ஃபகத் ஃபாசில் எடுத்த சொந்தப்படம் இது . கேரளா - திருச்சூர் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை இது இந்தியாவின் கோல்டு கேப்பிடல் என்று அழைக்கப்படும் திருச்சூரில் ஒரு கோல்டு புரோக்கரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மை சம்பவம் இது
ஷ்யாம் புஷ்கர் எனும் திரைக்கதை ஆசிரியர் நம்ம ஊர் கே பாக்யராஜ் மாதிரி கமர்ஷியலான திரைக்கதை அமைப்பதில் மன்னன். அவரது குறிப்பிடத்தக்க படங்கள் கும்பாளங்கி நைட்ஸ்( 2019) , மாயநதி( 2017) தொண்டிமுத்தாளும் திருசாக்ஷையும் ( 2017)
Spoiler alert ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் கோல்டு புரோக்கர். இவரது பணி கோல்டு டீலர் தரும் நகைகளை வெவ்வேறு ஊர்களில் டெலிவரி செய்வது .மும்பையில் ஒரு பார்ட்டிக்கு 2 கிலோ தங்க நகைகளை டெலிவரி செய்ய மும்பை போகிறார் , அவர் தங்க நகைகளுடன் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குகிறார். அந்த ஹோட்டல் ரூமில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்
தூக்கில் இடப்பட்டு இறந்த அவரது உடலில் தாக்கப்பட்ட காயங்கள் இருக்கின்றன. அறை முழுவதும் ஒரு போராட்டம் நடந்தது போல பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன. ஒரு இடத்தில் ரத்தம் சிந்தி இருக்கிறது
மும்பை போலீஸ் இந்த கேசை விசாரிக்கிறது போலீசின் சந்தேக வளையத்தில் நாயகனின் நண்பன் , நாயகனின் கோல்டு டீலர் , நாயகனின் முன்னாள் நண்பர்கள் இருவர் ஆகியோர் சிக்குகிறார்கள் , இந்த -கேஸ் விசாரணையில் திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன. உண்மையாக என்ன சம்பவம் நடந்தது ? என்பதுதான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக வினீத் சீனிவாசன். அப்பாவித்தனமான ரோல், போலீசில் ஒரு கேசில் மாட்டும்போது கூட இருக்கும் இரு நண்பர்களும் பயந்து நடுங்க இவர் அசால்ட்டாக லெஃப்ட் ஹெண்டில் போலீசை டீல் செய்யும் விதம் அருமை . போலீஸ் தர்ட் டிகிரியில் விசாரிக்க முற்பட அவர் ஆங்கிலத்தில் கோபமாகப்பேசும் தொனி அட்டகாசம்
நாயகனின் நண்பனாக பிஜூ மேனன் , அய்யப்பனும் கோஷியும், ல ஈகோ குணம் கொண்டவராக பிரமாதப்படுத்தியவர் இந்தப்படத்தில் மாறுபட்ட ரோல் அசத்தி இருக்கிறார்
இன்னொரு நண்பராக வரும் வினித் தட்டில் டேவிட் கச்சிதமான பதட்டமான நடிப்பு
இன்வெஸ்டிகேஷன் ஆஃபீசராக வரும் கிரீஸ் குல்கர்னி உடல் மொழியில் நிஜமான போலீஸ் ஆஃபீசர் மாதிரியே பிரமாதமாக நடித்திருக்கிறார்
நாயகனின் மனைவியாக அபர்ணா பாலமுரளி அதிக வசனம் ஏதும் பேசாமல் கண்களாலேயே பேசும் கேரக்டர் ., கனகச்சிதமான சோகமான நடிப்பு
நாயகனின் கல்லூரி கால நண்பனாக கலையரசன் கொஞ்ச நேரமே வ்ந்தாலும் துடிப்பான நடிப்பு
கவுதம் சங்கரின் ஒளிப்பதிவு கனகச்சிதம்,/ 145 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்தை கச்சிதமாக ட்ரிம் செய்து இருப்பவர் கிரன் தாஸ்
பிஜி பால் தன் பின்னணி இசையால் படம் முழுக்க ஒரு பரபரப்பை ஊட்டுகிறார்
ஷஹீத் அரஃபத் இயக்கம் விறுவிறுப்பு
நிச்ச்யம குடும்பத்தோடு பார்க்கத்தக்க ஒரு டீசண்ட்டான க்ரைம் த்ரில்லர் தான் இது , அமேசான் பிரைம்ல கிடைக்குது
சபாஷ் டைரக்டர்
1 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் அந்த கோவை சம்பவம், முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேசன் சம்பவம் செம விறுவிறுப்பு, த்ரில்லிங் . சினிமாத்தனமே இல்லாத நிஜமான காட்சி அமைப்பு செம தத்ரூபம். போலீஸ் ஸ்டேஷனில் காலடி எடுத்து வைத்தால் நம்மைக்காலி பண்ணிடுவாங்க என்பதை உனர்த்தும் காட்சி கலக்கல் காட்சி
2 முக்கியமான கேரக்டர்களின் கேரக்டர் டிசைன் பக்கா. குறிப்பாக மும்பை போலீஸ் ஆஃபீசராக வரும் கிரீஸ் குல்கர்னி உடல் மொழி அற்புதம்.
3 ஒரு காட்சியில் இறந்தது நாயகன் தானா? என்பதை வெரிஃபிகெஷன் செய்ய மனைவி , நண்பன், உறவினர் அனைவரும் பிண அறைக்கு வரும் காட்சியில் பிணத்தைப்பார்த்த மனைவி பார்வையாலேயே ஆமாம், அவன் தான் என்பதை நண்பனுக்கு உணர்த்த அவன் உறவினரைப்பார்க்கும் காட்சியும் அருமை ., வசனமே இல்லாமல் பிரமாதப்படுத்தப்பட்ட காட்சி அது
4 போலீசிடம் அடி வாங்கிய நாயகன் சார் , இப்போ உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பதில் சொல்லிட்டுதானே இருக்கேன்? ஏன் அடிக்கறீங்க? என கேட்பதும் ராத்திரி நேரத்துல கார்ல எங்கே போறீங்க ? என போலீஸ் விசாரிக்கும்போது ஏன் பிஸ்னெஸ் பண்ண இந்த நேரம்தான் சரி அப்டினு ஏதாவது வரை முறை இருக்கா? என கூலாக கேட்பது அடி பொலி சீன்
5 நாயகன் தன் காலேஜ் நண்பர்களுடன் சேர்ந்து ஏதோ திட்டம் போட்டு அதில் ஏற்பட்ட ரகளையோ இந்த சம்பவம் எல்லாம் என எண்ண வைத்து பின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை இவர்கள் வெளிப்படுத்திய விதம் அருமை
6 நாயகனின் நண்பன் ஒருவனை சினிமா தியேட்டரில் கார்னர் பண்ணும் காட்சி ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பரப்ரப்பான காட்சி
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் ஏற்கனவே பண நெருக்கடியில் இருக்கிறான் , போலீசில் மாட்டியதும் தன் கழுத்தில் உள்ள செயினை ஏன் கழட்டி தருகிறான் ?. கோல்டு டீலர் பேரைச்சொல்லி அவரைக்கோர்த்து விட்டிருக்கலாமே? இவர் ஏன் சொந்தக்காசை செலவு செய்து ரிஸ்க் எடுக்க வேண்டும் ?
2 பண நெருக்கடியில் இருக்கும் நாயகன் இரண்டு கிலோ தங்கத்துடன் தன் குடும்பத்தை அழைத்துகொண்டு தலைமறைவு ஆகாமல் அவர் போடும் திட்டம் நம்ப முடியாதது
3 ஹோட்டலில் சிசிடிவி கேமரா இருந்தும் கலையரசன் தன் முகத்தை மறைத்து வருவதும் போவ்தும் நம்பும்படி இல்லை ., ஏதோ ஒரு கோணத்தில் முகம் தெரியத்தன் செய்யும்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிக்ர்கள் அவசியம் காண வெண்டிய மாறுபட்ட விறு விறுப்பான படம், ரேட்டிங் 3.25 / 5
Thankam | |
---|---|
Directed by | Saheed Arafath |
Written by | Syam Pushkaran |
Produced by |
|
Starring | |
Cinematography | Gautham Sankar |
Edited by | Kiran Das |
Music by | Bijibal |
Production companies |
|
Distributed by | Bhavana Release |
Release date |
|
Running time | 145 minutes[1] |
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment