Friday, April 14, 2023

சிரித்து வாழவேண்டும் (1974)-தமிழ் - சினிமா விமர்சனம்

 


சலீம்  ஜாவேத்  எழுதிய  ஹிந்தி  நாவலான  ஜஞ்சீர்  அதே  பெயரில்  ஹிந்தியில்  சினிமாவாக  எடுக்கப்பட்டது . அங்கே  ஹிட்  ஆனதால்  அதை  தமிழில்  ரீமேக்  செய்ய  முடிவெடுத்தார்கள் இதயம்  பேசுகிறது  மணியன் , வி  லட்சுமணன்  ஆகியோர்  திரைக்கதை  எழுத எஸ் எஸ்  பாலன் ( பாலசுப்ரமணியன்)  எழுதிய  ஒரிஜினல் ஸ்கிரிப்ட்   தமிழுக்கு  ஏற்றபடி  எழுதப்பட்டது . விமர்சன  ரீதியாக சுமார்  ரகம்  என  சொல்லப்பட்டாலும் பல  தியேட்டர்களில்  100  நாட்களுக்கு  மேல்  ஓடியது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  ஃபிளாஸ்பேக். வில்லன்  போலி  மருந்து  தயாரிப்பவன், அவனது  அடியாள்  போலீஸ்  காவலில்  வைத்து  விசாரிக்கபட்டும்  தன்  ஓனரைக்காட்டிக்கொடுக்கவில்லை . சரியான  சாட்சி  இல்லாததால்  விடுவிக்கப்படும்  அடியாள்  தன்  வீட்டுக்கு  வந்து  தன்  மனைவி  மகனுடன்  இருக்கும்போது  வில்லன்  தன்  அடியாளையும் ,  அவன்  மனைவியையும்  சுட்டு  கொலை  செய்து  விடுகிறான், அப்போது  மகனான  சிறுவன் பீரோவுக்குள்  ஒளிந்து  இருந்து  பார்த்து  விடுகிறான்.


 20  வருடங்களுக்குப்பின்  அந்த  சிறுவன்  போலீஸ்  ஆஃபீசராக வருகிறார்., அவர்  தான்  ஹீரோ, தன்   அம்மா, அப்பாவைக்கொலை  செய்தவனை  எப்படிக்கண்டு  பிடித்து  பழி  வாங்குகிறார்  என்பதே  மீதிக்கதை 


ஹீரோவாக  எம் ஜி ஆர் , இரு  வேடங்கள் . போலீஸ்  ஆக  வரும்  ஹீரோ  கடைசி  வரை  எதையும்  சாதிக்கவில்லை , ஹீரோயின் உடன்  டூயட்  பாடியதைத்தவிர ,ஆனால்  ஸ்டைலிஷாக  படம்  முழுக்க  வருகிறார். அவர்  மஃப்டியில்  பல  காட்சிகளில்  கழுத்தில்  மப்ளர்  மாதிரி  ஒன்றை  டை  மாதிரி  கட்டிக்கொண்டு  வந்த  காட்சிகள்  அந்நாளில்  கொண்டாடப்பட்டது . இதே  ஸ்டைலை  கே  பாக்யராஜ்  நான்  சிகப்பு  மனிதன்  படத்தில்  ஃபாலோ  பண்ணி  இருப்பார் 


இரண்டாவது  வேடம்  வலியத்திணிக்கப்பட்டது , படத்தை  மேலும்  இழுக்க  உருவாக்கப்பட்ட  ஒரு  கேரக்டர். இருவரும்  ஒரே  தோற்றம்  என்றாலும்  இருவருக்கும்  ரத்த  சொந்தம்  எதுவும்  இல்லை. இருவருக்கும்  எந்த  தொடர்பும்  இல்லை , இருவரும்  நண்பர்கள்  போல்  காட்டி  விடுகிறார்கள் 


ஹீரோயினாக  லதா. ஏதோ  ஒரு  டம்மி  கேசில்  சாட்சியாக  வரும் இவர்  ஹீரோ வீட்டில்  தங்கிக்கொள்வது  எல்லாம்  ஓவரோ  ஓவர் .அனாதை  என்று  சொல்லிக்கொண்டு  ஹீரோ  வீட்டில்  தங்கிக்கொள்ளும்  நாயகி  வரும்  காட்சிகள் எல்லாம்  கிளாமரோ  கிளாமர் ‘’


வில்லனாக  நம்பியார்.  ரசிக்க  வைக்கும்  வில்லத்தனம் . ஆர்  எஸ்  மனோகர்   அடியாள்  வேடத்தில்  கச்சிதம் ., ஐசரி வேலன்  அதிக  வாய்ப்பில்லை , தேங்காய்  சீனிவாசன்  ஹீரோ  புகழ்  பாடுவதற்காக  சின்ன  ரோல் 


எம் எஸ்  விஸ்வநாதன்  இசையில்  ஐந்து  பாடல்கள்  செம  ஹிட்டுப்பாட்டு 


மெயின்  கதை இரு வரிதான் , ஆனால்  திரைக்கதையில் எங்கெங்கோ  போய்  என்னன்னமோ கதை  சொல்லி  காதில்  பூ  சுற்றுகிறார்கள் 


சபாஷ்  டைரக்டர் (எஸ் எஸ்  பாலன்  எனும்  பாலசுப்ரமணியன் )  


1 ஒரிஜினல்  வெர்சனில்  அமிதாப்  பச்சன்  போலீஸ்  ஆஃபீசர்  கேரக்டரிலும்  அப்துல்  கேரக்டரில்  வேறு  ஒரு  ஹீரோவும்  நடித்திருந்தனர். ஆனால்  தமிழில்  ரீமேக்கும்போது ஹீரோ   டூயல்  ரோல் ஆக  மாற்றிய  சாமார்த்தியம் 


2   பெற்றோரைக்கொன்றவர்களைப்பழி  வாங்கும்  அரதப்பழசான  கதையை   ஜனரஞ்சகமாக  சொன்ன  விதம்


3   காமெடியன்  ரோலை  ஹீரோ  துதி  பாடும்  ரோல் ஆக்கிய  சாமார்த்தியம் . வாலியின்  உதவியுடன்  பொன்மனச்செம்மல்  எனும்  பட்டத்தை  சாமார்த்தியமாக  படத்தின்  பாடலில்  நுழைத்த  விதம்




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ஒன்றே  சொல்வான்  நன்றே  செய்வான்  மேரா  நாம்  அப்துல்  ரஹ்மான்  ( ஹீரோ  ஓப்பனிங்  சாங்க்) 


2  நீ  என்னை  விட்டுப்போகாதே  , இந்தக்கன்னி  மனம்  தாங்காதே  ( வில்லன்  கேங்கில்  கிளப்  டான்ஸ்  சாங் )


3  கொஞ்ச  நேரம் என்னை  மறந்தேன்  (  ட்ரீம் சாங்  டூயட் )


4   பொன்மனச்செம்மலைப்புண்படச்செய்தது  யாரோ? ( சோகம்:}


5  உலகம்  என்னும் நாடக  மேடையில்  நான்  ஒரு  நடிகன் ( வில்லன்  ஸ்பாட்டில்  ஹீரோ மாறுவேடம்) 


  ரசித்த  வசனங்கள் 


1  இவன்  ஏன்  இப்படிப்பேசிட்டுப்போறான் ? சூடா  ஒரு  டம்ளர்  ஞானப்பால்  குடிச்சிருப்பானோ ? 


2   சரக்கு  அடிக்க  ஆண் , பெண் பேதம் இல்லை, ஆனந்தம்  எல்லோருக்கும்  சொந்தம் 


3  பத்தினிகள்  ஆண்களிலும்  உண்டு . ராமு  அதில்  ஒருவன் 


4   இரண்டு  அறிவாளிகள்  ஒரே  இடத்தில்  இருந்தா  அங்கே  வேலை  நடக்காது , விவாதம்  தான்  நடக்கும்., அதனால  அவரை  நான்  கொன்னுட்டேன் 

 சபாஷ்  மிஸ்!  குடியும்  குடித்தனுமுமா  வாழ்றீங்க  


5  மனுசன்  தூங்கலாம், மனசாட்சி  தூங்கக்கூடாது


6  பாஸ், சாரி  அந்தப்பொண்ணு  இப்படி  ஏமாற்றுவாள்னு  நான்  எதிர்பார்க்கவே  இல்லை 


 ஏமாற்றுபவள்  விரைவில் எதிர்பாருங்கள்  நான்  ஏமாற்றப்போகிறேன்னு  போஸ்டர்  ஒட்டி  அறிவிச்சுட்டா  ஏமாற்றுவா? 


7   எதுவரை  படிச்சிருக்கே?


 எழுத்துக்கூட்டி  படிப்பேன் , பொள்ளாச்சினு  இருந்தா  பிள்ளைத்தாய்ச்சினு  படிப்பேன்


8   ஒரு  கசப்பான  அனுபவம்  1000  புத்தகங்கள்  படித்ததற்கு  சமம் 


9 ஒருவன்  மனம்  புண்பட்டா  அவன்  பண்பட்டான்னு  அர்த்தம் 


10  நிமிர்ந்து  நின்று  எதிர்க்க  முடியலைனு  தெரிஞ்சதும்  வளையப்பார்க்கறியா? அதிகமா  வளையற  வில்லும், அதிகமா வளையும் மனிதனும்  ஆபத்துக்கு  அறிகுறிகள் 


11  நீதிக்காகப்போராடுபவன்  தனியா  இருந்தாலும்  அவனுக்கு  1000  பேர்  பலம்  வந்து விடும் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லனின்  அடியாள்  தன்னை  போலீஸில்  காட்டிக்கொடுத்துடுவானோ  என  பயந்த  வில்லன்  அவனை  மட்டும்  போட்டுத்தள்ளாமல்  அடியாளின்  மனைவியையும்  போட்டுத்தள்ளுவது  ஏன்? 


2  பல  வருடங்களாக  தன்னிடம்  வேலை  பார்க்கும்  அடியாளுக்கு  குழந்தை  இருப்பது  வில்லனுக்குத்தெரியாதா? குழந்தையை  மட்டும்  கொல்லாமல்  விடுவது  ஏன் ? 


3   ஹீரோ  சின்ன  வயசில்  தூங்கும்போது  ஷூ  ஷாக்சுடன் தான்  தூங்கறாரு

4   வில்லனான  நம்பியார்  நம்ம  கடத்தல்  லாரி  மாட்டுன  ஏரியா  எது? அங்கே  இன்ஸ்பெக்டர்  யாரு?னு  விசாரிக்கறப்ப  அடியாள்  ஹீரோ  பேரு  சொல்றான். யாரோ  புது  இன்ஸ்பெக்டர்  போல, செலவுக்கு  பணம்  கொடுக்கனும்னு  ஒரு  லேடி  கிட்டே  சொல்றார்  வில்லன், அடுத்த  சீன்ல  ஹீரோ  எம் ஜி ஆர்  கிட்டே  உங்களைப்பற்றி  அடிக்கடி  பேப்பர்ல  போட்டிருக்காங்க , கேள்விப்பட்டிருக்கேன், உங்களைப்பார்க்கனும்னு  நினைச்சேன்கறார். ஏன்  இந்த  முரண்பாடு ?

5    அப்துல்  எனும்  ஆளிடம்  ஹீரோ இனிமே  கிளப்  நடத்த  வேண்டாம்  என்கிறார்.அவரு,ம்  ஓக்கே  சொல்ல  அடுத்த  சீனில்  நான்  சொன்ன  ஒரே  ஒரு  வார்த்தைக்காக  உங்க  சொத்து  எல்லாத்தையும்  இழந்துட்டீங்களே? என்கிறார். எப்படி? 20 வருசமா  கிளப்  நடத்துனவர்  பேங்க்கில்  பணம்  வைத்திருக்க  மாட்டாரா?


6  ஒற்றைக்கண்  அடியாள்  லாரி  ஓட்டிட்டு  ஹை  வேல  வர்றான். டிரைவிங்க்  லைசென்ஸ்  எப்படிக்கொடுத்தாங்க ? 


7  கடத்தல்  லாரியை  ஹீரோ  துரத்தும்போது  ஒரு  அடியாள் லாரியின்  பின் பக்கம்  நின்று  கொண்டு  ஏதோதோ  வீசி  ஜீப்  வருவதை  தடுக்க முயல்கிறார். ஹீரோ  போலீஸ்  , கைல  துப்பாக்கி  இருக்கு,  சும்மா  சுடற  மாதிரி  பாவ்லா  காட்னாலே  அவன்  பயந்திருப்பானே?


8 லாரி  ஏற்படுத்துன  விபத்தை  நேரில்  பார்த்த  சாட்சியான  நாயகியை  ஹீரோ  பார்க்க  விரும்புவதா  சொல்ல  போலீஸ்  நாயகியை  அழைச்சுட்டு  போலீஸ்  ஸ்டேஷன்  தானே  வரனும்? ஏன்  ஹாஸ்பிடல்  கூட்டிட்டு  வர்றாங்க ? 


9  குற்றவாளியை  அடையாளம்  காட்ட  போலீஸ்  ஸ்டேசன்  வரும்  நாயகி  அவர்  பாட்டுக்கு  சாட்சி  சொல்ல  தானா  வர்றாரு, அதுக்குள்ளே  அவசரப்பட்டு  ஹீரோ  ஹீரோயின்  ,கையைப்பிடிச்சு  இழுத்து  சொல்லு  சொல்லு  யார்? அப்டிங்கறார்? இதுக்கே  ஹீரோவை  அரெஸ்ட்  பண்ணனும்.


10  ஹீரோயின்  லதா  தன்னை  யாரோ  மிரட்டுவதாக  சொல்லி  ஹீரோ  வீட்டுக்கு  வந்து  அங்கேயே  தங்கறார். ஹீரோ  நல்லவரா  இருந்தா  சட்டப்படி  அவரை  லேடி  கான்ஸ்டபிள்  வீட்டுக்கு  அனுப்பி  பாதுகாத்து  இருக்கனுமே? 


11  ஹீரோயின்  லதா  ஹீரோ  வீட்டில்  வெறும்  தரையில்  படுத்துத்தூங்குகிறார். .ஹீரோ  அவருக்கு  தலையணையும், போர்த்திக்கொள்ள  பெட்ஷீட்டும்  தர்றார். பாய்  தந்திருக்கலாமே?மொசைக்  தரைல  எப்படித்தூங்குவார் ? 


12  ஹீரோ  தன்  வீட்டில்  ஹீரோயின்  தங்கினால்  பிரச்சனை  என  நண்பர்  அப்துல்  வீட்டில்  தங்க  வைக்கிறார்.அப்பப்ப  அப்துல் வீட்டுக்கு  வந்து  லதாவுடன்  ரொமான்ஸ்  பண்றார். அப்படி  பயந்து  பயந்து  ரொமான்ஸ்  பண்றதுக்குப்பதிலா  தன்  வீட்டுக்கே  கூட்டிட்டுப்போய்  இருக்கலாமே?


13  பல  வருடங்களுக்கும்  முன்  ஹீரோ  தந்து  உதவிய  200  ரூபாயை  தேங்காய்  சீனிவாசன்  ஒரு  கவர்ல  போட்டுத்தர ஹீரோ  அதை  வாங்கிக்கொள்கிறார். அப்போது  லஞ்ச  ஒழிப்புத்துறை  வந்து  சோதனை இடும்போது  அந்தக்கவரில் 2000  ரூபாய் ( 20 நூறு ரூபாய் நோட்டு)  இருக்கிறது. ஒரு  போலீஸ்க்கு  கவர்  வெயிட்டை  வைத்து  எவ்வளவு  ரூபாய்  இருக்கும்  என  கணிக்க  முடியாதா?அல்லது


14   போலீஸ்  ஆஃபீசரான  ஹீரோ  கிட்டே  சேவிங்ஸ்  இருக்காதா? கோர்ட்  விதித்த  5000  ரூபாய்  அபராதம்  கட்ட  அவரால  முடியலை. பிளாட்ஃபார்ம்வாசியான  நாயகி  தன்  சேமிப்பில்  இருந்து  பணம்  தர்றார் 


15   ஓடும்  ரயிலில்  ஒரு  முக்கிய  சாட்சியை  யாராவது  கதவு  அருகே  நிற்க  வைத்துக்கூட்டிச்செல்வார்களா? வில்லனின்  ஆட்கள்  தள்ளி  விடுவார்கள்  என  தெரியாதா?


16  ஓடும்  ரயிலில்  தள்ளி  விடப்பட்ட  சாட்சி  அந்த  ரயில்  வந்த  தண்டவாளம்  மேலே  விழுந்து  கிடப்பது  எப்படி ? அதற்கு  அருகே  தானே  விழ  முடியும் ? 


17  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகும்  ஹீரோ  நேரா  தன்  வீட்டுக்குக்கூடப்போகாம  நேரா  வில்லன்  இருக்கும்  ஹோட்டலுக்கு  வர்றாரே? அவருக்கு  எப்படி  கரெக்டா  அந்த  லொக்கேஷன்  தெரியும்> அவர்தான்  இத்தனை நாளா  ஜெயிலில்  இருந்தாரே?


18 ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆன  ஹீரோ  நேரா  வில்லன்  இடத்துக்கு  வந்ததும்  ஏதோ  பெருசா  செய்யப்போறார்னு  பார்த்தா  அவர்  வில்லன்  கிட்டே  நான்  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகிட்டேன், அதை  சொல்லிட்டுப்போகத்தான்  வந்தேன்கறார். இதை  ஃபோன் பண்ணியே  சொல்லி  இருக்கலாமே? 


19   ஹீரோ  பொய்யான  குற்றச்சாட்டில்  அதாவது  2000  ரூபாய்  லஞ்சம்  வாங்கிய  குற்றத்தில்  கைதாகி  3  மாத  ஜெயில்  தண்டனை  பெற்று  வெளீயே  வருகிறார். ஆக்சுவலா  அவர்  சஸ்பெண்ட்தானே  ஆகி  இருக்கிறார், வில்லன் என்னடான்னா  உன்  வேலையே  போச்சு , இனி  என்ன  பண்ணுவே? என்  கிட்டே  வேலைக்கு  சேர்ந்துக்க  என்கிறாரே? 


20   காலைல 11  மணிக்கு  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆன  ஹீரோ  நேரா  வில்லன்  இருக்கும்  ஹோட்டல்  போய்  வெட்டிக்கதை  பேசிட்டு  மீண்டும்  வெளில  வரும்போது  உத்தேசமா  மணி  மதியம் 2   அப்டினு  வெச்சுக்கிட்டாக்கூட  அவர்  அடுத்த  ஷாட்டிலேயே  மிட்  நைட்ல  நடு  ரோட்ல  நடந்து  போய்க்கிட்டு  இக்ருக்காரு, வில்லனின்  ஆட்கள்  அவரைக்கொலை  செய்ய  முயுற்சிக்கறாங்க .,  வீட்டுக்குக்கூட  போகாத  ஹீரோ  அந்நேரத்துல  எதுக்கு  அங்கே  போனாரு ?


21  இந்த  எம்  ஜி ஆர் இங்கே  வில்லனின்  அடியாட்களிடம்  மாட்டிக்கொண்ட  போது  அந்த  எம் ஜி ஆர்  கெட்ட  கனவு  கண்டதா   எழுந்து  கரெக்டா  இந்த  எம் ஜி ஆர்  இருக்கும்  ஸ்பாட்டுக்கு  எப்படி  வந்தார்> அவர்  கூகுள்  லொக்கேஷன்  அனுப்பினாரா? 


22  ஹீரோவைக்கொல்லச்சொல்லி  வில்லன்  சொன்னதால் 10  பேரு  சேர்ந்து  ஹீரோவை  அடிச்சு  தண்டவாளம்  மேல  போட்டுட்டுப்போறாங்க , கொல்லனும்னு  நினைச்சா  அருகே  இருக்கும்  பாறாங்கல்லைத்தூக்கி  தலைல  ஒரு  போடு  போட்டா  ஆள்  க்ளோஸ் , அதை  விட்டுட்டு  ரயில்  வரட்டும்னு  வெயிட்டிங்  எதுக்கு ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - நாயகி  லதா  வரும்  காட்சிகள் 90% கிளிவேஜ்  காட்சிகள்  தான்.



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம் ஜி ஆர் ரசிகர்கள் மட்டுமே  பார்க்க  முடியும்,இது  எப்படி  ஹிந்தியில்  ஹிட்  ஆனது ? தமிழில்  அதைவிடப்பெரிய  ஹிட்  ஆனது  என்பது  மில்லியன்  டாலர்   கொஸ்டின் . ரேட்டிங்  2.25 / 5 




சிரித்து வாழ வேண்டும்
சிரித்து வாழ வேண்டும்.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்எஸ்.எஸ்.பாலன்
மூலம் திரைக்கதைஎஸ்.எஸ்.பாலன்
அடிப்படையில்சலீம்-ஜாவேத்
எழுதிய ஜன்ஜீர்
உற்பத்திஎஸ்.மணியன்
வித்வான் வி.லட்சுமணன்
நடிக்கிறார்கள்எம்.ஜி.ராமச்சந்திரன்
லதா
எம்.என்.நம்பியார்
ஒளிப்பதிவுஏ. ஷம்முகம்
திருத்தியவர்எம். உமாநாத்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
உதயம் புரொடக்ஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 30 நவம்பர் 1974
நேரம் இயங்கும்
146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: