ஸ்பாய்லர் அலெர்ட்
ஃபேக்டரில வேலை செஞ்சுட்டு இருக்கும் டீன் ஏஜ் பையனுக்கு ஒரு கால் வருது . நான் சொன்ன இடத்துக்கு இன்னும் 15 நிமிசத்துல வா, வர்லைன்னா இந்த ஸ்க்ரீன் ஷாட்ல இருப்பதை உன் அம்மாவுக்கும், உன் காண்டாக்ட் லிஸ்ட்ல இருக்கறவங்களுக்கும் அனுப்பிடுவேன் அப்டினு அந்தகுரல் மிரட்டுது . உடனே அந்தப்பையன் குறிப்பிட்ட இடத்துக்குப்போறான். அவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறான்
அந்தப்பையனோட அம்மா நாயகனான போலீஸ் ஆஃபீசரிடம் என் பையனைக்கண்டு பிடிச்சுக்கொடுப்பேன் என சத்தியம் பண்ணுங்க என உறுதி கேட்கிறாள். நாயகனும் சத்தியம் செய்கிறான்
இதற்குப்பின் சில காரணங்களால் நாயகன் ஜெயிலில் அடைக்கப்படுகிறான். அந்த கேப்பில் அந்தப்பையனின் அம்மாவுக்கு ஒரு கால் வருது . குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி. அங்கே போய் பார்த்தால் அந்தப்பையன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருக்கிறான், அவனைப்போலவே 11 பெர் தூக்கில் இருக்கிறார்கள் 11 பெரின் பெற்றோர்களுக்கும் கால் போய் இருக்கு , அனைவரும் அங்கே ஆஜர்
வில்லன் ஒரு சைக்கோ கில்லர் , அவன் மனிதர்களின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவன் இஷ்டப்படி ஆட்டுவிக்கிறான். அது ஒரு திருட்டாக இருக்கலாம், சேட்டிங்க் ஆக இருக்கலாம், புகைப்பட பகிர்வாக இருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் , சமூகத்துக்கு தெரிந்தல் அவமானம் என எதை நினைக்கிறோமோ அந்த பலவீனத்தை பயன்படுத்தி மிரட்டி தன் காரியத்தை சாதித்துக்கொள்கிறான்
நகரின் முக்கியமான மையமான இடத்தில் ஒரே சமயத்தில் பலரை தற்கொலை செய்து கொள்ள வைக்கிறான் வில்லன் .
இப்போது இன்வெஸ்டிகேசன் ஆஃபீசராக ஒரு பெண் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ஒரு டீன் ஏஜ் மகள் உண்டு . அவளைக்கடத்தி வில்லன் மிரட்டி நாயகனை தன்னிடம் ஒப்படைத்தால்தான் மகள் தப்பிப்பாள் என்கிறான்
அந்த ஆஃபீசரும் , நாயகனும் இணைந்து வில்லனை எப்படி கண்டுபிடித்து மடக்கினார்கள் என்பதே மீதி ஆக்சன் திரைக்கதை
நாயகனாக டிடெக்டிவ் சீஃப் இன்ஸ்பெக்டர் லூதர் ஆக இட்ரிஸ் எல்பா ஆஜானுபாவமான தோற்றம், அசால்ட்டான நடிப்பு , இவரது உடல் மொழி கச்சிதம், சேசிங் காட்சிகள் , ஆக்சன் காட்சிகள் எல்லாம் அதகளம்
நாயகியாக ,டிடெக்டிவ் சீஃப் இன்ஸ்பெக்டர் ஒடட்டே ரெய்னாவாக சிந்தியா எரிவோ கம்பீரமாக நடித்திருக்கிறார். மகளை காப்பாற்றத்துடிக்கும்போதும் சரி நாயகனுடன் இணைந்து பணி ஆற்றலாமா? வேண்டாமா? என்ற டைலம்மாவில் யோசிக்கும்பொதும் கச்சிதமான நடிப்பு
வில்லன் ஆக ஆண்டி சேர்கிஸ் பயத்தை ஏற்படுத்தும் முகம் , கேனத்தனமான செஷ்டைகள் செய்யும் விதம் எல்லாம் கடுப்படிக்கும் கேரக்டர் டிசைன். அசால்ட் ஆக நடித்திருக்கிறார்
எடிட்டிங் இன்னமும் ட்ரிம் செய்திருக்கலாம் இரண்டு மணி நேரம் ஓடுகிறது. லாரி ஸ்மித்தின் ஒளிப்பதிவு பிரமாண்டம் லார்ன் பல்ஃபே இசை பின்னணி இசை எங்கேஜிங்க் ஆக இருக்கிறது
ரசித்த வசனங்கள்
1 ஒருத்தன் தப்பான நேரத்தில் தவறான இடத்துக்கு வந்ததா நான் நினைக்கலை . யாரோ அவனை வர வெச்சிருக்காங்க
2 பொதுவா ஒரு குற்றவாளி இதுக்கு முன்னால என்ன செய்தான் என கவனிப்பதை விட இனிமேல் என்ன செய்யப்போறான்? என்பதை கவனிக்கனும்
3 தியரியாப்பார்க்கும்போது ஈசியா இருக்கும் சில விஷயங்கள் பிராக்டிகலா சிரமமா இருக்கும்
4 ஒருத்தரோட கண்ணைப்பார்த்தாலே அவங்க நல்லவரா? கெட்டவரா? என்பதை நான் கண்டுபிடிச்சுடுவேன்
5 வாழ்க்கை முழுக்க நாம யார்னு வெளிப்படுத்தாமயே வாழ்வது ரொம்ப கஷ்டம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு ஆள் ஹீரோவிடம் வில்லனைப்பற்றி துப்பு தரும்போது அவன் ஒரு நாள் யூஸ் பண்ணும் ஃபோனை மறுநாள் யூஸ் பண்ண மாட்டான் என்கிறான், அடுத்த காட்சியில் ஹீரோ தன் கொலீக்கிடம் வில்லனைப்பற்றி சொல்லும்போது அவன் ஒரு நாள் யூஸ் பண்ணின ஃபோன் நெம்பரை மறு நாள் யூஸ் பண்ண மாட்டான் என்கிறான், இரண்டும் வேறு வேறு ஆச்சே?
2 ஹீரோ ஒரு சீனில் ஜெயிலில் இருந்து தபிக்கும்போது போலீஸ் ஃபயர் சர்வீஸ் பம்ப்ல இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கறாங்க, ஹீரோவோட ஜீன்ஸ் பேண்ட் , சர்ட் முழுக்க நனைஞ்சிடுது . அது சூரிய வெய்யிலில் காய வைத்தாலே காய 8 மணி நேரம் ஆகும், ஆனா அடுத்த ஷாட்டிலேயே அதாவது அடுத்த நொடியே காய்ஞ்ச மாதிரி காட்றாங்க , கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்
3 க்ளைமாக்ஸ் எல்லாம் அரதப்பழசான டெக்னிக். அந்தக்கால எம் ஜிஆர் நம்பியார் டெம்ப்ளேட்டில் போவது கொடுமை , குறிப்பாக நாயகியின் மகளை கொல்வதாக மிரட்டி வில்லன் நாயகனை தாக்கச்சொல்வது , அதே போல நாயகனை மிரட்டி நாயகியை தாக்கச்சொல்வது எல்லாம் சகிக்க முடியவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - ஏ சர்ட்டிஃபிகேட் படம் என்றாலும் செக்சுவல் கண்ட்டெண்ட் எதுவும் இல்லை . வன்முறைக்காட்சிகளுக்காக ஏ தந்திருக்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆக்சன் ரசிகர்கள் பார்க்கலாம், கொஞ்சம் பொறுமை தேவை . ரேட்டிங் 2.5 / 5
Luther: The Fallen Sun | |
---|---|
Directed by | Jamie Payne |
Written by | Neil Cross |
Based on | Luther by Neil Cross |
Produced by | |
Starring |
|
Cinematography | Larry Smith |
Edited by | Justine Wright |
Music by | Lorne Balfe |
Production companies | |
Distributed by | Netflix |
Release dates |
|
Running time | 129 minutes[1] |
Countries |
|
Language | English |
0 comments:
Post a Comment