Friday, March 31, 2023

CHOR NIKAL KE BHAGA (2023) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ராபரி த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


 சோர்  நிகால்கே  பாகா  என்ற  ஹிந்தி  டைட்டிலுக்கு  திருடன்  தப்பி  ஓடி விட்டான்  என  தமிழில்  அர்த்தம். யமி கவுதம்  நாயகியாக  நடித்த  இந்த  ஹிந்திப்படம்  நேரடியாக  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  தளத்தில் 24/3/2023 அன்று   ரிலீஸ்  ஆகி உள்ளது. 110 நிமிடங்கள்  ஓடும்  இந்த  விறுவிறுப்பான  ராபரி  த்ரில்லர்  படம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  இருந்தால்  நல்ல  வரவேற்பைப்பெற்றிருக்கும்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  விமானப்பணிப்பெண்.ஒரு  நாள்  விமானப்பயணத்தில்  ஒரு  பயணி  ஆக  நாயகனை  சந்திக்கிறாள் . தொடர்ந்து  அடுத்தடுத்து  நாயகன்  நாயகியை  சந்திக்க  சந்தர்ப்பங்களை  உருவாக்கிக்கொள்கிறான். ஆரம்பத்தில்  என்னப்பா? என்னை  ஸ்டாக்கிங்  பண்றியா? என்னை  கரெக்ட்  பண்ணப்பார்க்கிறாயா? என  கலாய்க்கும்  நாயகி  நாளடைவில்  அவன்  காதலை  ஏற்றுக்கொள்கிறாள் 


இருவரும்  திருமணம்  செய்து  கொள்ளாமல்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்கள் . இதனால்  நாயகி  கர்ப்பம்  ஆகிறார்


ஒரு  நாள்  ரெஸ்டாரண்ட்டில்  இருவரும்  சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது  நாயகனுக்கு  ஒரு  ஃபோன்  கால்  வருகிறது .வெளியே  இருவர்  நாயகனுக்காக  காத்திருக்கிறார்கள் . நாயகனை  அவர்கள்  மிரட்டுகிறார்கள் . நாயகி  என்ன  விஷயம்  என  கேட்டபோது  ஆரம்பத்தில்  மழுப்பும்  நாயகன்  பிறகு  நாயகியின்  வற்புறுத்தலால்  அவனது  பிரச்சனையை  ஓப்பன்  செயுகிறான்


 நாயகனுக்கு  கோடிக்கணக்கில்  கடன்  இருக்கிறது . அதை  உடனடியாக  அடைக்க  வேண்டும் , அல்லது  குறிப்பிட்ட  வைரங்களை  திருடி  அதை  ஒப்படைக்க  வேண்டும். இதுதான்  நாயகன்  தரப்பு  விஷயம் 


 நாயகி  அதற்கு  சம்மதிக்கிறாள் , வைரங்களை  கொண்டு  வரும்  ஆள்  விமானத்தில்  பயணிக்கும்போது  அதை  திருட  முடிவு  செய்கிறார்கள் . 


 விமானத்தில்  நாயகன்  பயணி  ஆகவும் , நாயகி  விமானப்பணிப்பெண்ணாகவும்  பயணிக்கும்போது  திடீர்  என  எதிர்பாராத  ஒரு  திருப்பம். பயங்கரவாதிகள்  நான்கு  பேர்  விமானத்தை  ஹைஜாக்  செய்கிறார்கள் / இதற்குப்பின்  என்ன  நடந்தது ? நாயகன் , நாயகி  உயிர்  பிழைத்தார்களா? வைரங்களை  திருடினார்களா? அரசியல்வாதியின்  தாக்குதல்  என்ன  ஆனது ? எனபதற்கு  எல்லாம்  திரைக்கதையில்  விடை  உள்ளது


நாயகியாக  யாமி  கவுதம்  நன்றாக  நடித்துள்ளார்.ஒரு  விமானப்பணிப்பெண்ணுக்கான   ஆடை  வடிவமைப்பு , உடல்  மொழி  அனைத்தும்  நேர்த்தியாக  உள்வாங்கி   பர்ஃபார்மென்ஸ்  பண்ணி  இருக்கிறார், இடைவேளைக்குப்பின்  ஆன  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சிகளில்  கலக்கி  இருக்கிறார்


 நாயகனாக சன்னி  கவுசல் சராசரி  தமிழ்  சினிமா  நாயகன்  மாதிரி  நாயகியை  துரத்தி   துரத்தி  காதலிக்கும்  நபராக  அறிமுகம்  ஆகி  வில்லன்  ரோல்  செய்யும்போது  கவனிக்க  வைக்கிறார். இவரது  கேரக்டர்  டிசைன்  கனகச்சிதம் 


கேதான் சோதா  தான்   இசை . த்ரில்லர்  படங்களுக்கு  பிஜிஎம்  ரொம்ப  முக்கியம். படத்தை  விறுவிறுப்பாகக்கொண்டு  செல்ல  பின்னணி  இசை  முக்கியப்பங்கு  வகிக்கிறது . சாரு  தக்கர்  தான்  எடிட்டிங். ஷார்ட்  அண்ட்  ஸ்வீட் ஆக 110  நிமிடங்களில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார், இந்தக்கதையை  இரண்டரை  மணி  நேரம்  இழுத்திருந்தால்  போர்  அடித்திருக்கும் . ஜியானி தான்  ஒ:ளிப்பதிவு . பெரும்பாலான  காட்சிகள்  விமானத்துக்கு  உள்ளேயே  நடப்பதால்  சவாலான  வேலை  தான் ,  ஆர்ட்  டைரக்சன்  கச்சிதம் 


அஜய்  சிங்  தான்  இயக்கம் , விறுவிறுப்பாக  கதையை  நான்  லீனியர்  கட்  திரைக்கதையில்  வடிவமைத்து  சொன்னது  சிறப்பு,  எந்த  விதமான  குழப்பமும்  இல்லாமல்   திரைக்கதை   அமைத்த  மூவர்  கூட்டணி  ஆன   சிராஜ்  அஹ்மத் , அமர் கவுசிக் , ராஜ்குமார்  குப்தா  அனைவரும் சிறப்பாக  பணி  ஆற்றி  இருக்கிறார்கள் . திரைக்கதை  எழுதிய  மூவரில்  அமர்  கவுசிக்  தயாரிப்பாளர்களில்  ஒருவர்  என்பது  நல்ல  விஷயம் 




சபாஷ்  டைரக்டர்  ( அஜய்  சிங் ) 


1  ரொமாண்டிக்  போர்சன் ரசிக்கும்படி  இருக்கிறது , அதே  சமயம்  மெயின்  கதையை  ஓவர் டேக்  பண்ணாமல்  அடக்கி  வாசிக்க  வேண்டிய  தேவை  உள்ளதால்  லவ்  போர்சனை  கொஞ்சமாக  வைத்தது  சிறப்பு 


2 இடைவேளை , ட்விஸ்ட்   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  இரண்டும்  ரசிக்கும்படி  உள்ளது 


3  த்ரில்லர்  படங்களின்  முக்கிய  எதிரிகளான  மொக்கை  காமெடி  டிராக் ,  தேவையற்ற  டூயட்  காட்சிகள்  இரண்டையும்  தவிர்த்தது  சிறப்பு 

4    இந்தக்கொள்ளை  விமானத்தில்  ஏன்  செய்ய  வேண்டும் > என்ற  கேள்விக்கு  விடையாக  வைரம்  இருக்கும்  செல் ஃபோனில்  ஜிபிஎஸ்  பதிக்கப்பட்டு  இருக்கிறது , அதை  வேறு  இடத்தில்  கடத்தினால்  காட்டிக்கொடுத்து  விடும் , விமானம்  பறக்கும்போது  அங்கே   ஜிபிஎஸ்  ஒர்க்  ஆகாது  என  காரணம்  சொன்ன  விதம்  அபாரம் 


ரசித்த  வசனங்கள் 


1  மிஸ்! இன்னைக்கு  நைட்  என்  கூட  டின்னர்  சாப்பிட  வர்றீங்களா?



 நீங்க  ரொம்ப  வேகமா  இருக்கீங்க 


 உங்களுக்குப்பிடிக்காதுன்னா  ஸ்லோ  பண்ணிக்கறேன்


2   நான்  உங்களைப்பார்த்தேனா? உங்க  கண்ணை  செக்  பண்ணிக்கறது   நல்லது


 உங்க  கண்ணைத்தான்  செக்  பண்ணனும், ஆனாலும்  உங்க  கண்  நல்லாதான்  இருக்கு 


3  குழந்தை  பிறக்கும்  முன்பே  குழந்தைக்காக  பொருட்கள்  பர்ச்சேஸ்  பண்றது  அபசகுனம்னு  சொல்வாங்க 


4  எந்த  ஒரு  விஷயத்தையும்  முழு  நம்பிக்கையோட செஞ்சா  அதுல  எந்தத்தப்பும்  நடக்காது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  ஒரு  ஏர்  ஹோஸ்டல். இந்தப்பணியில்  இருப்பவர்கள்  கர்ப்பம்  ஆகக்கூடாது, அப்படி  ஆனால்  வேலை  போய்  விடும் இது  தெரிந்திருந்தும்  நாயகி  எப்படி  கர்ப்பம்  ஆனதும்  சந்தோஷப்படுகிறாள் ?  நாயகனுக்கும்  வருமானம்  இல்லை , இவள்  வேலையும்  போய்  விட்டால்  பூவாவுக்கு  என்ன  செய்வார்கள் ? 


2 பெண்ணை  தாக்குதல் , கர்ப்பத்தை கலைத்தல்  இந்த  இரண்டு  தவறுகளை  செய்யும்  ஒருவனை  மிகச்சுலபமாக சட்டப்படியே  தண்டனை  வாங்கித்தரலாம்.  அதைச்செய்யாமல்  நாயகி  போடும்  திட்டம்  தலையைச்சுற்றி  மூக்கைத்தொடுவதாக  இருக்கிறது 


3  ஒரு  ஆக்சன்  சீக்வன்சில் நாயகியின்  செல் ஃபோன்  தெறித்து  ஒரு  இடத்தில்  விழுகிறது . இப்படி  தெறித்து  விழும்போது  செல்ஃபோன்  ஸ்விட்ச் ஆஃப்  தான்  ஆகும், ஆனால்  நாயகியின்  ஃபோன்  மட்டும்  ஸ்பீக்கர்  ஃபோன்  ஆன்  ஆகி  ஒரு  கான்வோவை  ரெக்கார்டு  செய்கிறது 


4   விமானத்தை  விட்டு  பயணிகள்  இறங்கி  வரும்போது  குறிப்பிட்ட  சிலர்  மட்டும்  லக்கேஜ்  உடன்  வருகிறார்கள் .  இதற்கு  அனுமதி  இல்லையே? போலீஸ்  சந்தேகப்பட்டு  பேக்கை  செக்  செய்யவே  இல்லையே? 


5   விமானத்தில்  இருக்கும்  ஒரு  ஆஃபீசர்  மூன்று  தீவிரவாதிகளை  தாக்குகிகிறார். துப்பாக்கிக்குண்டு  பட்டு  அவர்கள்  இறப்பதாகக்காட்டப்படுகிறது , ஆனால்  ஒரு  சொட்டு  ரத்தம்  கூட  வரவில்லை , இதில்  பயணிகள்  யாருக்கும்  டவுட்  வராதா? 


6  வைரத்தை  விமானத்தில்  கொண்டு  வரும்  நபர்  வைரங்கள்  உள்ள  ஃபோனை  தன்  பாக்கெட்டில்  மறைத்து  எடுத்து  வராமல்  பேக்கில்  வைத்து லெக்கேஜ்  செக்சனில்  விட்டு  அசால்ட்டாகவா  வருவார் ? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ  சர்ட்டிஃபிகேட்  ஃபிலிம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படையப்பா, மன்னன் , மாப்பிள்ளை , பச்சைக்கிளி  முத்துச்சரம், GONE GIRL  போன்ற  படங்களை  அதில்  உள்ள நெகடிவ்  ஷேடு  வில்லி  கேரக்டருக்காக  ரசித்தவர்கள்  இந்தப்படத்தையும்  ரசிப்பார்கள் , த்ரில்லர்  ரசிகர்களுக்கான ஒரு  நல்ல படம்   ரேட்டிங் 2.75 /5 



Chor Nikal Ke Bhaga
Chor Nikal Ke Bhaga film poster.jpg
Official release poster
Directed byAjay Singh
Written bySiraj Ahmed
Amar Kaushik
Raj Kumar Gupta
Produced byDinesh Vijan
Amar Kaushik
Starring
CinematographyGianni Giannelli
Edited byCharu Thakkar
Music byScore:
Ketan Sodha
Songs:
Vishal Mishra
Production
company
Distributed byNetflix
Release date
  • 24 March 2023
Running time
110 minutes[1]
CountryIndia
LanguageHindi

Thursday, March 30, 2023

ERA ORA (2023)இத்தாலி - ( STILL TIME) - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


 ஏண்டா  சுடுதண்ணீரைக்காலில்  ஊற்றிக்கொண்டவன்  போல்  பறக்கிறாய்? என  சிலர்  சொல்லக்கேள்விப்பட்டிருப்போம். இந்த  அவசர  உலகத்தில் நாம்  எல்லோருமே  வேகமாக  பயணிக்கிறோம். இப்படி  இருந்தால்  எதிர்  விளைவுகள்  எப்படி  இருக்கும்  என  காமெடி கற்பனையாக  உருவான  கதை  தான்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  கம்பெனியில்  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்டாக  பணி  புரிகிறான்.கூடுதல்  நேரம்  பணி புரியும்படி  கம்பெனி  கேட்டுக்கொண்டதால்  ஓவர்  டைம்  ஒர்க்  என  எப்போதும்  பிசியாகவே  இருப்பவன். நாயகி  ஒரு  ஆர்ட்டிஸ்ட். இருவரும்  காதலித்து  திருமணம்  செய்து  கொண்டவர்கள் 


நாயகனின்  40 வது  பிறந்த  நாள் விழா  சிறப்பாககொண்டாடப்படுகிறது. அன்று  இரவு  தம்பதியர்  இருவரும்  தாம்பத்யம்  வைத்துக்கொள்கிறார்கள். அடுத்த  நாள்  காலையில் நாயகனுக்கு  ஒரு  அதிரச்சி. கண்  இமைக்கும்  நேரத்தில்  ஒரு திருப்பம்


நாயகி  6 மாத  கர்ப்பிணியாக  இருக்கிறார். பிறகுதான்  நாயகனுக்கும்  ஆடியன்சுக்கும்  புரிகிறது. நாயகன்  ஒரு நாளில்  ஒரு வருடத்தை  கடந்து  வந்திருக்கிறான், இது  தொடர்கிறது

அதாவது  நாயகனின்  அடுத்தடுத்த  நாட்கள்  அவனது  பிறந்த  நாளாக  வருகிறது. ஒரு  வருடம்  ஒரு  நாளில்  கழிகிறது . இடைப்பட்ட  364  நாட்களில்  என்ன  நடந்தது  என  நாயகனுக்கு  நினைவு  இருப்பதில்லை 


இன்னும்  தெளிவாக  சொல்ல  வேண்டும்  எனில்  முதல்  நாள்  நாயகனுக்கு  40 வது  பிறந்த  நாள் . அடுத்த  நாள்  விடிந்தால் 41 வது  பிறந்த  நாள் .  அடுத்து  42 வது  பிறந்த  நாள்  இப்படியே  போகிறது


 நாயகன்  ஒரு  மனநல  மருத்துவரை  நாடி  இந்தப்பிரச்சனைக்கு  தீர்வு  காண  முயல்கிறான். நாயகனின்  தந்தைக்கு  அல்சைமர்  எனும்  மறதி  வியாதி  இருக்கிறது . அதனால்  இருக்குமோ? என  நாயகன்  ச்ந்தேகிக்கிறான்


இப்போது  நாயகன்  ஒரு  பெண்  குழந்தைக்கு  அப்பா . ஆனால்  குழந்தையுடன்  ஜாலியாக  பொழுதைக்கழிக்க  முடியவில்லை


நாயகனுக்கு  தன்  ஆஃபீஸ்  செகரட்டரியுடன்  தொடர்பு  ஏற்பட்டு  மனைவியைப்பிரிந்து  வாழ்கிறான். அது  எப்படி  நிகழ்ந்தது  என்றே  அவனுக்கு  நினைவு  இல்லை 


 இந்த  பிசியான  வேலையே  வேண்டாம்  என  ரிசைன்  பண்ண  ரிசைன்  லெட்டர்  எம் டி  யிடம்  கொடுக்கலாம்  என  செல்லும்போதுதான்  தெரிகிறது  இப்போது  பிரமோஷன்  கிடைத்து  அவன்  தான்  எம்  டி  என 


  ஆஃபீஸ்  வாழ்க்கையில்  முன்னேற்றம்  கண்ட  நாயகன்  குடும்ப  வாழ்வில்  பின்னடைவை  சந்திக்கிறான்..  நாயகனின்  மனைவி   வேறு  ஒரு  ஆணுடன்  லிவ் இன் டுகெதர்  வாழ்க்கையில்  இருக்கிறார். நாயகன்  ஆஃபீஸ்  செகரட்ரியுடன்  வாழ்கிறார்


 இந்த  சிக்கலில்  இருந்தெல்லாம்  நாயகன்  எப்படி  மீண்டு   வருகிறான்  என்பதுதான்  மிச்ச  மீதி  திரைக்கதை


நாயகனாக  எடோர்டோ  லியோ  நம்ம  ஊர்  கமல்  மாதிரி  பல  கெட்டப்களில்  வருகிறார்.  நடிப்பு  கனகச்சிதம் . நாயகி ஆக  பர்பாரா  ரோன்ச்சி அழகுப்பதுமையாக  வந்து  நடிப்பில்  நம்  மனதைக்கொள்ளை  கொள்கிறார்


நாயகனின்  இரண்டாவது  ,  மனைவியாக , ஆஃபீஸ்  செகரட்ரியாக  ஃபிரான்செஸ்கா  காவலின்  நடித்திருக்கிறார். இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை , கெஸ்ட்  ரோல்  போல 


 நாயகன் - நாயகி  தம்பதியின்  ஐந்து   வயது  சிறுமியாக  நடித்தவர்  கொள்ளை  அழகு


படத்தில்  வில்லன்  என  யாரும்  இல்லை. நாயகன் - நாயகி - குழந்தை - வில்லி  என  நான்கு  பேரைச்சுற்றியே  கதை  நகர்கிறது 



22/10/2022  அன்று  உலகம்  முழுக்க  ரிலீஸ்  ஆன  இந்த  இத்தாலியன்  மூவி  இப்போது  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது


 குடும்பத்துடன்  காணத்தக்க  காமெடி  ஃபேமிலி  மெலோ  டிராமா


 148  நிமிடங்கள்  ஓடுகிறது  திரைக்கதை  இயக்கம்  அலெக்சாண்ட்ரியோ  அர்னாடியோ



  சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  சீன்லயே  நாயகியை  பார்ட்டியில்  சந்திக்க  வேண்டிய  நாயகன்  நாயகி  போலவே   உடை  அணிந்த  வேறு  பெண்ணுக்கு  முத்தம்  கொடுத்து  மாட்டிக்கொண்டு  அந்தப்பெண்ணிடம்  அறை  வாங்கும்  காட்சி  காமெடி  ரகளை   (நந்தா  நடித்த  புன்னகை  பூவே (2003)  படத்தில்  இதுதான்  இண்டர்வல் பிளாக்  சீன் ) 


2  நாயகன்  முதல்  நாள்  இரவில்  நாயகியுடன்  தாம்பத்யம்  வைத்ததும்  அடுத்த  நாள்  காலை  நாயகி  6  மாத  கர்ப்பிணி  ஆக  இருப்பதைக்கண்டு  அதிர்வது  அடுத்த  நாள்  நாயகி  வயிறு  சரியானதைக்கண்டு  நிம்மதிப்பெருமூச்சு  விடுவது , திடீர்  என  குழந்தை  அழுகுரல்  கேட்டு  திகைப்பது  எல்லாமே  காமெடி  கண்ட்டெண்ட்


3    தான்  எம்  டி  ஆனதை  அறியாமல்   எம்  டி  ரூமுக்கு  ரிசைன்  லெட்டருடன்  சென்று   அங்கே  எம் டி  சேர்  காலியாக  இருப்பதை  அறிந்து  சக  கொலீக்ஸ்  இடம்  எம்  டி  எங்கே  என  கேட்டு  பல்பு  வாங்குவது 


4 நாயகன்  தன்  குழந்தையுடன்  டைம்  ஸ்பெண்ட்  பண்ண  நினைக்கும்போது  குழந்தை  பேசும்  வசனமும்  அதைத்தொடர்ந்து  வரும்  செண்ட்டிமெண்ட்  காட்சிகளும் 


5  நாயகன்  தன்  மனைவியை  விட்டுப்பிரிந்து  ஆஃபீஸ்  செகர்ட்ரியுடன்  வாழ்வதை  அறியாமல்  நாயகிக்கு  ஃபோன்  பண்ணி  உடனே  வீட்டுக்கு  வா  என  அழைப்பதும்  மனைவி  வாசலில்  நின்று  காலிங்  பெல்  அடிக்கும்போது  செகரட்ரி  சமையல்  அறையில்  இருந்து  வருவதைப்பார்த்து  அதிர்ந்து  அவரை  பாத்ரூமில்  ஒளித்து  வைப்பதும்  காமெடி  கலாட்டா 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஆள்  மாறாட்டம்  நிகழ்ந்து  நாயகன்  வேறு  ஒரு  பெண்ணுக்கு  முத்தம்  தரும்போது  அந்தப்பெண்  எதுவும்  சொல்லவில்லை ., பிறகு  தப்பு  நடந்துடுச்சு . என்  மனைவி  போலவே  டிரஸ்  போட்டிருந்ததால்   மாறி  கிஸ்  பண்ணிட்டேன்  என  தன்னிலை  விளக்கம்  கொடுக்கும்போது  நாயகனுக்கு  பளார்  கிடைக்கிறது , என்ன  கொடுமை  சார்  இது ?


2  நாயகன்  தன்  ஆஃபீஸ்  செகர்ட்ரியின்  செப்பல் வீட்டின்  டைனிங்  டேபிள்  அருகே  இருப்பதைப்பார்த்து  நாயகி கேட்கும்போது  உனக்கு  கிஃப்ட்  பண்ணத்தான்  வாங்கி  வைத்திருக்கிறேன்  என  சமாளிக்கிறான். யாராவது  இப்படி  மடத்தனமாக  பொய்  சொல்வார்களா? மனைவியை  விட  செகரெட்ரி  ஆள்  ஹைட்  வேற . செப்பல் சைஸ்  மாறுமே ? 


3   முதல்  நாள்  இரவு  படுத்து  உறங்கி எழும்போது  அடுத்த  நாள்  அடுத்த  வருடம்  ஆகிறது  என்ற  லாஜிக்  சரி , ஆனால்  தொடர்ந்து  பகலிலேயே  ஒரு  வருடம்  கழிவது  எப்படி ? அந்த  லாஜிக்  படி  ஒவ்வொரு  நாளும்  இரவு  தூங்கப்போய்  அடுத்த  நாள்  விடியும்போதுதானே  அடுத்த  வருடம்  வர  வேண்டும் ? 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட  கதைகளை  விரும்புபவர்கள்  பாரக்கலாம். படத்தில்  டயலாக்ஸ்  அதிகம், ஸ்லோவாகத்தான் காட்சிகள்  நகரும் . ரேட்டிங்  2.75 / 5 




Era ora
Lingua originaleitaliano
Paese di produzioneItalia
Anno2023
Durata109 min
Generedrammaticocommedia
RegiaAlessandro Aronadio
SoggettoAlessandro AronadioRenato Sannio
SceneggiaturaAlessandro AronadioRenato Sannio
ProduttoreCarlo Degli EspostiRiccardo RussoNicola SerraCristina Tacchino
Produttore esecutivoJamie HiltonMichael PontinPiergiuseppe Serra
Casa di produzioneBIM Production
Distribuzione in italianoNetflixVision Distribution
FotografiaRoberto Forza
MontaggioRoberto Di Tanna
MusicheSanti Pulvirenti
ScenografiaDaniele FrabettiLara Sikic
CostumiElena Minesso

Wednesday, March 29, 2023

படகோட்டி (1964) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ மெகா டிவி

   ஸ்பாய்லர்  அலெர்ட்



 நாயகன்  , நாயகி  இருவரும்   சுறா , திருக்கை  என்று  சொல்லப்படும்   இரு  வெவ்வேறு  மீனவ  சமூகத்தை  சேர்ந்தவர்கள் .  நாயகன்  அவர்களது  சமூக  மீனவர்களைத்தூண்டி  வில்லனிடம்  குறைவான  விலைக்கு  மீன்கள்  விற்பதை  தடுக்கிறார்.  அதிக  விலை  கொடுக்க  வேறு  ஒரு ஆள்  தயாராக  இருக்கிறார். ஆனால் வில்லனிடம்  அட்வான்ஸ்  வாங்கிய  பணத்தை அடைக்க  வேண்டும் .  அதற்கு  நாயகன்  போராடுகிறார். இந்த  போராட்டங்கள்  எல்லாம்  சைடு  டிராக்கில்  ஓட  நாயகன்  மெயின்  ட்ராக்கில் நாயகியை  ஓட்டிட்டு  இருக்கார் . இறுதியில்  என்ன  ஆச்சு  என்பதுதான்  திரைக்கதை 


 படம்  போட்டு  ஒரு  மணி  நேரம்  ஆகியும்  படத்தின்   கதை  என்னவாக  இருக்கும் ? என  யூகிக்க  முடியவில்லை .  படம்  பூரா  நாயகன்  நாயகி  கூட  சுத்திட்டுதான்    இருக்கார் , அப்பப்ப   டைம்  பாஸ்க்கு  வில்லன்  கிட்டே  சவால்  விடறார், மீனவர்களிடம்  ஏதோ  பேசறார் . திடீர்னு  க்ளைமாக்ஸ்  வந்துடுது 


 நாயகனாக  எம் ஜி ஆர்.  வழக்கம்  போல்  ரெடிமேடு  கதாபாத்திரம் , இதில் அம்மா  செண்ட்டிமெண்ட், தங்கை செண்ட்டிமெண்ட்  இல்லாதது  ஆச்சரியம்.


நாயகியாக கன்னடத்துப்பைங்கிளி  சரோஜாதேவி, மீனவப்பெண்மணியாக  கொஞ்ச  நேரம் , கோடீஸ்வரப்பெண்மணியாக  நிறைய  நேரம்  தோன்றுகிறார்


 வில்லனாக  நம்பியார். அதிக  வாய்ப்பில்லை , எடுபுடி  வில்லனாக  அசோகன், பாவம்,  சின்ன  ரோல்


 காமெடிக்கு  நாகேஷ் , மனோரமா  இருக்கிறார்கள், ஆனால்  காமெடி  இ;ல்லை 


வாலியின்  வரிகளில்  எட்டு  பாடல்கள்  செம  ஹிட்டு , பாட்டுக்காகப்பார்க்கலாம் 


 ஒளிப்பதிவு ஈஸ்ட்மென்  கலர்ல  கலர்ஃபுல்லா  எடுத்திருக்காங்க. விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இசை  இனிமை , ஆனால்  பிஜிஎம்  சுமார்  ரகம்  தான் 



சபாஷ்  டைரக்டர்  ( டி பிரகாஷ் ராவ்) 


1  உப்பு  சப்பு  எதுவும்  இல்லாத  கதையை  சூப்பர்  ஹிட்  சாங்க்ஸ்  எட்டு  மட்டும்  வெச்சு  ஒப்பேற்றிய  லாவகம் 


2    ஈஸ்ட்மென்  கலர் ல  படம்  பூரா  கல்ர்ஃபுல்லா  எடுத்த  விதம் 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  தரை  மேல்  பிறக்க  வைத்தான்  எங்களை  தண்ணீரில்  பிழைக்க  வைத்தான்  (  எம் ஜி ஆர்  படங்களில்  ஹீரோ  ஓப்பனிங்  சாங்  சோகப்பாடலாக  அமைந்தது  இதுவே  முதலும்  கடைசியும்)


2  என்னை  எடுத்து தன்னைக்கொடுத்து  போனவன்  போனானடி   (  நாயகி  சோக  சாங்க் ) 


3    தொட்டால்  பூ  மலரும், தொடாமல்  நான்  மலர்ந்தேன்  (  ஃபர்ஸ்ட்  டூயட்  சாங்) 


4   கொடுத்ததெல்லாம்  கொடுத்தான்  , அவன்  யாருக்காகக்கொடுத்தான்? ஒருத்தருக்கா  கொடுத்தான் , இல்லை  ஊருக்காகக்கொடுத்தான் ( வில்லனுக்கான   ஹீரோவின்  தத்துவ  சாங் ) 


5  அழகு  ஒரு  ராகம்   ஆசை ஒரு  தாளம்  (  வில்லனின்  முன் கிளாமர்  டான்ஸ் ) 


6  நான்  ஒரு  குழந்தை  நீ  ஒரு  குழந்தை  ஒருவர்  மடியிலே  ஒருவரடி  (  நாயகன்  மாறு  வேட்டமிட்டு  நாயகியை  கலாய்க்கும்  சாங் ) 


7    பாட்டுக்கு  பாட்டெடுத்து  நான்  பாடுவதைக்கேட்டாயோ? ஹோய் , துள்ளி  வரும்  வெள்ளலையே, நீ போய்  தூது   சொல்ல  மாட்டாயோ?  ( பிரிவுத்துயர்  சாங் )


8  கல்யாணப்பொண்ணு  கண்ணானக்கண்ணு   கொண்டாடி  வரும்  வளையல்   (  நாயகன்  மாறுவேடத்தில்  வந்து  வில்லனின்  இருப்பிடத்தில்  நாயகியை  சந்திக்கும்  சாங் ) 


  ரசித்த  வசனங்கள் 


1   உதவினு  கேட்டா  அது  எதிரியாக  இருந்தாலும்  உதவனும், அதுதான்  பண்பு


2  யார்  கிட்டே  என்ன  பேசறே?

  என்  மக்கள்  கிட்டே  அவங்க  உரிமை  பற்றி  பேசறேன்


3  என்னம்மா  குழம்பு  ஊற்றச்சொன்னா  மோர்  ஊத்தறே? ரொம்பகுழம்பி  இருக்கே  போல 


4    என்ன  மாணிக்கம் ? சரித்திரத்தை  மாற்றி  எழுத  நினைக்கிறயா? முதலாளிகளுக்குள் எப்பவும்  போட்டியே  இருக்காது , நாங்க  ஒற்றுமையாதான்  இருக்கோம் 


5  நல்லது  செய்யலாம்னுதான்  மாணிக்கமா  இருந்தேன், ஆனா  இந்த  உலகத்துல  வேஷத்துக்குதான்  மதிப்பு 

6  நான்  நல்லது  செய்தாலும்  மற்றவர்களுக்கு  அது  தப்பா தான்  படும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நீச்சல்  தெரியாதவங்க  ஒரு  நீர்  நிலைல  மூழ்கினா  அவங்க  உள்ளே தான்  போவாங்க , இதுல  ஒரு  ஆளு  மூணு  தடவை  நீர்  மட்டத்துக்கு  மேலே  வந்து  காப்பாத்துங்க   காப்பாத்துங்கனு  கையால  அபய  சைகை  எழுப்பறாரு , அதுக்கு  வாய்ப்பே  இல்லை   


2  மற்ற  படகோட்டிங்க  எல்லாம்  எப்பவும்  நார்மலா  இருக்காங்க, ஆனா  நாயகன்  மட்டும்  எப்போப்பாரு  படகோட்டி  யூனிஃபார்ம்லயே  இருக்காரு , அது  ஏன் ? தொப்பியைக்கழட்றதே  இல்லை , அதே  போல  காமெடியன் நாகேஷ்  ஒரு  சீன் ல  தூங்கி  எழும்போது  கூட  தலையில்  மீனவரின்  அடையாளமான  தொப்பி  இருக்கு , எதுக்கு ?


3   நாயகிக்கும், நாயகனுக்கும்  முன்  பின்  அறிமுகமே  இல்லை , கடற்கரையில்  மயங்கி  விழுந்த  நாயகனை  நாயகி  அப்போதுதான்  பார்க்கிறார், ஆனா  நாயகனுக்கு  ஒட்டி  உறவாடி  மசாஜ்  பண்றாரு , முதுகுல  பாங்காங்க்  அழகிகளுக்கு  20,000  ரூபா  ஃபீஸ்  கட்டுனாக்கூட  இவ்ளவ்  பிரமாதமா  மசாஜ்  பண்ண  மாட்டாங்க 


4  காலம்  காலமா  சினிமாக்களில்  யாராவது  சாப்பிட  உட்காரும்போது  சாப்பிடப்பிடிக்கலைன்னா  சாப்பாடு இருக்கும்  தட்டத்தில்  தண்ணீர்  ஊற்றி  கை  கழுவறாங்க . ஏன்  உணவை  வீண்  ஆக்கனும்?  நிஜத்தில்  ஒரு  மூடி போட்டு  மூடி  வைத்து பின்  சாப்பிடுவதுதானே  வழக்கம் ? நாயகன் , நாயகி  இருவரும்  இப்படி  உணவை  வீண்  பண்றாங்க 


5  லாங்க்  ஷாட்ல  காட்டும்போது  அசோகன்  மனோரமா  படகை  தன்  படகால்  வீழ்த்தி  அவரை  தண்ணீரில்  விழ  வைக்கும்போது  நீர்  நிலையின்  மையப்பகுதியைக்காட்றாங்க, க்ளோசப்  ஷாட்ல  கரைல  இருக்கற  மாதிரி  காட்றாங்க 


6  படகோட்டிகளா  வரும்  அனைத்துத்துணை  நடிகர்களும்  மங்கலா  இருக்காங்க ,  நாயகன்  மட்டும்  தங்கம்  மாதிரி  மின்னுறாரு , க்ரூப்ல  டூப்  மாதிரி  இருக்கு .  பத்துப்பேரில்  நாலு  பேரை  கலரா உலவ  விட்டிருக்கலாம்

7  அப்பா  கிட்டே  சொல்லாம  என்னை  ஏன் சந்திக்க  வந்தே? அப்டினு  நாயகன்  நாயகி  கிட்டே  கோவிச்சுக்கறாரு . வாய்  தான்  அப்படி  சொல்லுதே  தவிர  கைகள்  நாயகியை  தடவிட்டு  தான்  இருக்கு 


8  நாயகி  ஓப்பனிங் ஷாட்ல  மீனவப்பெண்ணாக  கச்சிதமான  காஸ்ட்யூம்ல  இருக்கார்  , ஆனா  நான்காவது  ரீலில்  இருந்து  ஜமீந்தார்  பொண்ணு  மாதிரி  மாறிடறார்.நாயகன்  கேட்கவே  வேண்டாம், மற்ற  மீனவர்கள்  எல்லாம்  சாதா  காட்டன்  சட்டை  இவர்  மட்டும்  ஜிலு  ஜிலுஜ்  சிலுக்கு  சட்டை . ஒட்டவே  இல்லை தனியா  தெரியுது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  எதுவும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம் ஜி ஆர்  ரசிகர்கள் ,  பழைய  பாடல்  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கலாம்  ஜெனரல்  ஆடியன்ஸ்  ஒன்  ஸ்டெப்  பேக் . ஆவரேஜ்  மசாலா  படம்  தான் .  ரேட்டிங்  2.5 / 5 


சுவராஸ்ய  தகவல் -  வாட்சப்  க்ரூப்  நண்பர்  சங்கர்ஜி  சொன்ன  தகவல் . இந்தப்படத்தில்  கம்யூனிச  சித்தாந்தத்தில்  கலக்கலான  பாடல்கள்  எழுதிய  கவிஞர்  வாலியை  கவிஞர்  கண்ணதாசன்  நேரில்  சந்தித்துப்பாராட்டினாராம், கை வசம்  பணம்  இல்லாததால்  தன்  கழுத்தில்  இருந்த  தங்க  செயினை  பரிசாக அளித்து  வாழ்த்தினாராம்.


நன்றி - ஆனந்த விக்டன் 


https://www.vikatan.com/lifestyle/nostalgia/my-vikatan-article-about-old-mgr-movie


படகோட்டி
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புஜி.என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
எம். என். நம்பியார்
மனோரமா
நாகேஷ்
விநியோகம்நாகேஷ்வர ராவ்
வெளியீடுநவம்பர் 31964
நீளம்4550 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்







Tuesday, March 28, 2023

PATHAAN ( 2023) ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @ அமெசான் பிரைம்

 


கடந்த  சில   மாதங்களாக  பாலிவுட்  உலகத்துக்கு  சனி  திசை  நடக்கிறது  என்பதைப்போல  அங்கே  தொடர்ந்து  படங்கள்  தோல்வியைத்தான்  சந்தித்து  வருகின்றன. 2018ஆம்  ஆண்டு  ஜீரோ  என்ற  தோல்விப்படம்  கொடுத்த  ஷாரூக்கான்  4  வருட  இடைவெளிக்குப்பின்  பாலிவுட்டில்  கொடுத்திருக்கும்  ஹிட்  படம்  தான்  இது  225  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்   உருவான  இப்படம் 1055  கோடி  வசூல்  சாதனை  செய்து கலக்கிக்கொண்டு  இருக்கிறது. தமிழில்  சரியாகப்போகவில்லை  என்றாலும்  அங்கே  இது  மெகா  ஹிட் , ஜேம்ஸ்  பாண்ட்  பாணி யில்  நம்ம  ஊர்  விஜயகாந்த் ,, அர்ஜூன்,சரத்குமார்  வகையறாக்கள்  அடிச்சு  துவைச்சு  காயப்போட்ட  இந்தியா - பாகிஸ்தான்  உளவுத்துறை  கதைதான்  இது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , வில்லன்  இருவருமே  இந்தியாவின்  ரா  ஏஜெண்ட்ஸ். வில்லன்  ரா  ஏஜெண்ட்  ஆக  இருந்தபோது  நாட்டுக்காக  பணி  செய்தவர்தான், ஆனால்  ஒரு  கட்டத்தில்  எதிரி  நாட்டினரால் பணயக்கைதிகளாகப்பிடிபட்ட  அவர் , அவரது நிறைமாத  கர்ப்பிணி மனைவி  இருவரும்  சித்திரவதைக்கு  ஆளான  போது  இந்தியா  வாய்ப்பிருந்தும்  அவர்களைக்காப்பாற்றாமல்  விட்டு  விட்டது . எதிரி  நாடு  வில்லனின்  மனைவியை  சுட்டுக்கொன்றது . இதனால்  இந்தியா  மீது  கடுப்பான  வில்லன்  எதிரி  நாட்டுடன்  சேர்ந்து  கொண்டு  இந்தியாவை  அழிக்கத்துடிக்கிறான்


காலாவதி  ஆன  அம்மை  வைரசை மீண்டும்  உருவாக்கி  அந்த  திட்டத்தை  இந்தியாவில்  நிறைவேற்ற  வில்லன் பாடுபடுவதும்  நாயகன்  எப்படி  அதை  முறியடிக்கிறார் என்பதும்தான்  கதை . 


நாயகன் - வில்லன்  கதை  மட்டும்  இருந்தால்  கிளாமர்  இருக்காது  என்பதால்  நாயகனுக்கு  உதவி  செய்ய  பாகிஸ்தான்  ஏஜெண்ட்  ஆக  நாயகி  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்ப்ட்டிருக்கிறது 


நாயகனாக ஷாரூக்கான். தில்வாலே  துல்ஹனியா  லே  ஜாயெங்கே  படத்தில்  தான்  இவரை  காதல்  நாயகனாக  நாம்  கொண்டாடினோம். விஜய்  வித்தியாசமான  கேரக்டரில்  நடித்த  பிரியமுடன்  படத்தின் ஒரிஜினல்  வெர்சன்  ஆன  பாசிகர்  படத்தில்  ஷாரூக்கின்  நடிப்பு  மிரட்டல்  ஆக  இருக்கும், அவற்றை  எல்லாம்  பார்த்து  விட்டு  இப்போது  முதிர்ச்சியான  முகத்துடன்  களை  இழந்த  ஷாரூக்கைப்பார்க்கும்போது  உத்தம  புத்திரன்  படத்தில்  யாரடி  நீ மோகினி  என்  ஸ்டைல்  காட்டிய  சிவாஜிகணேசனை  என்  தமிழ்  என்  மக்கள் படத்தில்  எப்படி  பரிதாபமாகப்பார்த்தோமோ  அப்படி  பார்க்க  வேண்டி இருக்கிறது


 வில்லனாக  ஹான்  ஆப்ரகாம்  கலக்கி  இருக்கிறார். ஜிம்  பாடி , மசில்ஸ்  பைசெப்ஸ்  எல்லாம்  தெறிக்க  அவர்  நடந்து  வரும்போதே  அள்ளுகிறது. அவரை  ஹாரூக்  ஃபைட்  போட்டு  ஜெயிக்கும்போது  காமெடியாக  இருக்கிறது 


நாயகியாக தீபிகா  படு கோனே . காஸ்ட்யூம்  டிசைனருக்கு  சம்பள  பாக்கி போல . 80  செமீ  ஜாக்கெட்  பிட்டை  இரண்டாகக்கிழித்து  40 செமீ ல  ஒரு  மேலாடை , மீதி  40  செமீ  ல  ஒரு  கீழாடை  என  படம்  முழுக்க  கிளாமராக  வருகிறார்.  சில  காட்சிகளில்  இவர்  உடை  அணிந்திருக்கிறாரா? சும்மா  ஷால்  மட்டும்  போட்டிருக்காரா? என  சந்தேகம்  வருகிறது . ஒரு  ஃபைட்  சீனில்  நல்லா  பண்ணி  இருக்கார் 


டிம்ப்பிள்  கபாடியா கமலின்  விக்ரம்  படத்தில்  இளமையாகப்பார்த்தது , இப்போ  பாட்டி  வயது  ஆகி  விட்டது ., பாவமாக  இருக்கிறது . உயர்  அதிகாரியாக  வருகிறார்


எக்தா  டைகர் , டைகர்  ஜிந்தாபாத்  ஆகிய  படங்களில்  நடித்த  சல்மான்கான்  இதில்  நாயகனுக்கு  உதவும்  கெஸ்ட்  ரோலில்  வந்து  அப்ளாஸ்  அள்ளுகிறார். ஹம்  ஆப்  கே  ஹேங்  கோன்ல  சாக்லெட்  பாய்  ஆகப்பார்த்து  விட்டு  இதில்  சத்யா  கமல்  கெட்ட்ப்பில்  தாடி  மீசை  உடன்  பார்க்க  என்னவோ போல்  இருக்கிறது 


  விஷால்  சேகர்  இசையில்  2  பாடல்கள்  நன்றாக  இருக்கின்றன . பிஜிஎம் மில் இன்னும்  கலக்கி  இருக்கலாம் . சச்சித்  பாலோஸ்  ஒளிப்பதிவில்  பிரம்மாண்டமான  காட்சிகள்  கண்  முன்  விரிகின்றன , அந்த  பனிப்பிர்தேச  பைக்  ரேசில் பின்னி  எடுத்து  விட்டார்கள் . ஆரிக்கின்  எடிட்டிங்கில்  145  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது , ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  அதகளம்,  காதில்  பூக்கூடைக்ள்தான் 

சபாஷ்  டைரக்டர்  ( சித்தார்த்  ஆனந்தா)


1  லாக்கரை  திறக்க  குறிப்பிட்ட  நபரின்  கை ரேகை  தேவை , அதைப்பெற தீபிகா  படுகோனே  போடும்  ஐடியா  செம . வழக்கமா  வில்லனை ஏமாற்ற  கேவலமான  ஒரு  கிளப்  டான்ஸ்  பாட்டு  இருக்கும், அது  இங்கே  மிஸ்சிங் , ஆனா  அந்த  எஃபக்ட்  இருந்தது 


2  தீபிகா  பாத்ரூமில்  வெயிட்  பண்ணி  அந்த  ஃபாரீன்லேடி  வ்ந்ததும்  அவள்  கெட்டப்க்கு  மாறுவது  செம  சீன், இந்த  சீனில்  எடிட்டர்  மிக  நேர்த்தியாக கட்  பண்ணி  இருந்தார் 

3   இரு  எதிர்  எதிர்  திசைகளில்  தலா  10  கிமீ  தூரத்தில்  இருந்து  இருவரும்  கிளம்பி  வர  விமானத்தை  நியமிப்பதும் , அந்த  காட்சி  எக்ஸிகியூசனும்  ஹாலிவுட்  படங்களுக்கு  நிகரான  பிரம்மாண்டம் 

4  ஆபாவாணனின்  இணைந்த  கைகள்  இண்டர்வெல்  பிளாக்  சீனை  நினைவுபடுத்தினாலும்  ஷாரூக் - தீபிகா  இருவரும்  ரோப்பில்   ஒரே  புள்ளியில்  இணையும்  காட்சி  அப்ளாஸ்  அள்ளும்  காட்சி 


  ரசித்த  வசனங்கள்  ( அப்பாஸ் டயர்வாலா)

1  மண்பானை  உடைஞ்சு  போச்சுன்னா  விரிசல்  விழுந்த  பகுதில  தங்கத்தால  ஜப்பானியர்கள்  ஒட்ட  வைப்பாங்க . அதன்  உறுதியும் அழகும்  அதிகம்  ஆகிடும், அதன்  விலை  மதிப்பும்  கூடிடும் அது  மாதிரி  தான்  போரில்  காயம்  பட்ட  ராணுவ  வீரர்களும்


2  நான்  எங்க  பாஸ்க்கு  அவரோட  சிம்மாசனத்தை  திருப்பித்தர்றேன்


3  எங்களுக்குனு  எந்த  ரூல்சும்  இல்லை , அதனால  ரூல்சை  மதிப்பவர்களுக்கு  எங்களைப்பிடிக்காம  போச்சு 


4   பிரசிடெண்ட்  கூட  ஒரு  செல்ஃபி  எடுத்திருந்தா  என்  சம்சாரத்தை  இம்ப்ரெஸ்  பண்ணி  இருக்கலாம்


  மேரேஜ்  ஆகி  30  வருசம்  ஆகியும்  இதுக்கு  மேலெ  உன்  சொந்த  சம்சரத்தை இம்ப்ரெஸ்  பண்ணி  என்ன  பண்ணப்போறே? 


5  சீட்டாட்டத்தில்  கைக்கு  வரும்  கார்டு  வெச்சுதான்  நாம  ஆட முடியும். இந்த  ஆட்டத்தைப்பொறுத்தவரை  மொத்த  ஏஸ் சும் என்  கிட்டே  தான்  இருக்கு 


6  பலவீனமானவங்கதான்  மண்டி  இடுவாங்க , சோல்ஜர்ஸ் இல்லை


7  மிஸ்!  போலீஸ்க்கு  நீ  இங்கே  இருப்பது  தெரிஞ்சா  பிரச்சனை  ஆகிடும் 


ஏன்?


 ஏன்னா  நீ  பாம்  மாதிரி  இருக்கே


8  சதுரங்கத்துல  ராணி  தனக்காக  உயிரை  விடப்போறா  என  ராஜா  நினைப்பான், அவன்  கான்செண்ட்ரேஷன் எல்லாம்   ராணியைக்காப்பாத்தறதுல தான்  இருக்கும்


9உன்னை  செமயா  அடிச்சிருக்காங்க , இந்த  பெயின்  கில்லர்  டேப்லெட்ஸ்


  புலிகளுக்கு  என்னைக்கும்  வலி  தெரியாது


10   ஒரு  பெண்ணை  எப்பவும்  காக்க  வைக்கவே  கூடாது 


11 இந்த  பாரீஸ்  சிட்டில  ரெண்டு  பேரு  ஒண்ணா  போனா  அது  கப்பிள் , மூணு  பேரு  போனா  அத்  கிரவுடு



12  யூ  லுக்கிங்  குட்


ஆல்வேஸ்...


 காதல்  என்பது  ,முதல்  பார்வைலதான்  வரும்னு  உனக்கு  யார்  சொன்னது ?


13   எது  வைரல் ஆகுதோ  அதுதான்  விலை  போகுது 


14   பயம்  மனுசங்களொட  கண்ணை  மறைச்சிடும் 


15   எங்கே  பார்ட்டி  நடந்தாலும்  கூப்பிடாமயே  ஆஜர்  ஆகிடறே!


16  நாடு  தனக்காக  என்ன  செஞ்சுது?னு  ஒரு  சோல்ஜர்  கேட்கவே  மாட்டான், நாட்டுக்காக நாம   என்ன  செஞ்சோம்?னு  தான்  யோசிப்பான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  சரியான  பேக்கு  அப்டினு  நினைக்கறேன். யாருக்குமே  தான்  யார்னு  தெரியக்கூடாதுனு  முழு  முகக்கவசம்  கம்  ஹெல்மெட்  போட்டிருக்கும்  அவன்  ஹீரோ  கிட்டே  ஹெல்மெட்  கழட்டி  என்னை யார்?னு  தெரியுதா? நான்  செத்துட்டேனு  தானே  நினைச்சே? நான்  இன்னும்  சாகலைங்கறான். அடேய்  ரானா  ஹெக்சாடாக்டைலா 


2  பொதுவா  கோட்  சூட்  போட்டுட்டு  பந்தாவா  கூலிங்  கிளாஸ்  போட்டுட்டு  பஞ்ச்  டயலாக்  பேசுவாங்க. இதுல  கிறுக்கு  வில்லன்  ஸ்விம்மிங்  பூல்ல  இருந்து  வெறும்  அண்டர் டிராயரோட  எழுந்து  பந்தாவா  கூலிங்  கிளாஸ்  போடறான்.  சிரிப்பா  வருது .இதை  ஷூட்  பண்ணும்போது  கேவலமா  அவங்களுக்கு  தோன்றி  இருக்காதா?


3  தீபிகா  லாக்கரில்  கை  வைக்கும்போது  கிளவுஸ்  போடாம  திருட்டு  வேலை  பண்றாரே? கை  ரேகை  ஆதாரமா  சிக்கிடாதா?


4  ஷாரூக்  அந்த  ரகசியத்தை  கைப்பற்றியதும் பேண்ட்  பாக்கெட்டிலோ  ஜெர்கின்  பாக்கெட்டிலோ  வைத்து  இருக்கலாமே? எதற்கு  தீபிகா  மேலே  இருந்து  அதை  வீசு  என்றதும்  இவர்  வீச  வேண்டும் ? 


5  க்ளைமாக்ஸ் ல  வில்லன்   ஸ்பைடர் மேன்  இறக்கை  மாதிரி எதையோ  ஃபிட்  பண்ணி  எஸ்  ஆகறான், அது  அவன்  இடம் , அவன்  ஆராய்ச்சி  பண்ணி  ட்ரெயல்  பார்த்து  ரெடி  பண்ணின  சாதனம், ஆனா  அது  பற்றிய  எந்த  நாலெட்ஜூம்  இல்லாத  ஹீரோ  அதே  மாதிரி  இன்னொரு  உடுப்பை  எடுத்து  மாட்டிக்கிட்டு  அவர்  பாட்டுக்குக்கிளம்பிடறாரு, எப்படி  ஆபரேட்  பண்றதுன்னே  தெரியாம  என்ன  செய்யபோறாரு?


6  வில்லன்  கிளம்பும்போது  தான்  யூஸ்  பண்ண  மாதிரி  ஒரு  சாதனம் எக்ஸ்ட்ராவா  ஒண்ணு  வெச்சுட்டா  போவான்,? அதை  எரேஸ்  பண்ணிட்டோ ,செயல்  இழக்க  வெச்சுட்டோதானே  போவான்?


7   வில்லனோட  பிளான்  என்ன?னு  யாருக்குமே  தெரியாது , அவன்  பாட்டுக்கு  சும்மா  இருந்திருந்தா  அவன்  பிளான்  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கும், அவன்  என்னடான்னா  கிறுக்கன்  மாதிரி  ஹீரோ கிட்டே  இடம் சுட்டி  பொருள் விளக்கிட்டு  இருக்கான். இந்த  ரிமோட் இருந்தாதான்  அதை  தடுக்க  முடியும், இதை  என்  கி ட்டே இருந்து  பிடுங்க  நினைக்காதேங்கறான், அய்யோ  ராமா 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - லிப்  லாக்  சீன்ஸ்  18+  காட்சிகள்  ஏதும்  இல்லை , நாயகி  தீபிகா  மட்டும்  அரைகுறையா  உலா  வருவார் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்  ரசிகர்கள்  , மாமூல்  மசாலாப்படப்பிரியர்கள்  பார்க்கலாம் .  ரேட்டிங்  2.5 / 5 



Pathaan
Pathaan film poster.jpg
Theatrical Release Poster
Directed bySiddharth Anand
Written byAbbas Tyrewala (dialogues)
Screenplay byShridhar Raghavan
Story bySiddharth Anand
Produced byAditya Chopra
Starring
CinematographySatchith Paulose
Edited byAarif Sheikh
Music byScore:
Sanchit Balhara
Ankit Balhara
Songs:
Vishal–Shekhar
Production
company
Distributed byYash Raj Films
Release date
  • 25 January 2023
Running time
146 minutes[a]
CountryIndia
LanguageHindi
Budgetest. ₹225 crore[3]
Box officeest. ₹1,048.30 crore[4] (US$130 million)

Monday, March 27, 2023

CAUGHT OUT ;CRIME,CORRUPTION,CRICKET (2023) -சினிமா விமர்சனம் ( டாக்குமெண்ட்ரி ) @ நெட்ஃபிளிக்ஸ்


கிரிக்கெட்  ரசிகர்கள்  மட்டும்  அல்லாமல்  பத்திரிக்கைத்துறை  மற்றும்  இன்வெஸ்டிகேஷன்  ஜர்னலிசம்ல  ஆர்வம்  உள்ளவர்களும்  பார்க்கத்தகுந்த  இந்த படம்  டாகுமெண்ட்ரி  ஸ்டைலில்  எடுக்கப்பட்ட  ஒரு சின்ன  படம் . படத்தின்  மொத்த  ட்யூரேஷனே  ஒன்றே  கால்  ,மணி  நேரம்  தான். நெட்  ஃபிளிக்ஸ்ல  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


1990 களில்  கிரிக்கெட்  இந்தியா  மட்டுமல்லாமல்  உலகம்  பூரா  கொண்டாடப்பட்ட  ஒரு  விளையாட்டாக , ஒரு  திருவிழாவாக  இருந்தது . தெஹல்கா  டாட்  காம்  எனும்  பத்திரிக்கை  கிரிக்கெட்டில்  நிகழ்ந்த  ஊழல்  , மேட்ச்  ஃபிக்சிங்  பற்றி  ஆவணங்களை  வெளியிட்டு உலகத்துக்கு  ஊழல்வாதிகளை  வெளிச்சம்  போட்டுக்காட்டியது 


இந்திய  வீரர்களைப்பொறுத்தவரை  மனோஜ்  பிரபாகர் , கபில் தேவ் , அசாருதீன்  ஆகியோர்  மீது  குற்றச்சாட்டு  வைக்கப்ப்ட்டது . இதில்  கபில்  தேவ்  மீது  வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுகள்  நிரூபிக்கப்படவில்லை.  மீதி  இருவருக்கும்  வாழ்நாள்  தடை  விதிக்க[ப்பட்டது 


 இது  பற்றிய  டாகுமெண்ட்ரி  படம்  தான்  இது 


 இதில் அசாருதீன் , மனோஜ்  பிரபாகர்  ஆகியோரின்  பேட்டிகளும் , கபில்  தேவின்  சிறிய  உரையும்  இணைக்கப்பட்டுள்ளது 


சுப்ரியா சோப்தி  குப்தா  தான்  இதன்   டைரக்டர்



  ரசித்த  வசனங்கள் +  முக்கிய  தகவல்கள் 


1 கிரிக்கெட்  வீரர்களை  ரசிகர்கள்  கடவுளாக  நினைத்தார்கள், ஆனால்  அவர்களும்  மனிதர்கள் தானே? அந்த  பலவீனத்தைக்காட்ட  ஆரம்பித்தார்கள் 

2   1990கள் தான் கிரிக்கெட்  உலகின் உச்சம். கிரிக்கெட்  வீரர்கள் கடவுளாக  கொண்டாடப்பட்டார்கள் 

3  பிரஸ்  பாக்ஸ் ல  உட்கார்ந்திருப்பவர்கள்  புக்கீஸ்  கிட்டே  ஃபோன்ல  பேசக்கூடாது, அது  இல்லீகல் 

4  சூதாடுபவர்கள்  எப்போதும்  ஜெயித்துக்கொண்டே  இருப்பதில்லை , புக்கீஸ்  ஒரு போதும்  தோறபதில்லை

5  நைண்ட்டீஸ்ல  கேபிள்  கனெக்சன்  வந்ததால  கிராமங்கள்  பூரா  கிரிக்கெட்  மேட்ச்  பார்க்க  ஆரம்பிச்சாங்க . பெரும்பாலானவர்களின்  கனவு  இந்தியாவுக்காக கிரிக்கெட்  விளையாடுவது

6  மனோஜ்  பிரபாகர்  ஒரு  வேகப்பந்து  வீச்சாளர், ஆல்ரவுண்டர். ஏழைகளின்  கபில்தேவ்  என  அழைக்கப்ட்டார் 

7   நீங்க  ரொம்ப  கோபக்காரர்னு  சொல்றாங்களே?  

மனோஜ்  பிரபாகர்   -  கிரவுண்ட்ல  கோபத்தைக்காட்டலைன்னா  உங்க  கதை  அங்கேயே  முடிஞ்சிடும் 

8  மனசுல  இருக்கறதை  வெளில  சொல்ல  வாய்ப்பு  இல்லை. அதுக்கு  பயமும்  ஒரு  காரணம் 

9  1997ல்தான்  இது  பற்றிய  நியூஸ்  வெளில  வந்தது

10  பாகிஸ்தானுக்கு  ஆதரவாக  மேட்சை  திருப்பி  விட  அதாவது  நாங்கள்  மோசமாக  விளையாட  25  லட்சம்  ரூபாய் தரப்பட்டது  என  மனோஜ் பிரபாகர்  சொன்னார்

11  ஸ்போர்ட்ஸ்  என்ப்து  எழுதி  வெச்சு  பேசி  வெச்சு  அதன்படி  நடப்பது  கிடையாது . எதிர்பாராத  நேரத்தில்  யாரும்  எதிர்பாராதது  நடப்பதுதான் அழகு

12   1997ல்  புகார்  எழுந்தாலும்  2000ம்  ஆண்டில்  தான்  விஷயம்  வெளில  வந்தது 

13   தென்  ஆப்பிரிக்க  வீரர்  ஆன  ஹான்சி க்ரோஞ்சி  ஒரு  குக்கீஸ்  கிட்டே  பேரம்  பேசிய  டேப்  வெளியானது 

14  தெஹல்கா  டாட்  காம்  பத்திரிக்கையின்  நோக்கம்  ஊழலை  வெளிக்கொண்ருவது. இது  ஒரு  உருது  வார்த்தை . உண்ர்ச்சி  தாக்கம்  பற்றிக்கொண்டு  வெடித்தல்   இதன்  ஸ்லக்  லைன்  நியூஸ்  வியூஸ்  ஆல்   த ஜூஸ் 

15  இந்தியாவிலேயே  முதன்  முறையாக  ஸ்பை  கேமரா  ஹிடன் காமரா  யூஸ்  பண்ணுனது  இந்த  கிரிக்கெட்  மேட்ச்  ஃபிக்சிங்  விவகாரத்தை  வெளிக்கொணர்வதில்தான்

16  ஃபாலன்  ஹீரோஸ்   எனும்  முதல்  டாக்குமெண்ட்ரி  எடுத்தோம்

17  கபில்  தேவ் ,மனோஜ் பிரபாகர்  இருவருக்குமிடையே  இருந்த  தனிப்பட்ட  விரோதம்  காரணமா? 

18  மேட்ச்  ஃபிக்சிங்கில் சம்பந்தப்பட்ட  கிரிக்கெட்  வீரர்களின்  பெயர்  வெளி  வந்தது , ஆனால்  புகீஸ்  பேரு  வர்லை 

19 ஹான்சி க்ரோஞ்சி  =30,000  டாலர்  லஞ்சமா  கொடுத்தாங்க 

20 முகேஷ்  குப்தா  தான்  தானாக  முன்  வந்து  சாட்சி  சொன்னவர்

21 அசாருதினின்  மணீக்கட்டை  கடவுள்  பொறுமையா  அருமையா  படைச்சிருக்கார்னு  தோணும், பவுலரின்  ஈகோவை  உடைக்கும்  வல்லமை  கொண்டது  அவர்  மணிக்கட்டு

22  அசாருதீன்  முதல்  மேட்சிலேயே  சதம்  அடித்தார். 2வது  3 வது  மேட்சிலும்  சதம் அடித்தார்

23   இந்த  கிரிக்கெட்  மேட்ச்  ஃபிக்சிங்கில்  அசார்  பேர்  அடிக்கடி வர  ஆரம்பித்தது

24  அசாருதினின்  கேர்ள்  ஃபிரண்ட்  ஃபெஷன்  ஷோவுக்கு  பணம்  தேவைபபட்டதாக  அஜய்  சர்மாவிடம்  சொல்லி  இருக்கார்

24  டெல்லி  தாஜ்  ஹோட்டல் - எம் கே  குப்தா  - அசார்  மீட்டிங்

25  ஒரு  குக்கிக்கு  மற்ற  வீரர்களை  விட  கேப்டன் தான்  அதிக  ஃபொகஸ்

26  அமெரிக்கா -ஹரோட்ஸ்   ல பர்ச்சேஸ்  பண்ணிய  அசார்  பில்லை  வேற  ஒரு  குக்கி 

27  மேட்ச்  ஃபிக்சிங்  இல்லீகல்  ஆனா  கிரிமினல்  குற்றம்  இல்லை 

28 அசாருதீன்  மனைவி சங்கீதா  வீட்டில்  ரெய்டு


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     இது  ஒரு  வரலாற்று  ஆவணம்  என்பதால்  நியூஸ்  பேப்பர்  படிக்கும்  ஆர்வம்  உள்ளவர்கள்  பார்க்கலாம்.  போர்  அடிக்காமல்  சுவராஸ்யமான  தகவலுடன்  படம்  நகர்கிறது , ரேட்டிங் 2.5 / 5