நாயகன் இந்தியா சார்பாக பாகிஸ்தானில் பணி ஆற்றும் ஒரு ரா ஏஜெண்ட். நாயகனோட அப்பா பணத்துக்காக இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற ஒரு துரோகி. இதனால இந்த பாவத்துக்குப்பரிகாரமாக இந்தியாவுக்கு விசுவாசமா இருக்க வேண்டும் என நாயகன் நினைக்கிறார். பாகிஸ்தானில் விழி ஒளி இழந்த நாயகியைக்காதலித்து மணம் முடிக்கிறார்.
1970 களில் கதை நடக்கிறது . நியூக்ளியர் பாம் சோதனை வெற்றி என அதிகாரப்பூர்வமாக இந்தியா உலகத்துக்கு அறிவித்தது. அந்த விஷயத்தில் இந்தியாவை எதிர்த்து உலக அரங்கில் குரல் கொடுத்த பாகிஸ்தான் அதே வேலையை ரகசியமாக சட்டத்துக்கு விரோதமாக ஒரு இடத்தில் செய்து வருவது இந்தியாவுக்குத்தெரிய வருகிறது
பாகிஸ்தான் நியூக்ளியர் பாம் தயாரிக்கும் இடம் எது ? என்பதைக்கண்டு பிடித்துத்தகவல் சொல்ல வேண்டிய பணி நாயகனிடம் ஒப்படைக்கப்படுகிறது . அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் காரனமாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின் புதிய பிரதமர் பொறுப்பேற்ற பின் இந்த ரா ஏஜெண்டுக்கு இடப்பட்ட பணி வாபஸ் பெறப்படுகிறது . இந்தியப்பிரதமர் பாகிஸ்தானுடன் நட்புறவு பாராட்ட விரும்புவதால் அந்தப்பணிக்கு தடை விதிக்கிறார். ஆனால் இந்திய பிரதமருக்குத்தெரியாமலேயே இந்தப்பணி தொடர்கிறது .இந்த ஆபரேஷனுக்குப்பெயர் தான் மிஷன் மஜ்னு
நாயகன் அந்த பாம் தயாரிக்கும் இடத்தைக்கண்டு பிடித்தாரா? உயிருட்ன் இந்தியாவுக்குத்திரும்பினாரா? என்பதுதான் க்ளைமாக்ஸ்
நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா சாக்லெட் பாய் போன்ற தோற்றத்துடன் வருகிறார். காதல் காட்சிகள் , அன்பு செலுத்தும் காட்சிகளில் சோபித்த அளவு ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்யவில்லை . தன் மனைவியிடம் தான் யார் என்பதை மறைக்கிறோமே? தன் மாமனார் இறப்புக்கு தான் ஒரு காரணம் ஆகி விட்டோமே என்ற குற்றா உணர்ச்சியில் துடிக்கும்போது கச்சிதமான நடிப்பு
நாயகியாக விழி ஒளி இழந்த பெண்ணாக ராஷ்மிகா மந்தனா , மெழுகு பொம்மை போல இருக்கிறார், ஆனால் இவர் வரும் காட்சிகள் எல்லாம் படத்துக்கு ஒரு ஸ்லோனெஸ் கொடுத்து விடுகிறது . விறுவிறுப்பாக செல்லும் ஆக்சன் கதையில் இவரது காட்சிகள் மட்டும் ஸ்பீடு பிரேக்கர்ஸ்
129 நிமிடங்கள் ஓடும் படத்தில் கடைசி 30 நிமிடங்கள் செம விறு விறுப்பு . நாயகன் வந்த வேலை முதல் 2 மணி நேரத்தில் முடிகிறது , கடைசி 30 நிமிடங்களில் தான் நாயகன் பாகிஸ்தானை விட்டு தப்பிக்க முயலும் காட்சிகள் . அது ஆங்கிலப்படத்துக்கு இணையாக பரபரப்பாக படம் ஆக்கப்பட்டுள்ளது
இந்தப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக்கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் படத்தில் ஆங்காங்கே வரும் லாஜிக் மிஸ்டேக்ஸ் எல்லாம் பெரிய அளவில் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை
பார்க்கத்தக்க இந்தப்படம் நெட் ஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆகி உள்ளது . 2023 ஆம் ஆண்டின் முதல் படம் ஒரு தேச பக்தியைப்பேசும் படம் என அமைந்ததில் மகிழ்ச்சி
.
ரசித்த வசனங்கள்
1 போரில் ஜெயிக்க ஆயுதம் மட்டும் முக்கியம் இல்லை , இண்ட்டலிஜென்ஸ் முக்கியம்
2 சிறையில் அடைந்து கிடந்த என் உணர்வுகளுக்கு அவர் சிறகுகளைக்கொடுத்திருக்கிறார், அவர் எனக்குக்கொடுக்கும் சந்தோசத்தை ஒரு அப்பாவா உங்களால கூடக்கொடுக்க முடியாது
3 எப்போதுமே தோல்வியை சந்திப்பவர்கள் தான் போர் பற்றி பயப்படுவார்கள்
4 அடுத்தவங்க வீட்டில் எப்போதும் அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது
5 அப்பா ஒரு தேச துரோகி, ஆனா மகனை நாடு நம்புது , எப்படி ?
அப்பா செஞ்ச பாவத்துக்கு மகன் பரிகாரம் செய்யலாம் இல்லையா?
6 இந்தியாவின் பார்டருக்கு அருகிலேயே பாகிஸ்தான் ஏன் இந்த கேம்ப் போட்டிருக்காங்க ?
திருடன் கைக்குள்ளேயே, ஆனா தேடறது ஊர் முழுக்க
7 ஆண்டவன் நமக்குன்னு அளிக்க இருக்கும் துன்பங்களை நாம் மாற்ற முடியாது
8 நாம ரெண்டு பேரும் பிரச்சனையே இல்லாத நிம்மதியான ஒரு இடத்தில் வாழ நீ ஆசைப்படறியா?
என்னோட நிம்மதியே நீங்கதான்
9 தேச பக்தி என்பது ரத்தத்தில் இல்லை , ஆன்மா வில் கலந்திருக்கு
10 நாம பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கு , உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்
எனக்குத்தெரியாத விஷயம் ஏதாவது இருந்தா சொல்லுங்க
11 ரெய்டு நடக்கும்போது அடையாளத்துக்கு நாம கேள்வி கேட்கும்போது யாரெல்லாம் அவங்க அம்மா , அப்பா செத்துப்போய்ட்டதா சொல்றாங்களோ அவங்களை எல்லாம் சுட்டுத்தள்ளுங்க, அவங்க தான் ரா ஏஜெண்ட்ஸ்
12 இந்தியாவின் மூவர்ணக்கொடி வெறும் காற்றினால் பறக்கவில்லை , தியாகிகளின் மூச்சுக்காற்றினால் பறக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 பாகிஸ்தான் பாம் தயாரிப்பதற்கு பிசிக்கல் எவிடன்ஸ் வேண்டும் என கேட்டதும் நாயகன் அங்கே பணி புரியும் ராணுவ வீரர்கள் சலூனில் முடி வெட்டும்போது அதை சாம்ப்பிள்ஸ் கலெக்ட் பண்ணும் ஐடியா அருமை ., அதை லேபில் கொடுத்து செக் செய்தால் ரேடியோ ஆக்டிவ் அலைகள் அதிக அளவில் காணப்படுமாம்
2 உளவு பார்க நாயகன் டெய்லராக வேடம் பொடுவது நல்ல ஐடியா. ராணுவ வீரர்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு யூனிஃபார்ம் டெலிவரி பண்ணி உளவு பார்க்க ஏதுவாக இருக்கும்
3 இந்திரா காந்தி , மொராஜ்ஜி த்ஜேசாய் , வாஜ் பாய் சம்பந்தப்பட்ட வலாற்று நிகழ்வுகளை கச்சிதமாக திரைக்கதையில் பயன்படுத்திய விதம்
4 ஒரு அரசியல்வாதிக்கோ, போலீஸ் ஆஃபீசருக்கோ கிடைக்கும் பேரும் புகழும் சீக்ரெட் ஏஜெண்ட்டுக்குக்கிடைக்காது அவர்களைக்காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது , தியாக வாழ்வு தான் என்பதை உணர்த்தும் விதம் குட்
5 விழி ஒளி இழந்த நாயகியை காதலிப்பது , திருமணம் செய்வது எல்லாமே ரா பிரிவின் திட்டம் தான் என்றாலும் நாயகன் நிஜமாகவே நாயகியைக்காதலிப்பது , காப்பாற்றுவது டச்சிங்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 க்ளைமாக்சில் ஏர் போர்ட்டில் நாயகன் நாயகி இருவர் புகைப்படங்களையும் அனுப்பிதான் எல்லோரும் தேடுகிறார்கள் , இதில் நாயகனை மட்டும் பிடிபட்டு நாயகி தப்பிப்பது நம்பும்படி இல்லை
2 நாயகன் செல்லும் இடங்கள் எல்லாம் அவருக்கு அனுகூலமாக இருப்பது எந்த விதமான இடரும் வராமல் இருப்பது சந்தேகமாக இருக்கிறது பாகிஸ்தான் வீரர்கள் அவ்வளவு டம்மியா?
3 படத்தில் வரும் மிலிட்ரி வீரர்கள் எல்லாம் ஃபங்க் கட்டிங் , டிஸ்கோ கட்டிங்கில் வருகிறார்கள்
4 நாயகன் பாஸ்போர்ட்டில் சீக்கியர் போல் தலைப்பாகை அணியவில்லை , ஆனால் ஏர்போர்ட்டில் சீக்கியர் போல் கெட்டப்பில் வரும்போது செக்யூரிட்டி அது பற்றி சந்தேகம் கிளப்பும்போது நாயகன் செய்யும் சினிமாத்தனம் நம்பும்படி இல்லை
5 க்ளைமாக்சில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ரா ஏஜெண்ட்கள் எல்லோரையும் சுட்டுத்தள்ளுகிறது , ஆனால் நாயகனை மட்டும் கன் பாயின்ட்டில் மிரட்டிட்டு மட்டும் இருக்கிறது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட்- உண்மை சம்பவம் என்பதால் ஆர்வமாகப்பார்க்கலாம். சராசரி ஸ்பை த்ரில்லர். போர் அடிக்காமல் போகிறது , rரேட்டிங் 2.75 /5
Mission Majnu | |
---|---|
Directed by | Govind Bhana |
Written by | Screenplay: Govind Bhana Parveez Shaikh Aseem Arrora Dialogues: Sumit Batheja |
Story by | Parveez Shaikh Aseem Arrora |
Produced by |
|
Starring | |
Cinematography | Bijitesh De |
Edited by |
|
Music by | Ketan Sodha |
Production companies |
|
Distributed by | Netflix |
Release date |
|
Running time | 129 minutes[1] |
Country | India |
Language | Hindi |
0 comments:
Post a Comment