Thursday, January 12, 2023

INI UTHARAM (2022) மலையாளம் - புதிய பதில் - திரை விமர்சனம் ( மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்) @ ஜீ 5


நாயகி  ஒரு  டாக்டர்.  அவர்  ஒரு  காட்டுப்பகுதில  இருக்கும்  போலீஸ்  ஸ்டேஷனுக்குப்போய் சர்க்கிள்  இன்ஸ்பெக்டரைப்பார்க்க  வேண்டும்  என்று சொல்கிறார். என்ன  விஷயம் ? என்  கிட்டேயே  சொல்லுங்க  என  சப்  இன்ஸ்பெக்டர்  கேட்கும்போது  நான்  ஒரு  கொலை  செய்து  விட்டேன் , டெட் பாடியை  ஒரு  இடத்துல  புதைத்து இருக்கிறேன்  என்கிறார்.

அப்போது  நாயகி  ஒரு  மாத்திரையை போட்டுக்கொள்வதை  போலீஸ்  கவனிக்கிறது. அது  மன  நலம்  பாதிக்கப்பட்டவர்கள்  சாப்பிடுவது  என்பதால்  நாயகி  சொல்வதை  அவர்கள்  சீரியசாக  எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது  ஸ்டேஷனுக்கு  மீடியாக்கள்  வந்து  விடுகின்றன.


 நாயகி  மீடியாவிடம்  இதே  விஷயத்தை  சொல்லி  பின்  போலீஸ்  நான்  சொல்வதை   கண்டு  கொள்ளவே  இல்லை  என  புகார்  சொல்ல  இந்த  விஷயம்  பரபரப்பாகி  மாநிலம்  முழுக்க  பதட்டம்  தொற்றிக்கொள்கிறது 


இந்தக்கேசை விசாரிக்க  எஸ்  பி  வருகிறார். டெட்  பாடி  புதைக்கப்பட்ட  இடத்துக்கு  போலீஸ் , மீடியா  , பொது மக்கள்  எல்லோரும்  செல்கின்றனர். நாயகி  அடையாளம்  காட்டிய  இடத்தில்  தோண்டும்போது  இரண்டு  டெட்  பாடிகள்  கிடைக்கின்றன. ஒன்று  அந்த  ஊர்  பாதிரியார், இன்னொரு  ஆள்  யார்  என  தெரியவில்லை . ஆனால்  நாயகி  குறிப்பிட்ட  அவரது  பாய்  ஃபிரண்டின்  பிணம்  கிடைக்கவில்லை 


அப்போது  தான்  நாயகி  இன்னொரு  குண்டைத்தூக்கிப்போடுகிறார்.  இந்தக்கொலைகள் பற்றி  எனக்கு  எதுவும்  தெரியாது . இன்ஸ்பெக்டர்  தான்  மூல காரணம், அவரை  விசாரித்தால்  தெரியும்  என்கிறார். 


மக்கள்  கொதித்து  எழுகிறார்கள் . எஸ்  பி  அவர்களை  சமாதானப்படுத்துகிறார். போலீஸ்  இலாகாவின்  பெயர்  கெடாமல்  இந்தக்கேசை  முடித்து  வைக்க  மேலிட  உத்தரவு  வருகிறது 


 இந்த  இரண்டு  கொலைகளை  அந்த இன்ஸ்பெக்டர்  ஏன்    செய்தார்? நாயகி  ஏன்  அப்படி  ஒரு  டிராமா  நடத்தினார்? நாயகியின்  பாய்  ஃபிரண்ட்  என்ன  ஆனார்  என்பதை  மீதி  திரைக்கதை  விளக்குகிறது   


நாயகியாக அபர்ணா  பால முரளி . மகேஷிண்டே  பிரதிகாரம் எனும்  மலையாளப்படத்தின்  மூலம்  கேரளாவில்  அறிமுகம்  ஆகி  சூரரைப்போற்று  படம்  மூலம்  தமிழுக்கு  அறிமுகம் ஆனவர். மொத்தப்படத்தையும்  ஒற்றை ஆளாகத்தன்  தோளில்  தாங்கி  இருக்கிறார்.அவரது  கேரக்டர்  கடைசி  வரை  சஸ்பென்சாகவே  கொண்டு  செல்லப்பட்டது  சிறப்பு 


எஸ் பி  ஆக  ஹரீஷ்  உத்தமன்.  ,  மேலிட  உத்தரவுகளுக்கும்   பணிந்து  தன்  மனம்  சொல்வதற்கும்  உகந்து  அவர்  எடுக்கும்  நடவடிக்கைகள்  அருமை . அவர்  பேசும்  சில  வசனங்கள்  கை  தட்டல்  பெற  வைக்கின்றன

நாயகியின்  காதலனாக  வரும்  சித்தார்த்  மேனனுக்கு  அதிக  வாய்ப்பில்லை, குறைவான  காட்சிகளே  வருகிறார் என்றாலும்  நிறைவான  நடிப்பு 

ஒரு   மர்டர்  மிஸ்ட்ரி  படத்துக்கான  ஒளிப்பதிவு  எப்படி   இருக்க  வேண்டும்  என்பதை ஒளிப்பதிவாளர் ரவிச்சந்திரன்  உணர்ந்து  பதிவு  செய்து  இருக்கிறார்.ஜிதின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்து  இருக்கிறார், ரஞ்சித்  உண்ணி  விறுவிறுப்பான  திரைக்கதை  அமைத்திருக்கிறார். ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காத  வண்ணம் சுதீஷ்  ராமச்சந்திரன்  இயக்கி  இருக்கிறார்


 அனைவரும்  பார்க்கத்தகுந்த  இந்த  த்ரில்லர்  படம்  ஜீ ஃபைவ்  ஓ டி டி  தளத்தில்;  காணக்கிடைக்கிரது 


ரசித்த  வசனங்கள் 


1  இங்கே  யாரும்  தப்பு  செய்யனும்னு  ஆசைப்பட  மாட்டாங்க , ஆனா  தப்பு  செஞ்சுட்டா  அதுல  இருந்து  தப்பிக்கனும்னு  கண்டிப்பா  ஆசைப்படுவாங்க 


2  உண்மைகள்  இங்கே  கோர்ட்டில்  உதவாது , சட்டத்துக்கு  சாட்சிகள்  தான்  வேண்டும் 


என்னதான்  சாட்சிகள்  முக்கியமாக  இருந்தாலும்  அவற்றை  எல்லாம்  உண்மை   சில  சமயங்களில்  ஓவர்  டேக்  செய்து விடும் 


3  பொதுவா  ஒரு  பிரச்சனைனு  வந்தா  அழுது  புலம்புவதுதான்  பெண்ணின்  வழக்கம், ஆனா ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  தான்  குற்றவாளினு  தெரிஞ்சும்  பயப்படாம  சாமார்த்தியமா  காய்  நகர்த்தி   அவரை  மாட்ட  விட்டியே  அந்த  தைரியம்  தான்  எனக்கு  பிடிச்சிருக்கு 

4   இந்த  உலகம்  அநியாயம்  செய்பவர்களால்  நிரம்பி  வழிகிறது , உன்னை  மாதிரி  நியாயம்  பேசறவங்களுக்கு  இங்கே  உகந்த  இடம்  இல்லை , அதனால  உன்னை  விடுவிக்கப்போறேன்


5  ஒரு  காலத்துல  நான்  தப்புக்கு  உடந்தையா  இருந்தது  உணமைதான், ஆனா  என்  மனசாட்சியே  என்னைக்கொன்னுடும்  போல  இருக்கு 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

1  கொலை  செய்த்து  ஒரு  சாமான்யன்  என்றால்  விபரம்  தெரியாது , ஆனா  கொலையாளி  அனுபவம்  மிக்க  போலீஸ்  ஆஃபீசர் . டெட்  பாடியை  புதைக்கும்போது அந்த  ஆளின்  செல் ஃபோனை  அங்கேயே  விட்டா  லாஸ்ட்  ஸ்விட்ச்  ஆஃப்  லொக்கேஷன்  காட்டிக்கொடுக்காதா? புத்திசாலித்தனமாக  டெட்  பாடியை  மட்டும்  புதைத்து  விட்டு  செல்  ஃபோனை  சில  தூரம்  தள்ளி  ஏதாவது   கிணற்றில்  வீசிவிடுவதுதானே  பாதுகாப்பு ? 


2  முக்கியமான  கொலையை[ப்பார்த்த  சாட்சியை  கொலை  செய்வது  ஓக்கே , ஆனா  அவன்  எடுத்த  வீடியோ  ஆதாரத்தைகொலையாளி  கவனிக்கலை . ஆனா  அதுக்குப்பின்  ஸ்பாட்டுக்கு  வந்த  நாயகி  கவனிக்கிறா, அது  எப்படி ?  போலீஸ்  கண்ணுக்கு  மாட்டாதது  அவருக்கு  மாட்டும் ? 


3 மினிஸ்டர்  தான்  கொலை  செய்யச்சொன்னது.  லாரி  டிரைவர்  15  வருடங்கள் கழித்து  மனசாட்சி  உறுத்துது  , சரண்டர்  ஆகிறேன்  என  சொல்லும்போது  தன்  உயிருக்கு  ஆபத்து  என்பதை  உணர  மாட்டாரா? 


4  வெறும்  அம்புகளை  எல்லாம்  தண்டிக்க  வைத்த  நாயகி இதுக்கெல்லாம்  மூல  காரணமாக  இருந்த  மினிஸ்டரை  எதுவும்  செய்யவில்லையே?


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மர்டர் மிஸ்டரி  த்ரில்லர்  ரசிகர்களுக்குப்பிடிக்கும் . அபர்ணா  பாலமுரளிக்காகப்பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 


Ini Utharam
Ini Utharam (2022 film) poster.jpg
Theatrical Poster
Directed bySudheesh Ramachandran
Written byRanjith Unni
Produced by
  • Arun
  • Varun
StarringAparna Balamurali
Harish Uthaman
Kalabhavan Shajohn
Chandhunadh
CinematographyRavichandran
Edited byJithin D. K.
Music byHesham Abdul Wahab
Production
company
A&V Entertainments
Release date
7 October 2022
CountryIndia
LanguageMalayalam

0 comments: