- 2013 ல் ரிலீஸ் ஆன வத்திக்குச்சி என்ற ஆக்சன் த்ரில்லர் படம் ரிலீஸ் ஆனபோது அதன் இயக்குநர் பி கிங்க்ஸ்லின் பரபரப்பாக பேசப்பட்டார், புதுமுக நாயகனையும், அங்காடித்தெரு அஞ்சலியையும் வைத்து அவர் எடுத்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்றது. 10 வருட இடைவெளிக்குபின் டிரைவர் ஜமுனா என்ற த்ரில்லர் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது
- வில்லன் ஒரு முன்னாள் எம் எல் ஏ , அவர் எம் எல் ஏ வாக இருக்கும்போதே தன் மகனை கவுன்சிலர் பதவிக்கு போட்டி இட வைக்கிறார். ஆனால் அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ள நாயகியின் அப்பா போட்டி இடுவதாகச்சொல்லும்போது கூலிப்படை வைத்து அவரைக்கொலை செய்து விடுகிறார்
- அப்பா கொலையான பின் அம்மாவைக்கவனிக்க வேண்டிய குடும்பபொறுப்பு ஏற்படுவதால் நாயகி அப்பா பார்த்த அதே வேலையான டாக்சி டிரைவிங் தொழிலை கையில் எடுக்கிறார். நாயகியின் ஒரே தம்பி பொறுபில்லாமல் வீட்டை விட்டு எங்கோ போய் விடுகிறார்
- வில்லனான முன்னாள் எம் எல் ஏ வை வேறு சில காரணங்களுக்காக கொலை செய்ய வேறு ஒரு கூலிபடை முயல்கிறது . அவர்கள் நாயகியின் டாக்சியில் ஏறுகிறார்கள் . இதற்குபின் ஏற்படும் பரபரப்பான சம்பவங்களே திரைக்கதை
- நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் பாத்திரத்தின் பொறுப்பு உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகி ஒரு டாக்சி டிரைவரா க படம் முழுக்க வருவதே தமிழ் சினிமாவுக்கு புதியது ஆனால் நாயகியின் கேரக்டர் டிசைனில் காட்டிய கவனத்தை இயக்குநர் திரைக்கதையிலும் காட்டி இருக்கலாம்
- வில்லனாக ஆடுகளம் நரேன் கச்சிதம். காமெடிக்கு எனா சேர்த்த அபிஎஷேக் காமெடி டிராக் கடுப்பேற்றுகிறது. அந்த கேரக்டர் செய்யும் கோணங்கித்தனங்கள் எரிச்சலை ஏற்படுத்துகிறது
- திரைகக்தை முழுக்க ஒரு டாக்சி டிரைவிங் பயணத்திலேயே செல்வதால் ஒளிப்பதிவாளர் கோகுல் கூடுதல் கவனத்துடன் காட்சிகளை படமாக்கி இருக்கிறார். காட்சிக்கு காட்சி பரபாப்பை ஏற்படுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஜிப்ரான் பின்னணி இசையில் அதகளம் செய்து இருக்கிறார்
- படத்தில் ஏராளமான லாஜிக் மிஸ்டேக்குகள் .
- 1 முன்னாள் எம் எல் ஏ தனக்கு கொலை மிரட்டல் இருக்கிறது என போலீஸ் பாதுகா[ப்பு கோராதது ஏன் ?
- 2 அரசியல் பின் புலம் இல்லாத சாதாரண கூலிப்படையை பிடிக்க போலீஸ் ஏன் அவ்வளவு தயக்கம் காட்டுகிறது ?
- 3 ஒரு மீட்டர் நீளமுள்ள பட்டாக்கத்திகளால் நான்கு ரவுடிகள் அத்தனை வெட்டு வெட்டியும் வில்லனும், மகனும் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் ?
- 4 ? 100 கிமீ வேகத்தில் போகும் காரில் இருந்து கீழே விழும் ஆள் எப்படி காயமே இல்லாமல் தப்பிக்கிறார்?
- 5 நாயகி கார் ஓட்டும்போது அவரிடம் சில்மிஷன் செய்யும் ரவுடி அதில் உள்ள அபாயத்தை உணராதது ஏன்? ( டிரைவரை தொந்தரவு செய்தால் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி? என்ற பயம் வராதா? )
- மேற்சொன்ன லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்துப்பார்த்தால் படம் விறு விறுப்பாகவே செல்கிறது , க்ளைமாக்சில் வரும் அபாரமான திருப்பம் ஆடியன்சிடம் எந்த வித பெரிய ஷாக்கிங் சர்ப்பரைசையும் ஏற்படுத்தவில்லை
- ஒன்றே முக்கால் மணி நேரம் மட்டுமே ஓடும் இந்தப்படத்தை ஆஹா தமிழ் ஓடி டி தளம் ரிலீஸ் செய்து உள்ளது
- ரசித்த வசனங்கள்
- 1 வாழ்க்கைல சுகமா இருக்கனும்னா சுயநலமா இருக்கனும்
- 2 பெண்களை ஏமாற்றுவது சுலபம்
- 3 தேடிப்போய் நாமா நான்கு பேருக்கு உதவ முடியாம இருக்கலாம், ஆனா நம்மை சுற்றி நடக்கும் நி்கழ்வுகளுக்கு நாம்தான் முழுப்பொறுப்பு
- 4 ஒரு காரியத்தை செய்யனும்னு முடிவு பண்ணீட்டா நம்ம கிட்டே பயம் இருக்கக்கூடாது
- 5 பயம் என்பது ஒரு சுபாவம், அது நம்மை மட்டுமல்ல , நம்மை சார்ந்தவர்களையும் அழிச்சிடும்
- சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - சின்ன படம், தியேட்டரில் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . ஓடிடி ல்; அல்லது டிவி ல போட்டா டைம் பாஸ்க்கு பார்க்கலாம். ரேட்டிங் - 2.25 /5
0 comments:
Post a Comment