Sunday, February 26, 2023

வயசுப்பொண்ணு (1978) - தமிழ் - சினிமா விமர்சனம்

  ஸ்பாய்லர்  அலெர்ட்


இதயம்  பேசுகிறது  மணியன்  எழுதிய  தொடர்கதையான  லவ் பேர்ட்ஸ்  நாவல்  வடிவில்  வந்து  பின் சினிமாப்படம்  ஆகி  உள்ளது 


நாயகியோட  அக்கா  அம்மா , அப்பா  பேச்சைக்கேட்டு அடக்க  ஒடுக்க மாக  இருக்கும்  குடும்பப்பெண் , நாயகி  மாடர்ன்  கேர்ள்  ஆக  வாழ  விரும்பும்  ஆடம்பரமான  பெண்.நாயகன் ஒரு  வெட்டி  ஆஃபீஸ். அவன்  கூட  ஊர்  சுத்திட்டு  இருக்கா  நாயகி. அதை  அப்பா  பார்த்து  கண்டிக்க  நாயகி  லூஸ்  மாதிரி  வீட்டை  விட்டு  ஓடிப்போக  முடிவு  பண்ணி  ரயில்  ஏறி  எங்கேயோ  போக  முடிவு  பண்றா. ரயிலில் ஒரு  பணக்காரர்  சினேகிதம்  கிடைக்கிறது. அவர்  கூடவே  அவரது  பங்களாவிற்கு  செல்கிறார். அங்கே  தங்குமிடம்  தந்து  வேலையும்  தருகிறார் பணக்காரர். நாயகியை  அவர்  எதுவும்  தொந்தரவு  செய்யவில்லை , ஆனால்  அந்த  பணக்காரர்  வேறு  பெண்களுடன்  நெருக்கமாக  இருப்பது  நாயகிக்குப்பிடிக்கவில்லை , அதனால்  அவரை  விட்டு  விலக  நினைக்கிறா:ள்


 நாயகி  பட்டணத்தில் நல்ல  வேலையில்  இருப்பதை  அறிந்த  நாயகியின் அக்கா  தங்கையைப்பார்க்க  பட்டணம்  வருகிறாள் . நாயகன்  நாயகி , நாயகியின்  அக்கா  இருவரையும்  ஃபாலோ பண்ணி  அங்கே  வருகிறான். இந்த  சமயத்தில்  நாயகி  சில  ரவுடிகளால்  பாலியல்  பலாத்காரம்  செய்யப்படுகிறாள் 


 இதற்குப்பின்  என்ன  ஆனது  என்பதுதான்  திரைக்கதை 


சேலை  அணி  ந்து  அடக்க  ஒடுக்கமாக  இருந்தால்  யாரும்  ரேப்  செய்ய  மாட்டார்கள் , மாடர்ன்  டிரஸ்  போட்டால்  அரை  குறை  ஆடை  தப்பு  செய்ய  ஆண்களைத்தூண்டும்  என்பதுதான்  கதையின்  ஒன்  லைன் . இதைக்கண்டு  பிடிக்க  ரெண்டரை  மணி  நேரம்  ஆனது ., இது  ஒரு  தோல்விப்படம், ஆனா  அட்டகாசமான  பாட்டு  ஒண்ணு  இருக்கு 


நாயகியாக  ரொஜா  ரமணி  அழகிய  முகம் அருமையான  நடிப்பு ., கிளாமரான  தோற்றம்  நாயகியின்  அக்காவாக லதா  பண்பட்ட  நடிப்பு  , கண்ணிய  உடை 


நாயகனாக  முத்து ராமனுக்கு  நவரச  நாயக்ன்  கார்த்திக்கின்  ரோல், அக்கா, தங்கை  இருவருக்கும்  நூல்  விடும்  கேரக்டர் 


 பணக்காரராக  நம்பியார் , இவரை  வில்லன்  மாதிரி  காட்டலாமா? நல்லவராகக்காட்டலாமா?? என  இயக்குநருக்குக்குழப்பம் 

எம் எஸ்  விஸ்வநாதன் இசையில்   மூன்று  பாடல்கள், அதுல  ஒரு  பாட்டு  மெகா  ஹிட் 


இரண்டரை  மணி  நேரம்  ஓடும்  அளவுக்கு  இழு  இழு என  இழுத்து  ட்ரிம்  பண்ணி  எடிட்  பண்ணி  இயக்கி  இருப்பவர்  கே  சங்கர் 


ராஜாராம்  ஒளிப்பதிவு  கண்ணுக்குக்குளுமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  காஞ்சிப்பட்டுடுத்தி  கஸ்தூரிப்பொட்டு  வைத்து  தேவதை  போல்  நீ  நடந்து  வர  வேண்டும் 


2  அதோ  அதோ  ஒரு   செங்கோட்டை  இதோ  இதோ  ஒரு பெண்  கூட்டை  நான்  ஒரு   மும்தாஜ் , நீ ஒரு  ஷாஜகான்


3  மாத்தலாத்தா


4  மை  ஹூங்  லக்கி  லக்கி 


  ரசித்த  வசனங்கள் 


1   எங்க  வீட்டு  பசு  மாடு  பொல்லாதது , உங்க  வீட்டுக்காளையை  அடக்கி வைங்கனு  சொல்ல  முடியுமா?


2  பெண்கள்  தலை  குனிந்து  நடந்தாதான்  ஆண்கள்  தலை  நிமிர்ந்து  நடக்க  முடியும்


3  அடுத்தவங்களைப்பத்தி  கவலைப்பட்டுட்டே  இருந்தா  நாம  சந்தோஷமா  இருப்பது  போய்டும்

4   அவ  வழி  தவறிப்போறா , நீங்க  முறை  தவறிப்போறீங்க 

5  அவ  படி  தாண்டி  வெளில  போய்ட்டா, இனி நான்  எப்படி  படி  தாண்டி  வெளீல  போக  முடியும் ? 


6  அவ  இப்படி  தறிகெட்டுப்போகக்காரணம்  குறைந்த  பட்ச  சுதந்திரத்தைக்கூட  நீங்க  தராததுதான்

7  திருப்தியா  சாப்பிடறவங்களாலதான்  ஒரு  செயலை  முழுசா  செய்ய  முடியும்

8  இவ  தன் பேருக்கு  ஏத்த  மாதிரி ஆடி  அசைஞ்சு  ஸ்லோவாதான்  போவா  , ஏன்னா இவ  பேரே  சுலோச்சனா

9  தப்பை  மடில  கட்டிக்கிட்டவங்க  நாம  பணிஞ்சுதான்  போகனும்


10  நான்  ஒண்ணு  சொன்னா  தப்பா  நினைக்க  மாட்டீங்களே?

  நீங்க  எப்படி  நினைச்சுக்கச்சொல்றீங்களோ  அப்படியே  நினைச்சுக்கறேன்


   11 உடைஞ்சு  போன  தேனடைல  கூட  ஒரு  சொட்டுத்தேனாவது  மிச்சம்  இருக்கும் 


12  உலகத்துல  எத்தனையோ  பேரைப்பார்க்கிறோம், பழகுகிறோம், ஆனா  யாரோ  ஒரு  சிலர்  மேல தான்  பாசமும், அன்பும்  தோணுது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஸ்விம்மிங்  டிரஸ் ல  நீ  எவ்ளோ  அழகா  இருக்கே  தெரியுமா? அதை  உனக்கு  காட்டத்தான்  ஆள்  விட்டு  ஃபோட்டோ  எடுக்கச்சொன்னேன்  என  நாயகன்  சொன்னதும்  நாயகி  கோபப்பட்டு  கண்ணாடி  முன்  பார்த்தா  தெரியுமே? எதுக்கு  அதை  ஃபோட்டோ  எல்லாம்  எடுக்கனும்னு கேட்டிருக்க  வேண்டாமா? 


2  அக்கா , தங்கை  இருவரும்  ஒரே  காலேஜில்  படிக்கிறார்கள்,  தங்கை  அடிக்கடி  லீவ்  போடுகிறாள். ஒரு  முறை  ஒரு  சித்தி  வீட்டு  விசேஷம் என  லீவ்  போடும்போது  தங்கை  சொல்வது  உண்மையா? என  தெரிந்து  கொள்ள  காலேஜ்  பிரின்சிபால்  அக்காவைக்கூப்பிட்டு  விசாரிக்கிறார்கள். அக்கா  லீவ்  எடுக்கலை  என்னும்போது  அது  டுபாக்கூர்  என்பது  நமக்கே  தெரியுதே? பிரின்ஸ்க்கு  தெரியாதா? 


3  நாயகி  ஸ்விம்  டிரசில்  இருப்பதை  ஃபோட்டோ  எடுத்தது  அப்பாவுக்கு  தெரிய  வந்ததும்  பிரச்சனை  ஆகிறது .,  அப்போ  நாயகி  நாயகனிடம்  இந்த  ஃபோட்டோ  எப்படி  பப்ளிக்ல  லீக்  ஆச்சு ? என  கேட்டு  சண்டை  போட்டிருக்க  வேண்டாமா? ஆனா  செய்யல


4 வில்லன்  சென்னை  டூ  டெல்லி  போக  ரிசர்வேஷன்  டிக்கெட்  எடுத்திருக்கிறான், நாயகிக்கு  அன் ரிசர்வ்டு  கம்பார்ட்மெண்ட்  ஓப்பன்  டிக்கெட்  எடுத்துத்தருகிறான்,  நாயகி  எப்படி  வில்லனுடன்  ரயிலில்  ஒரே  கம்ப்பார்ட்மெண்ட்டில்  பயணிக்க  முடியும் ?


5  நாயகி  தன்  அக்காவுடன் , வீட்டில்  இருக்கும்போது  ரொம்ப  ஃப்ரீயா  இருப்பது  போல  காட்டிக்கொள்பவள்  வீட்டை  விட்டு  வெளியே  வந்ததும்  ரொம்ப  கட்டுப்பெட்டியான  பெண்  போல்  நடந்து  கொள்வது  கேரக்டர்  டிசைனில்  நிகழ்ந்த  குழப்பம் 


6  காஞ்சிப்பட்டுடுத்தி  கஸ்தூரிப்பொட்டு  வைத்து  தேவதை  போல்  நீ  நடந்து  வர  வேண்டும்   பாடல்  காட்சியில்  சரணம்  வரிகள்  “ நீ  பொய்க்கோபம்  கொண்டு  என்னை  நீ  விலக்கனும்  என  காட்சிப்படுத்தும்போது  நாயகி  கோபமே  படலை , வெட்கம் தான்  படுது . சூப்பர்  ஹிட்  பாட்டு  பிக்சரைசேஷனில்  கோட்டை  விட்டு  விட்டார்களே? 


7  நாயகி  வீட்டில் சண்டை  போட்டுக்கொண்டு  எல்லாம்  வரவில்லை , அக்கா  தேடி  வரும்போது  அவரை  அலட்சியம்  செய்வதற்கான  காரணம்  சொல்லப்படவில்லை 


8  நாயகி  ஹோட்டலில்   சாப்பிட்டு விட்டு  அக்காவுக்குப்பிடித்த  க்ளோப்ஜாமூன்  பார்சல்  வாங்குகிறாள் , அதிகபட்சம்  10 வாங்குனாக்கூட  பார்சல்  சைஸ்  என்ன  சைஸ்ல  இருக்கலாமோ  அதை  விட  25  மடங்கு  பெருசா  அந்த  பார்சல்  இருக்கு


9   ஹோட்டலில்  நாயகி  சாப்பிடும்போது 4  பொறுக்கிப்பசங்க  அவளை  உத்துப்பார்க்கறாங்க , அப்பவே  அவ   உஷார்  ஆகி    நாயகனுக்கு  ஃபோன்  பண்ணி  தகவல்  தெரிவித்திருக்கலாமே?


 10  ஹோட்டலில்  லேட்  நைட்  ஆகி  விட்டதால்  நாயகி டாக்சியில்  வரும்போது  பேக்  கிரவுண்டில்  இருட்டாக  இருக்கிறது , ஆனா  ரவுடிகள்  அவளை  ஃபாலோ  பண்ணி  ரேப்  பண்ணும்போது  வெளிச்சம்  வெய்யில்  இருக்கு , அடுத்த  நாள்  காலை  வரை  வெயிட்  பண்ணி  ரேப்  பண்ணி  இருப்பாங்களோ ? 

11   கல்யாண  மேடையில்  நாயகி , நாயகன்  ஏதோ  ஒரு  ஆளிடம்  தகறாரு  செய்து  ஃபைட்  போட்டுக்கொண்டு  இருக்கிறார். டெம்ப்போ  ஏத்தறதுக்கான  சீனா? நம்பகத்தன்மையே  இல்லை ,  காலைல 6  மணிக்கு  முகூர்த்தத்தை  வெச்சுட்டு  யாராவது  அலாரம்  வெச்சு  நாலரை  மணிக்கு  வெள்ளென  எழுந்து  போய்  சண்டை  போட்டுட்டு  இருப்பாங்களா? 


12  நாயகனின்  கேரக்டர்  டிசைன்  ஆரம்பம்  முதல்  கடைசி  வரை   நாயகி  அல்லது  நாயகியின்  அக்கா  யார்  கிடைச்சாலும்  கரெக்ட்  பண்ணிடலாம்  என்ற  எண்ணத்தில்  இருப்பவராகத்தான்  காட்டப்படுகிறார், ஆனால்  க்ளைமாக்சில்  நாயகியின்  அக்காவிடம்  உனக்காகத்தான்  உன்  தங்கை  பாதுகாப்புக்காக  அவள்  பின்னால்  சுற்றினேன்  என  பல்டி  அடிப்பதும்  நாயகி  தன்  அக்காவிடம்  அக்கா  நீயும்  அவரும்  ஒருவரை  ஒருவர்  விரும்புகிறீர்கள்  என  எனக்குத்தெரியும் என  சொல்வதும்  நம்ப  முடியாத காட்சிகள் 


13  வில்லனான  நம்பியார்  லேடீஸ்  விஷயத்தில்  வீக் என   சில  காட்சிகளில்  தெளிவாக  காட்டி  விடுகிறார்கள், முன்  பின்  அறிமுகமே  இல்லாத  நாயகிக்கு  அவர்  உதவுவது , வீட்டில்  தங்க  ஏற்பாடு  செய்வது  எல்லாமே  உள்  நோக்கம்  கொண்டுதான்  என்பது  தெள்ளத்தெளிவாகதெரிகிறது , ஆனால்  அவரை  அநியாயத்துக்கு  நல்லவன்  ஆகக்காட்டி  இருப்பது  எல்லாம்  ஓவர் 


14  நாயகிக்கு  ஹிந்தியே  தெரியாது , ஆனால்  க்ளைமாக்சில்  அவர்  ஹிந்திப்பாட்டு  பாடுவது  போல  காட்டி  இருக்கிறார்கள் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - நாயகி  கிளாமர்  டிரசில்  வருகிறார். மற்றபடி  அடல்ட்  கண்ட்டெண்ட்  காட்சிகள்  இல்லை . ரேப்  சீன்  கூட  பூடகமாக  உணர்த்தப்படுகிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - . நாவலாக வந்து  படமாக  ஆன  படங்களைப்பார்க்கும்  ஆர்வம்  உள்ளவர்கள் மட்டும்  பார்க்கலாம்,  யூ  ட்யூப்ல  கிடைக்குது / ரேட்டிங்  2 / 5 




வயசு பொண்ணு
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகே. என். குஞ்சப்பன்
ஆர். ஜி. எம். புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ரோஜாமணி
லதா
வெளியீடுசெப்டம்பர் 21978
ஓட்டம்.
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: