ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். ஒரு ஓவியம் அல்லது படத்தைப்பார்த்தால் தத்ரூபமாக அப்படியே வரையக்கூடியவர் , அவரது தாத்தா ஒரு பிரிண்ட்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறார். தேச பக்தி உள்ளவர் . புரட்சி எனும் ஒரு பத்திரிக்கை சொந்தமாக நடத்தி வருகிறார். ஆனால் பெரிய அளவில் சர்க்குலேஷன் எல்லாம் இல்லை . இந்தப்பத்திரிக்கை தயாரிப்பால் அவருக்கு ஏகப்பட்ட கடன் உண்டாகி இருக்கிறது
தாத்தாவுக்கு ஏற்பட்ட கடனால் கடன் கொடுத்தவர் ஒரு கட்டத்தில் நெருக்கத்தொடங்க வேறு வழி இல்லாமல் நாயகன் தன் தாத்தாவுக்குத்தெரியாமல் அதே பிரஸ்சில் கள்ள நோட்டு அடிக்கிறான். கடனை தீர்த்து விடுகிறான்
வில்லன் ஒரு இண்ட்டர்நேஷனல் பிக் ஷாட். இவன் பெரிய அளவில் கள்ள நோட்டு அடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டு இந்திய பொருளாதாரத்தை பலவீனம் ஆக்க முயல்பவன்
கள்ள நோட்டு கும்பலை ஒழிக்கும் ஸ்பெஷல் ஆஃபீசர் ஒருவர் இருக்கிறார். அவரும் அவரது டீமும் போதிய அரசு உதவி , பொருளாதார உதவி இல்லாமல் தவிக்கின்றனர் . ஒரு கட்டத்தில் முழு பலத்துடன் இந்த ஆஃபீசர் டீம் களம் இறங்குகிறது
ப்ரொஃப்சனலாக கள்ள நோட்டு அடிக்கும் வில்லன் அடிக்கும் பணத்தில் சில குறைகள் இருக்கின்றன. அதை கள்ள நோட்டு மிஷின் கண்டு பிடித்து விடுகிறது . அவன் நாயகனின் திறமை அறிந்து அவனை தன்னுடன் கூட்டுச்சேர அழைக்கிறான்
நாயகன் - வில்லன் - ஸ்பெஷல் ஆஃபீசர் என முக்கோண சேசிங்கில் திரைக்கதை நகர்கிறது . இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது மீதி திரைக்கதை
இதில் எட்டு எபிசோடுகள் ஒவ்வொன்றும் 50 டூ 55 நிமிடங்கள் .மொத்தம் 440 . கிட்டத்தட்ட ஏழரை மணி நேரம் ஆகும் இதை முழுதாக பார்த்து முடிக்க
நாயகனாக ஷாகித் கபூர் , கச்சிதமான நடிப்பு இவருக்கு தமிழ் டப்பிங் வாய்ஸ் தந்தது நடிகர் ஜீவா , நன்கு பொருத்தம்
நாயகனின் நண்பனாக புவன் அரோரா செம. காமெடிக்கு மட்டுமல்ல , குணச்சித்திர நடிப்புக்கும் ஆள் கேரண்டி
வில்லனாக கே கே மேனன்/ பல காட்சிகளில் தன் உடல் மொழியால் நடிப்பால் ரசிக்க வைக்கிறார்
ஸ்பெஷல் ஆஃபீசராக விஜய் சேதுபதி அலட்டல் இல்லாத நடிப்பு , இவரின் மனைவியாக ரெஜினா அதிக வாய்ப்பில்லை, வந்த வரை அழகு
விஜய் சேதுபதிக்கு தமிழ் டப்பிங் வாய்ஸ் தந்தது திருச்சி சரவணக்குமார் . செம கச்சிதம் குரல் பொருத்தம். ஹிந்தியில் அவரது ஒரிஜினல் வாய்ஸ் தான்
குப்ரா சைத் ஃபாரீன் லேடியாக , வில்லனின் சுப்பீரியராக வந்து வில்லனை அப்பப்ப மிரட்டும் கேரக்டர் , அசால்ட்டாக நடித்திருக்கிறார்
நாயகனின் செல்வச்சீமாட்டி கேர்ள் ஃபிரண்டாக காவ்யா தப்பர் சில காட்சிகள் வந்தாலும் கவனம் ஈர்க்கிறார்
நாயகனின் சித்தப்பாவாக சித்ரஞ்சன் கிரி மறக்க முடியாத குணச்சித்திர நடிப்பு . தாத்தாவின் பிரஸ்சில் ஊழியராக இருந்தாலும் உறவினர் போல அப்பப்ப நாயகனை கவனிப்பது அருமை
ஃபைனான்ஸ் மினிஸ்டராக ஜாகிர் உசைன் அசத்தல். விஜய் சேதுபதிக்கும் இவருக்குமான காம்போ காட்சிகள் எல்லாம் கலக்கல் ரகம்
நாயகனின் தாத்தாவாக அமோல் உருக வைக்கும் பாந்தமான நடிப்பு , அடிக்கடி ஞாபகமறதியால் பாதிக்கப்படுவது நெஞ்சை கனக்க வைக்கும் நிகழ்வுகள்
நாயகனுக்கான பிஜிஎம் , வில்லனுக்கான மாஸ் இண்ட்ரோ , ஸ்பெஷல் ஆஃபீசருக்கான பில்டப் . முக்கியமான மூன்று லேடி கேரக்டர்ளை வடிவமைத்த விதம் அந்த 3 லேடிஸ் கேரக்டர்களுக்கும் காம்பினேஷன் ஷாட்ஸ் இல்லாதது அனைத்தும் வியக்க வைப்பவை
நாயகன் - தாத்தா - நண்பன் மூவருக்குமான பாண்டிங் சிறப்பு . நாயகன் -நாயகி கெமிஸ்ட்ரி குட் . வில்லன் - நாயகன் காம்போ காட்சிகள் கச்சிதம் . மெயின் கதைக்கும் விஜய் சேதுபதியின் பர்சனல் ஃபேமிலி ஸ்டோரிக்கும் சம்பந்தம் இல்லை . அவர் மனைவியுடான டைவர்ஸ் காட்சிகள் , கோர்ட் சீன் குழந்தையை யார் கவனிப்பது இவை எல்லாமே எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள்
சபாஷ் டைரக்டர் ( ராஜ் அண்ட் டி கெ )
1 மப்பில் இருக்கும்போது ஆஃபீசர் விஜய் சேதுபதி மினிஸ்டரையே மிரட்டுவதும் , விடிந்த பின் நேரில் போய் பம்முவதும் , அவர் தேவையை நிறைவேற்றிக்கொள்வதும் செம
2 ஒரு கட்டத்தில் தன் ஹையர் ஆஃபீசரிடம் கெஞ்சிப்பேசும் ராஷிகண்ணா தனக்கு வேறொரு டிபார்ட்மெண்ட்டில் பிரமோஷன் கிடைத்ததும் பழைய ஆஃபீசரிடம் கெத்து காட்டும் மாஸ் சீன்
3 ராசி கண்ணா விஜய் சேதுபதி ஆஃபீசுக்கே போய் சிடி 600 கள்ள நோட்டு கண்டு பிடிக்கும் ஸ்கேனர் மிஷினை டெலிவரி பண்ணி தனது திறமைகளை நிரூபித்து ஆன் த ஸ்பாட் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் பெறும் சீன்
4 நாயகனின் பிரசை ராசி கண்ணா கண்டு பிடிச்சு ஓப்பன் பண்ணும் சீனும் அப்போது நாயகனிடம் தொற்றிக்கொள்ளும் பரபரப்பும் மாஸ் சீன். ஒரு முக்கியமான தருணத்தில் விஜய் சேதுபதி யிடமிருந்து ஃபோன் வர நாயகன் ராசியை தாக்கும் முடிவை கைவிடும் காட்சி ஃபெண்டாஸ்டிக் த்ரில்லிங் சீன்
5 கள்ளநோட்டை கொண்டு போகும் டிரக்கை செக்கிங்கில் பிடிக்கும்போது நாயகன் சாமார்த்தியமாக தப்பிக்கப்போடும் பிரில்லியண்ட் ஐடியாவும் பிறகு போலீசிடம் போடும் டீலிங்கும்
6 விஜய் சேதுபதி - ஜாஹிர் உசேன் காம்போ காட்சிகள் கச்சிதம்.
7 கே கே மேனன் உடல் மொழி அவர் பேசும் வசனங்கள் எல்லாமே பிரமாதம்
8 கள்ள நோட்டு பற்றிய டீட்டடெய்லிங் இதுவரை நாம் அறியாத பல விஷயங்கள்
9 மிலிட்ரி ஜீப் டயர் தடயங்களை வைத்து வில்லனின் அடியாட்கள் ரூட்டை மாற்றுவதும் விஜய் சேதுபதி அண்ட் கோ சேசிங் சீன்களும்
10 வில்லனின் அடியாளை ஆஃபீசர் பிடித்து விசாரிக்கும்போது இந்த நியூஸ் மட்டும் வெளில போச்சுன்னா என அவன் மிரட்ட ஆரம்பிக்கும்போதே அவன் காலில் ஷீட் செய்து விஜய் சேது பதி கெத்தாகப்பேசும் வசனங்கள்
11 இது உண்மையான கள்ள நோட்டு இல்லை நம்மை டைவர்ட் பண்ண போலியான கள்ள நோட்டு என ஆஃபீசர் மினிஸ்டரிடம் ஆர்க்யூ பண்ணும் காட்சி செம மாஸ் . மினிஸ்டர் தன் செல்வாக்கை காட்ட மீடியாக்களிடம் பேட்டி கொடுப்பதும் ஆஃபீசர் அதை விரும்பாததும் நல்ல பாயிண்ட்
12 க்ளைமாக்சில் கார் பார்க்கிங்கில் நாயகன் - ஸ்பெஷல் ஆஃபீசர் , நாயகி அனைவரும் மீட் பண்ணிக்கொள்ளும் காட்சி செம மாஸ் . இதயத்துடிப்பை எகிற வைக்கும் ரைட்டிங்
13 ஏற்கனவே மனி ஹெய்ஸ்ச்சிங்கில் கண்ட ஐடியா என்றாலும் க்ளைமாக்சில் நாயகனின் காரை சேஸ் செய்யும் போலீசை பிளாக் பண்ண 100 கோடி ரூபாய் பணத்தை நடு ரோட்டில் கொட்டி டிராஃபிக் ஜாம் பண்ணும் சீன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு கள்ள நோட்டை ரெஸ்ட்டாரண்ட்டில் கண்டதும் உங்க கிட்டே இருக்கும் எல்லா 500 ரூபா நோட்டையும் காட்டுங்க, அதுல கள்ள நோட்டு இருக்கு செக் பண்ணனும்னு ராஷி கண்ணா சொன்னதும் பணத்தைக்குடுத்துட்டு மேனேஜர்க்கு இன்ஃபார்ம் பண்றேன்னு அந்த இடத்தை விட்டு கிளம்பறான் கேஷியர், அப்போ கேஷ்க்கு செக்யூரிட்டி யாரு ? வேற யாரையாவது அங்கே நிக்க வெச்சுட்டுத்தானே கிளம்பனும் ? அல்லது நோட்டுக்களை ஒப்படைக்கும் முன் மேனேஜர்ட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்னு சொல்லனும்
2 ராசி கண்ணா ஓவர்ஸ்மார்ட் ஆக ஒர்க் பண்ணும்போது விஜய் சேதுபதி ஒன் கோல் ஒன் ஃபேகஸ் நம்ம டார்கெட் வில்லன் தான், நாயகனை அப்புறம் பார்த்த்துக்கலாம் என மறுத்து ரூமை விட்டு வெளியே போனது,ம் ராசி அவரது ஆஃபிஸ் ரப்பர் ஸ்டாம்ப்பை மிஸ் யூஸ் பண்ணி ஒரு ஆர்டர்ல சீல் வைத்துக்கொள்கிறார், சிசிடிவி கேமரா காட்டிக்கொடுக்குமே? அவர் இப்போதான் ஜாயின் பண்ணி இருக்கார் , இந்த ரிஸ்க் எடுப்பது அவரது வேலைக்கே ரிஸ்க் ஆச்சே?
3 கள்ள நோட்டு அடிக்கறாங்களா?னு 11 பிரிண்ட்டிங் பிரஸ்ல ஒரு ரெய்டு விசிட் அடிக்கலாம்னு போலீசை கூப்பிட ராசிகண்ணா முயலும்போது ஸ்டேசன்ல யாரும் இல்லை, நாளை பார்ப்போம்னு அவர் சொல்றார். ராசி கம்ப்பெல் பண்ணுனதும் கிளம்பறார். ஒரு ஆண் ஒரு பெண் இவர்கள் இருவர் மட்டும் போவது டேஞ்சர் என்பது தெரியாதா?
4 நாயகனின் தாத்தா கடன் அடைக்கப்பட்ட போதே எப்படி இவ்ளோ பணம் என கேட்டவர் அதற்குப்பின் பிரஸ்க்கு ஏன் விசிட் அடிக்கவே இல்லை ?
5 இதுவரை கள்ள நோட்டு அச்சடிக்கும் வேலையை மட்டுமே செய்து வந்த நாயகன் முதல் முறையாக சூரத் நகரத்துக்கு டோர் டெலிவரி பண்ணும் ரிஸ்க்கை எதற்கு எடுக்கிறார் ?
6 கோடிக்கணக்கில் சம்பாதித்த நாயகன் சூரத்தில் டோர் டெலிவரி பண்ணும்போது சரக்கு டவுன் லோடிங் எல்லாம் செய்வது எல்லாம் தரை லெவல், அந்த மினிஸ்டர் அடியாட்கள் கூட வைத்துக்கொள்ள மாட்டாரா? பாக்ஸ் இறக்க ஏற்ற?
7 கூலிங் க்ளாஸ் போடுவது பைக்கில் ட்ராவல் பண்ணும்போது கண்ல மண் , தூசி விழாமல் இருக்க , ஒரு கெத்துக்காக , ஆனால் வெய்யில் இல்லாத இடத்தில் நடக்கும் ஒரு சேசிங் சீனில் ஆஃபீசர்ஸ் எல்லாரும் கூலிங்க் கிளாசோடு தரையில் ஓடிக்கொண்டே சேஸ் பண்றாங்களே? டார்கெட் எப்படி தெரியும் ?
8 வில்லனின் பெயர் உலகம் பூரா பரவி இருக்கும்போது நாயகனின் தாத்தா மற்றும் சார்ந்தவர்கள் யாருக்குமே அவரை அடையாளம் தெரியாதா?
9 பேச்சிலர்ஸ்க்குதான் ரூம் , வீடு வாடகைக்கு கிடைக்காது, மத்திய அரசு ஊழியரான ராசி கண்ணா வருடக்கணக்கில் தங்க நல்ல வாடகை வீடு இல்லாமல் அலைவது நம்பும்படி இல்லை
10 அதிகம் பழக்கம் இல்லாத நாயகனிடம் அரசு ஊழியரான ராசி கண்ணா தன் செல் ஃபோனை நம்பி தருவது எப்படி? ஒரு கால் பண்ணிட்டு தர்றேன்னு கேட்டப்போ கூட இருக்கும் இன்னொரு புரோக்கர் நண்பனிடம் ஏன் ஃபோன் கேட்காம நம்ம கிட்டே கேட்கறான்னு டவுட் வர்லையா?
11 நாயகண் ராசி கண்னா ஃபோனை ஜிம்மிக்ஸ் வேலை பண்ணி ரெடி செய்த பின் ராசிக்கு வரும் எல்லா மெசேஜூம் அதே டைமில் இவர் ஃபோனுக்கும் வரும், அப்போ அதே ராசி கூட நிக்ழும் ஒரு ஜாலி மீட்டிங்ல தன் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ண வேண்டாமா? ராசிக்கு டவுட் வராதா? தனக்கு மெசேஜ் வரும்போதெல்லாம் இவனுக்கும் வருதே?னு தோணாதா? ( ஆனா அப்படி தோணலை ராசிக்கு )
12 கள்ள நோட்டுக்களை கப்பலில் எடுத்து வரும் பிராசசில் நாயகன் ரூட் மற்றும் ஐடியா மட்டும் தந்தா போதுமே? அதுதானே டீல் ?எதற்காக ரிஸ்க் எடுத்து கப்பலில் கூட போகிறார்? அது வில்லனின் ஆட்கள் பார்த்துக்க மாட்டாங்களா?
13 ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆன நாயகன் தன் காதலியை இம்பெரெஸ் பண்ண காதலியின் ஓவியத்தை வரைந்து கொடுப்பதுதானே உலக வ்ழக்கம்? இவரு தான் முதன் முதலாக 15 வயதில் வரைந்த ஓவியத்தைத்தருகிறார்.
14 தன் அப்பார்ட்மெண்ட்க்கு வரும் நாயகனுக்கு காதலி ஒரு டைம் கூட தன் கையால் சமைச்சு சாப்பாடு பரிமாறலை /. ஒவ்வொரு டைமும் ஆர்டர் பண்ணி வர வைக்கறாங்க, அல்லது ஹோட்டல்ல போய் சாப்பிடறாங்க. என்னதான் மாடர்ன் கேர்ள்ஸ்க்கு சமைக்க அவ்வளவா வராதுன்னாலும் மாதம் ஒரு டைம் கூடவா சமைக்க மாட்டாங்க ?
15 கள்ள நோட்டு டிசைனிங் அண்ட் பிரிண்டிங் மட்டும் தான் நாயகன் ஒத்துக்கொண்ட டீலிங் ஆனால் வில்லன் நாயகனை டிஸ்ட்ரிபியூசன் ஏன் லேட் ஆகுது?னு மிரட்டும்போதும் ஏன் பம்மறார்? அவர் அதற்கு பொறுப்பு இல்லையே?
16 வில்லனின் கேங்கில் கறுப்பு ஆட்டைக்கண்டு பிடித்து தலையில் ஷூட் பண்றாங்க. டெட் பாடியை அப்படியே தரையோட சேர்த்து இழுத்துட்டு போகும்போது ரத்தக்கறை ஒரு பர்லாங் தூரத்துக்கு வருது. அதை ஆள் விட்டு க்ளீன் பண்றதுக்கு டிஸ்போஸ் பண்ணும்போதே பாடியை தூக்கி சென்றிருக்கலாமே?
17 கள்ள நோட்டு ஒழிப்புக்கும்பலில் ராசி கண்ணா இருப்பது தெரிந்தும் நாயகனான ஆர்டிஸ்ட் தான் முதன் முதலில் வரைந்த ஓவியத்தை பரிசாக அளிக்கிறான்
18 சரக்கு டெலிவரியில் நாயகனுக்கு ஒரு டவுட் வருது. அதுக்குப்பின்னும் தான் சொன்ன இடத்தை விட்டுட்டு பார்ட்டி சொன்ன இடத்துக்கு வ்ர எப்படி ஓக்கே சொல்றார்? புதுப்பார்ட்டிதான் சேஃப் , பழைய பார்ட்டி ரிஸ்க் என நினைப்பவர் போலீஸ் பொறி வைத்த எம் எல் ஏ டீலிங்க்குக்கு சம்மதிப்பது எப்படி?அட்லீஸ்ட் அவங்க சொல்லும் இடத்துக்கு எல்லாம் வர முடியாதுனு சொல்லலாமே?
19 நாயகி ஃபோனில் உள்ள ஸ்கேனிங் பேட்டர்னை நாயகன் ரிலீஸ் பண்ணுவது ஏன்? அவளை சந்தேகப்படலையே?போலீசின் திட்டங்கள் அப்டேட் ஆக தனக்குத்தெரியனும் என்பதற்காகத்தானே? அதை ரிலீஸ் செய்வது பெரிய ரிஸ்க் ஆச்சே?
20 நாயகி ஆர்ட்டிஸ்ட் தன் இன்ஷியலாக எஸ் என்பதை கள்ள நோட்டில் மார்க் பண்ணுவதைக்கண்டுபிடிக்கிறாள். தன் காதலன் பெயர் சந்தீப் (சன்னி) என்பதும், அவன் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பதும் அவளுக்குத்தெரியும், இருந்தும் நாயகி ஏன் நாயகனை கடைசி வரை சந்தேகப்படவில்லை ?
21 நாயகியின் செல் ஃபோனில் வாட்சப் சேட்டிங்கை சந்தீப் உடன் செய்ததை ஆஃபீசர் பார்க்கிறார். அதில் நாயகன் டி பி இருக்கும். ஆனால் க்ளைமாக்சில் நாயகனை நேருக்கு நேர் முதன் முதலாக விஜய் சேதுபதி பார்க்கும்போது அவருக்கு எதுவும் க்ளிக் ஆகவில்லையே?
22 நாயகன், நண்பன் இருவரையும் ஸ்பெஷல் ஆஃபீசர் பார்த்து விடுகிறார். அப்புறமும் ஏன் அவர்கள் இருவரும் கெட்டப் சேஞ்ச் பண்னலை ?
23 க்ளைமாக்சில் நாயகன் , நண்பன் இருவரையும் கன் பாய்ண்ட்டில் மடக்கி போட்டுத்தள்ள முயற்சிக்கும்போது நாயகனின் கேங் கன் பாயிண்ட்டில் வில்லனின் ஆட்களிடம் இருந்து நாயகனை தப்புவிக்கிறார்கள் ஓக்கே, கார் டயர்களை சுட்டு ஃபாலோ பண்ண முடியாம பண்றாங்க அதுவும் ஓக்கே , அவர்களிடம் இருந்த துப்பாக்கியை வாங்கிட்டுப்போய் இருக்கலாமே?
ரசித்த வசனங்கள்
1 இந்த ஜெனரேஷனோட பிரச்சனை என்ன தெரியுமா? நிறைய பார்க்கறாங்க , நிறைய படிக்கறாங்க, ஆனா எதையும் புரிஞ்சுக்கறதில்லை
2 மக்களோட தேவை என்ன? ஜெயிக்கறதுக்கான வழியைக்காட்டனும்
3 தாத்தா செஞ்ச புரட்சி எல்லாம் ஃபன் (FUN) ஆச்சு , எங்க டிஃபன் பன் ஆச்சு
4 பாக்கெட்ல பணம் இல்லாதப்போ பார்க்கிற எல்லாமே பணமாதான் தெரியும்
5 இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான் , பாய் ஃபிரண்ட் மட்டும் தெருக்கோடில வாழனும், புருசன் மட்டும் பல கோடில வாழனும்
6 தெரு நாய் வானத்தைப்பார்த்து குரைப்பதும் , பணக்காரப்பொண்ணுங்களுக்கு நீ இப்படி காசை இரைப்பதும் ஒண்ணு
7 கஷ்டப்படறாங்க தான் இங்கே நிறைய இருக்கோம். நாம எல்லாம் மிடில் கிளாஸ் ஃபேமிலி இல்லை மிடில் ஃபிங்கர் கிளாஸ் ஃபேமிலி
8 இன்னும் கொஞ்ச நாள் தான் நாம கஷ்டப்படுவோம், அதுக்குப்பின் செத்துடுவோம்
9 கொள்ளைக்காரனுக்கு பணம் கடன் கொடுத்தாக்கூட திருப்பி வாங்கிடலாம், ஆனா ஆர்ட்டிஸ்ட்க்கு கொடுத்தா பணம் அம்பேல் தான்
10 பத்திரிக்கை மூலமா பேரு வாங்கலாம், ஆனா சோறு வாங்க முடியாது
11 பணக்காரன் தான் சிஸ்டம் உருவாக்கறான் , ஆனா ஏழைங்க குப்பைத்தொட்டில தான் வாழனும் , பணக்காரன் வட்டில வாழறான் , இந்த சிஸ்டத்தை உடைக்க புரட்சி தேவை
12 கலகத்துக்கும் , புரட்சிக்கும் சின்ன வித்தியாசம்தான் . யார் தோற்கிறானோ அவன் கலகக்காரன், யார் ஜெயிக்கிறானோ அவன் புரட்சி வீரன்
13 ஒரு கசப்பான உண்மை என்னான்னா ஜெயிக்கறவனைத்தான் இந்த உலகம் ஞாபகம் வெச்சுக்கும்
14 எப்பேர்ப்பட்ட பிரச்சனையா இருந்தாலும் அவன் கிட்டே ஒரு சொல்யூசன் இருக்கும்
15 ஒருத்தன் மூழ்காம இருக்க எதை வேணா பிடிச்சு மேலே வர தயாரா இருப்பான்
16 சிஸ்டம்க்கு கீழே சிக்கிடாத , சிஸ்டம் தான் நமக்குக்கீழே இருக்கனும்
17 நாம ஜெயிக்கனும்னா பை ஹார்ட் பண்ணனும் ( இதய பூர்வமா வேலை செய்யனும் ) இல்லை சிஸ்டத்தை பாய்காட் பணணனும்
18 காப்பி அடிக்கவே நம்மலால முடியாது , நோட்டு அடிக்க முடியுமா?
19 கலையையும், குப்பையையும் ஒரு தப்பு தான் வித்தியாசப்படுத்தும்
20 என் கிட்டே ஒரு கெட்ட பழக்கம் இருக்கு
ஒண்ணு தானா? நீ கெட்ட பழக்கங்களோட குப்பைத்தொட்டி ஆச்சே?
21 உன் கண்ணுக்கு எட்டுனவன் உன் GUN க்கு எட்டலையா?
22 45 ஜிஎஸ் எம் பேப்பரை மட்டும் திருடுனா போதாதா? ஏன் எல்லாத்தையும் திருடனும் ?
அதை மட்டும் திருடுனா கள்ள நோட்டு அடிக்கத்தான் திருடுனோம்னு கண்டு பிடிச்சுடுவாங்க
இந்த மாதிரி ஸ்கூல் ல படிக்கும்போது யோசிச்சிருந்தா உருப்பட்டிருப்பே
23 கவலைப்படறதுதான் உங்க ஹாபி ஆச்சே? நீங்க ஒரு கவலைக்கலைஞன்
24 நாம ஸ்பெஷலா யாரை நினைக்கிறோமா அவங்க கிட்டே உண்மையா இருக்கனும்
25 வறுமை நம்மை வெறுமை ஆக்கிட்டுப்போய்டுச்சு . இதுவரை கஷ்டப்பட்டு செஞ்சதை இனி இஷ்டப்பட்டு செய்யலாம்
26 கேடித்தனத்துக்கு எக்ஸ்பயரி டேட்டும் இல்லை , பேராசையைத்தடுக்க எந்த கேட்டும் இல்லை
27 இது ரெகுலர் ப்ரோட்டோ கால் தான், இப்டி செக் பண்றாங்களே?னு ஃபீல் பண்ணாதீங்க , செக்யூரிட்டிக்காக
நோ பிராப்ளம், எங்களுக்கு அவ்ளோ ரோஷம் எல்லாம் இல்லை
28 வேட்டு வைக்கறதா இருந்தாலும் சட்டத்து கிட்டே கேட்டுதான் வைப்போம்
29 நான் செஞ்ச தப்புக்காக வருத்தப்படனும்னு எவ்வளவோ முயற்சி செஞ்சேன், ஆனா கொஞ்சம் கூட வருத்தப்பட முடியல . நேச்சுரலா எனக்கு கில்ட்டி ஃபீலிங்க்ஸே வர்லைங்கறப்போ என்ன செய்ய முடியும் ?
30 நீ எப்போடா டாக்ஸ் கட்டுனே? டாக்ஸ் கட்டுனவன் எல்லாம் அமைதியா உள்ளே இருக்கான்
சரக்கு அடிக்கறமே பீர் வாங்கறமே அதுல கூட டாக்ஸ் கட்றோம்
31 அவமானத்தையும் , பழியையும் தாங்கிக்க ஒரு தில் வேணும், அதுவும் ஒரு நேர்மையான மனுசனுக்கு
32 தற்கொலைக்கு முன் அவரு எழுதி வெச்ச லாஸ்ட் நோட் என்ன தெரியுமா? இதுதான் என்னோட லாஸ்ட் என்கவுண்ட்டர்
33 அரை மனசோட செய்யும் எந்தக்காரியமும் சரி வராது , முழு மனசோட செய்யனும்
34 ஒரு விஷயத்துக்கு சாவே கிடையாது , அதுக்குப்பெருதான் பேராசை , அது ரத்தத்துல ஊறி இருக்கும்
35 பணம் இருந்தா நீ தான் கிங் அந்தப்பணம் எப்படி வந்தது ?னு எவனும் கேட்க மாட்டான்
36 நான் ஒரு பிஸ்னெஸ் மேன், எனக்கு எதிரிங்களைப்பிடிக்காது . யார் என் கூட ஒர்க் பண்ணலையோ அவங்க பூரா என் எதிரிகள் தான்
37 உன் திறமையை ஊருக்கு உலகத்துக்கு தெரிவிக்க ஒரு ஸ்டேஜ் வேணும்
38 சில டைம் நம்மை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள் பர்ஃபெக்சன் பற்றி இருக்காது பர்செப்சன் பத்தியதா இருக்கும்
39 கள்ள நோட்டு பர்ஃபெக்ட்டா இருக்கனும்னு அவசியம் இல்லை , ஆனா கள்ள நோட்டு மிஷினை ஏமாற்றும் அளவு பர்ஃபெக்ட்டா இருந்தா போதும்
40 ஸ்கூலில் யாரும் நம்ம கிட்டே எவ்ளோ படிச்சிருக்கே? னு கேட்கறதில்லை , பாஸ் ஆகிட்டியா? அப்டினு தான் கேட்பாங்க
41 வெற்றியோட ரகசியம் என்ன? தெரியுமா? பயம் தான் , தோல்வி அடைஞ்சிடுவோமோ அப்டிங்கற பயம் தான் , அந்த பயத்துல நமக்கு தூக்கம் வராது
42 உலகத்துலயே பழமையான முதல் தொழில் விபச்சாரம் , இரண்டாவது கள்ள நோட்டு அடித்தல்
43 எவ்ளோ பெரிய பலசாலியா இருந்தாலும் அவனை உடைச்சுப்போடுவது டைவர்ஸ் தான்
44 நீ செய்யும் வேலையை நேசி , அப்படி நேசித்தால் நீ மீண்டும் வேறு வேலையே செய்யத்தேவை இல்லை .
45 பணம் தேவை தான், ஆனா அதை ஆண்டவனா மாத்திடக்கூடாது
ஆனா ஆண்டவன் செய்யும் எல்லா வேலையையும் பணம் செஞ்சுடுதே?
46 முகம் பஞ்சர் ஆகி இருக்கு? குழந்தை மூஞ்சில யார்டா கோலம் போட்டது ?
47 நாம கண்ணை மூடிக்கிட்டு போர்க்களத்துல இறங்கறோம், அவங்க எப்படி தாக்குவாங்க? எங்கே இருந்து? எதுவுமே தெரியாது
48 பணம் வந்தா நாம டாப்புல இருக்கலாம், இல்ல ஆப்புல இருக்கலாம்
49 அவன் ஒரு பாம்பு அவனை நம்பாதே
அவன் பாம்பா இருந்தாலும் நம்ம மகுடி சத்தத்துக்கு டிஸ்கோ டான்ஸ் ஆடித்தான் ஆகனும்
50 இந்த பேராசை ஒரு தேவையை அப்படியே அத்தியாவசியம் ஆக்கி விடும்,
51 என்னை ஃபாலோ பண்ணனும் இல்லைன்னா குறுக்கே நிக்காம ஓரமா ஒதுங்கிபோகனும்
52 யார் நம்ம கூட நிக்கறாங்களோ அவங்க தான் நம்மாளுங்க
53 டைட்டானிக் பார்த்ததுல இருந்தே இப்படி போஸ் கொடுக்கனும்னு ஐடியா , ஆனா பீஸ் ஐ மீன் கூட ஒரு ரோஸ் தான் இல்லை
54 பணத்தால சந்தோஷத்தை வாங்க முடியாதுனு சில பேரு சொல்வாங்க , சொல்றவங்க திவால் ஆனவங்களா இருப்பாங்க , இல்லைன்னா பணத்தையே பார்க்காத பரம ஏழைங்களா இருப்பாங்க
55 திடீர் பணக்காரன் கிட்டே உள்ள ஒரே பிரச்சனை என்னான்னா பணத்தை எங்கே எப்படி செலவு பண்ணனும்னே தெரியாது ‘
‘
56 மினிஸ்டர் சார் ஒரு பெரிய பிராப்ளம், மிஷினால் கண்டு பிடிக்க முடியாத கள்ள நோட்டுக்கள் 12,000 கோடி வந்திருக்கு
இந்த விஷய்ம் உனக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும் ? மக்களுக்கு தெரியாதில்ல?
ம்ஹூம்.; \
\
அப்புறம் எப்படி இதை ஒரு பிரச்சனைனு சொல்றே?
57 இந்த ஆன்லைன்ல நல்ல ,மா(தி)ரி இருக்கற பாதிப்பேரு மொள்ள மாரி தான்
58 ரொம்ப உயரமான இடதுல இருந்து கீழே விழும்போது முதல்ல அவனுக்கு பறக்கற மாதிரி தான் இருக்கும்
59 அரசியல்ல மட்டும் வாக்கு , சத்தியம் இதுக்கெல்லாம் மதிப்பே கிடையாது
60 ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல ஆண்கள் சிடுமூஞ்சியா அகிடறாங்க , குறிப்பா பெண் துணை இல்லாதவர்கள்
61 எல்லோருக்கும் ஏமாற்ற ஆசை தான் , வாய்ப்புக்காகத்தான் காத்திருக்காங்க
62 எந்த அளவுக்கு ஒருத்தன் ஃபேமஸ் ஆகிறானோ அந்த அளவுக்கு அவன் ஒளிஞ்சுக்க வேண்டிய தேவை எற்படும்
63 வாழ்க்கைல எல்லாரும் , எப்போதும் தேவைப்பட மாட்டாங்க , ஏன்னா நம்ம தேவைகள் அடிக்கடி மாறிட்டே இருக்கு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ, 18+ காட்சிகளோ இல்லை , ஆனால் அடிக்கடி யாராவது கெட்ட வார்த்தை பேசுவதை கொச்சையாக பேசுவதை குறைத்திருக்கலம், ஃபேமிலியோடு பார்க்கும்போது அப்பப்ப ம்யூட் பண்ன வேண்டி வரும் ஏழாவது எபிசோடில் 22 நிமிடம் 30 வது நொடியில் ஒரு லிப் லாக் சீன் இருக்கிறது , மற்றபடி லேடீஸ் கேரக்டர்கள் அனைவருக்கும் கண்ணியமான உடை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மூன்று சினிமாப்படம் பார்க்கும் அளவு நேரத்தை இழுத்துக்கொண்டாலும் ஒர்த் ஆன வெப் சீரிஸ் தான். த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் ரேட்டிங் 3 / 5
Farzi | |
---|---|
Genre | Black comedy Crime thriller |
Created by | Raj & DK |
Written by |
|
Directed by | Raj & DK |
Starring | |
Music by | Ketan Sodha Sachin–Jigar Tanishk Bagchi |
Country of origin | India |
Original language | Hindi |
No. of series | 1 |
No. of episodes | 8 |
Production | |
Executive producer | Rahul Gandhi |
Producer | Raj & DK |
Cinematography | Pankaj Kumar |
Editor | Sumeet Kotian |
Running time | 42–66 minutes |
Production company | D2R Films |
Release | |
Original network | Amazon Prime Video |
Picture format | 4K UHD HDR |
Audio format | Dolby Digital 5.1 |
Original release | 10 February 2023 |
0 comments:
Post a Comment