Wednesday, February 01, 2023

AN ACTION HERO (2022) (ஹிந்தி) - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 spoiler  alert




நாயகன் சினிமாப்பட  உலகின்  சூப்பர்  ஸ்டார் கம்  ஆக்சன்  ஹீரோ.உலகம்  முழுக்க  இவருக்கு ரசிகர்கள்  இருக்கிறார்கள் . இவரிடம்  ஆடோகிராஃப்  வாங்க  , செல்ஃபி  எடுக்க  ஒரு  கூட்டம்  எப்போதும்  அவர்  பின்னால்  சுற்றிக்கொண்டே  இருக்கிறது.இது  வழக்கமாக  சினி  ஃபீல்டில்  நாம்  பார்க்கும்  விஷயம் தான் , புது  விஷயம்  என்ன  எனில் வில்லன் ஒரு  அரசியல்வாதி  கம் கேங்க்ஸ்டர். வில்லனின்  தம்பி நாயகனின்  ரசிகன். நாயகனுடன்  ஒரு  செல்ஃபி  எடுக்க  ஷூட்டிங்  ஸ்பாட்டுக்கு  காலை  முதல்  மாலை  வரை  காத்திருக்கிறான், ஆனால் நாயகனை  சந்திக்கவே  முடியவில்லை ,

இதனால்  கோபமடைந்த  வில்லனின்  தம்பி  நாயகனை  மாலையில்  ஃபாலோ  செய்து அவர்  காரை  ஓவர்  டேக்  செய்து  வாக்குவாதம்  செய்கிறான். இருவருக்கும்  ஒரு  தள்ளுமுள்ளு  நடக்கிறது. இதில்  நாயகன்  வில்லனின்  தம்பியை  ஒரு  கட்டத்தில்  பிடித்து  கீழே  தள்ளிவிடுகிறான்.  தரையில்  கிடந்த  கல்லில்  அவன்  தலை   பட்டு  ஆள்  ஸ்பாட்  அவுட். இது ஒரு  ஆக்சிடெண்ட்டல்  டெத். திட்டமிட்ட  கொலை  கிடையாது 


 ஆனால்  நாயகன்  பயந்து  விடுகிறான். சட்டப்படி  கேஸ்  நடந்தால்  அதிகபட்சம் 2 ஆண்டுகள்  மட்டுமே   தண்டனை  கிடைக்கும், ஆனாலும்  நாயகன்  ஒரு  பயத்தில்  அங்கே  இருந்து  எஸ்கேப்  ஆகிறான். லண்டன்  போய்  விடுகிறான். அங்கே நாயகனுக்கு  ஒரு  வீடு  சொந்தமாக  இருக்கிறது . அங்கே  வருகிறான். அங்கே  இருந்தே  தன்  வக்கீலுடன்  ஆலோசனை  செய்து  பேசி  வருகிறான்


வில்லனின்  தம்பி யின்  பிணம்    வில்லனின்  வீட்டில்  கிடத்தப்பட்டு  இருக்கிறது. வில்லன்  தன்  தம்பியைக்கொன்றவனைப்பழி  வாங்க  லண்டன்  கிளம்புகிறான்


இதற்குப்பின்  நடக்கும்  ஆக்சன்  அதகளம் தான்  மீதி  திரைக்கதை 

இது  போக  படத்தில்  ஒரு  எதிர்பாராத  திருப்பம்  க்ளைமாக்சில்  இருக்கிறது


நாயகனாக  ஆயுஸ்மான்  குரானா அசால்ட்டாக  ஆக்சன்  சீக்வன்சில்  அதகளம்  பண்ணி  இருக்கிறார், ஜாக்கிசான்  நடித்த  மிராக்கிள்ஸ்  படத்தில்  வரும்  சில ஆக்சன்  காட்சிகளை  முயற்சி  செய்து பிரமாதமாக  ஒர்க்  அவுட்  செய்திருக்கிறார். படத்தில்  அவருக்கு  ஜோடி  இல்லாத  கவலை  அவர்  முகத்தில் ஆங்காங்கே  தெரிகிறது 


வில்லனாக ஜெய்தீப்  இறுக்கமான  பாறை  முகத்துடன்  வருகிறார். வில்லனின்  கேரக்டர்  டிசைன்  இன்னும்  வலுவாக  வடிவமைக்கப்பட்டு  இருக்கலாம், மிஸ்  ஆகி  விட்டது 


லண்டனில்  வில்லன் செய்யும்  கொலைகள்  எல்லாம்  நாயகன்  மீது  பழி  விழுவது  நம்பும்படி  படமாக்கப்படவில்லை 


உலகம்  பூரா  பரவலாக  பேசப்படும்  சர்வதேச  தீவிரவாதி  ஒருவன்  நாயகனுடன்    செல்ஃபி  எடுத்து  அதை  வைரல்  ஆக்கும்  காட்சி  நம்பும்படி  இல்லை 


ஒரு  சாதாரண  கேஸை  சட்டப்படி  சந்திக்காமல்  நாயகன்  ஓவர்  ரிஸ்க்  எடுத்து ஏன்  பிரச்சனைகளில்  போய் இப்படி  மாட்டிக்கொள்கிறார்  என்ற  கேள்வி  அடிக்கடி  நம்  மனதில்  எழுகிறது 


ஒரு  அரசியல்வாதியும் , மீடியாக்களும்  நினைத்தால்  ஒரு  புகழ்  பெற்ற  ஹீரோவின்  பெயரை  மிக  சுலபமாகக்கெடுக்க  முடியும்  என்பதை  தெளிவாக  சொல்லி  இருக்கிறார்கள் 


 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  பெரிதாக  நம்பி  இருக்கிறார்கள் , அது  மக்கள்  மனதில்  போதிய  அளவில்  இம்ப்பாக்ட்  கொடுக்க வில்லை


கவுசால் ஷாவின்  ஒளிப்பதிவு  லண்டனின்  பிரமாண்டமான  காட்சிகளைப்படம்  ஆக்கி  கண்  முன்  நிறுத்துகிறது , பராக் சப்ராவின்  பரபரப்பான  பின்னணி  இசை  திரைக்கதை  வேகமாக  பயணிக்க  உதவுகிறது , நினத்  கனோல்கரின்  எடிட்டிங்கில்  கனகச்சிதமாக 130  நிமிடங்களில்  ஷார்ட்  அண்ட்  ஸ்வீட்டாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்


படத்தில்  டூயட்டோ, பாடலோ  இல்லையே  என்று  ரசிகர்கள்  கேட்டுவிடக்கூடாதே  என்பதற்காக  க்ளைமாக்ஸில்  ஒரு  பாட்டு  சேர்த்திருக்கிறார்கள் 


 ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள்  , ஆயுஷ்மான்  ரசிகர்கள்  பார்க்கலாம். 2022  டிசம்பர்  மாதம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  இப்போது  நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி  டி  யில்  காணக்கிடைக்கிற்து



ரசித்த  வசனங்கள் 


1  சார், என்  பையன் ஃபிளைட்ல  ஜன்னல்  சீட்  ஆசைப்படறான், வெளில  வேடிக்கை  பார்க்கனுமாம், நீங்க  உங்க  சீட்டை  அவனுக்கு  விட்டுத்தர  முடியுமா?


 அப்படியே  ஜன்னல்  வழியா  வெளீல  தள்ளி  விட்டா   நல்லா  வேடிக்கை  பார்க்கலாம் செய்யவா?


2   நீ  புத்திசாலியா  இருந்தா  நான்  முட்டாளா  நடிப்பேன் 


3  பொதுவா  வயசுல  சின்னவங்க  தப்பு  பண்ணுவாங்க , வயசுல  பெரியவங்க  எப்படி  நடந்துக்கனும்னு  முன்னுதாரணமா  இருப்பாங்க 


4   ஒருத்தரை  ஃபாலோ  பண்ண  ரெண்டே  காரணங்கள்தான்  இருக்க  முடியும் , 1  காதல்  2  பழிக்குப்பழி


சபாஷ்  டைரக்டர் 


1  ஆக்சன்  ஹீரோ  டூப்  எல்லாம்  போடுவார்  என்றாலும்  இதில்  ஹீரோ  ஒரிஜினலாக  ரிஸ்க்  எடுத்து  ஃபைட்  போடுவதாக  காட்டி  இருப்பது  நம்பும்படி  இருக்கிறது , பல  காட்சிகள்  லாங்க்  ஷாட்டில்  ஒரிஜினலாக  ஹீரோவே  ரிஸ்க்  எடுத்து  ஃபைட்  சீன்களில்  நடித்திருக்கிறார் 


2 கமல்  நடித்த  விக்ரம்  பாகம் 1  படத்தில்  வருவது  போல  ஓடுவது , குதிப்பது , தாவுவது  என  பல ஜிம்மிக்ஸ்  வித்தைகளை  ஹீரோ  அசால்ட்டாக  செய்திருக்கிறார். பல  காட்சிகள்   ஜாக்கிசானை  இன்ஸ்பிரேசனாக  வைத்து  முயன்றிருப்பது  தெரிகிறது 


3  விறுவிறுப்பான  ஆக்சன்  த்ரில்லரில்  மொக்கை  காமெடி , ஹீரோயின் , டூயட்  என  ஸ்பீடு  பிரேக்கர்கள்  எதையும்  சேர்த்தாமல்  விட்டது  புத்திசாலித்தனம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   சிசிடிவி  இல்லாத  வனாந்திரப்பிரதேசத்தில்  தான்  அந்த  சம்பவம்  நடக்கிறது. ஹீரோவுக்கு  எதிராக  இருக்கும்  ஒரே  சாட்சி  காரின்  சைடு  மிரர்  உடைந்து  ஸ்பாட்டில்  விழுந்ததுதான் , ஹீரோ  அதை  எடுத்து விட்டு  கிளம்பி  இருந்தால்   ஈசியாக  தப்பி  இருக்கலாம் , அல்லது  போலீசுக்கே  தகவல்  சொல்லி  நிலைமையை  சொன்னாலே  போதும் 


2  ஹீரோவை  லண்டன்  போலீஸ்  , வில்லன்    வில்லனின்  அடியாட்கள்  எல்லாரும்  சுடுகிறார்கள் , அவை  எதுவுமே  ஹீரோ  மேல்  படுவதே  இல்லை 


3  வில்லன்  ஹீரோ  வீட்டில்  இருக்கும்  லண்டன்  போலீஸ்கள்  இருவரைக்கொலை  செய்கிறான், ஆனால்  ஹீரோவை  சந்திக்கும்போது  டக்னு  ஷூட்  பண்ணி  வேலையை  முடிக்காமல்  தண்டமா  டயலாக்  பேசிட்டு  இருக்கான்  


4  ஹீரோ  வில்லனை  காரின் பானட்டில்  அடைத்து  வைக்கும்போது  வில்லனின்  பாக்கெட்டை  செக்  செய்து  ஆயுதம் , செல் ஃபோன்  இவற்றை  அகற்ற  மாட்டானா?


5 ஹீரோ  யாரோ  ஒருவரின்  காரை அபகரித்து  லண்டன்  சாலையில்  10  கிமீ  போய்க்கிட்டே  இருக்கான்,  வில்லன்  அதே  போல்  ஒரு  அப்பாவியின்   காரை  அபேஸ்  செய்து  அவன்  பாட்டுக்கு  போய்க்கிட்டு  இருக்கான் . வண்டி  நெம்பரை  வைத்து  போலீஸ்  டிரேஸ்  பண்னாதா? செக்  போஸ்ட் , டோல்கேட்  எதுவும்  லண்டனில்  இருக்காதா?


6   ஹீரோவுக்குப்பின்னால்  வில்லன்  துப்பாக்கியில் ஷூட்  செய்ய  தயாராக  இருக்கிறான், அருகில்  ஒரு  தீவிரவாதி   இருக்கிறான்  ஹீரோ திரும்பியே  பார்க்காமல்  ஒரு  அசம்ப்சனில்  ஒரு  டர்ன்  பேக்  கிக்  கொடுக்க  வில்லனின்  துப்பாக்கி  அந்த  தீவிரவாதியை  ஷூட்  பண்ணுவது  எல்லாம்  காதில்  10  முழப்பூ  சுற்றிய  அனுபவம்  , 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆக்சன்  மசாலா  ப்ரியர்கள்  ரசிக்கலாம். ஜாலியா  போகுது  , ரேட்டிங் 2.25 / 5 



An Action Hero
An Action Hero film poster.jpg
Theatrical release poster
Directed byAnirudh Iyer
Written byNeeraj Yadav
Story byAnirudh Iyer
Produced byBhushan Kumar
Krishan Kumar
Aanand L. Rai
Starring
CinematographyKaushal Shah
Edited byNinad Khanolkar
Music byParag Chhabra
Production
companies
Distributed byAA Films
Release date
  • 2 December 2022
Running time
130 minutes[1]
CountryIndia
LanguageHindi
Box officeest. ₹15.8 crore[2]

0 comments: