Friday, February 03, 2023

YOU PEOPLE (2023) - ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


காமெடி  கலக்கல்  மன்னன்  எடி  மர்ஃபி  நீண்ட  இடைவெளிக்குப்பின்  நடித்திருக்கும்  படம்  இது ஆனால்  இதில்  அவர்  நாயகன்  அல்ல , நாயகியின்  அப்பாவாக  குணச்சித்திரக்கேரக்டர் . இது  காமெடி  மெலோ  டிராமா  படம்  தான்  ஆனால்  வழக்கமாக  எடி  மர்ஃபி யின்  பிராண்டட்  காமெடி  இதில்  இருக்காது 

1980 களில்  பாரதிராஜா  உட்பட  பல இயக்குநர்களின்  படங்களில்  காதலும்  ஜாதி மத  வேறுபாடுகளும்  இருந்தன.  ஏகப்பட்ட  காதல்  படங்கள்  வெளியானது , ஹிட்  ஆனது , அதே  பாணியில் இந்த 2023  லும் இன  நிற  வேற்றுமைகளால்  ஏற்படும்  காதலர்களுக்கான  பிரச்சனைகளைப்பற்றி  பேசும்  படம்  இது 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் ஒரு  வெள்ளை  இனத்தவன் .  நாயகி  ஒரு  கறுப்பினப்பெண்.  இருவரும்  ஒரு  கார்  பயணத்தில்  சந்திக்கிறார்கள்  , பழகுகிறார்கள்  டேட்டிங்  போகிறார்கள்  , இரு  குடும்பத்து  பெரியவர்களும்  சந்திக்கிறார்கள் 


இதில்  நாயகியின்  அப்பாவுக்கு  நாயகனைப்  பார்த்ததுமே  பிடிக்கவில்லை , அதனால்  கிடைக்கும்  எல்லா  சந்தர்ப்பங்களிலும்  அவனை  மட்டம்  தட்டுவது , கிண்டல்  செய்வது , கடுப்பேற்றுவது ,  அவர்கள்  இன  ஆட்களிடம்  வகையாக  மாட்டி  விடுவது  என  அவர்கள்  காதல்  பிரேக்கப்  ஆக  என்ன  என்ன  உள்ளடி  வேலைகள்  செய்ய  முடியுமோ  அவற்றை  எல்லாம்  செய்கிறார்


  நாயகனின்  அம்மாவுக்கு  நாயகியை  மிகவும்  பிடித்து  இருக்கிறது , ஆனால்  அவர்  எனக்கு  கறுப்பின  மருமகள்  என  பலரிடம்  பெருமையாக  சொல்கிறார்.  அது  நாயகிக்குப்பிடிக்கவில்லை  .  நார்மலாக  இல்லாமல்  அவர்  ஏதோ  தியாகம்  செய்வது  போல  தனக்கு  வாழ்க்கை  கொடுப்பது  போல  பேசுவது  பிடிக்கவில்லை . நாயகனின்  அம்மா  அதாவது  நாயகியின்  மாமியார்  தன்  மருமகளின்  அழகைப்புகழ்ந்தால்  கூட  நான்  ஒன்றும்  பொம்மை   இல்லை , என்னை  சக  மனுஷியாக  ட்ரீட்  பண்ணினா  போதும்  என்கிறாள் ‘


 பல  சந்திப்புகள்  பல  நிகழ்வுகள்  நடந்தபின்  நாயகன்  நாயகி  இருவரும் நமக்குள்  நம்ம  ஃபேமிலிக்கு  இது  ஒத்து  வராது  என  பிரேக்கப்  செய்கிறார்கள் 


 இதற்குப்பின்  இவர்கள்  வாழ்க்கையில்  நடந்தது  என்ன? என்பது  க்ளைமாக்ஸ் 

’நாயகனாக  ஜோனா  ஹில்  அடக்கி  வாசித்து  மனங்களைக்கொள்ளை  கொள்கிறார். பல  காட்சிகளில்  நடிக்க  நல்ல  வாய்ப்பு 


நாயகியாக   லாரன்  லண்டன்  சிறப்பான  பங்களிப்பு , அவரது பலவித  ஹேர்  ஸ்டைல்  கலக்கலாக  அமைந்திருக்கிறது 

  நாயகியின்  அப்பாவாக  கிட்டத்தட்ட  வில்லனாக  எடி  மர்ஃபி , வெறுப்பு  வருவது  போல்  நடந்து  கொள்வது  கச்சிதம் 


நாயகனின்  அம்மாவாக  வரும்  ஜூலியா  லூயிஸ்  மிக  இளமையாக  நாயகியின்  தங்கை  போல  இருப்பது  வியப்பு , இவரது  நடிப்பும்  சிறப்பு


 வசனங்கள்  பல  இடங்களில்  புருவங்களை  உயர்த்த  வைக்கிறது / அதிகபட்சம்   ஆறு பேர்கள் தான்  மொத்தப்படத்தையும்  ஆக்ரமிக்கிறார்கள்


அதிக  செலவில்லாமல்  மினிமம்  பட்ஜெட்டில் எடுக்கபப்ட்ட  நல்ல  ஃபேமிலி  மெலோ டிராமா   இது


 ஏ  சர்ட்டிஃபிகேட்  கொடுக்கப்பட்டிருந்தாலும்  அது  வசனத்துக்காகத்தான் ,  காட்சி  ரீதியாக  அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும் இல்லை 


கென்யா  பேரிஸ்  இயக்கம்  கனகச்சிதம் .,  க்ளைமாக்ஸ்  காட்சி  காதலுக்கு  மரியாதை  படத்தை  நினைவு  படுத்துகிறது .  2  மணி  நேரம்  ஓடும்  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி டி  யில்  வெளியாகி  உள்ளது


சபாஷ்  டைரக்டர்


1   நாயகியின்  மாமியார்  வெள்ளைக்காரர் , நாயகி  கறுப்பினத்தவர், இருவரும்  ஒரு  பியூட்டி  பார்லர்  க்கு  போறாங்க , அது  மாமியார்  ரெகுலராக  வரும்  இடம்  தான் , மருமகளுக்கு  ஹேர் கட்  பண்ண  அப்பாயிண்ட்மெண்ட்  வாங்க  வந்தவர்  ரிசப்ஷனிஸ்ட்  லேடி  ஃபோனில்  பேசிக்கொண்டே  வெயிட்  பண்ணுங்க  என  கை  காட்டியதால்  வெயிட்  செய்தவர்  அவர்களுக்குப்பின்  வந்த  ஒரு  வெள்ளைக்காரப்பெண்ணை  மட்டும்  உள்ளே  அலோ  பண்ணியதைப்பொறுக்க  மாட்டாமல் இது  ரேசிசம் ( வெள்ளை - கறுப்பின நிற  பாகுபாடு ) அவரிடம்  சண்டை  போடும்போது   அனுமதிக்கப்பட்ட  பெண்  அங்கே  பணி  புரியும்  சக    ரிசப்ஷனிஸ்ட்  என  அறிந்ததும் அசடு  வழியும்  இடம்   கலக்கல்   காமெடி 


2   நாயகியின்  தந்தை  ஒரு  முஸ்லீம். அவர்  தன்  தலையில்  அணிந்திருக்கும்  குல்லா வின்  மகிமை  பற்றி  பேசிக்கொண்டிருக்கும்போது  நாயகனின்  அம்மா  எதேச்சையாக  டைனிங்  டேபிள்  பக்கம்  வந்தவர்  மெழுகுவர்த்தியை  தட்டி  விட  அது  அவர்  தொப்பியை  எரிக்க  அதை  கீழே  போட்டு  மிதித்து  நெருப்பை  அணைக்கும்  நாயகன்  அப்பாடா  பிரச்சனை  முடிந்தது  என  சொல்லும்  சீனில்  நாயகியின்  முறைப்பு... செம  

3  நாயகன்  தன்  மாமனாருடன்  காரில்  டிரைவ்  போய்க்கிட்டு  இருக்கும்போது  ஒலிக்கும்  பாடலைப்பற்றி  வேண்டும்  என்றே  சிலாகித்து  பொய்யாய்  பாராட்ட    மாமனார்  இந்த  சாங்  பற்றி  சொல், டைட்டில் என்ன  ? என  மடக்குவதும்  நாயகன்  சொதப்புவதும்  காமெடி 


4  மருமகனை  மட்டம்  தட்ட  முடிவெடுத்த  மாமனார்    கறுப்பினத்தவர்  ஆடும்  பேஸ்கட்  பால்  கிரவுண்டில்  மருமகனை  கோர்த்து  விட  அவர்  தடுமாறும்  தருணங்களை  வீடியோ  எடுத்து  சந்தோஷப்படுபவர்  பிறகு  மருமகன்  பிரமாதமாக  ஆடும்போது  அதை  கேமராவில்  கேப்சர்  பண்ணாமல்  அதிர்ந்து  போய்  பார்க்கும்  காட்சி  கூஸ்பம்ப்  சீன்  என்றால்  அப்போது  நாயகன்  என்ன  மாமா? இப்போ  வீடியோ  எடுக்கலையா?  என  கேட்பது  செம 


5  எதிர்பார்க்காத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  கச்சிதம் 




  ரசித்த  வசனங்கள் 


1  உனக்கு  கேர்ள்  ஃபிரண்ட்  இருக்காளா?


 இல்லை ‘


 அதை  ஏன்  இவ்ளோ  சோகமா  சொல்றே?


2  சமுதாயத்தில்  மிக  ஆபத்தானவன்   யார்  தெரியுமா? தன்  கிட்டே  இழக்க  எதுவுமே  இல்லாதவன்  தான்


3   அப்பாவோட  பர்மிஷன்  வாங்கி  எல்லாம்  நான் டேட்டிங்  போறதில்லை , ஏன்னா  நான்  வளர்ந்துட்டேன்


4  அவங்களுக்கு  பேஸ்கட்  பால்  பற்றி  எதுவுமே  தெரியாது , ஆனா  பார்க்கற  பெண்களை  எல்லாம்  கைக்குள்ளே  போட்டுக்கனும்னு  நினைப்பாங்க 


5   நீ  என்னை  கரெக்ட்  பண்ணப்பார்க்கறேனு  நினைக்கறேன்,  ரொம்ப  தைரியம்  தான் 


6  நீ  என்  செல்லப்பையன் , உனக்கான  அழகான  அற்புதமான  பெண்ணை    செலக்ட்  பண்ணி  இருக்கே? எனக்கு  ஏன்  நோ  சொல்லத்தோணும் ?  எனக்கு  ஓக்கே  தான் , ஆனா  நம்ம  இனமா  இருந்திருந்தா  இன்னும்  நல்லா  இருந்திருக்கும் 


7  நீங்க  பாரம்பரியத்தை  அடிமைத்தனத்தோட  கம்பேர்  பண்றீங்க 


8  எங்க  அம்மாவைப்பற்றி  குறை  சொல்லாத , அவங்க  சில  சமயம்  முட்டாள்  தனமா  பேசுவாங்க, ஆனா  நல்லவங்க 


9  உங்க  அப்பா வுக்கு  காமெடி  சென்சே  இல்லை ,  எப்பப்பாரு  கோபமாவே  முகத்தை  வெச்சிருக்காரு 


 இதை  எங்க  அப்பாவோட  தனிப்பட்ட  குணமா  சொல்றியா ,?  டோட்டலா  கறுப்பினத்தவரே  அப்படித்தான்னு  சொல்ல    வர்றியா? 


10  நாம  வாழ்க்கைல  எப்படி  முன்னேறிப்போகறோம்?னு  தான்  யோசிக்கனும், அப்போதான்  நம்ம  ஆரம்பமே  அசத்தலா  வரும் 


11   எனக்கு  இப்போ  என்னவோ  போல்  இருக்கு,  பீரியட்ஸ்  வேற  மோசமா  இருக்கு ‘


  டியர், எனக்கு  35  வயசாகுது , இதுவரை  பீரியட்ஸ்  எனக்கு  வந்ததே  இல்லை , ஏதாவது  டாக்டரைப்பார்க்கனுமா?



12    நீ  நினைச்சபடி  நட,  உன்  கனவை  ஃபாலோ  பண்ணு  அப்டினு  உங்க  பொண்ணு  அடிக்கடி  சொல்லுவா


 சரி , நீ  உன்  கனவை  ஃபாலோ  பண்ணினா  என்  பொண்ணுக்கு  எப்படி  எப்போ  சாப்பாடு  போடுவே? 


13    நீ  ஏதோ  ஒரு  பார்க்  பற்றி  அடிக்கடி  சொல்வியே? அடிக்கடி  அங்கே  போவே அப்டினு  அந்த  பார்க்  பற்றி  என்  சொந்தக்காரங்க  கிட்டே  கேட்டேன், யாருக்குமே  அது  பற்றி  தெரில , கூகுள்ல  கூட  சர்ச்  பண்ணி  பார்த்துட்டேன், காணோம்


 அது  அது  வந்து   ரொம்ப  அபூர்வமான  பார்க் ,  அதான்  கூகுளில்  கிடைக்கலைனு  நினைக்கறேன் 


14  கறுப்பு  இனத்தவரைப்பொறுத்தவரை  ஒயிட்  இனத்தவர்  எல்லாரும்  சீட்டர்ஸ் (  ஏமாற்றுக்காரர்கள் )  இதை  நீங்க  கடந்து  வரனும் 


15   உனக்குத்தெரிஞ்சவங்க , பழக்கமானவங்க  எல்லாரும்  கொக்கெய்ன்  அடிப்பாங்க , ஆனா  நீ  மட்டும்  அடிக்க  மாட்டே?  சரிதானே? 


16   என்  ஆள்  எப்படி  இருக்கான் ?


 பார்க்கறதுக்கு    அடி  வாங்க  செஞ்சு  வெச்சவன்  மாதிரியே  இருக்கான் அளவா  அழகா


17  இந்த  மாதிரி  ஒரு  வெட்டிங்  பார்ட்டியை  நான் பார்த்ததே  இல்லை இத்தனைக்கும்  நான்  3  தடவை  கல்யாணம்  பண்ணி  இருக்கேன், அதுல  2  கல்யாணம்  கோர்ட்டுக்குள்ளே  நடந்தது 


18  இந்த  ஸ்டோரியோட  மாரல்  என்னான்னா  உங்க  ஓயிஃபை  மதிக்காத  பெண்  கூட  டேட்டிங்  போகாதீங்க 


19  இரு  வேறு  இடத்துல  இருந்து  வர்றவங்க  சேர்ந்து  வாழும்போது ஒருவருக்கொருவர்  தியாகம்  செய்து  வாழ  வேண்டி  இருக்கும் 


20   நீங்க  ஒரு  விஷயத்தை  நேசித்தால்  அதை  எல்லார்  கிட்டேயும்  ஷேர்  செய்வதை  விட  அதை  உங்களுக்குள்ளேயே  வைத்துக்கொள்வது  மிகவும்  நல்லது 


21  ஒரு  வீட்டை  உருவாக்குவது  என்பது  வெறும்  செங்கல்லை  வெச்சு  மட்டும் அல்ல ,   இரு  இதயங்களை  வைத்து 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -   காதலர்களுக்குப்பிடிக்கும். லவ்  அண்ட்  அரேஞ்ச்டு  மேரேஜ்  செய்பவர்கள்   அவசியம்  காண  வேண்டிய  ஃபேமிலி  மெலோ டிராமா  . ரேட்டிங் 2.75 / 5  




You People
You People Film Poster.jpg
Film poster
Directed byKenya Barris
Written by
Produced by
Starring
CinematographyMark Doering-Powell
Edited byJamie Nelsen
Music byBekon
Production
companies
Distributed byNetflix
Release dates
  • January 20, 2023 (Limited)
  • January 27, 2023 (Netflix)
Running time
118 minutes
CountryUnited States
LanguageEnglis

0 comments: