ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் நெ1 முன்னாள் ராணுவ மேஜர். இப்போது ஓய்வு பெற்று ஒரு யூ ட்யூப் சேனல் நடத்தி வருகிறார். மொபைல் ஆப் மூலம் நிகழும் பாலியல் குற்றங்கள் பற்றி அப்டேட்டுவது அவரது யூ ட்யூப் சேனலில் செய்யும் பணி . அவரது அண்ணன் மகளின் தற்கொலைக்கு காரணம் ஆனவர்களை தேடிக்கொண்டு இருக்கிறார். அவரது அண்ணன் மகளின் செல் ஃபோன் அவருக்குக்கிடைக்கிறது , அதை செக் பண்ணிப்பார்க்கும்போது சில அதிர்ச்சியான வீடியோக்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் அவர் குற்றவாளிகளை அடையாளம் காண முடிகிறது
நாயகன் நெ 2 ஒரு சிவ பக்தர் .கடலூரில் இருந்து சேலம் வந்து ஒரு கோயிலில் இறை பணி , சேவை செய்து கொண்டிருப்பவர் . இவர் தொடர்ந்து மூன்று கொலைகளை கொடூரமாக செய்து வருகிறார். ஒரு கல்லூரியின் பேராசிரியர் , விடுதியின் லேடி வார்டன் , காலெஜ் வாட்ச்மேன் என அடுத்ததுத்து கொலைகள் செய்கிறார். இவர் எதற்காக அநத மூன்று கொலைகளையும் செய்தார்?நாயகன் நெ1 நாயகன் நெ 2 இருவரும் எந்தப்புள்ளியில் இணைகிறார்கள் என்பது மீதி திரைக்கதை
நாயகன் நெ 1 ஆக சதுரங்க வேட்டை புகழ் நட்டி எனும் நட்ராஜ், துடிப்பான நடிப்பு . கச்சிதமாக நடித்திருக்கிறார்.
நாயகன் நெ 2 வாக இயக்குநர் செல்வராகவன் அமைதியான பக்தராகவும், ஆவேசமான கொலைகாரராகவும் மாறுபட்ட நடிப்பை தர முயன்றிருக்கிறார். அண்டர்லைன் த வோர்டு முயன்றிருக்கிறார். அவ்வளவே . சாணிக்காயிதம் பாகம் 2 போலதான் அவரது கேரக்டர் டிசைன் அமைந்திருக்கிறது
கே ராஜன் வரும்போது அவருக்கு கை தட்டல் கிடைக்கிறது , எல்லாம் யூ ட்யூப் மகிமை .
கல்லூரியின் தாளாளராக ராதாரவி வில்லத்தனம் குட் . செல்வராகவனின் மகளாக ரிச்சா , புரோக்கராக கூல்ஜெயந்த், ஹாஸ்டல் வார்டனாக சசி லயா அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்
சபாஷ் டைரக்டர்
1 உங்கள் குழந்தைகளைக்கண்காணியுங்கள் ., செல் ஃபோனில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என அறிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து பதிய வைத்த விதம்
2 வழக்கமான அவரது சாதி ரீதியிலான காட்சிகள் , வ்சனங்களை தவிர்த்தது
3 இந்தியன் படத்தில் நாயகனான இந்தியன் தாத்தா வரிசையாக கொலை செய்வார். அந்த பேடர்னில் தான் இந்த திரைக்கதையிலும் வருகிறது
ரசித்த வசனங்கள்
1 கணவனால் திருப்தி அடையாத பெண்கள் வேறு உறவை நாடினால் அதை கள்ளக்காதல் என கேவலப்படுத்துகிறார்கள் , ஆனால் நாம் அதை திருமணம் தாண்டிய உறவு என கவுரவமாகச்சொல்ல வேண்டும் ( எக்ஸ்ட்ரா மேரிட்டல் லைஃப்)
2 இந்த தப்பு பண்ணுனவ்ங்க எல்லாம் சாக வேண்டியதுதான், ஆனா இப்படி நார்மலா சாகக்கூடாது , அசிங்கப்பட்டு சாகனும்
3 ஆண்கள் மூளையை வெச்சு சம்பாதிக்கற மாதிரி பெண்கள் உடம்பை மூலதனம் ஆக்கி சம்பாதிப்பதில் தப்பே இல்லை
4 வாழ்க்கைல சோதனைகள் வந்தா இறங்கிப்போராடனுமே தவிர இப்படி (நடத்தையில் ) இறங்கிப்போயிடக்கூடாது , ஒழுக்கத்தை விட்டா எல்லாமே நாசமாப்போயிடும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 செல்வராகவன் நெருப்புடன் பேசுவது போல ஒரு காட்சி வருகிறது. அதில் ஏகப்பட்ட தேவை இல்லாத குறியீடுகள் எல்லாம் இருக்கின்றது , அதைத்தவிர்த்திருக்கலாம்
2 முதல் பாதியில் இருந்த பரபரப்பும் , விறுவிறுப்பும் பின் பாதியில் இல்லை
3 தனது காதலருடன் லிப் லாக் செய்யும் வீடியோ வெளியாகி அதை வைத்து அவரை பாலியல் தொழில் தள்ள வற்புறுத்தப்படுவது நம்பும்படி இல்லை . இது எந்தக்காலம் என இயக்குநருக்குத்தெரியாதா? ப்ரீ வெட்டிங் சூட் என்ற பெயரில் அலங்கோலமாக அணி வகுக்கும் காலம், இப்போது இத்ற்கெல்லாம் பயப்படுவார்களா?
4 திரைக்கதையில் பெண்களைத்தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள். காதலனுடன் நெருக்கமாக இருந்தது தப்பு , முத்தம் கொடுத்தது தப்பு , அதை வீடியோ எடுக்க உதவியது தப்பு என எல்லா தப்புக்களையும் பெண்கள் தலைல தான் கட்டுகிறார்கள், ஏன் ஆண்கள் மேல் தப்பு சொல்லவே இல்லை ?
5 அறிவியல் கண்டுபிடிப்புகளால் நன்மையும் இருக்கு , தீமையும் இருக்கு , ஆனால் இந்தக்கதையில் செல் ஃபோன் தான் பகா சூரன் என அது கெடுதல் மட்டுமே என்னும் கருத்து வலியத்திணிக்கப்படுகிறது
6 காலேஜில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு மிரட்டல் கால் வருது . உடனே அவர் தன் செல் ஃபோன் எண்ணை மாற்றி விடலாமே? நெம்பர் தெரிந்தால்தானே மிரட்டல் வரும் ?
7 காதலன் உடல் பாகங்களை காட்டுவதாக சொன்னதும் உடனே காலேஜ் பெண் அதற்கு சம்மதித்து செல் ஃபோன் முன் போஸ் கொடுப்பாரா? அது ரிப்பெருக்குப்போனால் பரவிவிடும் ஆபத்து உள்ளது என்ப்து அவருக்கு தெரியாதா?
8 தெருக்கூத்துக்கலைஞனாக வரும் செல்வராகவன் ஆக்சன் ஹீரோ மாதிரி அனாயசமாக அடித்து வீழ்த்துவது ஓவரோ ஓவர்
9 பெண் பிள்ளைகளை வெளியே அனுப்ப வேண்டாம் வீட்டிலேயே பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் எனும் கருத்து மறைமுகமாக சொல்லபப்ட்டிருக்கிறது , அதற்கு சாத்தியமே இல்லையே?
10 இயக்குநர் தனது முந்தைய படங்களில் டெக்னிக்கள் அம்சங்கள் மேக்கிங்கில் நல்ல தரம் காட்டி இருந்தார் ஆனால் அந்த அளவுக்கு இதில் இல்லை , குறிப்பாக ஒளிப்பதிவில் பல தவறுகள் .
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - இது யு ஏ சர்ட்டிஃபிகேட் படம் தான். ஆனாலும் மைனர்கள் பார்க்கத்தேவை இல்லை .
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பகாசூரன் - தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கும் அப்பாவின் கதை, இடைவேளையோடு படம் முடியுது, ஆனா பின் பாதி இழுவை.செல்வராகவன், நட்டி நடிப்பு குட். விகடன் மார்க் 40 , ரேட்டிங் 2/ 5
0 comments:
Post a Comment