரு பியார்ஸ் சோப்பால் ஒரு குடும்பமே அழிந்த கதை மிக சுவராஸ்யம்
2 கட்டி வைக்கப்பட்ட காட்டெருமைகள் எல்லாம் புலம்பிக்கொண்டிருகும்போது தப்பிக்க ஒரு வாய்ப்புக்கொடுக்கும் கத்தியை இருவர் உபயோகிக்க முயல ஒரு ஆள் அதைத்தட்டி விட்டு தப்பிக்கக்கூடாது , அது தப்பு என அடிக்கடி காமெடி பண்ணும் காட்சி
3 மெயின் கதையை வைத்து இரண்டு மணி நேரம் இழுக்க முடியாது என்பதை அறிந்து ஆறு பேருக்கும் தனித்தனி ஃபிளாஸ்பேக் கதை சொல்ல வைத்து சமாளித்தது
4 ஏ சர்ட்டிஃபிகேட் வாங்க வேண்டும் என்பதற்காகவே சம்பந்தமே இல்லாமல் பச்சை வசனங்களை ஆங்காங்கே சேர்த்தது . பசுமை பாரதம் என்பதை பச்சை பாரதம்னு புரிஞ்சுக்கிட்டாங்க போல
5 மாறுபட்ட கேர்க்டர்களில் தொடர்ந்து நடித்து வரும் அட்டக்கத்தி தினேஷை இந்த மாதிரி டப்பாப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்த லாவகம்
ரசித்த வசனங்கள்
1 உங்கள் அபிமான கட்டு விரியனும், கட்டில் வெறியனும்
2 ஹனிமூன் க்கு எங்கேம்மா போறே?
கன்யா குமாரி
கடைசி வரைக்கும் நீ அப்படியேதான் இருக்கப்போறே!
3 இந்த கம்பெனில சேர்ந்து 12 வருசம் ஆகிடுச்சு , வயசாகிடுச்சு. சோ யூ ஆர் டிஸ்மிஸ்டு
வயசானா கழிச்சுக்கட்ட நான் என்ன ஐயிட்டமா?
4 உலகத்துல எந்த ஒரு நல்லதும் கூடவே ஒரு சாபத்தையும் கொண்டு வரு,ம்
5 சில விஷயங்களை ஜெயிக்க முடியாது , தோற்றதா ஒத்துக்கவும் முடியாது
6 அமுக்க்ரான் கிழங்கு பொடி அஞ்சு ஸ்பூன் சாப்பிட்டா காய்ஞ்சு போன காவிரியும் பாய்ஞ்சு வரும் பாலாறா மாறும்
7 இது அனிரூத் அல்வா , ஆயகலைகள்69ம் இதுல அடங்கும் , ட்ரை பண்ணிப்பாருங்க
8 சரக்கு குடிக்கற போட்டில சரக்குக்குப்பதிலா அவனுக்கு மட்டும் கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்து நம்மளை ஏமாத்திட்டாங்க
நம்ம ஊர் சரக்கே கூல்ட்ரிங்க் மாதிரி தானே இருக்கும் ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அட்டக்கத்தி தினேஷ் நிற்கும் இடத்தின் பின்னால் உள்ள சுவர் அல்லது கதவு வழியாக ஜோம்பிகள் இரு கைகளை துவாரவ் வழியாக செலுத்தி தாக்க வரும்போது அவர் ஏன் அந்த இடத்தை விட்டு விலகாமல் அங்கேயே பத்து நிமிடங்களாக நிற்கிறார்?
2 ஃபாரீன் டிவிடி யைப்பார்த்து சுடும் அட்லீ பரம்பரைகள் தயவு செய்து ஹோமோ டைப் கிளைக்கதைகளை தவிர்க்கவும், நம் ஊருக்கு அந்த கதை ஒட்டவே இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - இது 18+ படம் . காட்சி ரீதியாக ஏதும் இல்லை என்றாலும் வசனம் கொடூரம். ஃபேமிலியுடன் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அமேசான் பிரைம் தளத்தில் ஓரமாக சத்தமே இல்லாமல் இருக்கும் படம், அங்கே ஸ்ட்ரீமிங் ஆகுது என ப்ரமோ பண்ண அவங்களே கூச்சப்பட்டுக்கொள்ளும் படம் போல . ரேட்டிங் மைன்ஸ் 1 /5
0 comments:
Post a Comment