Wednesday, February 15, 2023

MONEY HEIST (2017-2020 )(ஸ்பானிஷ்)- வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் ட்ராமா த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ் 18 +


உலக  அளவில்  அதிக மக்களால்  பார்க்கப்பட்ட , ரசிக்கப்பட்ட  வெப்சீரிஸ்  எவை  என  ஒரு  பட்டியல்  எடுத்தால்  அதில்  நெ1  இடத்தில்  இருப்பது 2011ல்  வெளியான GOT   எனப்படும் GA,ME OF THRONES.  இரண்டாவது  இடம்  மணி ஹெயிஸ்ட் தான். பாங்க் ராபரி  த்ரில்லர்  வகையறாவைச்சேர்ந்த  இந்த  வெப்சீரிஸ்  பற்றிப்பார்ப்போம்

ஒரிஜினல்  வெர்சனில்  அதிக  எபிசோடுகள்  இருந்தாலும்   நெட்  ஃபிளிக்ஸ்  அதை  ட்ரிம்  பண்ணி  பாகம்  1  ல்  13  எபிசோடுகள் ஆகவும்  பாகம்  2 - 9  எபிசோடுகள் ஆகவும்  வெளியிட்டது. ஒவ்வொரு  எபிசோடும் 45  நிமிடங்கள்  டூ  50  நிமிடங்கள்  , ஆக  மொத்தம்  17  மணி  நேரங்கள் ஆகும்  முதல்  2  பாகங்களில்  வரும்  ஒரு  செட்  கதையைப்பார்க்க , ஆனால்  டி வி  சீரியல்  போல ஜவ்வு  இழுப்பு  இல்லாமல்  சுவராஸ்யமாகக்கொண்டு  போய்  இருப்பது  இதன்  பிளஸ்


நாயகனின்  அப்பா  ஒரு  வங்கியில்  கொள்ளை  அடிக்க  முயலும்போது  சுடப்பட்டு  இறந்து  விட்டார். தந்தையின்   கனவை  நனவாக்க  நாயகன் எடுக்கும்  முயற்சிகள்  தான்  கதை. பக்காவாக  திட்டம்  இடுகிறான். எட்டு பேர்  கொண்ட  குழுவை  ரெடி  செய்கிறான், அவர்களுக்கு  ஒரு  பங்களாவில் ஆறு  மாதங்கள்  பயிற்சி  அளிக்கிறான்


கொள்ளை  அடிக்க உள்ளே  நுழைந்ததும்  போலீஸ்  என்ன  என்ன  நடவடிக்கை  எடுக்கும்? அதற்கு  எதிர்  நடவடிக்கை  எப்படி  எடுக்க  வேண்டும் ?  பணயக்கைதிகளை  எப்படி  ஹேண்டில்  செய்வது? என  எல்லாவற்றையும்  திட்டமிட்டு  பயிற்சி  அளிக்கிறான்


 நம்ம  நாட்டில்  நாசிக்  எனும்  இடத்தில்  பணம்  அச்சிடப்படுவது  போல  ஸ்பெயினில் ராயல்  மிண்ட்  எனும்  இடத்தில்  பணம்  அச்சடிக்கப்படுகிறது.அங்கே  பொதுமக்கள்  வந்து  செல்லும் ஒரு  மியூசியமும்  உள்ளது  நாயகனின்  பிளான்  படி  கட்டிடத்துக்கு  உள்ளே  போய்  அங்கே  இருக்கும்  பணத்தை  எடுத்துக்கொண்டு  வாசல்  வரை  வர  வேண்டும் . பின்  பயந்து பின் வாங்குவது  போல நடித்து போலீசிடம்  இருந்து  தப்பிக்க  மீண்டும்  கட்டிடத்துக்கு  உள்ளேயே  போய்  அங்கே  சில  நாட்கள்  தங்க  வேண்டும். பணத்தை  புதுசாக  அச்சடிக்க வேண்டும்.பின்  எல்லாப்பணத்தையும்  கொள்ளை  அடிக்க   வேண்டும், இதுதான்  நாயகனின்  திட்டம் 


  இந்தக்கொள்ளையைத்தடுக்க   அமைக்கப்படும்  போலீஸ்  டீமில்  இருக்கும்  லேடி  இன்ஸ்பெக்டர்  தான்  நாயகி . வங்கிக்குள்  8  பேர்  இருப்பார்கள், ஆனால்  நாயகன்  மட்டும் வெளியே  இருப்பார். ஆனால்  போலீஸ்க்கு  அந்த  விஷயம்  தெரியாது . வெளியே  இருந்து  கொண்டே  போலீசின்  திட்டங்களை  அறிந்து  அதற்கு  ஏற்றபடி  உள்ளே  இருப்பவர்களை  இயக்குவது  நாயகனின்  மாஸ்டர்  ,மைண்ட். நாயகனின்  திட்டம்  வெற்றி  அடைந்ததா? என்பதுதான்  திரைக்கதை


அலெக்ஸ் பினா  தான்  இதன்  இயக்குநர். மிக  விறுவிறுப்பாக  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காமல்  கொண்டு  செல்கிறார்.


நாயகனாக  ப்ரொஃபசர்  கேரக்டரில்   ஆல்வரோ  மார்ட்டே  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். நம்ம  ஊர்  ஏப்ரல்  மாதத்தில்  ஸ்ரீகாந்த்  சாயலில்  அவர்  தோற்றம்


நாயகியாக  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ராக்கெல் ஆக   இட்சியார் இட்னோ  கம்பீரமாக  நடித்திருக்கிறார். தான்  நம்பிய  நாயகன்  தன்னை  மோசம்  செய்து  விட்டான்  என  கலங்கும் போதும்  உண்மை  கண்டறியும்   சோதனை  மிஷினில்  தன்னை  அவன்  நிஜமாக  காதலித்தானா? என  அறிய  முயல்வதும்  அருமையான  நடிப்பு


மேனி  சாண்டீஸ்டபன்  அட்டகாசமான  பின்னணி  இசையை  வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு  மைக்  அமோடோ  கண்  முன்  காட்சிகளை  நேரில்  பார்ப்பது  போல  ஒளிப்பதிவு  செய்திருக்கிறார்


பார்த்தே  தீர  வேண்டிய  விறுவிறுப்பான  த்ரில்லர்  இது , நெட் ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர் 

1  பாங்க்  ராபரி  த்ரில்லர்களில் டமால்  டுமீல்  துப்பாக்கி  சத்தம்  கேட்டு  சலித்த  நம்  காதுகளை  இதில்  காப்பாற்றி  முற்றிலும்  புதிய  கோணத்தில் நாயகன் புரொஃபசர்- நாயகி ராக்கெல்   காதல் ,  டோக்கியோ -ரியோ காதல் , பெர்வின் - லேடி  காதல் , ஏஞ்சல் - நாயகி  ராக்கெல்  காதல் , ஆர்த்ரோ -மோனிகா காதல் ,  அலிசன்  பார்க்கர்- காதலன்  காதல் ,டென்வர் =லேடி  காதல் என  ஏகப்பட்ட  காதல்  கதைகளை  ரசிக்கும்  சம்பவங்களுடன்  மனதில்  தங்கும்படி  பதிய  வைத்தது


2  போலீசின்  ஒவ்வொரு  மூவ்  வ்ரும்போதும்  நான்  லினியர்  கட்டில்  நாயகன் இந்த மாதிரிதான்  போலீஸ் மூவ்  பண்ணும், அதற்கு  இந்த  மாதிரிதான்  ரீ ஆக்சன்  பண்ணனும்  என  பாடம்  நடத்தியதைக்காட்டுவது  சபாஷ் , பிரில்லியண்ட்  மூவ்


3  போலீஸ்  மூவ்மெண்ட்  தெரிந்து  கொள்ள  நாயகன்  நாயகியை  நெருங்கும்போது  வரும்  பிஜிஎம்  கலக்கல்  ரகம். அவரையும்  அறியாமல்  காதலில்  விழுவதும்  அருமை \


4  போலீஸ் டாக்டர்  மாதிரி  வேடம் போட்டு  உள்ளே வரும்போது  கண்ணாடி  ஃபிரேமில்  மைக்  ஒளித்து  வைக்கப்படுவது  அருமையான  ஐடியா 


5 நாயகன்  வெளியே தான்  இருக்கிறான், ஆனால்  போலீசிடம்  டிமாண்ட்  வைக்கும்போது  உள்ளே  இருப்பது  போல  இமேஜ்  கிரியேட்  செய்வதும்  போலீஸ்  நடாவடிக்கைகளை  மோப்பம்  பிடிப்பதும்  செம  ஐடியா 


6   கோமாவில்  இருக்கும்  போலீஸ்  ஏஞ்சல்  அட்டாக்  படலம்  எப்படி  இருக்கும்  என போலீஸ்  வலை  விரிக்க  நாயகன் ருத்ரா  பட்த்தில்  கே பாக்யராஜ்  கோமாளி  வேஷத்டில்  வருவது  போல  கூட்டத்தோடு  வருவதும் , கேமரா  கண்  கொண்ட  பொம்மை மூலம்  உள்ளே  இருப்பது  ஏஞ்சல்  அல்ல, வேறு  ஒரு  போலீஸ்  என்பதை  உணர்வதும்  கூஸ்  பம்ப்  சீன்ஸ்


7  பணயக்கைதிகள்  முரண்டு  பிடிக்கும்போது  அவர்களுக்கும்  கொள்ளையில்  பங்கு  தருவதாககூறி  கூட மாட  உதவி  செய்ய  வைக்கும் ஐடியா  செம 


8  டென்வர்  கேரக்டர்  டிசைன்  சைக்கோத்தனம்  என்றாலும்   கடைசியில்   தன்  உயிரைப்பணயம்  வைத்து  அனைவரையும் காப்பாற்றும்  சீன்  செம 


9  இனி  பெண்ணின்  ஆட்சி  ஆரம்பம், நான்  சார்ஜ்  எடுத்துக்கறேன்  என நைரோபி  பஞ்ச்  டயலாக்  பேசும்  சீன்  மாஸ் 


10  டோக்கியோவை  போலீசில்  சிக்க  வைக்கும்  காட்சியும்  அவரை  நாயகன் காப்பாற்றும்  காட்சியும் , போலீஸ்  யூனிஃபார்மில்  பைக்கில்  மீண்டும்  அவர்  உள்ளே  எண்ட்ரி  ஆகும்  சீனும்  செம 


11  நாயகியின்  முன்னாள்  கணவன்  காரில்  பயணிக்கும்  நாயகன் அவனை  வம்புக்கு இழுத்து   காரில்  இருக்கும்  தடயங்களை  அழிக்கும்  காட்சியும், நாயகியிடம்  டிராமா  போட்டு  சிம்பதி  ஏற்படுத்தும்  சீனும்  குட் 


12  தப்பிக்க  ஒரு  சுரங்கம் ,  போலீஸ்  கவனத்தை  திசை  திருப்ப  ஒரு சுரங்கம்  என  பிரமாதமான  ஐடியா  போடுவதும்   ஆப்சன்  பி  ல  பணத்தை  பலூனில்  கட்டி  பறக்க  விட்டு  ரோட்டில்  பண  மழை  பொழிய  வைத்தால்  மக்கள்  கூட்டம்  கூடும், பின்  தப்பலாம்  என்பதும்  பிரில்லியண்ட்  ஐடியாக்கள் 


13  கொள்ளையர்க்ள்  அணிந்திருக்கும் அதே  கலர்  உடை , அதே  டைப்  முகமூடியை  பிணையக்கைதிகளுக்கும்  தருவது  செம  ஐடியா  என்றால்  போலீஸ்  உள்ளே  வரும்போது  முகமூடி  மாடலை  மாற்றுவது  செம 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1 மொத்தக்கதையும்  டோக்கியோ  என்ற  பெண்  சொல்வது  போல  காட்டபடுகிறது , ஆனால்  அவர்  அங்கம்  வகிக்காத  காட்சிகள்  எப்படி  அதில்  வரும் ? 


2   உளவாளி  கதைகளில்  நாடு  விட்டு  நாடு  போய்  வந்த  ஹீரோ  உடலில்  எங்காவது  மைக்  மறைத்து  வைக்கப்பட்டு இருக்கா? என  செக்  செய்வார்கள். அது  போல  உள்ளே  நுழைந்து  மீண்டும்  வெளியே  வரும்  போலீஸ்  ஆஃபீசர்களை  ஏன்  செக்  செய்யவில்லை ? அவர்கள்  உடலில்  ஒட்டுக்கேட்கும் கருவி  இருக்கலாம்  என  யூகிக்கவில்லையா?


3  காரை அழிக்க  1000  யூரோக்கள்  கொடுத்த  நாயகன்  அதை  அவன்  அழிக்கிறானா? என்பதை  கிராஸ்  செக்  ஏன் செய்யவில்லை ?


4  கார்  தடயங்களை   மறைக்க  நாயகன்  பிச்சைக்காரன்  போல்  வேடமிட்டு  வரும்போது  அவனை  பின்னால்  இருந்து  பார்க்கும்  நாயகியான  போலீஸ்க்கு அடையாளம்  தெரியாதா? 


5    ஹார்ட்  அட்டாக் ஏற்படுத்தும்  மருந்தை  நாயகியின்  அம்மாவின் காபியில்  கலக்கும்  நாயகன்  பின்  மனம்  மாறி  அதை  தட்டிவிடுவது கண்டு  அம்மா  ஏதும்  சொல்லவில்லை , அது  பற்றி  போலீசான  தன்   மகளிடமும்  அவள்  சொல்லவில்லை 


6   கோமாளி  வேடத்தில்  ஹாஸ்பிடல்  போகும் நாயகன்  பவுடர் மட்டும்  முகத்தில்  பூசினால்  அடையாளம்  மாறுமா? 


7  பணம் அச்சடிக்கும் இடம்  மிலிட்ரி  செக்யூரிட்டியுடன்  இருக்கனும்,   மியூசியம் அங்கே  வெச்சு  பொதுமக்கள்  வரும்  இடமாகவா  வைத்திருப்பார்கள்? 


8  டோக்கியோ பைக்கில்  போலீஸ்  பாதுக்காப்பை  மீறி  உள்ளே  செல்வது  பார்க்க  நன்றாக  இருந்தாலும்  நம்பும்படி இல்லை, அத்தனை  பேர்  ஷூட்  பண்றாங்க, ஒரு  குண்டு  கூட  மேலே  படலையே? 


ரசித்த  வசனங்கள் 


பாகம் 1 

 1  காதலையும், கடமையையும்  எப்பவும் மிக்ஸ் பண்ணிக்கக்கூடாது


2   சில  உறவுகள்  எவ்வளவு  வலுவாக  இருந்தாலும்  அதன்  ஆரம்பப்புள்ளி  நமக்கு  மறந்துடும்


3  அவன் சுறா  மீன்  மாதிரி  கூட  நீந்தி  வரலாம், ஆனா  ஜாக்கிரதையா  இருக்கனும்


4 ஒரு  விஷயத்தை  நாம  1000  தடவை  பிளான்  போட்டாலும்  எல்லாமே  நாம  நினைச்ச  மாதிரி  நடந்துடாது 


5  நான்  அனுபவசாலி  , அஞ்சு  தடவை  டைவர்ஸ்  பண்ணி இருக்கேன், அதுக்கு  என்ன  அர்த்தம்  தெரியுமா?


ம்ஹூம்


 அஞ்சு  தடவை  புதுசா  ஏமாந்து  இருக்கேன்


6   உன்னை  எதுக்கு  இதுல  லீடரா  போட்டாங்க ?


 ஏன்னா  என்னால  அடுத்தவங்க  கஷ்டத்தை  ஈசியா  புரிஞ்சுக்க  முடியும் 


7  நாம  பேசும்  மொழியை  விட நாம்  உடுத்தி இருக்கும்  உடைதான்  நம்மைப்பற்றி அதிகமா  சொல்லும் 


8   உன்  கிட்டே  பழகும்போது  நான்  ஒரு  முகமூடியோட    பழகிட்டு  இருந்திருக்கேன். இப்போ என்  முகமூடியை  பார்க்க  எனக்கே  \ பிடிக்கலை


9  எல்லாத்தையும்  நம்மால  காப்பாத்த  முடியும்னு  நினைக்கற  ஹீரோ  எல்லா  இடத்துலயும்  இருப்பான், இங்கேயும்  ஒருத்தன்  இருக்கான்


10   ஒரு  திருடனுக்கு  தன்னம்பிக்கை  எப்பவும்  ஜாஸ்தியா  தான்  இருக்கும் 


11  ஒரு  எலியால  மட்டும் தான்  ஒரே  இடத்துல  அடைஞ்சு  கிடக்க  முடியும் , மனிதர்களால்  முடியாது 


12  வாழ்க்கைல  சின்னச்சின்ன  விஷயங்களுக்கு  எல்லாம்  ஓவரா  கவலைப்பட்டுட்டே  இருப்போம், ஒரு காலகட்டத்துல அந்தக்கவலைகள்  எல்லாமே வீணானவைனு  தெரிய  வரும் 


13  முயற்சி  மட்டும் தான்  நாம  செய்ய முடியும் , ,மத்ததெல்லாம்  நம்ம  கைல  இல்லை

!4   ஒவ்வொரு  பெண்ணுக்கும்  ஒவ்வொரு  விஷயம்  செக்சியா  தோணும், தலைமுடி, உயரம், தோள் , இப்படி , எனக்கு  உன்  கிட்டே  பிடிச்சது  உன்  இண்ட்டலிஜென்ஸ்


15   கடந்த  காலத்தில் நாம்  எடுத்த  முடிவுகள்  நிகழ்காலத்தில்  நமக்கு  ரொம்பவே  உதவும்


16  நீ  ஒவ்வொரு  முறை  என்னைப்பார்க்கும்போதும்  ஒரு  தோத்துப்போனவனைப்பார்க்கற  மாதிரியே  பார்க்கற


17  நீ   அப்பா  கூட  போய்ட்டா  என்னை  அடிக்கடி  பார்க்க  முடியாம  போயிடும்.,\


பேபி= போலீஸ்  வேலைல  இருக்கறதால உன்னை  இப்பக்கூட  அடிக்கடி பார்க்க  முடியறதில்லையே  மம்மி, எப்பவாவதுதான்  பார்க்கறேன்


 சரி, அப்பா  நல்லவர்  இல்லை


 இல்லை  அவர்  நல்லவர்தான்


 எப்படி  சொல்றே?


 அப்பாவே  சொன்னார் 


18    இந்தக்கொள்ளை  கேஸ்  விஷயம்  உலகக்கோப்பை  கிரிக்கெட்  மேட்ச்  மாதிரி , ஜெயிச்சுட்டா  பிரச்சனை  இல்லை,  ஆனா  தோத்துட்டா  எல்லாத்தையும்  தோண்டி  எடுப்பாங்க 


19 மக்களுக்கு  பைத்தியக்காரனைத்தான்  பிடிக்கும், போராட்டம்  பண்றவங்களை பிடிக்கும்


20  என்னைப்பொறுத்தவரை  ஒரு  ஜோக்ல  உண்மை  கொஞ்சமாவது  இருக்கனும், அதுல  வலியும்  கலந்திருக்கனும்


21  பொண்ணுங்களுக்கு  அவங்க  திறமை  மேல  நம்பிக்கை  இல்லை , அவங்க  கவலை  எல்லாம்  மத்தவங்க  அவங்களைப்பற்றி    என்ன  சொல்வாங்களோ? என்பதில்தான்  இருக்கு 


22 பொண்ணுங்க  கட்டில்ல  சண்டை போட்டா  மட்டும் தான்  ரசிக்க  முடியும் 


23  எல்லாரும்  ஒரு நாள்  செத்துடுவோம், ஆனா  இப்போ  உயிரோட  இருக்கோம்  இல்லையா?  அதைக்கொண்டாடித்தீர்ப்போம்


24  வாழ்க்கைங்கறது  செஸ்  விளையாட்டு  மாதிரி,  ஆட்டத்துல  நாம  ஜெயிக்கனும்னா    சில  தியாகங்களைப்பண்ணித்தான்  ஆகனும்


25   எது  நடக்கக்கூடாதுனு நினைக்கறமோ  அது  நம்ம  வாழ்க்கைல  நடந்துடுமோ?னு  ஒரு  பயம் நம்ம  அடி மனசுல  வரும்ல?


26 நமக்கு என்ன  பண்றதுன்னே  தெரியாம  குழப்பமா  இருக்கும்போது  நமக்கு  அட்வைஸ்  பண்றதுக்குன்னே  ஒரு  கூட்டம்  வரும்  பாருங்க 


27   உங்க  பலவீனத்தை  முகம்  காட்டிக்கொடுக்கலைன்னாலும்  பயம்  காட்டிக்கொடுத்துடும் 


28 மனசு  சில  விஷயங்களை ஒத்துக்காத  போது  மாறு வேஷம்  தேவைப்படும் 


29  நான்  செஞ்சதுலயே  உருப்படியானது  உன்னைக்காதலிச்சதுதான்


30  எவ்ளோ  பெரிய  அறிவாளியா  இருந்தாலும்  அவனுக்கு  ரெண்டு  கண்கள்  தான், ஆனா  இப்போ  அவனோட  கண்கள்  அவ  மேல 


31  ஒரு  விபத்து  நடக்கும்போது  அதனால  ட்ராஃபிக்  ஜாம்  ஆகாது, அந்த  விபத்தை  வேடிக்கை  பார்க்கக்கூடும்  மக்களாலதான்  ட்ராஃபிக்  ஜாம்  ஆகும்


32  விட்டில்  பூச்சியை  நாம  பிடிக்க  நினைச்சா  அது  பறந்து  போய்டும், ஆனா  விளக்கை நோக்கி  அதுவாகவே  வந்து  மாட்டிக்கும் 


33  ஒரு  சந்தோசமான  தருணத்துல  நாம  வேற  எதைப்பற்றியுமே  நினைக்கறதில்லை , உலகம்  சுக்கு  நூறா  உடைஞ்சாலும்  நமக்குக்கவலை  இல்லை 


34  நான்  இதுவரை  பார்த்த  ஆண்களிலேயே  நீங்க தான்  பெஸ்ட், இந்த திட்டம்  எவ்ளோ  பெரிய  புத்திசாலித்தனத்தை  உள்ளடக்கி  இருக்கு ?


35 யாரோட  பணத்தையும் திருடாம  தனக்குத்தேவையான  பணத்தைத்தானே  அச்சடிச்சிருக்கான்  அந்த  ஹீரோ. அது  எப்படி  திருட்டு  ஆகும்?


36  நம்ம  கனவை  எல்லாம்  நனவு  ஆக்கிக்க  யாரையும்  ஹர்ட்  பண்ணனும்னு  அவசியம்  இல்லை 


37  நம்பிக்கை  ரொம்ப  முக்கியம், நம்பிக்கைங்கற  காட்டில்  சின்ன  தீப்பொறி  பத்திக்கிட்டா    மொத்தக்காடும்  அழிஞ்சிடும்

38  அன்பு , பாசம்னு  என்னதான்  நாம  எல்லாரும்  முக  மூடி  போட்டுக்கிட்டாலும்  நம்ம  எல்லாரையும் இணைக்கும்  ஒரு  விசயம்  எது  தெரியுமா?  பணம் தான் 


39  எவ்ளோ  நேரம்  கூட இருந்தோம்கறது  முக்கியம்  இல்லை, என்ன  பண்ணோம்? என்பதுதான்  முக்கியம் 



===============

பாகம் 2 

1   அளவுக்கு  அதிகமான  தன்னம்பிக்கை  எப்பவும்  ஆபத்துதான்


2   கிரிக்கெட்டா இருந்தாலும், ஃபுட் பாலா  இருந்தாலும்  மக்கள்  எப்பவுமே  ஒரு  வீக்  டீமைத்தான்  சப்போர்ட்  பண்ணுவாங்க, அந்த  சைக்காலஜியை  கவனிச்சீங்களா?


3  நம்ம  பலவீனத்தை  நாம்   வெளில  காட்டிட்டா , நாம  தோற்கப்போறோம்னு  இந்த  உலகம்  உணர்ந்தா  மொத்த  உலகமும்  நம்மைதான்  சப்போர்ட்  பண்ணும் 


4 எதுவுமே  மூன்றாவது  முறைதான்  முழுமை  அடையும்னு  சொல்வாங்க 


5  ரொம்ப  நாள்  தூங்காதவன்  கிட்டே  நாம  எதிர்பார்க்காத எதிர்பார்க்கக்கூடாத  ஒரே  விஷயம்  பொறுமை 


6  மனசுக்கு  ரொம்ப  நெருக்கமானவங்க  நம்ம  அருகில்  இல்லைன்னா  மனசுக்கு  கஷ்டம்தான்


7  உனக்கு  போலி  பாஸ்போர்ட்  ரெடி  பண்ணனும், பிடிச்ச  பேரு  சொல்லு , அகதா? ஓக்கே?


  அது  போர்ன்  ஸ்டார்  பேரு  மாதிரி  இருக்கு 

 எங்க  ஊர்ல  அழகான  பொண்ணுங்களுக்கு  எல்லாம்  அகதானுதான்  பேர்  வைப்பாங்க 


8   சில  டைம்  மற்றவர்களுக்கு  உதவறோம்னு  நாமா  வலிய  போய்  பிரச்சனைல  மாட்டிக்குவோம்


9   நீ  தண்ணீர்  மேல  மிதந்துட்டே  போக  நினைக்கறவன், அடில  இருக்கற  பாறைகளைப்பற்றி  உனக்குக்கவலை  இல்லை 


10  நீ  சாகப்போறியே?  அதான்  யோசிக்கிறேன்

  விதவைக்கோலத்துல  கூட  நீ  அழகாகத்தான்  இருப்பே


11  சில  நேரங்களில்  நம்ம  கவலை  இன்னும்  உயரே  போக  முடியாட்டிப்பரவால்லை, இன்னும்  கீழே  போகாம  இருந்தா  போதும்னு  நினைப்போம்


12   லிக்விடிட்டி இஞ்செக்சன்


13   என்னை  மட்டம்  தட்டினதைப்பற்றிக்கூட  நான்  கவலைபப்டலை, ஆனா  நான்  அடிக்கிற  ஜோக்சைப்பற்றி  மட்டம்  தட்டுனதைத்தான்  தாங்கிக்கவே  முடியலை


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  பார்த்தே  தீர  வேண்டிய  பிரமாதமான  ராபரி  த்ரில்லர்  இது  அடல்ட்  கண்ட்டெண்ட்  இருப்பதால்  கவனம் . 

 ரேட்டிங் 4 / 5 



Money Heist
Casadepapelwordmark.svg
SpanishLa casa de papel
Genre
Created byÁlex Pina
Starring
Theme music composerManel Santisteban
Opening theme"My Life Is Going On" by Cecilia Krull
Composers
  • Manel Santisteban
  • Iván Martínez Lacámara
Country of originSpain
Original languageSpanish
No. of seasons3 (5 parts)[a]
No. of episodes41 (list of episodes)
Production
Executive producers
  • Álex Pina
  • Sonia Martínez
  • Jesús Colmenar
  • Esther Martínez Lobato
  • Nacho Manubens
Production locations
  • Spain
  • Italy
  • Thailand
  • Panama
  • Denmark
  • Portugal
CinematographyMigue Amoedo
Editors
  • David Pelegrín
  • Luis Miguel González Bedmar
  • Verónica Callón
  • Raúl Mora
  • Regino Hernández
  • Raquel Marraco
  • Patricia Rubio
Camera setupSingle-camera
Running time67–77 minutes (Antena 3)
42–76 minutes (Netflix)
Production companies
Distributor
Release
Original network
Picture format
1080p (16:9 HDTV)
Audio formatDolby Atmos
Original release2 May 2017 –
3 December 2021
Chronology
RelatedMoney Heist: Korea – Joint Economic Area

0 comments: