Tuesday, January 10, 2023

தடயம் (2022) தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ ஷார்ட் ஃபிளிக்ஸ் ஓ டி டி


 நாயகன்  அல்லது  கதையின்  முக்கியக்கதாபாத்திரம்  பத்திரிக்கைத்துறையில்  பணியாற்றுபவராக  அமைந்த  கதை  அம்சம்  கொண்ட  படங்களில்  தமிழ்  சினிமா  வில்  மெகா  ஹிட்  ஆன  படங்கள்  ஆர். அர்விந்த்ராஜ்  இயக்கிய ஊமை  விழிகள் (1986) , மணிவண்ணன்  இயக்கிய  பாலைவன  ரோஜாக்கள் ( 1986) , நேதாஜி  இயக்கிய  சொல்வதெல்லாம்  உண்மை (1987) , கே வி  ஆனந்த்  இயக்கிய  கோ 

1997 ல்  ராம்கி - விஜயசாந்தி  நடித்த  நடித்த  தடயம்  படத்துக்கும்  ,  2000  செப்டம்பரில்  சன்  டி வியில்  வந்த  தடயம்  டி வி  சீரியலுக்கும் ,  2018ல்  ஆனந்த  விகடனில்  தமயந்தி  எழுதிய  சிறுகதையை  படமாக  எடுத்த  தடயம்   மூவிக்கும் இப்போ  நாம  பார்க்கப்போகும்  தடயம்  வெப்சீரிசுக்கும்  சம்பந்தம்  இல்லை , நான்கும்  வேறு  வேறு

Spoiler alert

யாழ்  எனும்  ஒரு  பத்திரிக்கை  ஆஃபீசில் நாயகன் , நாயகனின்  தோழர்கள்  இருவர் , நாயகி , நாயகியின்  தோழிகள்  இருவர்  என  3  செட்  ஜோடிகள்  வேலை  செய்கிறார்கள் . நாயகன்  ஒரு  க்ரைம்  ஸ்டோரி  ரைட்டர் . கற்பனையான  கதைகளை  எழுதாமல்  நிஜமாக  நடந்த  க்ரைம்  ஸ்டோரிகளை  அந்த  ஸ்பாட்டுக்குப்போய்  விசாரித்து  எழுதுபவன்




கொரோனா  இந்தியாவில்  நுழைந்த  2020  மார்ச்  மாதத்தில்  கதை  ஆரம்பிக்கிறது . அந்த  டைமில்   சுடுகாட்டில்  பிணங்கள்  எரிக்கப்படுவதும்  ஆள்  மாறாட்டம்  மாதிரி  பிண  மாறாட்டம்  நட்ந்ததும்  பல  செய்திகளில்  படித்திருக்கிறோம், அது  போல  15  பிணங்களை  எரிக்க  வேண்டிய  இடத்தில்  எக்ஸ்ட்ராவாக  கொரோனா  பேஷண்ட்  அல்லாத  ஒரு  டெட்  பாடி  யாரோ  மாற்றி வைத்து  விடுகிறார்கள் .  அது  எரிக்கப்பட்டு  விடுகிறது . இந்த  லேடி  டெட்  பாடி  யாருடையது ? யார்  கொலை  செய்தது? என்பதை  நாயகன்  துப்பு  துலக்கி  எப்படி  கண்டு  பிடிக்கிறார்  என்பதுதான்  கதை 


 மொத்தம்  எட்டு  எப்பிசோடுகள்  கொண்ட  கதையில்  ஒவ்வொரு  எபிசோடும்  20  நிமிடங்கள்  டூ  25  நிமிடங்கள்: , ஆக  மொத்தம்  3  மணி நேரம் . இதில்  6,7,8  ஆகிய  3  எபிசோடுகள்  தான்  மெயின்  க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  நடக்கிறது . ஆரம்பத்தில்  வரும்  ஐந்து  எபிசோடுகளும்  ரொமாண்டிக்  காமெடி  மெலோ டிராமா  மாதிரி  கொண்டு  போய்  அனைத்துப்பாத்திரங்களை  அறிமுகப்படுத்துவது  , அவர்களுக்கு  இடையே  நிகழும்  ஜாலி  கான்வெர்சேஷன்  என கொண்டு  போய்  இருக்கிறார்கள் 


 நாயகன்  விக்ரம்  ஆக  ஹரி  பாஸ்கர்  நன்றாக  செய்திருக்கிறார்.அவர்  போக  சுஜிதா , சுவாதி, அர்ஜூன்  என  அனைவருமே  கொடுத்த  பாத்திரத்தை  கரெக்டாக  உள்வாங்கி  நடித்திருக்கிறார்கள் .   எபிராஜ்  சந்தானம்  போல  கவுண்ட்டர்  காமெடி  செய்யும்  நபராக  வந்து  கலகலப்பு  ஊட்டுகிறார்


iஇசை  சூர்யா  சீனி  பிஜிஎம்  மில்  கச்சிதம்.  இயக்கம்   மோனிஷா ராஜன். நாயகனான  ஹரி  பாஸ்கர்  தான்  தயாரிப்பு . எடிட்டிங்  முகமத்

 

ஷார்ட் ஃபிளிக்ஸ்  எனும்  ஓடி  டி  தளத்தில்  ரூ  30  கட்டி  பார்க்கலாம்

  

ரசித்த  வசனங்கள்


1  பொதுவா  நம்ம  எல்லார்கிட்டேயும்  ஒரு  கெட்ட  பழக்கம்  இருக்கு, எதுக்கெடுத்தாலும்  நேரத்தின்  மீது  குறை  சொல்வோம். கெட்ட  நேரம், அதான்  ஒர்க்  ஆவுட்  ஆகலை  அப்டினு


2 உனக்கு  செம  தைரியம்டா


 ஆமாம், சின்ன  வயசுல  ஜெகன்  மோகினி  படத்தை  தனியா உக்காந்து  பார்த்தவன்


 அதை  நீ  ஏன்  தனியா  உக்காந்து  பார்த்தேன்னு  எனக்குத்தெரியும்



3  உன்னோட  முதல்  க்ரைம்  கேஸ்  எப்படி  இருக்கு ?


  என்னமோ  ஃபர்ஸ்ட்  நைட்  எக்ஸ்பீரியன்ஸ்  எப்படி  இருக்குனு  கேட்கற  மாதிரி  கேட்கறே?


4  ஒருத்தர்  போடற  டிரஸை  வெச்சு  ஒருத்தரை  ஜட்ஜ் பண்றவன்   பைத்தியகாரனாதான்  இருப்பான்


5   இன்ஃபர்மேஷன்  சரியோ  தப்போ  கண்ட்டெண்ட்ஸ்  இண்ட்ரஸ்ட்டிங்கா  இருந்தாப்போதும்  ஒரு  பத்திரிக்கைக்கு


6   சில  நேரங்களில்  நெருக்கமான  உறவுகள்  கொஞ்சம்  சிக்கலான  விளைவுகளைத்தான்  தரும் 


7  உங்க  ஆர்ட்டிக்கிள்ஸ்  எல்லாமே  கூகுள்ள  இருந்துதான்  எடுத்திருக்கு, ஒண்ணு  கூட  சொந்தமா  ட்ரை  பண்ண  மாட்டீங்களா? 


8  இந்த  ஏழரையைபார்க்கறதுக்கா   எழுநூறு  ரூபா  டி சர்ட்டை  வேஸ்ட்  பண்ணுனேன்?


9  சும்மா  இருக்கானேன்னு  அவன்  கூட  சேர்ந்து  சுத்துனேன்னு  வை  நீ  ஜெயிலுக்குத்தான்  போவே, ஏன்னா அவன்  முகம்  அப்படி 


10   இவ்ன்  என்னடா  ஹை வே  ல  நிக்கற  ஐயிட்டம்  மாதிரி  காசு  எங்கே  காசு  எங்கே?னு  அதுலயே  குறியா  இருக்கான்?


11   இவன்  வந்ததுமே  மீட்டிங்கை  முடிப்பார்னு  தெரிஞ்சிருந்தா  முதல்லியே  இவனை  வரச்சொல்லி  இருக்கலாமே?


12  அப்பப்ப  கெட்டவனாவும்  வாழ்ந்துடனும், ஏன்னா  நல்லவனா  ரொம்ப  நாள்  நடிக்க  முடியாதுல்ல? 


13  ஒரு  தப்பு  செஞ்சாலும்  அதை  சரியா  செய்யனும்னு  சொல்வாங்க, அப்படி  சரியா  செஞ்சாலும்  தப்பு  தப்பு  தான் 


14   இந்த  உண்மையை  மாதிரி  வலி  தரும்  விஷயம்  வேற  இல்லை . அதை  எங்கே  ஒளிச்சு  வெச்சாலும்  ஓடி  வந்துடும்


சபாஷ்  டைரக்டர்


1  க்ரைம்  சீன்  எப்படி  நடந்திருக்கும்  என்ற  கற்பனை  டெமோ  வில்  நாயகன், தோழன் , காமெடியன்  மூவரின்  பங்களிப்பும்  கச்சிதம், செம  காமெடி  போர்சன் 


2   மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  டேட்டிங்  ஆப்  மூலம்  நாயகனின்  தோழன்  சந்திக்கும்  கேர்ள்  ஃபிரண்ட்  மேட்டர்  ஐடியா  செம காமெடி 


3   நாயகனுக்கு  ஜோடி  நாயகி  இல்லை . நாயகியின்  தோழி. அதே  போல  நாயகிக்கு  ஜோடி  நாயகனின்  ந்ண்பன் . இது  மாதிரி  புதுமையான  ஐடியா  வரவேற்கத்தக்கதே!

லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  நாயகி  புதிதாக  சேர்ந்திருக்கும் ஆள். ஒரு  பெண்  ஒரு  பொய்  சொல்லி  நாளை  ஆஃபீஸ்  வரும்போது  பட்டுப்புடவை  கட்டிட்டு  வா, எல்லாரும்  அப்படித்தான்  வருவாங்க  என்றதும்  ஏமாந்து  அடுத்த  நாள்  அப்படியே  வர்றாரே? வேற  யார்  கிட்டேயாவது  கிராஸ்  செக்  பண்ணிக்க  மாட்டாரா?


2   வீட்டு  சாவியை  ஒரு  பெண்  வேணா  தன்  ஹேண்ட்  பேக்கில்  வைத்திருக்கலாம், ஆனால்  ஒரு  ஆண்  தன்  பேண்ட்  பாக்கெட்டில்  அல்லது  வீட்டில்  செப்பல்  விடும்  ஸ்டேண்ட்  அருகே  இப்படித்தான்  வைப்பார்கள்,  ஆஃபீஸ்   டேபிள்  டிராயர்ல  வீட்டு  சாவியை  வைப்பாரா? நாயகி  டக்னு  அந்த  சாவியை அபேஸ்  பண்ணி  வீட்டுக்கு  வந்து செக்  பண்ண்  வசதியாக


3   என்  கேபின் ல  நீ  என்ன  பண்றே? என  நாயகியை  சந்தேகமாகக்கேட்கும்  வில்லன்  சந்தேகப்பட்டு  செக்  பண்ணாதது  ஏன்?  அட்லீஸ்ட்  வீட்டு  சாவி  இருக்கா? எனவாவது  பார்க்கவில்லையே? 


4  காணாமல்  போன  பூஜாவின்  அம்மா  அவள்  ஒரு  பத்திரிக்கை  ஆஃபீசில் ஒர்க் பண்றவனோட  ஓடிப்போய்ட்டா  என்பதை  நம்புபவர்கள் அந்த  ஆஃபீசுக்கு  வ்ந்து  விசாரிக்காமல்  அசால்ட்டாக  இருப்பது  ஏன் ? 

ஷார்ட்

5  க்ளைமாக்ஸ்  எபிசோடில்  உண்மைகளை போலீசில்  சொல்லி  ஆதாரங்களை  ஒப்படைத்திருந்தால்   மேட்டர்  ஓவர். எதற்கு  தேவை  இல்லாத     ஃபைட்   எல்லாம்?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எல்லாருமே  புதுமுகங்களாக  இருந்தாலும் , லோ  பட்ஜெட்டில்  தயாரான  படமாக  இருந்தாலும்  பார்த்து  ரசிக்கும்  விதத்தில்  தான்  வெப்  சீரிஸ்  உள்ளது  . ரேட்டிங்  2. 75 / 5 

0 comments: