Sunday, January 15, 2023

ALLI (2022) அல்லி - மலையாளம் - திரை விமர்சனம் ( த்ரில்லர்) @ பில்மி ஓடிடி

a


spoiler alert

 ஒரு  ஃபார்ஸ்ட்  ஏரியாவில்  ஊருக்கு  ஒதுக்குப்புறமான  ஒரு  இடத்தில்  சிறிய  வீட்டில்  நாயகியும், அவள்  அப்பாவும்  குடி  இருக்கின்றனர். வீட்டுக்கு  அருகில்  உள்ள  கோயில்  பூசாரி  ஒருவ்ர்  நாயகி  மீது  பிரியப்பட்டு  தன்  காதலை  நாயகியிடம்  தெரிவிக்கிறார்.     எனக்கு  சம்மதம், ஆனால்  அப்பாவிடம்  பேசுங்கள்  என  நாயகி  சொல்லி  விடுகிறார். அப்பாவிடம்  பேசி  சம்மதம்  வாங்கிய  பூசாரி  திருமணம் செய்ய   சில  நாட்கள் அவகாசம்  கேட்கிறார். அவர்  ஊருக்குப்போய்  அம்மாவிடம்  தகவல்  சொல்லி  பின்  தனி  வீடு  வாடகைக்கு  எடுத்து  பின்  ஏற்பாடுகளைச்செய்ய  வேண்டும் 

நாயகியின்  தோழி  ஒருவர்  நீர்  நிலையில்  குளிக்கும்போது  இரு  ஆண்கள்  அவரிடம்  தகாத  முறையில்  நடக்கப்பார்க்க   நாயகி  அவர்களை  தட்டிக்கேட்கிறாள். இதனால்  அப்போதைக்கு  அவர்கள்  அங்கிருந்து  சென்று  விட்டாலும்  நாயகி  மீது  ஒரு  கண்  வைக்கின்றனர் . பழி  தீர்க்க  சமயம்  பார்த்துக்  காத்திருக்கின்றனர் 


 ஒரு  நாள்  நாயகியின்  அப்பா  நன்றாக  குடித்து  விட்டு  வீட்டுக்கு  வருகிறார். அன்று  இரவு  கதவு  தட்டும்  சத்தம்  கேட்டு  யார்  என  நாயகி  எட்டிப்பார்த்தால்  அந்த  வில்லன்கள்  இருவர். உடனே  அப்பாவை  எழுப்பப்பார்க்கிறார். ஆனால்  அவர்  போதையில் இருப்பதால்  எழவில்லை இதனால்  நாயகி  வீட்டின்  பின்  கதவு  வழியாக தப்பி  காட்டுக்குள்  சென்று  விடுகிறாள் 


 அடுத்த  நாள்  காலையில்  அப்பா  மனம்  வருந்தி    வீட்டின்  முன் , பின்  வாசல்  வழிகளை  அதிக  பாதுகாப்போடு  பலப்படுத்துகிறார் விரைவில்  மகளை அந்த  பூசாரிக்கு  மணம்  முடித்துக்கொடுத்து  விட்டால்  நிம்மதி  என்று நினைக்கிறார்


சில  நாட்கள்  கழித்து  மீண்டும்  நாயகி  ஒரு  நீர்  நிலையில்  குளிக்கச்செல்லும்போது  அந்த  வில்லன்கள்  இருவரும்  அவளை  வழி  மறிக்கின்றனர் . நாயகி  மீண்டும்  காட்டுக்குள்  தப்பி  ஓடுகிறாள் . இந்த  முறை  அவர்கள்  இருவரும்  நாயகியைத்துரத்தி  காட்டுக்குள்  அடி  எடுத்து  வைக்கின்றனர் . நாயகி  அவர்கள்  இருவரிடம்  இருந்து  தப்பித்தாரா? என்பதஒ  பரபரப்பான  மீதி  திரைக்கதையில்   காணலாம் 


நாயகி  அல்லியாக  மீனா குரூப்  பக்கத்து  வீட்டுப்பெண்  போன்ற   யதார்த்தமான  தோற்றத்தில்  வருகிறார். அதிக  ஒப்பனை  இல்லாத  அவர்  முகம்  கச்சிதம்


நாயகியின் அப்பாவாக  சஜி  வெஞ்சாரமூட்  நடித்திருக்கிறார், சிறந்த  குணச்சித்திர  நடிப்பு 


ஜெயந்தாஸ்   ஒளிப்பதிவில்  வனத்தின்  கொள்ளை  அழகை  எல்லாம்  கண்  முன்  பிடித்து  ஓவியம்  ஆக்குகிறார் அருண்  தாஸ்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  ஒன்றே  முக்கால் மணி  நேரம்  ஓடும்  விதமாக ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்

திரைக்கதை எழுதி  இயக்கி  இருப்பவர்   ராஜ் குமார்.   தளத்தில் , filmeஓ டி டி யில்  காணக்கிடைக்கிறது 

ரேட்டிங்  2 / 5 

0 comments: