Sunday, February 05, 2023

தலைக்கூத்தல் (2023) தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)


2018 ல் ரிலீஸ்  ஆன  பாரம் , 2019 ல்  ரிலீஸ்  ஆன  கே டி  என்கிற  கருப்புத்துரை,ஆகிய  இரு  பட்ங்களும்  பேச  வந்த  சப்ஜெக்ட்தான்  இதிலும்  சொல்லப்பட்டு  இருக்கிறது, ஆனால்  அவற்றை  விட  விலாவாரியாக..


2015 ல்  ரிலீஸ்  ஆன  லென்ஸ்  என்னும்  த்ரில்லர்  படத்தை  இயக்கிய   ஜெயபிரகாஷ்  ராதா  கிருஷ்ணன்  தான்  இந்தப்படத்தை  இயக்கி  இருக்கிறார் .  கடலை  பர்பி  அல்லது  கடலை  மிட்டாய்  என்று  அழைக்கப்படும்  தின்பண்ட்த்திற்கு  உலக  அளவில்  ஒரு  பிரமாதமான  மார்க்கெட்டை  உருவாக்கிய  கோவில்பட்டி  ( மதுரை)   என்ற  ஊரில்  நடக்கும்  கதை  இது 


நாயகன்  கட்டிட  வேலை  மேஸ்திரியாக  இருக்கிறார். அவருக்கு  மனைவி , குழந்தை  , அப்பா  கொண்ட  கூட்டுக்குடித்தனத்தில்  வசிக்கின்றனர் .அப்பாவுக்கு  ஏற்பட்ட  ஒரு  விபத்து  காரணமாக  அவர்  படுத்த  படுக்கை  ஆகிறார். அவரைக்கவனிப்பதற்காக  தான்  பார்த்து  வந்த  மேஸ்திரி  வேலையை  விட்டு  விட்டு  ஒரு  பில்டிங்கில்  இரவு  நேர  செக்யூரிட்டி ஆக  பணிக்கு  செல்கிறார்  நாயகன் ,  இரவில்   செக்யூரிட்டி  பணி  , பகலில்  அப்பாவைப்பார்த்துக்கொள்ளும்  பணி


அப்பாவின்  மருத்துவ  செலவுக்காக  ஏகப்பட்ட  கடன்  ஆகிவிடுகிறது . தான்  குடி  இருக்கும்  தன்  சொந்த  வீட்டின்  பத்திரத்தை  அடமானம்  வைத்து  கடன்  வாங்கி  சிகிச்சை  செல்வை  மேற்கொள்கிறார். இது  அவரது  மனைவிக்குப்பிடிக்கவில்லை . உற்றார்  ., உறவினர்கள்  எல்லாம்   தலைக்கூத்து  முறைப்படி  அப்பாவை  கருணைக்கொலை  செய்து  விடலாம்  என  ஐடியா  கொடுக்கின்றனர் , ஆனால்    நாயகன்  அதற்கு  சம்மதிக்கவில்லை 


 இதற்குப்பின்  என்ன  ஆனது ?  வீட்டை  வைத்து  கடன்  தந்த  நபர்  வீட்டை  விற்க  நெருக்கடி  தரும்போது  என்ன  செய்கிறார் ?  வீட்டை  அடமானம்  வைத்த  விஷயம்  மனைவிக்கு  தெரிய  வரும்போது  ஏற்படும்  பிரச்சனைகளை  நாயகன்  எப்படி  சமாளிக்கிறார் ? அப்பா  உயிர்  பிழைத்தாரா?  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகனாக  சமுத்திரக்கனி . லைஃப்  டைம்  கேரக்டர்  என்று  சொல்வார்களே  அது  மாதிரி  ஒரு  கேரக்டர் , பிரமாதமாக  செய்து  இருக்கிறார். வ்ழக்கமாக  சமுத்திரக்கனி  என்றால்  புத்திமதி  சொல்வார்  என்று  சமூஅ  வலைத்தளங்களில்  மீம்ஸ்  பறக்கும், மாறாக  இதில்  பாத்திரத்தின்  தன்மை  உணர்ந்து  நடித்திருக்கிறார்


நாயகியாக  வசுந்த்ரா . கொஞ்சம்  சுயநலம்  கொஞ்சம்  பொது நலம்  என  சராசரி  பெண்  கேரக்டர்  . கனகச்சிதமான  நடிப்பு . வேலைக்கு  சென்ற  இடத்தில்  சபல  புத்தி  கொண்டவரை  சமாளிக்க  வெண்டும்,  மாமனாரை  கவனிக்க  வேண்டும்., கடனில்  வீழந்து  கிடக்கும்  கணவனை  வழி  நடத்த  வேண்டும் ,  குழந்தையையும்  பார்த்துக்கொள்ள  வேண்டும்    நான்கு  பக்கங்களும்  பிரச்சனைகளால்  துரத்தப்படும்  நபராக  கவனம்  ஈர்க்கிறார்


அப்பாவாக  படம்  பூரா  படுத்துக்கொண்டே   அபாரமாக  நடித்திருக்கிறார் கலைச்செல்வன்


 படம்  ரொம்ப  டிரையாகப்போய் விடக்கூடாது  என்பதற்காக  ஃபிளாஸ்பேக்  காட்சி  காதல்  ஜோடியாக  கதிர் - கத்தா  நந்தி   உலா  வருகிரார்கள்  . இது  முதல்  மரியாதை  படத்தில்  வரும்  கிளைக்கதையான  தீபன் - ரஞ்சனி  ஜோடிக்காட்சிகள்  போல்   படத்துடன்  பொருந்தாமல்  தனித்து  நிற்கின்றன. 


இசை  கண்ணன்  நாராயணன்,  உள்ளத்தை  உருக்கும்  இசை   ஒளிப்பதிவு  மார்ட்டின்  டான் ராஜ் , கிராமத்து  அழகை  எல்லாம்  கண் முன் கொண்டு  வருகிறார் 


படம்  மிக  மிக  மெதுவாக  செல்கிறது .  ஒரே  வீட்டுக்குள்  கதை  நகர்வதால்   கொஞ்சம்  போர்  அடிக்கிறது . க்ளைமாக்சில்  நெஞ்சை  நெகிழ  வைத்து  விடுகிறார்கள் 

மொத்தப்படமும்  2  ம்ணி  நேரம்  22  நிமிடங்கள்  ஓடுகிறது. ஃபிளாஸ்  பேக் காட்சிகளை  ட்ரிம்  பண்ணி  2  மணி  நேரப்படமாக  தந்திருக்கலாம் 

ரசித்த  வசனங்கள் 

 1  நாம  எந்த  உயிரையும்  கொல்லக்கூடாது , இந்த  உலகத்தில் தானா  வந்த  உயிர்கள்  தானாகவே  தான்  போகனும் 


2  ஒரு  வயதான  மனிதனின் சொத்து  என்ன  தெரியுமா? இளமைக்காலத்தில்  நிகழ்ந்த  நினைவுகளை  அசை  போடுவது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1    நாயகனின்  அப்பா  பாசம்  ஆழமாகக்காட்சிப்படுத்தியதைப்போல  அப்பா  வுக்கு  மகன்  மேல்  பாசம்  உண்டு  என்ற  காட்சி  எதுவுமே  இல்லை 


2  நாயகனின்  அப்பா  எப்போதும்  ஃபிளாஸ்பேக்கில்  காதலியுடன்  நடந்த

  சம்பவங்களையே  அசைபோடுகிறார். மகன்  தன்  மீது  வைத்திருக்கும்  பாசம்  பற்றி  சிலாகிக்கவும்  இல்லை . இதனால்  ஆடியன்சுக்கு  அந்த  கேரகட்ர்  மேல்  பெரிய  கனெக்டிவிட்டி  வரவில்லை 

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் - படம்  ரொம்பவுமே  ஸ்லோ..  சீரியல்  பார்த்த  அனுபவம்  உள்ள  பெண்கள்  மட்டும் பார்க்கலாம் . ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க் - 40  . ரேட்டிங்  2.25 /5 

0 comments: