Sunday, February 12, 2023

AA AMMAYI KURINCHI MEEKU CHEPALI (2022) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


 நான்  அந்தப்பெண்ணைப்பற்றி  சொல்கிறேன் - இது தான்  டைட்டிலுக்கான  அர்த்தம் இயக்குநர்  மோகன  கிருஷ்ண இந்திராகாந்தி  உடன்  , நாயகன்  சுதீர்  பாபு  காம்பினேஷனில்  வரும்  மூன்றாவது  படம்  இது . 20 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  இந்தப்படம்  பாக்ஸ்  ஆஃபீசில்  வசூலை  அள்ளியது இவர்கள்  காம்போவில்  வந்த  முதல்  படமான சம்மோஹனம் (SAMMOHANAM) 2018ஆம்  ஆண்டு  ரிலீஸ்  ஆகி  17  கோடிவசூலித்தது.  10  கோடி  பட்ஜெட்டில்  உருவான  ரொமாண்டிக்  ஃபிலிம்  இது . இரண்டாவது  படம்  வி  என்னும்  க்ரைம்  த்ரில்லர் 


Spoiler alert


நாயகன்  ஒரு பிரபல  சினிமாப்பட  இயக்குநர்.. தொடர்ந்து  ஆறு  வெள்ளி விழாப்படங்கள்  கொடுத்தவர் .அவர்  எடுக்க  இருக்கும்  புதிய  படத்துக்காக  புதுமுக நாயகியின்  தேடுதல்  வேட்டையில்  இருக்கிறார். அவர்  கண்களுக்கு  ஒரு   விளம்பரப்படம்  படுகிறது. அதில்  ஒரே  ஒரு  காட்சியில்  தோன்றிய  அழகுப்பெண்ணைப்பார்த்ததுமே  பிடித்து  விடுகிறது , ஆனால்  அந்தப்பெண்ணைப்பற்றிய  தகவல்  கிடைக்கவில்லை 


 நாயகன்  அந்தப்பெண்ணைத்தேடி  அலைகிறார். ஒரு  கட்டத்தில்  அந்தப்பெண்  கிடைத்து  விடுகிறாள் . அந்தப்பெண்  ஒரு  கண்  டாக்டர் . நாயகி  மீது  காதல்  வசப்படுகிறார். நாயகிக்கு  அவர்  மேல்  எந்த  அன்பும்  இல்லை 


நாயகியை  சினிமாவில்  நடிக்க  நாயகன்  சொல்லும்போது  நாயகி  மறுத்து  விடுகிறார். ஒரு  திருப்பம்  நிறைந்த  தகவலையும்  சொல்கிறார். நாயகன்  திரையில்  கண்ட  பெண்  நாயகி  அல்ல, நாயகியின்  ட்வின்ஸ்  சிஸ்டர், அவர்  இப்போது  உயிருடன்  இல்லை . ஆறு  வருடங்களுக்கு  முன்  நடந்த  கதையை  சொல்கிறார்


நாயகியின்  அக்கா  சினிமாவில்  நடிக்க  ஆர்வம்  உள்ளவராக  இருந்தார் , ஆனால்  வீட்டில்  அம்மா, அப்பா  சம்மதிக்கவில்லை . சினிமா  இயக்குநர்  ஆக  வேண்டும்  என்ற  கனவுடன்  இருக்கும் ஒரு  இளைஞன் மீது  காதல்  வசப்படுகிறார். 


 வீட்டின்  எதிர்ப்பையும்  மீறி  அவனை  திருமணம்  செய்து  கொள்கிறார். தன்  மனைவியைக்கதாநாயகி  ஆக்கி  ஒரு  படம்  இயக்க  வாய்ப்புக்கிடைக்கிறது, ஆனால்  எதிர்பாராத  விதமாக  அந்தப்பட,ம்  கைவிடப்படுகிறது . இதனால்   மன  உளைச்சலுக்கு  ஆளான  அவள்  கணவன்  தற்கொலை  செய்து  கொள்கிறான்.  இதனால்  மனம்  நொந்து  நாயகியின்  அக்காவும்  தற்கொலை  செய்து  கொள்கிறாள் 


 இதனால்தான்  நாயகியின்  பெற்றோருக்கு  சினிமா இண்டஸ்ட்ரி  என்றாலே  அலர்ஜி . இதற்குப்பின்  நாயகன்  ஆன இயக்குநர்  என்ன  செய்தார்?  நாயகியை  சம்மதிக்க  வைத்து  படம்  எடுத்தாரா? நாயகியின்  அக்காவின்  நிஜக்கதையையே  படக்கதையாக  எடுக்க  நாயகியின்  பெற்றோர்  சம்மதித்தார்களா? படம்  ஹிட்  ஆனதா? என்பது  தான்  மீதி  திரைக்கதை 


நாயகனாக  பிரபல  இயக்குநராக  சுதீர்பாபு   கச்சிதமான  நடிப்பு, முதல்  20 நிமிட  கதை  பார்த்ததும் இது  வழக்கமான  நாயகன்  நாய்கியைத்துரத்திக்காதலிக்கும்  மாமூல்  கதை  மாதிரி  தோன்றினாலும்  நாயகியின்  அக்கா    கேரக்டர்  எண்ட்ரி  ஆனதும்  கதை  சூடு  பிடிக்கிறது 


 நாயகியாக , அக்காவாக  டூயல்  ரோலில்  கீர்த்தி  ஷெட்டி . மாறுபட்ட  இரு  தோற்றத்தை  நாயகன்  ஏற்று  நடிப்பது  சுலபம். தாடி  வைத்து  ஒரு ஆள், தாடி  இல்லாமல்  ஒரு  ஆள்  என  சுலபமாக  வேறுபாடு  காட்டி  விடலாம், ஆனால் நாயகி  விஷயத்தில்  அது  கடினம், கடினமான , சவாலான  பணியை  கீர்த்தி  கச்சிதமாய்  செய்திருக்கிறார். இவரது  நடிப்பு  முழுக்கதையையும்  தாங்கிப்பிடிக்கிறது


பி ஜி  விண்டா  வின்  ஒளிப்பதிவில் காட்சிகள்  கண்ணுக்குக்குளுமை , நாயகியின்  க்ளோசப்  ஷாட்டுகள் எல்லாம்  அழகியல். விவேக்  சாகர்  இசையில்  2  பாடல்கள்  ஹிட் , பிஜிஎம்  கச்சிதம் .   இரண்டரை  மணி  நேரப்படத்தை  கச்சிதமாக  எடிட்  செய்து  இருக்கிறார்  மார்த்தாண்ட்   கே  வெங்கடேஷ் 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  மோகன  கிருஷ்ண  இந்திரா  காந்தி . கமர்ஷியல்  அம்சங்கள்  சேர்த்து  பொழுது  போக்குப்படமாக  ஜாலியாக  எடுத்திருக்கிறார். இது  அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  காணக்கிடைக்கிறது 

ரேட்டிங்  2.5 /.5



Aa Ammayi Gurinchi Meeku Cheppali
Aa Ammayi Gurinchi Meeku Cheppali.jpg
Theatrical release poster
Directed byMohana Krishna Indraganti
Written byMohana Krishna Indraganti
Produced by
  • B. Mahendra Babu
  • Kiran Ballapalli
Starring
CinematographyP. G. Vinda
Edited byMarthand K. Venkatesh
Music byVivek Sagar
Production
companies
Benchmark Studios
Mythri Movie Makers
Release date
  • 16 September 2022
Running time
145 minutes
CountryIndia
LanguageTelugu
Budget20 crore[1]

0 comments: