கணவனுக்கு நாயகி நடந்த விஷயத்தைச்சொல்லவில்லை .நாயகி கர்ப்பம் ஆனது தெரிந்து கணவன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான் ஆனால் நாயகி மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு சோகமாக இருக்கிறாள்
ஒரு கட்டத்தில் கணவனுக்கு விஷயம் தெரிகிறது . யாரோ ஆக்கிய கர்ப்பத்துக்கு என்னை பலிகடா ஆக்கப்பார்க்கிறாயா? என கணவன் அவளை அடித்து விடுகிறான்
போலீசில் புகார் கொடுக்கலாம் என நாயகி வற்புறுத்தியும் கணவன் கேட்கவில்லை , ஆஃபீசில் தன்னுடன் பணி புரியும் தன் நண்பனிடம் இந்த விஷயத்தை சொல்லி விடுகிறான். அப்படிச்சொன்னது நாயகிக்குப்பிடிக்கவில்லை
இதற்குப்பின் நாயகி என்ன முடிவு எடுத்தாள் ? அந்த நான்கு மாணவர்கள் யார்? என்பதை எப்படிக்கண்டுபிடிக்கிறாள் ? நான்கு பேரைக்கொல்லாமல் , காயப்படுத்தாமல் வித்தியாசமான சிந்தனையில் அவர்களை எப்படிப்பழி வாங்கினாள் என்பதுதான் திரைக்கதை
நாயகியாக அமாலா பால், படம் முழுவதும் மன நிலை பாதிக்கப்ட்டு மிகவும் டிப்ரஷன் ஆன முகத்துடனேயே வருகிறார். கணவன் தன்னைப்புரிந்து கொள்ளாதது கண்டு மனம் வேதனைப்படும்போது உருக்கமான நடிப்பு . கணவனின் நண்பன் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லி தோள் மேல் கை வைக்கையில் கையை எடுடா . வெளீல போடா என ஆக்ரோஷமாகப்பொங்கும் போது எரிமலை நடிப்பு
கணவனாக ஹாக்கிம் ஷாஜகான் கச்சிதமான நடிப்பு . பயந்த சுபாவம் உள்ளவராக , மனைவியிடம் மன்னிப்புக்கேட்பவராக , அம்மாவிடம் இந்த வயதிலும் அடி வாங்குபவராக பல மாறுபட்ட முகங்களைக்காட்ட வேண்டிய சூழல் . உணர்ந்து நடித்திருக்கிறார்
போராட்டப்பெண்மணியாக , கம்யூனிஸ்ட்டாக கல்யாணியாக வரும் மஞ்சு பிள்ளை மாறுபட்ட கேரக்டர் டிசைன் ., அவரது கேரக்டர் டிசைன் கே ஆர் கவுரியம்மாள் , முன்னாள் நக்சலைட் அஜிதா இருவ்ரின் கலப்பாக இருக்கிறது. புகை பிடிக்கும் கேரக்டராக ஏன் காட்ட வேண்டும் என தெரியவில்லை , புரட்சிகரமான பெண் எனக்காட்ட புகை பிடிப்பவராக , மது அருந்துபவராகக்காட்ட வேண்டுமா ? என்ன ?
நாயகிக்கு உதவுபவராக செம்பவன் வினோத் கலக்கி இருக்கிறார். இவருக்கு தரப்பட்ட ரோல் ஒரு கெஸ்ட் ரோல் தான், ஆனால் பெஸ்ட் ரோல்
இயக்கம் விவேக் . நாயகி நான்கு பேரில் ஒரு மாணவனை முதலில் அடையாளம் கண்டு பிடிக்க எடுக்கும் முயற்சிகள் , கையாளும் யுக்திகள் அட போட வைக்கின்றன.
நான்கு மாணவர்களில் இரண்டு பெர் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள் . கல்யாண வீட்டில் டீச்சரைக்கண்டு சமாளிப்பது செம . நாயகி என்ன தைரியத்தில் குற்றவாளிகளில் ஒருவனை லாட்ஜில் தனிமையில் சந்திக்கிறார் என்ற கேள்விக்கு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் விடை இருக்கிறது
எடிட்டர் மனோஜ் கனகச்சிதமாக 2 மணி நேரத்தில் கட் செய்து இருக்கிறார்.டான் வின்செண்ட்டின் இசை , பின்னணி இசை கச்சிதம் . அனுவின் ஒளிப்பதிவு நல்ல தரம்
பெண்களும் பார்க்க வேண்டிய ரிவஞ்ச் த்ரில்லர் மூவி இது . நெட் ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது
ரசித்த வசனங்கள்
1 நாளுக்கு நாள் ஸ்மார்ட் ஆகிட்டே போறீங்க
என் பொண்டாட்டி அழகுக்கு ஈடு கொடுக்கனும் இல்ல?
2 ஒருவரின் உரிமை பறிக்கப்படும்போது அவரால மூச்சு கூட விட முடியாது , அந்த நிலைல தான் அவர் போராடவே தொடங்குவார்
3 குடும்பம்கறது பார்லிமெண்ட் மாதிரி அதுல ஆம்பளைங்கதான் பிரைம் மினிஸ்டர் மாதிரி இருக்கனும், நாம கிழிக்கும் கோட்டை அவங்க தாண்டக்கூடாது
4 நாம கோபமா இருக்கும்போது செய்யும் தவறுகளை நாம உணரும்போது அது காலம் கடந்த ஞானமாக இருக்கும்
5 ஒரு மனிதனை உள்ளுக்குள்ளேயே வெச்சு அரிக்கும் விஷயம் எது தெரியுமா? குற்ற உணர்ச்சி
6 பொண்ணுங்க ஷார்ட்ஸ் போடறது தப்பு இல்லை , அதுல தப்புக்கண்டு பிடிக்கும் எண்ணம் தான் தப்பு
7 நீ சின்னப்பையன், உனக்கு தப்பான பாதையைக்காட்ட நிறையப்பேர் இருப்பாங்க , நீதான் ஜாக்கிரதையா இருக்கனும்
8 எனக்கு மேரேஜ் ஆகி 12 வருசம் ஆகுது , இதுவரை என் புருசன் தான் செஞ்ச எந்த தப்புக்கும் என் கிட்டே மன்னிப்புக்கேட்டதே இல்லை
9 ஒருத்தரோட நிழல்ல வாழ்றதை விட தனியா வாழ்வதே மேல்
10 எனக்கு ஒரு பிரச்சனைனு வர்றப்ப நீ கூட நிக்கலை. அப்புறம் நீ என்ன துணை ? வாழ்க்கைத்துணை ?
11 சில முடிவுகள் நம்ம பயத்தை இல்லாம ஆக்கும் , நம்பிக்கையை வளர்க்கும் , எல்லாரும் அதை ஒத்துக்கனும்னு அவசியம் இல்லை , ஆனா அந்த முடிவுதான் நம்மை நம்ம சொந்தக்கால்ல நிக்க வைக்கும்
12 போலீஸ் லத்திக்கு மட்டும் குழந்தை கொடுக்கும் சக்தி இருந்தா எனக்கு இந்நேரம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறந்திருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 தான் கர்ப்பம் ஆனது தன் கணவனால் அல்ல என்பதை உணர்ந்த நாயகி அந்த விஷயம் கணவனுக்குத்தெரியாம இருக்க நினைப்பதாக இருந்தால் கர்ப்பம் ஆன மெடிக்கல் ரிப்போர்ட்டை வீட்டிலேயே வைப்பது ஏன்?
2 கணவனுக்குத்தெரியக்கூடாதுனு நினைக்கும் நாயகி தன் ஃபேமிலி டாக்டரிடம் எதற்காக செக்கப் செய்து கொள்கிறாள் ? புது டாக்டரிடம், வேற ஏரியா டாக்டரிடம் செக்கப் செய்து கொள்வதுதானே சேஃப்டி ?
3 ஸ்கூலில் உள்ள க்ளாஸ் ரூம்களை கதவு டைப்பது பியூன் வேலை, டீச்சர் ஆன நாயகி அந்த வேலையை ஏன் செய்கிறார்?
4 பாலியல் வன் கொடுமைக்கு ஆளான நாயகி 24 மணி நேரத்துக்குள் மெடிக்கல் டெஸ்ட் செய்திருந்தால்தான் குற்றவாளி பற்றி துப்புக்கிடைக்கும் என்பது தெரிந்தும் அதை செய்யவில்லை. 4 பேரால் வன்கொடுமைக்கு ஆளானதால் கர்ப்பம் ஆக வாய்ப்பு உண்டு என தெரிந்தும் 3மாதங்களாக அஜாக்கிரதையாக இருப்பது ஏன் ?
5 போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என முடிவு எடுக்கும் நாயகி மகளிர் காவல் நிலையத்துக்கு ஏன் போகவில்லை ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சராசரியான ஒரு ரிவஞ்ச் த்ரில்லர் தான் , ஆனால் திரைக்கதையும் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் புதுசா இருக்கு . ரேட்டிங் 2.75 / 5
0 comments:
Post a Comment