ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் கேரளாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு டூர் வருகிறார். வேளாங்கண்ணி போய் விட்டு தன் குடும்பம், உறவினர்களுடன் கேரளா ரிட்டர்ன் போய்க்கொண்டிருக்கும் சமயம் வேனை ஒரு இடத்தில் நிறுத்தச்சொல்கிறார். வேனில் இருக்கும் மற்றவர்கள் எல்லாம் உறங்கிக்கொண்டிருக்க இவர் மட்டும் தனியாக வேனை விட்டு இறங்கி நடந்து போய் அருகில் இருக்கும் கிராமத்திற்கு செல்கிறார்
அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் புகுந்து அங்கே லுங்கி , சட்டை மாற்றிக்கொண்டு ஒரு மொபட்டை எடுத்துக்கொண்டு ஊரை சுற்றிப்பார்க்கக்கிளம்புகிறார். அந்த ஊர் மக்கள் ஆரம்பத்தில் அவரை திருடன் என நினைக்கின்றனர்
இதற்குள் வேனில் இருந்த நாயகனின் குடும்பத்தினர் விழித்து அவரைத்தேடி கிராமத்துக்கு வருகின்றனர் . ஆனால் நாயகன் அவர்களுடன் வரத்தயார் இல்லை . நீங்கள் எல்லாம் யார்? என அவர்களையே கேள்வி கேட்கிறார். குடும்பத்தினருக்கு பயங்கர அதிர்ச்சி
அந்த கிராமத்தில் உள்ள மனிதர்களின் பெயரை எல்லாம் சரியாகச்சொல்லி தனக்கு அந்த ஊரில் நெடு நாள் பந்தம் உள்ளவர் போல் நடந்து கொள்கிறார்
இவருக்கு முன் ஜென்ம நினைவு வந்து விட்டதா? ஸ்பிலிட் பர்சனாலிட்டியா? என்பதை பின் பாதி திரைக்கதை விளக்குகிறது
நாயகனாக மம்மூட்டி, இரு மாறுபட்ட பாத்திரங்களில் அட்டகசமாக அண்டர் ப்ளே ஆக்டிங் செய்திருக்கிறார். ஓப்பனிங் பில்டப்போ , ஹீரோ டாமினேஷனோ இல்லாமல் கதையின் நாயகனாக வாழ்ந்திருக்கிறார்
படத்தின் மிகப்பெரிய பிளஸ் மம்முட்டியின் கேரக்டர் டிசைன். பக்காவாக அவர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் மைனஸ் அவரது கேரக்டர் தவிர மற்ற எல்லா கேரக்டர்களுமே ஏனோ தானோ என்று தான் டிசைன் செய்து இருக்கிறார்கள்
ரம்யா பாண்டியன் சில காட்சிகளில் கண்களாலேயே நடித்திருக்கிறார். இவருக்கு கொஞ்சம் வசனங்களும், சிறிது ஸ்க்ரீன் ஸ்பேசும் தந்திருக்கலாம்
கதை பெரும்பாலும் தமிழக எல்லையிலேயே நடப்பதால் உரையாடல்கள் தமிழில் அதிகம் உள்ளது . ஒரு தமிழ்ப்படம் பார்ப்பது போல் தான் உள்ளது
படத்தில் பின்னணி இசை என்று தனியாக எதுவும் இல்லை . ஏற்கனவே வெளி வந்த படங்களின் பாடல்களை , வசனங்களை காட்சிக்கு ஏற்றபடி ரேடியோ , டி வி மூலமாக பொருத்தி இருக்கிறார்கள். சில இடங்களில் இந்த உத்தி ரசிக்க வைக்கிறது, பல இடங்களில் போர் அடிக்கிறது
கவுரவம் படத்தில் இரு மாறுபட்ட சிவாஜி ரோல்களில் மம்முட்டி நடித்து காட்டும் காட்சி ஒரு கிளாசிக்கான காட்சி
எஸ் ஹரீசின் திரைக்கதை அமைப்பு மிக மெதுவாக நகர்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் கிராமத்தைக்கண் முன் கொண்டு வந்திருக்கும் அழகிய காட்சிகள் . 105 நிமிடங்கள் மட்டுமே ஓடும் அளவு எடிட்டர் தீப்பு எஸ் ஜோசஃப் ட்ரிம் பண்ணி இருக்கிறார்
இது வழக்கமான மசாலா படம் இல்லை என்பதால் பொறுமையாக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும் தான் படம் பிடிக்கும்
சபாஷ் டைரக்டர் (லியோ ஜோஸ் பெள்ளிசேரி)
1 கமல் நடித்த பேசும் படத்தில் படம் முழுக்க வசனங்கள் இல்லை, இந்தக்குறை தெரியாமல் இருக்க இயக்குநர் சிங்கீதம் சீனிவாச்ராவ் ஒரு உத்தியைக்கையாண்டார். பின்னணியில் ரேடியோ பாட்டு , வசனம் அவ்வப்போது சுவரஸ்யமாய் வருமாறு பார்த்துக்கொண்டார், அது நல்லா ஒர்க் ஆவுட் ஆனது, அதே டெக்னிக்கை இந்த இயக்குநர் பின்பற்றி இருக்கிறார்
2 சில்லுக்கருப்பட்டி இயக்குநர் எடுத்த ஏலே படத்தில் வரும் கிராமத்தில் பல காட்சிகளைப்படம் பிடித்தது. அந்த்பப்டத்தின் காட்சிகளை அட்லீ வேலை செய்ததாக அந்த இயக்குநர் குற்றம் சாட்டினாலும் ரசிக்கும் விதத்தில் தான் உள்ளது
3 வீடு வரை உறவு , வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ பாடலையும் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி பாட்லையும் ப்ளேஸ் செய்த விதம்
4 தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் லாங்க் ஷாட்டில் அவரது மெனக்கெடல்களும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒன்றே முக்கால் மணி நேரம் மட்டுமே ஓடும் அளவு கச்சிதமாக ட்ரிம் செய்யப்ப்ட்ட படத்தில் கதைக்கு வர முதல் 30 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது ஓவர்
2 நாயகன் ஊரில் உள்ள எல்லோரையும் பேரை சொல்லிக்கூப்பிடுகிறார், சில சம்பவங்களை நினைவு கூர்கிறார், ஆனால் சொந்த மகளிடம் ஒரு வார்த்தை கூட ஃபேஸ் டூ ஃபேஸ் பேசவில்லை , சொந்த மனைவியிடம் அன்பாக பேசவில்லை . முக்கியமாக இந்த இருவர் தானே அவரை அடையாளம் காண வேண்டும் ?
3 நாயகன் ஜேம்ஸ் சுந்தரமாக ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகும்போது அந்த ஊர் மக்கள் அனைவரும் அட அவனை மாதிரியே நடந்துக்கறானே என வியக்கின்றனர் , ஆனா நமக்கு சுந்தரம் கேரக்டர் காட்டப்படவே இல்லை , அவரை காட்டி இருந்தால்தானே நமக்கு அது புரியும் ? அது இல்லாமல் நாயகன் எப்படி நட்ந்து கொண்டாலும் அட சுந்தரம் மாதிரியே இருக்கே என அவங்களே சிலாகித்துக்கொள்ள வேண்டியதுதான்
4 சுந்தரம் காணாமல் போய் 2 வருடங்கள் ஆகின்றன என டயலாக் வருது . அவன் பால் சப்ளை செய்தவன் , இப்போது நாயகன் பால் சப்ளை செய்யப்போகும்போது ஊர் மக்கள் வேண்டாம், வேறு ஆள் பால் ஊற்றுகிறான் என்கிறார்கள் , அப்போ பசுவை மட்டும் வைத்து அந்த குடும்பம் என்ன பண்ணுது ? அந்த வீட்டில் சுந்தரத்தின் அப்பா, மனைவி மகள் என 3 கேரக்டர்கள் யாராவது பால் சப்ளை செய்து இருக்கலாமே?
5 காணாமல் போன சுந்தரத்தின் லுங்கி சட்டையை எதற்கு கொடியில் காய வைத்திருக்கிறார்கள்?
6 நாயகன் சுந்தரத்தின் மனைவியோடு ஒரு வார்த்தை கூட பேசவில்லை , ஆனால் மனைவி நாயகனை சுந்தரம் போலவே ந்டந்து கொள்வதாக சிலாகிக்கிறார். அது எப்படி ?
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - இது அனைத்துத்தரப்புக்கான படம் அல்ல, மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை ரசிப்பவர்களுக்கு மட்டுமே , பொறுமையை ரொம்ப சோதிக்கும் படம் , ஆனால் பார்க்கலாம் ரேட்டிங் 3 / 5
Nanpakal Nerathu Mayakkam | |
---|---|
Directed by | Lijo Jose Pellissery |
Screenplay by | S. Hareesh |
Story by | Lijo Jose Pellissery |
Produced by | Mammootty Lijo Jose Pellissery |
Starring | Mammootty Ramya Pandian Ashokan |
Cinematography | Theni Eswar |
Edited by | Deepu S. Joseph |
Production companies | Mammootty Kampany Amen Movie Monastery |
Distributed by | Wayfarer Films |
Release dates | 12 December 2022 (IFFK) 19 January 2023 |
Country | India |
Languages | Malayalam Tamil[1] |
Box office | ₹13cr[2] |