கடந்த புதன் மற்றும் வெள்ளி ஆகி ய இரு நாட்களில் அதானி குழும ஷேர்களின் விலை 15% டூ 20 % இறங்கி இருக்கிறது. ஹிடன்பெர்க் கம்பெனியின் 88 கேள்விகள் அடங்கிய ரிப்போர்ட் அதானி குழும ஷேர்கள் ஓவர் வேல்யூடு எனவும் , மிக அதிக விலையில் இப்போது விற்கபடுகிறது அந்த அளவு அவை ஒர்த் இல்லை எனவும் சொன்னதால் அந்த செய்தியின் தாக்கத்தில் கம்பெனி ஷேர்கள் இறங்கி வருகின்றன
தனி நபர்கள் ஷேர்கள் போக ஷேர் மார்க்கெட்டில் இவைகளில் அதிக முதலீடு செய்திருப்பது எல் ஐ சி யும் ஸ்டேட் பேங்க் இண்டியா வும் தான் என சொல்கிறார்கள் . அதானி குழும பங்குகளால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? அது எந்த அளவு இருக்கும் ?
அதானி க்ரூப் ப்ளெட்ஜ்டு ஷேர்ஸ்
1 அதானி ட்ராண்ஸ்மிஷன் - இதில் பிரமோட்டர்ஸ் ஹோல்டிங் 74.19%. அதில் அவர்கள் பிளெட்ஜ் பண்ணி கடன் வாங்கியது 4.92% , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு 3.78 % எல் ஐ சி முதலீடு 3.65^
2 அதானி டோட்டல் கேஸ்- இதில் பிரமோட்டர்ஸ் ஹோல்டிங் 74.80%. அதில் அவர்கள் பிளெட்ஜ் பண்ணி கடன் வாங்கியது ஜீரோ , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு 6.09 % எல் ஐ சி முதலீடு 5.96^
3 அதானி எண்ட்டர்பிரைசஸ் 72.64 இதில் பிரமோட்டர்ஸ் ஹோல்டிங் 72.64%. அதில் அவர்கள் பிளெட்ஜ் பண்ணி கடன் வாங்கியது 1.94% , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு 5.45 % எல் ஐ சி முதலீடு 4,23^
4 அதானி வில்மர் இதில் பிரமோட்டர்ஸ் ஹோல்டிங் 87.94%. அதில் அவர்கள் பிளெட்ஜ் பண்ணி கடன் வாங்கியது ஜீரோ , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு 0.24 % எல் ஐ சி முதலீடு ஜீரோ
5 அதானி க்ரீன் இதில் பிரமோட்டர்ஸ் ஹோல்டிங் 60.75%. அதில் அவர்கள் பிளெட்ஜ் பண்ணி கடன் வாங்கியது 2.65% , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு 1.40 % எல் ஐ சி முதலீடு 1.28^
6 அதானி பவர் இதில் பிரமோட்டர்ஸ் ஹோல்டிங் 74.97%. அதில் அவர்கள் பிளெட்ஜ் பண்ணி கடன் வாங்கியது 18.75% , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு ஜீரோ எல் ஐ சி முதலீடு ஜீரோ
7 அதானி போர்ட்ஸ் இதில் பிரமோட்டர்ஸ் ஹோல்டிங் 65.13%. அதில் அவர்கள் பிளெட்ஜ் பண்ணி கடன் வாங்கியது 11.28% , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு 14.46 % எல் ஐ சி முதலீடு 9.14%
8 ஏ சி சி இதில் பிரமோட்டர்ஸ் ஹோல்டிங் 56,69%. அதில் அவர்கள் பிளெட்ஜ் பண்ணி கடன் வாங்கியது 6.64% , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு 18.64 % எல் ஐ சி முதலீடு 6.41^
9 என் டி டி வி -இதில் எல் ஐ சி மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு செய்யவில்லை
10 அம்புஜா சிமெண்ட் இதில் பிரமோட்டர்ஸ் ஹோல்டிங் 63.15%. அதில் அவர்கள் பிளெட்ஜ் பண்ணி கடன் வாங்கியது ஜீரோ , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு 16.75 % எல் ஐ சி முதலீடு 6.33^
இப்போ மக்கள் பேசிக்கொள்வது அதானி ஷேர்கள் 20% இழப்பினால் அதில் அதிகம் பணம் போட்ட எல் ஐ சிக்கு அதிக இழப்பு இருக்குமோ? என்கிறார்கள் .
ஆனால் 2022ல் அதானி க்ரூப் ஷேர்கள் அபரித வளர்ச்சி அபரித லாபம் ஈட்டிய போது இதே எல ஐ சி இதில் லாபம் கண்டிருக்கும் அதன் லாப சதவீதம் 50% மினிமம் இருக்கும் , இப்போது அடைந்திருக்கும் 20% நட்டம் என்பது லாபத்தில் இருந்து நட்டம் அவ்வளவே
பிராஃபிட் புக் பண்ணி விட்டார்களா? இல்லையா? தெரியவில்லை
எப்படிப்பார்த்தாலும் பலரும் நினைப்பது போல எல் ஐ சி க்கு பெரிய நட்டம் எல்லாம் இல்லை
சமீபத்தில் எல் ஐ சி நிறுவனம் விட்ட அறிக்கை
2022ம் ஆண்டு இறுதி வரை எல் ஐ சி அதானி குழும ஷேர்களில் முதலீடு செய்த தொகை 36,000 கோடி ரூபாய் மட்டுமே, இது எங்கள் மொத்த சொத்து மதிப்பில் 1% மட்டுமே. ஆனால் அதானி குழும பங்குகளின் மூலம் சம்பாதித்த லாபத்துடன் இப்போது அதன் மதிப்பு 56,000 கோடி ரூபாய், எனவே சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் வருவது போல எல் ஐ சி நிறுவனம் ஒன்றும் நட்டத்தில் இல்லை. லாபத்தில் குறைவான நட்டம்தான் ஆகி உள்ளது , எனவே முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டாம்
0 comments:
Post a Comment