Wednesday, December 14, 2022

MONSTER(2022) -மான்ஸ்டர் -(மலையாளம்) - திரை விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


 கேரளா மாநிலம்  இடுக்கி  மாவட்டம்  தொடுபுழா  என்னும்  ஊரில் ஆசீர்வாத் சினி  காம்பெளெக்ஸ்  எனும்  மல்ட்டிபிளக்ஸ்  காம்ப்ளெக்ஸ்  மோகன்லாலுக்கு  சொந்தமாக  உண்டு . அதே  பேரில்  ஒரு  பட  நிறுவனமும்  உண்டு. அவரது  சொந்தப்படம்  தான்  இது.

 டைட்டிலைப்பார்த்து  யாரும்  பயப்பட வேண்டாம், ஒரே  ஒரு  கேங்க்ஸ்டரை  அடிச்சு  மேலே  வந்த  மான்ஸ்டர்  நான்  இல்லைடா, நான்  அடிச்ச  10   பேருமே  கேங்க்ஸ்டர் தான்  அப்டினு  பஞ்ச்  டயலாக்  பேசற  மான்ஸ்டர்  தாதா  கதை  எல்லாம்  இல்லை 


கேரளா - மலையாளப்பட உலகில்  முதன்  முதலாக 100  கோடி  வசூல்  சாதனையை  செய்த  கமர்ஷியல்  ஹிட்  படமான  புலி  முருகன்  படக்கூட்டணி  தான்  இந்தப்படத்திலும்  என்பதால்  எதிர்பார்ப்பு  கூடுகிறது


நாயகி  ஒரு  டாக்சி  டிரைவர் , அவரது  கணவர்  முன்னாள்  ஐ டி  ஊழியர், ஆனா இப்போ  வேலையில்  இல்லை., ஒரு  விபத்தில்  காலில்  அடிபட்டதால்  நாயகி தான்  குடும்பத்தை  காப்பாற்ற  பணிக்கு  செல்ல  வேண்டிய  நிர்ப்பந்தம்.  நாயகியின்  கணவருடைய  முதல்  மனைவிக்குப்பிறந்த  குழந்தையும்  அவர்களுடன்  இருக்கிறது.


ஒரு  நாள்  நாயகிக்கு  கொடுக்கப்பட்ட  பணி  லக்கி சிங்  என்பவரை  பிக்கப்  பண்ணிக்கொண்டு  வர  வேண்டும். அந்தப்பணியை  நிறைவேற்ற  நாயகி  ஏர்போர்ட்  போகிறாள். அங்கே  நாயகன்  ஆன  லக்கி  சிங்கை  சந்திக்கிறாள்


நாயகன்  லக்கிசிங்  தொண  தொண  என  பேசிக்கொண்டே  வருகிறான், இது  நாயகிக்குப்பிடிக்கவில்லை, எங்கே  டிராப்  பண்ண  வேண்டுமோ  அங்கே  டிராப்  பண்ணி  விட்டு  கிளம்ப  வேண்டும்,  இன்று  எங்கள்  திருமண  நாள் , கொண்டாட  வேண்டும்,  வீட்டில்  பார்ட்டி  என்கிறாள், உடனே  நாயகன்  அழையா  விருந்தாளியாக    நாயகி  வீட்டுக்கு  வருகிறான்


 வீட்டுக்கு  வந்ததும்   குழந்தையுடன்  நன்றாகப்பழகுகிறான். நாயகியை  ஒரு  வேலை  சொல்லி  வெளியே  அனுப்பி  விட்டு  நாயகியின்  கணவனை  நாயகன் துப்பாக்கியால்  சுட்டு  விட்டுச்சென்று  விடுகிறான். கொலைப்பழி  நாயகி  மீது  விழுகிறது 


போலீஸ்  விசாரணை  நடக்கிறது. இதற்குபின்  ஏற்படும்  திடுக்கிடும்  திருப்பங்களும் ,   தெரிய  வரும்  புதிய  உண்மைகளும்  தான்  திரைக்கதை 


 நாயகன்   லக்கி  சிங்  ஆக   மோகன்  லால் . முதல்  பாதியில்  தொண  தொண  பேச்சுக்காரராக  எரிச்சல்  ஏற்படுத்தும்  நடிப்பு ,  பின்  பாதியில்   ஆக்சன்  அவதாரம்  என  அவரது  ரசிகர்கள்  கொண்டாடும்  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


நாயகி  பாமினியாக   ஹனி ரோஸ்  நாயகனை  விட  வெயிட்டான  கதாபாத்திரம் , நாயகனை  விட  அதிகக்காட்சிகள்  வருகிறார்.  பச்சைக்கிளி  முத்துச்சரம்  படத்தில்  ஜோதிகா  ஏற்று  நடித்த  ரோல்  போல  மாறுபட்ட  ரோல்,  இடைவேளைக்குப்பின்  ஆன  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சிகளில்  கலக்குகிறார்

நாயகியின் தோழி  மஞ்சு  துர்காவாக  லட்சுமி  மஞ்சு .  முதல்  பாதி  முழுக்க  வசனம்  அதிகம்  பேசாமல்  அமைதியாக  வருபவர்  பின்  பாதியில் ஆர்ப்பாட்டமான  நடிப்பை  அள்ளி வழங்கி  இருக்கிறார்


நாயகியின்  கணவர்  ஆக  சுதேவ்  நாயர்  அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  வந்தவரை   கச்சிதமான  நடிப்பு 


நாயகன் , நாயகி ,  நாயகியின்  தோழி  இந்த  மூன்று  கேரக்டர்களுக்குமே  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சிகள்  உண்டு  , அவை  எல்லாம்  ரசிக்க  வைத்தாலும்  மொத்தக்கதையையும்  உணர்ந்த  பின்  தலையைச்சுற்றி  மூக்கைத்தொட்ட  உணர்வைத்தான்  கொடுக்கிறது . திடுக்கிடும்  திருப்பங்கள்  இருந்தாலும்  இவ்ளோ  தூரம்  அலைக்கழித்து  இருக்கத்தேவை  இல்லையே? என  தோன்றுகிறது 


சதீஷ்  க்ரூப்பின்  ஒளிப்பதிவு  கச்சிதம், க்ளைமாக்ஸ்  சண்டைக்காட்சியைப்படமாக்கிய  விதம்  அருமை , ஷமீர்  முகமதுவின் எடிட்டிங்கில்  ரெண்டே கால்  மணி  நேரத்தில்  சுருக்கமாக  முடித்த  விதம்  ஓக்கே  ரகம் , தீபக்  தேவின்  இசை  ரசிக்க  வைக்கிறது ,  ஒரு  ஆக்சன்  ஹீரோவுக்கு  எந்த  எந்த  இடங்களில்  தீம்  மியூசிக்  போட  வேண்டும் ? ரசிகர்களை  கூஸ்பம்ப்  மொமெண்ட்ஸ்  உணர  வைப்பது  எப்படி? என்பதில்  தேறி  இருக்கிறார்


 இயக்கம்  வைஷக் , புலி  முருகன்  அளவுக்கு  கமர்ஷியல்    கலக்கல்  அம்சங்கள்  இல்லை  என்றாலும்  ஒரு  சராசரி  க்ரைம்  த்ரில்லர்  படம்  கொடுத்திருக்கிறார்  என  பாராட்டலாம் .


 இந்த  வருடம்  அக்டோபர்  21ம்  தேதி  திரையரங்குகளில்  வெளியான  இந்தப்படம்  இப்போது  டிஸ்னி  ஹாட்  ஸ்டாரில்  காணக்கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள் 


1  பாமினி , டிக்கியை   ஓப்பன்  பண்ணு 


 வாட் ?


  நானே  பஞ்சர்  பார்த்துடறேன்னு  சொல்ல  வந்தேன் 


3   சார்,  எங்க  கம்பெனி  மேலிடத்துக்கு  இந்த  விஷயம்  தெரிஞ்சா  என்னை  திட்டுவாங்க  சார் 


 சரி, இந்த  ஸ்டெப்னி  விஷயம்   நமக்குள்ளேயே  இருக்கட்டும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஒரு  சீன்ல  போலீஸ்  நாயகி  வீட்டுக்கு  அவரைக்கைது  செய்ய  வருது , அப்போ  நாயகி  ஃபுல்லா  கவர்  பண்ற  மாதிரி  டீசண்ட்ட்டா  சுடிதார்  போட்டிருக்கார். போய்  டிரஸ்  மாத்திட்டு  வாங்க, உங்களை  வெளில  கூட்டிட்டுப்போறோம்  என  போலீஸ்  சொன்னதும்  அந்த  அழகான , கண்ணியமான  சுடிதாரை  கழட்டிட்டு  ஸ்லீவ்  லெஸ்  டிரஸ்  ஒண்ணு  கிளாமரா  போட்டுட்டு  வர்றார்.  எந்த  ஊர்ல பொண்ணுங்க  வீட்டுல  இருக்கும்போது  ஃபுல்  கவர்  டிரஸ் , வெளில  போறப்ப  ஓப்பன்  யுனிவர்சிட்டி  டிரஸ்  போடறாங்க ? 


2  பல  ஊர்களில்  வேவ்வேறு  சூழல்களில்  நான்கு  கொலைகள்  நடக்குது. ஒவ்வொரு  கொலையும்  திருமண  நாள்  அன்று  தான்  நடக்குது, அதுவும்  கேக்கில் தான்  விஷம்  கலக்கனுமா? ஒவ்வொரு  முறையும்  பேட்டர்ன்  மாற்றி  கொலை  செஞ்சாதானே  கணடு   பிடிக்க  முடியாது ?


3   பொதுவா ஒரு  சம்சாரம்  தன்  புருசனைக்கொலை  பண்ணனும்னு  முடிவு  பண்ணிட்டா  அவன்  தூங்கிட்டு  இருக்கும்போது  தலையணையால  அமுக்கிக்கொல்வதுதான்  ஈசி .  இப்படி  பார்ட்டில  கேக்  கொடுத்து  கொல்றது  ரிஸ்க்


4  போலீஸ்  டிபார்ட்மெண்ட்ல  ஒரு    சீக்ரெட்  ஆபரேஷன்   நடக்குதுன்னா  சம்பந்தப்பட்ட  ஆஃபீசர்களுக்கு  தகவல்  சொல்ல  வேண்டாமா?  அவங்க  பாட்டுக்கு  விபரம்  தெரியாம  செயல்பட்டு  யாரையாவது  சுட்டு  இருந்தா  என்ன  ஆவது ? 


5  இன்சூரன்ஸ்ல  நாமினிக்கு  இழப்பீடு  தொகை  இவ்ளோ  ஈசியா  எல்லாம்  கொடுத்துட  மாட்டாங்க,  டியூ  கட்டுவது  ஈசி ,  செட்டில்மெண்ட்    தொகையை  கொடுக்க  அலைக்கடிப்பாங்க , 1009  ஃபார்மாலிட்டீஸ்  இருக்கும் 


 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படம்  பிரமாதம்னும்  சொல்ல  முடியாது  , மொக்கைனும்  சொல்ல  முடியாது , பாஸ்மார்க்   ரேஞ்ச்  தான் . ரேட்டிங்  2.25 / 5 


Monster
Monster (2022 film) poster.jpg
Theatrical release poster
Directed byVysakh
Written byUdaykrishna
Produced byAntony Perumbavoor
StarringMohanlal
CinematographySatheesh Kurup
Edited byShameer Muhammed
Music byDeepak Dev
Production
company
Distributed byAashirvad Release
Release date
  • 21 October 2022 (India)
Running time
135 minutes[1]
CountryIndia
LanguageMalayalam

0 comments: