Tuesday, March 07, 2023

லியோ - டைட்டில் ப்ரமோ டி கோடிங்

 


கமல்  நடித்த  விக்ரம் படத்தின்  பிரம்மாண்ட  வெற்றியால்  அதன்  இயக்குநர்  லோகேஷ்  கனகராஜின் மார்க்கெட்  வேல்யூ  ஏகத்துக்கும்   எகிறியது. விஜய்  உடன்  அவர்  இணைந்த  முதல்  படமான  மாஸ்டர்  பற்றிக்குறிப்பிடும்போது   இது  விஜய்  படமாக  இருக்குமா? லோகெஷ்  படமாக  இருக்குமா?  என  பலரும்  கேட்டார்கள் . இரு  தரப்பு  ரசிகர்களையும்  திருப்திப்படுத்த  50%  விஜய்  படமாகவும், 50 %  லோகேஷ்  படமாகவும்  இருக்கும் என  சொல்லி  இருந்தார். ஆனால்  இந்தப்படம்  டைட்டில்  வெளியாகும்  முன்பே  அவர்  சொன்ன  விஷயம்  இது  முழுக்க  முழுக்க  விஜய்  படம்  என்பதுதான்

   விஜய்க்கு  சமீபத்தில்  வெளியான  இரு  படங்களும்  பெரிய  வெற்றி  இல்லை.  பீஸ்ட்  சுமாராகத்தான்  போனது . வாரிசு  தெலுங்கு  பட  சாயலில்  இருந்தது. அதனால்  இந்தப்படத்துக்கு  எதிர்பார்ப்பு  எகிறி  இருக்கிறது 


 சமூக  வலைத்தளங்களில்  நேற்று  விஜய் உடைய  இரு  ரத்தக்கறை  படிந்த  உள்ளங்கைகளை  காட்டியபடி   நிற்கும் ஸ்டில்  வெளியானதும்  பட  டைட்டில்  ரத்தம்  சம்பந்தப்பட்டதாகத்தான்  இருக்கும்  என    பேச்சு  கிளம்பியது. கமல்  நடித்த  குருதிப்புனல்  போல  டைட்டிலில்  குருதி அல்லது  ரத்தம்  எனும்  சொல் நிச்சயம்  இருக்கும்  என  எதிர்பார்க்கப்பட்டது


பிறகு  திடீர்  என  பட  டைட்டில்  கருடன்  என  இருக்கலாம்  என  வதந்தி  பரவியது .  இப்போது  லியோ ப்ளடி  ஸ்வீட் என்பதுதான்  டைட்டில்  என்பது  தெரிய  வந்துள்ளது 


 லியோ  எனில்  சிம்ம  ராசி  அலல்து  சிங்கம்  போன்றவன், சிம்ம  சொப்பனமாக  எதிரிகளுக்கு  தோன்றுபவன்  என  கொள்ளலாம், அல்லது  ஹீரோ  பெயரே  லியோ  என  இருக்கலாம் . ஒரு  இடத்தில்  விஜய்  பின்னால்  சிலுவை  உள்ளது . எனவே  இதில்  அவர்  கிறிஸ்துவராக  இருக்கலாம் 


கதை நடக்கும் இடம்  காஷ்மீர்  ஆக  இருக்கலாம். அங்கே  விஜய்  சாக்லேட்  ஃபேக்டரி  மாதிரி  ஒன்று  வைத்திருக்கிறார். இது  நெட்  ஃபிளிக்சில்  ரிலீஸ் ஆன  மணிஹெய்ஸ்ட்  பாகம் 3, 4,5   ஆகிய  பகுதிகளில்  வரும்  நேசனல்  பேங்க்  அஃப்  ஸ்பெயின்  உள்ளே  உள்ள  தங்கத்தை  கொள்ளை  அடிக்கும்  கதையில்  புரொஃபசர்  இருக்கும்  வீட்டில்  குளிர்  பானம்  தயாரிப்பது  போல்  மேல்  பூச்சுக்கு  செட்  பண்ணி  இருப்பது  போல  உள்ளது 


 படத்தின்  டைட்டில்  டிசைன்  மற்றும்  பல  இடங்களில்  மஞ்சள்  எழுத்துக்கள் பொன்  நிறத்தில்  தோன்றுகிறது . எனவே  நிச்சயம்  இது  தங்க  வேட்டை  சம்பந்தப்பட்ட  படம்  தான் 


  தங்க  கட்டிகளில்  சாக்லேட்  க்ரீமை  தடவி  மறைத்து  வைக்கலாம்


விஜயைத்தேடி  பல  கார்கள்  அணி  வகுத்து  வருவது  ஊமை  விழிகள்  க்ளைமாக்ஸ்  போல  தர,மான சம்பவமாக  உள்ளது அந்தக்கார்  நெம்பர்  ரிஜிஸ்ட்ரேஷன்  பார்த்தால்  ஆந்திரா  தெலுங்கானா  மாநிலம்  போல  தெரிகிறது . எனவே  காஷ்மீரில்  உள்ள  விஜயைத்தேடி  வில்லன்கள் தெலுங்கானாவிலிருந்து  வருகிறார்கள் 


 படத்தில்  ஒரு  பெரிய  பாம்பு  வருகிறது. காட்டுபிரதேசங்களில்  வன  விலங்குகளைப்பிடிக்க  பொறி  வைப்பார்கள் . அது  போன்ற  ஒரு  பொறியில்  பாம்பு  சிக்கி  தலை தனியாக  துண்டாவது  போல  காட்டுகிறார்கள் .அது  போல  காரில்  வரும்  எதிரிகளுக்கு  ஹீரோ  ஏதோ  செக்  மேட்  வைத்திருக்க்லாம்  என  யூகிக்கலாம்


 நாணயத்தின்  ஒரு  பக்கத்தில்  லியோ  என  இருப்பதால்  மறுபக்கம்  என்னவாக  இருக்கும்? என  பேச்சு  கிளம்பி  ஹீரோ  சாக்லேட்  பாய்  ஆக  ஒரு  ரோலும்  ஆக்சன்  ஹீரோவாக  ஒரு ரோலும்  ஆக  மொத்தம்  டூயல்  ரோல்  ஆக  இருக்கலாம்  என  சிலர்  சொல்கிறார்கள் , ஆனால்  லோகேஷ்  இதுவரை  ஹீரோ  டபுள்  ஆக்சன்  ஃபார்முலாவில்  படம்  செய்யவில்லை .  கைதி , விக்ரம்  உட்பட  அவர்  படங்களில்  ஹீரோ ஒரே  ஆள்   இரு  விதமான  கேரக்டர்  சாஃப்ட்  ஆக  ஒருவர்  அதே ஆள்  பின்னாளில்;  வயலண்ட்  ஆக  மாறி  ஆக்சனில்  துவம்சம்  செய்பவராகத்தான்  காட்டுவார் , எனவே  ஹீரோ  டபுள்  ஆக்டிங்காக  இருக்காது 


படம்  தீபாவளிக்கு  சில  தினங்கள்  முன்பாகவே  வெளியாகிறது. விஜய்  படங்களில்  நீண்ட  இடைவெளிக்குபிறகு  ரிலீஸ்  தேதி  முன்  கூட்டியே  அறிவித்து  பக்கா  பிளானிங்கில்  ஷூட்டிங்  நடைபெறுகிறது

0 comments: