தனக்கு அடைக்கலம் கொடுத்தவரையே ஒரு பெண்ணுக்காக எதிர்க்கும் ரவுடி என்ன ஆகிறான் ? என்பதே இந்தப்படத்தின் ஒன் லைன்
நாயகன் ஒரு ஆதரவற்ற இளைஞன், இவன் ஒரு கட்டத்தில் ஒரு பிரபல டானின் மீது பிரயோகிக்கப்படும் கொலைத்தாக்குதலில் அவனைக்காப்பாற்றுகிறார். மும்பையில் பெரிய டான் ஆன அவர் தன் உயிரைக்காப்பாற்றிய பையனை தன் கூட்டத்தில் ரவுடியாக சேர்த்துக்கொள்கிறார். பின் இன்னொரு சந்தர்ப்பத்தில் நாயகன் அந்த டானை மீண்டும் ஒரு கொலைத்தாக்குதலில் இருந்து காப்பாற்ற அந்த டாணுக்கு நிக்ரான இரண்டாவது இடத்துக்கு நாயகன் வருகிறார்
இப்போது நாயகனுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் டெல்லியில் இருக்கும் ஒரு பெண்ணையும், அவள் தந்தையையும் கொலை செய்ய வேண்டும். நாயகன் டெல்லி செல்கிறார். கொலை செய்ய வேண்டிய பெண்ணை காதல் செய்கிறார். இது டாணுக்கு தெரியவர நாயகனை கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார்
இதற்குப்பின் நடக்கும் ஆக்சன் சீக்வன்ஸ் தான் பின் பாதி திரைக்கதை
டானாக இயக்குநர் கவ்தம் வாசுதேவ் மேனன் மிரட்டி இருக்கிறார், அவர் உடல் மொழியும், வசன் உச்சரிப்பும் பலே
நாயகனாக சந்தீப். இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ., இதில் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்கிறார். ஆனால் முக பாவனைகளில் சில இடங்களில் செயற்கைத்தனம். இது போல பவர் ஃபுல் ரோல் செய்ய விஜய், அஜித் மாதிரி மாஸ் ஹீரோ தான் கரெக்ட்
நாயகியாக திவ்யான்ஷா கவுஷிக் அழகிய முகம். ஹீரோவுடன் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் ஆவுட் ஆகி உள்ளது
விஜய் சேதுபதி மாறுபட்ட கெட்டப்பில் வருகிறார். வரலட்சுமி சரத் குமாரும் அவர் கூட கெஸ்ட் ரோலில் வருகிறார். அதிக வாய்ப்பில்லை
கேஜி எஃப் படத்தின் பாதிப்பு பல இடங்களில் தெரிகிறது . பேன் இண்டியா படம் விக்ரம் படத்தின் பாதிப்பும் ஆங்காங்கே தெரிகிறது. திரைக்கதை வலுவாக இல்லை . தமிழ் , தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என் ப்ரமோ செய்யப்பட்டாலும் தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்தது போலதான் தோன்றுகிறது
ஆர் சத்யநாராயணன் எடிட்டிங்கில் மொத்தம் இரண்டு மணி நேரத்துக்கு மேல் படமாக ஓடினாலும் ஒரு மணி நேரப்படத்தையே ஸ்லோமோஷனில் இழுத்தது போல தோன்றுகிறது
கிர்ன் கவுசிக்கின் ஒளிப்பதிவில் கேங்க்ஸ்டர் மூவிக்கான டார்க் ஷேடு கச்சிதமாக உள்ளது சாம் சி எஸ் இசை குட் பிஜிஎம் மில் தெறிக்க விடுகிறார்
இரண்டாம் பாகத்துக்கான லீடு வேற க்ளைமாக்சில் இருக்கிறது
மிகப்பெரும் டானை எதிரிகள் சூழ்ந்து தாக்க கார்னர் பண்ணி விடுகிறார்கள் , அப்போ ஹீரோ அவரைக்காப்பாற்றும் சீன் செமயாக படம் ஆக்கப்பட்டுள்ளது . பின்னணி இசை , ஆக்சன் சிக்வன்ஸ் , காமரா ஆங்கிள் எல்லாமே பிரமாதம்
ரசித்த வசனங்கள் ( பிரபல ட்விட்டர் ராஜன் ராதா மணாளன்)
1 ஒரு பெண் கையில் ஆண் சிக்கித்தவிக்கனும் , அதில் தான் அவனுக்கு இன்பம் என்பதுதான் ஆணின் தலை எழுத்து , ஆண்டவன் அப்படித்தான் வெச்சிருக்கான் .,நீ சிக்கிட்டே
2 நெருப்பு எப்போதும் கீழே போகாது , மேலே தான் போகும் , நெருப்பு ஈர்க்கும், ஆனா பக்கத்துல போனா மொத்தமா அழிச்சிடும்
3 கூடலுக்குப்பின் ஆண் சிலந்தியை பெண் சிலந்தி கொன்று விடும் , அவ்ளோ விஷம்
4 இந்த சீட்ல நீ உட்கார்ந்து பாரு , அப்போ இங்கே செய்வதெல்லாம் சரி எனத்தோன்றும்
5 ஒரு பொண்ணுக்காகவா இதெல்லாம் செஞ்சே?
ஆமா, ஒரு பெண்ணுக்காக செய்யலைன்னா ஒரு மனுசன் எதுக்காக வாழனும் ?
6 என்னைக்காதலிக்காதே என உன்னை நான் எச்சரிக்கிறேன், ஏன்னா நான் உன் இதயத்தை சுக்கு நூறா உடைச்சுடுவேன்
7 உன்னுடைய பொருள்னு தெரிஞ்சுட்டா அழுதுட்டு இருக்கக்கூடாது, எடுத்துக்கனும்
8 செய்யாத தப்புக்கெல்லாம் அழக்கூடாது
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக இவங்க நினைத்து வைத்திருக்கும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ரஜினி - சத்யராஜ் நடித்த மிஸ்டர் பாரத் படத்தை நினைவுபடுத்துகிறது
2 கதை நடப்பது 1990 களில் தான், ஆனால் நாயகன், நாயகி அணிந்திருக்கும் உடைகள் எல்லாம் 2023 காலத்துடையது
3 நாயகன் இவ்ளோ ரிஸ்க் எடுத்து செய்யும் எல்லாக்காரியங்களும் தன் காதலுக்காகவும், காதலி மீது வைத்திருக்கும் அன்புக்காகவும் தான், ஆனால் அதை காட்சிப்படுத்திய விதத்துல எந்த வித நம்பகத்தன்மையும் இல்லை
4 நாயகன் , நாயகி இருவரும் பெட்ரூமில் இருக்கும்போது 10 பேர் உள்ளே ப்வந்தது கூடத்தெரியாமலா இருப்பாஙக்? அவங்க எப்படி உள்ளே வந்தாங்க ,டீட்டெய்லிங் இல்லை
5 ஒரு இடத்தில் நாயகனை வில்லனின் ஆட்கள் சுட்டு விடுகின்றனர், அதற்குப்பின் அவர் சாவகாசமாய் எழுந்து 65 பேரை போட்டுத்தள்ளி விட்டு குண்டடி பட்ட இடத்தை கவனிக்கிறார்
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - அரைச்ச புளிச்ச மாவுதான், ஸ்டைலிஷாக காட்ட முயன்றிருக்கிறார்கள் , எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் 41 ரேட்டிங் 2.25 / 5
டிஸ்கி - இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணி ஆற்றும் அவினாசி ராஜன் தான் திரைகக்தை , வசனம் உதவி ., இவர் திருப்புரில் கலெக்டர் அலுவலகத்தில் கிளர்க் ஆக பணி ஆற்றியவர். பிரபல பாடகி சின்மயி தொடுத்த வழக்கில் அரசு வேலையை இழந்து சினி ஃபீல்டுக்குப்போனவர்.
Michael | |
---|---|
Directed by | Ranjit Jeyakodi |
Written by | Ranjit Jeyakodi |
Produced by | Bharath Chowdary Pushkar Ram Mohan Rao |
Starring | Sundeep Kishan Vijay Sethupathi Divyansha Kaushik Gautham Vasudev Menon Varun Sandesh |
Cinematography | Kiran Koushik |
Edited by | R. Sathyanarayanan |
Music by | Sam C. S. |
Production companies | Karan C Productions Sree Venkateswara Cinemas |
Release date |
|
Country | India |
Language | Telugu |
0 comments:
Post a Comment