வாரிசு (2023) - சினிமா விமர்சனம் ( கமர்ஷியல் மசாலா) @ அமேசான் பிரைம்
எடுத்த இரண்டு படங்களுமே செம ஹிட் என சிவகாசி , திருப்பாச்சி கமர்ஷியல் கலக்கலாக படங்கள் தந்த இயக்குநர் பேரசுக்கு ஹாட் ரிக் வாய்ப்பு அளிக்கவில்லை ., கில்லி எனும் சூப்பர் டூப்பர் ஹிட் தந்து மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய தில்,தூள் தரணிக்கு அடுத்த வாய்ப்பு தரவில்லை ( குருவி ஃபிளாப் என்பதாலா?). போக்கிரி என்ற மெகா ஹிட் மூலம் டான்ஸ் மூவ்மெண்ட்சில் ஒரு புதிய அத்தியாயம் உருவாக்கிய பிரபு தேவாவுக்கு அடுத்த வாய்ப்பு தரவில்லை ( வில்லு ஃபிளாப் ஆனாலும் ) . இப்படி இளைய தளபதி வாய்ப்பு தராத இயக்குநர் பட்டியல்கள் நீளம், ஆனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை கீழே இறக்கிய பிரின்ஸ் இயக்குநர் ஒரு ஆந்திர இயக்குநர் தான் என தெரிந்தும் ஏன் மீண்டும் அதே போல ஒரு ஆந்திர இயக்குநருக்கு வாய்ப்பளித்தார்? என தெரியவில்லை
என்னதான் இயக்குநர் அட்லீ தெறி ,மெர்ஷல் , பிகில் என மூன்று தொட்ர் ஹிட்ஸ் கொடுத்தாலும் அவை முறையே அபூர்வ சகோதரர்கள் , சத்ரியன் , சக் தே இந்தியாவின் பட்டி டிங்கரிங் படைப்புக்ள் தான் என்பதால் விஜய்க்கு பெரிய அளவில் பெருமை சேர்க்காது . அதற்கு துப்பாக்கி , கத்தி என மெகா ஹிட் பட்ங்கள் தந்த ஏ ஆர் முருகதாஸ் எவ்வளவோ மேல் . சர்கார் சுமார் வெற்றிக்குப்பின் ஏ ஆர் முருகதாஸ்கு இறங்கு முகம் என்பதால் இந்த முடிவாக இருக்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனுக்கு கோடீஸ்வர தொழில் அதிபர் அப்பா, அம்மா, அண்ணன்கள் இருவர் இருக்காங்க . அண்ணன்கள் இருவரும் தொழிலைக்கவனிக்க நாயகன் அப்பா தொழில் நமக்கு ஒத்துவராது என ஒதுங்கி இருக்கிறார். ஒரு பார்ட்டியில் அப்பா - மகன் ஈகோ கிளாஸ் ஆக இருவரும் பிரிகிறார்கள். அப்பாவின் தொழில் முறை எதிரி திட்டம் போட்டு தொழில் வீழ்த்த நினைக்க நாயகன் சரியான சமயத்தில் வந்து அப்பாவுக்கு உறுதுணையாக இருந்து தான் தான் அவரது வாரிசு என நிரூபிக்கிறார்
நாயகனாக இ:ளைய தளபதி விஜய். சச்சின் படத்துக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் அவரது குறும்புத்தனமான நடிப்பை ரசிக்க முடிகிறது . யோகிபாபுவுடனான காம்போ காட்சிகள் கச்சிதம் , இருவருக்கும் காமெடி கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
அம்மா, அப்பாவாக ஜெயசுதா -சரத்குமார் ஜோடி பக்குவப்பட்ட நடிப்பை வழங்கி உள்ளனர் / . கேமியோ ரோலில் எஸ் ஜே சூர்யா அசத்தி இருக்கிறார்
வில்லனாக பிரகாஷ் ராஜ் , ஓக்கே ரகம்
நாயகியாக கெஸ்ட் ரோலில் சாங்ஸ் பிராப்பர்ட்டி ஆக ராஷ்மிகா மந்தனா அழகு
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எல்லாமே கண்ணுக்கு குளுமை , எஸ் தமன் இசையில் மூன்று பாடல்கள் சூப்பர் ஹிட் , பிஜிஎம் விஜய் ரசிகர்களை விசில் அடிக்க வைக்கும்
கே எல் பிரவீனின் எடிட்டிங்கில் இர்ண்டே முக்கால் மணி நேரம் ஓவர் லெங்க்த். இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்
சபாஷ் டைரக்டர் ( வம்சி )
1 விஜய்-ன் முந்தைய படங்களின் ரெஃப்ரென்ஸ் ஆக “ கப் முக்கியம் பிகிலே , ஐ ஆம் வெயிட்டிங் , வாத்தி கம்மிங் போன்ற பஞ்ச் டயலாக்குகளை கச்சிதமாக இன்செர்ட் செய்த விதம்
2 ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் காட்சிக்கான ஆர்ட் டைரக்சன் , காஸ்ட்யூம் டிசைன் , கொரியோகிராஃபி கடைசி 76 நொடிகள் சிங்கிள் ஷாட் டான்ஸ் உழைப்பு
3 தெலுங்கு மெகா ஹிட் படங்களான வைகுந்தபுரம் , மகரிஷி ஆகிய படங்களில் இருந்து சாமார்த்தியமாக காட்சிகளை உருவி கதம்பம் ஆக்கியது
4 ஒரு மாஸ் ஹீரோவுக்கு உண்டான பஞ்ச் டயலாக்ஸ் , ஆக்சன் சீக்வன்ஸ் கச்சிதமாக தந்த விதம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 ஆராரோ ஆரிரோ யார் யார் .. வா தலைவா
2 ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு மினுக்கி மினுக்கி
3 ஏலேலம்மா தில்லாலே
4 தளபதி வந்து இறங்கினா மாஸ்
5 இது தளபதி திருப்பிக்கொடுக்கும் நேரமே!
6 ரஞ்சிதமே ரஞ்சிதமே
ரசித்த வசனங்கள்
1 நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ல மண் விழுந்தாலும் கண் திறந்தேதான் இருக்கனும்
2 காலுக்குப்பக்கத்துலயே பால் ( BALL) இருந்தும் உன்னால கோல் போட முடியல பார்த்தியா? கேம்ல கோல் தான் முக்கியம்
3 அவன் எங்கே இருக்கார்னு கூட உங்களுக்கு தெரியாதா?
அவன் இருக்கானா?ன்னு கூட தெரியாது
4 நேரம் , பசி , பயணம் இந்த மூன்றிலிருந்தும் மனிதனால் தப்பிக்கவே முடியாது
5 என் தகுதி எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும், வேற யாருக்கும் தெரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை
6 கோட்டையை விட்டுட்டு கூரையைக்கட்டப்போறியா?
7 நீங்க உருவாக்குன உலகத்துல நீங்க மட்டும்தான் இருக்கீங்க,ஆனா என்னோட உலகத்துல நான் எல்லார் கூடவும் வாழனும்னு ஆசைப்படறேன்
8 என் சாவு எப்படி இருக்கும்னு எனக்குத்தெரியாது , ஆனா உன்னை இப்படிப்பார்க்கும்போது எனக்கு பயமா இருக்கு
9 ஒரு வீட்டோட டைனிங் டேபிளை வெச்சுதான் ஒரு கூட்டுக்குடும்பத்தோட ஜாதகமே தெரியும்
10 உங்க அண்ணி நைட் மாதிரின்னா உங்க அண்ணன் நைட்டி மாதிரி ரெண்டு பெரும் பிரியவே மாட்டாங்க
11 வீடு என்பது வெறும் கல் , மண் மட்டும் தான் விட்டுட்டு போயிடலாம், ஆனா குடும்பம் அப்படி இல்லை
12 எவ்வளவு நாள் தான் பொறுத்துப்போவே?
பிடிச்ச இடத்துல எதுக்குப்பொறுத்துப்போகனும் ?
13 இந்த அழகுக்காடும், அந்த ஆதார் கார்டும் ஒண்ணா?
14 டேய் , பார்த்தியா? அவ என்னையே பார்க்கறா
உனக்கு அவ யாரைப்பார்க்கறா?னு புரிய வைக்கிறேன், நீ இப்படி தள்ளி வா சொல்றேன், இப்ப அவ எங்கே பார்க்கிறா? சொல்லு
அது வந்து , நான் முன்னே இருந்த இடத்தையே பார்க்கிறா
15 பிரிஞ்சு வாழ்ந்தா என்ன ஆகிடுமோ?ங்கற பயத்தை விட கஷ்டப்பட்டு சேர்ந்து வாழ்வது இன்னும் கொடுமையா இருக்கும்
16 டேய் , நான் சொன்னது கரெக்ட் தானே?
இல்லைன்னு சொன்னா அடிப்பியே?
17 அவ கூட சேருடான்னா அவ அக்கா குடும்பத்தை பிரிச்சுட்டு வந்து நிக்கறே?
18 நீயும் உன் அண்ணன் மாதிரிதான்னு தப்பா நினைச்சுட்டேன்
தப்பாக்கூட நினைச்சுக்குங்க , ஆனா என்னை நினைச்சீங்க இல்ல ??
19 ஹலோ யாரு? ஃபோன்ல?
உன் ஃபிரண்ட்னு வெச்சுக்கோ இல்லை முதல் மூணு எழுத்தை எடுத்துட்டு உன் என்ட்னு நினைச்சுக்கோ
20 இவ்வளவு நாளா உலகத்தையே ஜெயிச்சுட்டதா நினைச்சுட்டு இருந்தேன், வீட்டுல தோத்துட்டு உலகத்தை ஜெயிச்சு என்ன பிரயோஜனம் ?
21 என் வாழ்க்கையைத்திரும்பிப்பார்த்தா நான் சாதிச்சது எதுவும் என் நினைவுக்கு வர்லை, நான் பண்ணின தப்பு மட்டும் தான் கண் முன் வந்து நிக்குது
22 இனிமே கதவைத்தட்டிட்டு உள்ளே வாங்க. இல்லைன்னா அது சேர்மனுக்கு பிடிக்காது , அந்த சேர்மேன் நாந்தான்
23 இத்தனை பேரை அடிக்கறதுக்கு நான் அயர்ன் மேன் இல்லை , ஆர்டினரி மேன்
24 இது என் கிரவுண்ட்
கிரவுண்ட் யாருதுனு எல்லாம் கணக்கே இல்லை , ஆட்டம் யாருது?னுதான் கணக்கே
25 கிரவுண்ட் பூரா உன் ஆளுங்களா இருக்கலாம், ஆன ஆடியன்ஸ் யாரைப்பார்க்கறாங்கனு தெரியுமா? ஆட்ட நாயகன்..
26 இந்த சொந்த பந்தத்தை எல்லாம் எவண்டா கண்டு பிடிச்சான் ?
நீ கண்டுபிடிக்க வேனாம்ப்பா/ நீ நல்லா இருந்தா அவனுங்களே தேடி வந்துடுவானுங்க
27 பவர் சீட்ல இருக்காது சார் , அதுல வந்து ஒருத்தன் உக்கார்றான் இல்ல? அவன்ட்டதான் இருக்கும், நம்ம பவர் அந்த ரகம்
28 நீங்க எடுத்திருக்கும் முடிவு உங்களுக்கு வலியைக்கொடுக்கப்போகுதா? நிம்மதியைக்கொடுக்கப்போகுதா? என உங்களுக்குதான் தெரியும்
29 இங்கே சம்பவம் பண்ணப்போறதே நான் தான், எனக்கே யார் சம்பவம் பண்ணப்போறாங்க ?
30 அவனை முதலைனு சொன்னீங்க இல்லை ? முதலையைப்பிடிக்க தூண்டில் போடக்கூடாது
31 வேடனுக்கு வேட்டை தொழில் , புலிக்கு அது விளையாட்டு மாதிரி., காட்டுல எல்லா மிருகங்களையும் வேட்டை ஆடிய புலி அடுத்து குறி வெச்சதே அந்த வேடனுக்குதான்
32 அன்போ அடியோ எதைக்கொடுத்தாலும் நான் ட்ரிபிளா திருப்பிக்கொடுப்பேன்
33 பசங்க வளரும்போது பேரண்ட்ஸ் கிட்டே தேடும் லவ்வோ அஃபக்சனோ கிடைக்கலைனா அவங்க அதை வெளில தேடுவாங்க . தேடற இடம் தப்பா இருந்தா அவங்களுக்குதான் பாதிப்பு
34 இந்தப்பொண்ணு ஏதோ கதை எழுதுதாம், டைட்டில் கூட பேஸ்மெண்ட்ல டூ வீலர்ஸ் ஆம்..
டேய். அது பேஸ்டு ஆன் ட்ரூ ஈவெண்ட்ஸ்
35 நாமளாப்போகக்கூடாது , கூப்டட்டும், போவோம்
36 நீ என்ன மாதிரி வாழ்க்கை வாழ்ந்துட்டுப்போனே என்பது நீ ஃபுல் ஸ்டாப் வெச்சுட்டுப்போன பின் தான் தெரியும்
37 வாழ்க்கை என்பது ஜெயிப்பதற்கோ , தோற்பதற்கோ இல்லை ., வாழ்வதற்கு
38 நீங்க நடந்த வழில நான் நடக்காம இருந்திருக்கலாம், ஆனா எனக்கு நடக்க கத்துக்கொடுத்ததே நீங்க தானே?
39 அப்பாவுக்கும் பையனுக்கும் இடையே எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு பையனுக்கு அப்பாதான் ஹீரோ , நீங்க என் ஹீரோ
40 குடும்பம்னா அன்பு, அவங்க கூப்பிடலைன்னாலும் அவங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா போய் நிக்கனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 சூரிய வம்சம் , நட்புக்காக , போன்ற பல மெகா ஹிட் படங்களில் அப்பா மகன் பாசமாக எப்படி இருந்தார்கள் என்பதைக்காட்டி விட்டு பிறகு பிரிவு வருவதைக்காட்டுவார்கள் , ஆனால் இதில் நாயகன் அவரது அம்மா, அப்பாவுடன் எப்படி அட்டாச்மெண்ட் ஆக இருந்தார் என ஒரு சீனில் கூட காட்டவே இல்லை , ஓப்பனிங் சீனிலேயே பிரிவைக்காட்டியதால் அது மனதுக்கு நெருக்கமாகவில்லை
2 ஏழு வருடங்களாக நாயகன் அப்பா வீட்டுக்கு வருவதில்லை , அம்மாவுடன் ஃபோனில் மட்டும் பேசுகிறார். ஏன் நாயகன் இருக்கும் வீட்டுக்கு அம்மா வருவதில்லை ? நாயகனுக்கு அப்பாவுடன் ஈகோ, அம்மாவுக்கு ஈகோ இல்லையே?
3 ரூ 400 கோடி கடனுக்கு 2 வருச வட்டி 150 கோடினு சொல்லும்போது ஷாம் கம்முன்னே இருக்காரு . ஒரு தொழில் அதிபருக்கு வங்கி மூலமா 80 பைசா வட்டிக்கு கடன் கிடைக்குமே? எதுக்கு தண்டமா கந்து வட்டிக்கு வாங்கனும் ?
4 ஒரு சின்னக்கேரக்டரில் வரும் கணேஷ் வெங்கட்ராமன் க்கு நாயகியை விட அதிக மேக்கப் எதுக்கு ? ராமரஜன் கூட இவ்ளோ பவுடர் போட்டதில்லை
5 ஜிமிக்கி ஜிமிக்கி பாடல் காட்சியில் சரணத்தில் ஒரு பரத நாட்டிய ஸ்டெப் வருது அதில் நாயகி பத்மினி மாதிரி நல்லா அபிநயம் பிடிக்கிறார் , சந்தோஷம், ஆனா அனுராதா , டிஸ்கோ சாந்தி மாதிரி அரை குறை டிரஸ். டிஸ்கோ பாட்டு வரும்போது கிளாமர் ஓகே , பரத நாட்டியத்தைகூட கிளாமர் டிரஸ்ல தான் ஆடனுமா?
6 நாயகனின் இரு அண்ணன்களும் வீட்டை விட்டு வெளியே போவதில் லாஜிக்கே இல்லை , ஆல்ரெடி கடன் இருக்கு . வெளில போய் பூவாவுக்கு என்ன செய்வாங்க ?
7 கதைப்படி நாயகனின் அண்ணன்கள் அவரை வாடா போடா என அழைப்பதும் சவால் விடும்போது மட்டம் தட்டுவதும் ஓக்கே ஆனா ஒரு மாஸ் ஹீரோவை டா போட்டு பேச ஓரளவு பிரபலமான ஆட்கள் அந்த கேரக்டரில் நடித்தால்தான் கெத்து . சும்மா ஷாம் மாதிரி டம்மி ஆட்களை மார்க்கெட் இல்லாத ஆட்களை நடிக்க வைத்தது தவறு
8 நாயகனின் அண்ணி விட்ட டைவர்ஸ் நோட்டீஸ் அண்ணன் தான் சைன் பண்ணி வாங்கனும், எப்படி அம்மா கைக்கு வருது ? அண்ணன் செல் ஃபோனுக்கு இப்படி ஒரு நோட்டீஸ் வருதுனு இண்ட்டிமேஷன் வருமே? அவருக்கு விஷயமே தெரியாதுனு நாயகன் சொல்வது எப்படி ?
9 அப்பா இறக்க இருக்கும் தருணத்தில் கூட ஷாம் அவரைப்பார்க்க வர மாட்டேன் என சொல்வதில் லாஜிக்கே இல்லை. பாசத்துக்காக வர்லைன்னாலும் சொத்துக்காக வந்துதானே ஆக்னும் ? உயிலை மாத்தி எழுதிட்டா என்ன பண்ணுவோம்?னு பயம் இருக்குமே?
10 ஹீரோ டயலாக் பேசியே வில்லன்களை திருத்திய படங்களான எம் ஜி ஆரின் பல்லாண்டு வாழ்க , இரா பார்த்திபன் -ன் இவண் போன்ற படங்கள் பாடம் தந்த பின்னும் அதே மாதிரி காட்சி எதற்கு ?
11 பைரவா படத்தில் இருந்து விஜய் விக் வைக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் ஓவர் அடர்த்தியான விக் எடுபடவில்லை , தலை வீங்கி இருப்பதை போல் இருக்கிறது. நார்மல் விக் வைத்தால் நல்லது
12 பர்சனல் லைஃப் ரெஃப்ர்ன்ஸ் இருப்பதல் சரத் குமார் ரோலில் எஸ் ஏ சி நடித்திருந்தால் இன்னும் மனதுக்கு நெருக்கமாக இருந்திருக்கும்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விஜய் ரசிகர்கள் , டி வி சீரியல் தினமும் பார்க்கும் பெண்கள் , தெலுங்குப்படங்கள் அதிகம் பார்க்காதவர்கள் பார்க்கலாம் . விகடன் மார்க் 40 ரேட்டிங் 2. 25 / 5
Varisu | |
---|---|
Directed by | Vamshi Paidipally |
Written by |
|
Produced by |
|
Starring | |
Cinematography | Karthik Palani |
Edited by | Praveen K. L. |
Music by | Thaman S |
Production companies | |
Distributed by | Seven Screen Studio Red Giant Movies |
Release date |
|
Running time | 167 minutes[1] |
Country | India |
Language | Tamil |
Budget | est. ₹200–280 crore[a] |
Box office | est. ₹302 crore[5][6][7] |
1 comments:
Amazon prime la innum release agala. Torrent la download panni partha mathiri iruke
Post a Comment