ஸ்பாய்லர் அலெர்ட்
ஷெஃபிக்கிண்டே சந்தொஷம் ( ஷெஃபிக்கின் சந்தோஷம்) படத்தின் ஒன் லைன் என்ன? TOO MUCH OF SWEETNESS IS NOT GOOD FOR LIFE எல்லாமே ஒரு அளவாதான் இருக்கனும் என்ற கரு தான் எடுத்தாளப்பட்டிருக்கிறது . ஒரு ஃபீல் குட் மூவியில் ட்விஸ்ட்ஸ் அண்ட் டர்ன்ஸ் இவ்வளவு புகுத்த முடியுமா? என ஆச்சரியப்படுத்துகிறது.தன்னைச்சுற்றி உள்ள அனைவருக்கும் ஏதாவது நல்லது செய்யும் கேரக்டர் ஒரு சமயத்தில் சிக்கலில் ,மாட்டிக்கொள்ளும்போது மற்றவர்கள் ரீ ஆக்சன் என்ன? என்பதை படம் விளக்குகிறது
நாயகன் துபாயில் பணி செய்யும் இந்தியர். வருடாந்திர விடுமுறைக்காகவும், அவருடைய திருமணத்துக்காகவும் இந்தியா வருகிறார். வரும்போது பலருக்கு பல விதமான பரிசுப்பொருட்களைக்கொண்டு வருகிறார். அவருடைய டாக்டர் நண்பருக்கு ஹூக்கா எனப்படும் புகை போக்கி பரிசாகக்கொண்டு வருகிறார். அதில் உள்ள புகையிலையில் மயக்க மருந்து இருக்கிறதா? என போலீஸ் செக் செய்ய லேபிற்கு அனுப்புகிறது. நாயகன் கைது செய்யபப்டுகிறார். நிச்சயிக்கப்ப்ட்ட அவரது திருமணம் நிற்கிறது . ரிசல்ட் வரும் அந்த 15 நாட்களுக்குள் நாயகன் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களே திரைக்கதை
நாயகனின் கேரக்டர் டிசைன் ப்ரியன் ஓடத்திலானு எனும் மலையாளப்படத்தின் நாயகன் பிரியன் கேரக்டர் போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ., நாயகனாக உன்னி முகுந்தன் இந்த கேரக்டரை ஏற்று நடிப்பதில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். இதற்கு முந்தைய இவரது படங்களில் அச்சாயன்ஸ்,(ACHAYANS) பிரமம் ( BRAHMAM) , அவ்ருடய ராவுகள் , ( AVARUDE RAAVUGAL) ஆகிய படங்களில் அவரது கேரக்டர் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும், மிக இயற்கையாக நடித்திருப்பார். இந்தப்பட கேரக்டர் அவரது சொந்தப்படமான மேப்படியான் ( MEPADIYAN)
ஆயுர்வேதிக் டாக்டராக வரும் மனோஜ் கே ஜெயன் நடிப்பும் , காமெடியும் அருமை . அவரது க்ளினிக்கில் பணியாற்றும் பெண்ணாக ஆத்மியா ராஜன் அழகாக வந்து போகிறார். ஃபிளாஸ்பேக் காட்சிகளில் நாயகன் இவரைத்தான் காதலிக்க முயற்சிப்பது போல காட்டப்படுகிறது. அவை மிக சுவராஸ்யம்
நாயகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக திவ்யா பிள்ளை அழகான முகம், அருமையான நடிப்பு. நாயகனின் நண்பனாக வரும் பாலா காமெடி டிராக்கில் ஆரம்பத்தில் கலக்குபவர் க்ளைமாக்ஸில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் வைக்கும் கேரக்டராக மாறுகிறார்
இரண்டு மணி நேரம் ஓடும் கதையில் முதல் பாதி கலகலப்பு , டூயட் என வேகமாக நகர்கிறது . நாயகன் கைது செய்யப்படும் காட்சியிலிருந்து கதை சோக மூடுக்குள் சென்ற பிறகு ஸ்லோ ஆகிறது. ஒரு சராசரியான ஃபீல் குட் மெலோ டிராமா அமெசான் பிரைம் ரிலீஸ்
ரசித்த வசனங்கள்
1 ஷெஃபீக் வர இன்னும் இரண்டு நாட்கள் டைம் இருக்கே? ஏன் இப்பவே வாழைப்பூவை வெட்டி எடுக்கறே?
வாழைத்தோபு ஓனர் நாளை இங்கே வர்றார், அதுக்குப்பின் எடுக்க முடியாதே?
2 என்னது ? இலவச சிகிச்சையா? அப்போ என் பேரையுல் லிஸ்ட்ல எழுதிக்கோ
உங்களுக்குத்தான் பைல்ஸ் இல்லையே? அப்றம் எதுக்கு ?
3 பொண்ணு வீட்டுக்காரங்க வந்தாங்களாமே? நிச்சயம் ஆகிடுச்சா?
ஆமா, பொண்ணு எனக்கு இல்லைனு நிச்சயம் ஆகிடுச்சு
4 பொழைப்பு தேடி ஃபாரீன் வர எனக்கு ஒரு காரணம் உண்டு
நீ மட்டுமில்ல, ஃபாரீன் வரும் எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கும்
5 மூலம் கற வியாதி உனக்கு மட்டும் இல்ல , எல்லாருக்கும் உண்டு , சச்சின் டெண்டுல்கருக்குக்கூட மூலம் உண்டு
எப்படி சொல்றே?
அவரு பேட்டிங் பண்றப்போ நோட் பண்ணு , இப்படி இப்படி மூவ் பண்ணுவாரு
6 பிளட் பிரஷரும்., சுகரும் தீர்க்க முஜ்டியாத வியாதிகள், ஆனா அதை வெளில சொல்ல யாரும் கூச்சப்படுவதில்லை , ஆனா மூல வியாதி சரியா மருந்து சாப்பிட்டா தீரக்கூடிய வியாதி , அதை வெளில சொல்ல நாம கூச்சப்படறோம்
7 கடைல எனக்கு தெரிஞ்ச ஆள் உண்டு 50% டிஸ்கவுண்ட் வாங்கித்தர்றேனு சொன்னியே?
8 உங்க பையனுக்கு அவுர்ங்கசீப்னு ஏன் பேர் வெச்சீங்க ?
அது ஒரு பேரரசன் பேரு, அதுக்கு என்ன குறைச்சல்?
சொந்த அப்பாவையே ஜெயில்ல தள்ளியவர் அவர். குழந்தை எப்படி வளரப்போகுதோ ?
அய்யய்யோ
9 இந்த மிட் நைட்ல அவனுக்கு கால் பண்றதா? சரி பண்றேன், ஆனா க்ட் பண்றானே? தூங்கி இருப்பானோ?
தூங்குனவன் எப்படி கால் கட் பண்ண முடியும் ?
10 நம் வீட்டில் உள்ளோரும், நாட்டில் உள்ளோரும் எல்லோரும் அன்பு செலுத்தனும்னா அவன் அனாதையாகத்தான் இருக்கனும், நம்மளை மாதிரி ஆட்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்காதுதானே?
சபாஷ் டைரக்டர்
1 மூல வியாதி வந்த நாயகன் மூலம் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரைக்காண ஹாஸ்பிடல் வந்து அங்கே உள்ள ரிசப்ஷனிஸ்ட் இடம் முழங்கால் வேதனை என பொய் சொல்லி அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி வெயிட் பண்ண அங்கே நடக்கும் அமளி துமளி காமெடி சம்பவங்கள் அடி ;பொலி
2 தமிழ் ஆட்டோ டிரைவராக வரும் பாலா கேரக்டர் டிசைன் அருமை , குறிப்பாக க்ளைமாக்ஸில் அவர் குற்ற உணர்ச்சியுடன் நாயகன் முன் ஒரு நடை நடப்பாரே, பிரமாதம்
3 மெயின் கதையில் வரும் நாயகன் - நாயகி காதல் காட்சிகளை விட ஃபிளாஸ்பேக் காட்சிகளில் வரும் நாயகன் - இரண்டாம் நாயகி காம்போ காட்சிகள் சுவராஸ்யம்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 பொதுவாக மலையாளப்படங்களில் காட்சிகளும், வசனங்களும் யதார்த்தமாக உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும், ஆனால் இதில் நாயகன் பேசும் பல வசனங்கள் ஒரு தத்துவவாதியின் ஸ்பீச் போல டிராமடிக்காக இருந்தது
2 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் தமிழனை , தமிழ் நாட்டு மக்களை மட்டம் தட்டும் காட்சி அமைப்புகள் , வசனங்கள் இருப்பது சர்க்கரைப்பொங்கலில் கல்
3 ஆதாரம் இல்லாமல் போலீஸ் நாயகனை நிச்சயதார்த்தம் அன்று கைது செய்வது ஏற்புடையது அல்ல, அதிலும் அவரை அடிப்பது எல்லாம் ஓவர்
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - மெதுவாகச்செல்லும் மலையாள ஃபீல் குட் மூவி பார்த்துப்பழக்கம் உள்ளவர்கள் பார்க்கலாம், சராசரி படம் ரேட்டிங் 2.25 / 5
டிஸ்கி - எந்த ஓடிடி என டைட்டிலிலேயே மென்சன் பண்ணிடறேன். ஆங்கில சப் டைட்டில் இருக்கு. தமிழ் ஆடியோ இருக்கா?னு கேட்டு பல கமெண்ட்ஸ் வருது . இல்லை , அதுக்கு அவசியமும் இல்லை . மலையாளம், தெலுங்கு , தமிழ் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும், குத்து மதிப்பா புரிஞ்சுக்கலாம், பத்தாததுக்கு சப் டைட்டில் இருக்கு
0 comments:
Post a Comment