Wednesday, December 07, 2022

KOOMAN (2022)- கூமன் மலையாளம் - திரை விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) எ ஜீத்து ஜோசஃப் ஃபிலிம் @ அமேசான் பிரைம்

  எ ஜீத்து  ஜோசப் ஃபிலிம்  என  டைட்டிலில்  அவர்  பெயர்  வந்தாலே   கேரள  திரையரங்குகள்  கைதட்டல்களால்  அதிரும்..2007 ல் ரிலீஸ்  ஆன  டிடெக்டிவ்  என்ற  இவரது  முதல்  படமே  க்ரைம்  த்ரில்லர் தான்.2013ல்  ரிலீஸ்  ஆன  இவரது  மெமரீஸ்  பிரித்விராஜ்க்கு  முக்கியமான  வெற்றிப்படமாக  அமைந்தது 2013ல் ரிலீஸ்  ஆன  மோகன்லாலின்  த்ரிஷ்யம்  மலையாளப்பட  உலகையே  புரட்டிப்போட்டது. இந்தியாவிலேயே  அதிக  மொழிகளில்  ரீமேக்  ஆன  படம்  என்ற  பெருமையையும்  பெற்றது. 2014ல்   கமல்  நடித்த  பாபநாசம்  இதன்  தமிழ்  ரீமேக்  தான். 2021ல்  த்ரிஷ்யம்  பாகம்  2  ரிலீஸ்  ஆகி  முதல்  பாகத்தை  விட  அதிக  பாராட்டுதல்களைப்பெற்றது


கேரளாவில்  நட்ந்த  விசித்திரமான  சில  கொலை  வழக்குகளை  அடிப்படையாகக்கொண்டு  கூமன்   திரைக்கதை  உருவாக்கப்பட்டது.  முதல்  பாதி  ஒரு  கதை  , பின்  பாதி  முற்றிலும்  வேறு  ஒரு  கதை , ஆனால்  இரு  கதைகளையும்  ஒரே  நேர்கோட்டில்  இணைத்தது  ஒரு  சாமார்த்தியமே!

spoiler alert

நாயகன்  சாதாரண  போலீஸ் கான்ஸ்டபிள், ஆனால்  அதிக  புத்திக்கூர்மை  உள்ளவர். எந்த  ஒரு  கேஸில்  அவர்  ஆஜர்  ஆனாலும்  மிக  நுணுக்கமாக  துப்பு  துலக்குபவர் . மேலதிகாரிகளிடம்  ஒரு  பக்கம்  பாராட்டுக்கிடைத்தாலும்  சக  போலீஸ்  கான்ஸ்டபிள்கள்  அவரை  பொறமையாகப்பார்ப்பார்கள் . புதிதாக  வந்த  போலீஸ்  ஆஃபீசர்  நாயகனை  சிலர்  முன்  மட்டம்  தட்டுகிறார்


இதனால்  கடுப்பான  நாயகன்  அவரை  அலைக்கழிக்க  ,மேலிடத்தில்  மாட்டி  விட  ஒரு  திட்டம்  தீட்டுகிறார். மிக  சாமார்த்தியமான  ஒரு  திருடன்  உதவியோடு ஆதாரங்கள்  இல்லாமல்  திருடுவது  எப்படி ?  என  சகல  வித்தைகளும்  கற்றுக்கொண்டு  இரவில்  நைட்  டியூட்டி ஆக  திருடன்  வேலை  பார்க்கிறார்.  பகலில்  போலீஸ்  ட்யூட்டி  பார்க்கிறார்


ஊர்  முழுக்க  அடிக்கடி  திருட்டு  நடப்பதால்  போலீஸ்  ஆஃபீசருக்கு  கெட்ட  பேர் . இதைக்கண்டு  நாயகனுக்கு  அளவில்லாத  ஆனந்தம். இவர்  தன்  திருட்டு  வேலைகளைத்தொடர்கையில்  ஒரு  சிக்கல் ,  ஒரு  வீட்டில்  இவர்  திருடும்போது  அந்த  வீட்டு   ஓனர்  நாயகனைப்பார்த்து  விடுகிறார்


தன்னை  அடையாளம்  கண்டு  கொண்டு  சாட்சி  சொன்னால்  நாம்  மாட்டிக்கொள்வொம்  என  பயந்த  நாயகன்  பக்கத்து  ஊரில்  ஒரு  லாட்ஜில்  ஒரு  நாள்  தங்கி  விட்டு  பின்  சொந்த  ஊருக்கு  வருகிறார். வந்தால்  அதிர்ச்சி .  இவரைத்திருடனாகப்பார்த்த  சாட்சியான  ஆள்:  கொலை  செய்யப்ப்ட்டு  இருக்கிறார்


உடனே  நாயகன்  இந்த  கேசை   துப்பு  துலக்க  களம்  இறங்குகிறார். விசாரணையில்  கடந்த  இரு  வருடங்களாக  தமிழகம், கேரளா  ஆகிய  இரு  மாநிலங்களில்  மாதம்  ஒரு  கொலை  வீதம்  24  கொலைகள்  நடந்தது  தெரிய  வருகிறது . எல்லா  கொலைகளும்  தற்கொலை  போல  ஜோடிக்கப்ப்ட்டு  இருக்கிறது . கொலையாளி  யார் ?  என்ன  காரணத்துக்காக  இந்தக்கொலைகள்?  என்பதை  நாயகன்  எப்படி  துப்பறிகிறார்  என்பதே  பின்  பாதி  திரைக்கதை  


நாயகனாக அஷிஃப் அலி  பிரமாதமாக  நடித்திருக்கிறார். தன்னை  அவமானப்படுத்தியவர்கள்  தானாக  வந்து  சிக்கும்போது  அவர்  முக்த்தில்  காட்டும்  க்ரூரம்  ஒரு   தேர்ந்த  சைக்கோவை    கண்  முன்  நிறுத்துகிறது 


உயர்  அதிகாரியாக  வந்து  ரிட்டயர்ட்  ஆகும்  ஆஃபீசராக  ரஞ்சி  பணிக்கர்  கம்பீரமான  நடிப்பு  அவரது  குரல்  பெரிய  பிளஸ். ஒப்புதல்  வாக்குமூலம்  அளிக்கும்  நாயகனை  பளார்   என  அடிக்கும்  காட்சியில்  அருமையான  நடிப்பு 


சாமார்த்தியமான  திருடனாக  வரும் இடுக்கி  ஜாஃபர்  கேரக்டர்  டிசைன்  அற்புதம்  .  அவரது  கம்பீரமான  குரலில்  வாய்ஸ்  ஓவரில்  சாமார்த்தியமாகத்திருடுவது  எப்படி?  கோர்ஸ்  கலக்கல்  ரகம் , லாக்கப்பில்  அவ்ளோ அடி  வாங்கியும்  நாயகனைக்காட்டிக்கொடுக்காமல்   நாயகனிடம்  தனிமையில்  நான்  திருடன்  தான்  ஆனால்  காட்டிக்கொடுக்கும்  துரோகி  அல்ல  என  சொல்லும்போது  என்ன  மனுசன்யா  இவரு  என  ஆச்சரியபப்ட  வைக்கிறார்


சைக்யாட்ரிஸ்ட் ஆக  வரும்  அனூப்  மேனன்  ஒரே  ஒரு  காட்சியில்  வந்தாலும்  கச்சிதமான  பங்களிப்பு 


லட்சுமியாக  வரும்   ஹன்னா  ரெஜி  கோஷி   நாயகனுக்கு  ஜோடி  போல  படம்  முழுதும்  அங்காங்கே  தலை  காட்டி  க்ளைமாக்சில்  மிரட்டுகிறார்


தமிழகத்தில்  கதை  நகரும்போது  தமிழக  போலீஸ்  ஆஃபீசராக  வரும்  கைதி  புகழ்  ஜார்ஜ்  மரியம்   நிறைவான  நடிப்பு  என்றால்  போலீஸ்  கான்ஸ்டபிளாக  வரும்   ரமேஷ்  திலக்  கனகசிதம் 


சதீஷ்  க்ரூப்  தனது  ஒளிப்பதிவால்  படத்துக்கு  உயிர்  ஊட்டுகிறார். விஷ்ணு  ஷியாம்  பின்னணி  இசையில்  மிரட்டுகிறார்


வி எஸ்  வினாயக்  எடிட்டிங்கில்   153  நிமிடங்கள்  படம்   ஓடுகிறது , அக்டோபர்  மாதம்  திரையரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  வெற்றி  பெற்ற  இந்தப்ப்டம் இப்போது  அமேசான்  பிரைமில்  காண்க்கிடைக்கிறது 


சபாஷ் டைரக்டர் 


1 ஓப்பனிங்  சீனில்  வைர  மோதிரம்  திருட்டுக்கேசில்  நாயகனின் புத்திக்கூர்மையை  விளக்கும்  காட்சி  குட் ஒன்


2 திருடனாக  வரும்  இடுக்கி  ஜாஃபர்  உடல்  மொழி , குரல்  நயம், நடிப்பு என  கலக்கல்   கேரக்டர். 



நச்  டயலாக்ஸ் 


1    சின்னச்சின்ன  விஷயத்துக்கு  எல்லாம்  பழி  வாங்க  நினைக்கக்கூடாது 


2  உயர்  அதிகாரிகளால்  டார்ச்சர்  அனுபவிக்காத  ஆள்  இந்த  உலகத்தில்  உண்டா? 


3  தண்ணிப்பாம்பு  மாதிரி  இருக்கும்  பெண்கள்  வாய்ப்பு  வரும்போது  கோப்ராவா  மாறி  கொடூர  முகம்  காட்டுவார்கள் 


4 திருடனுக்கான  முதல்  தகுதி  எது  தெரியுமா?  எவ்ளோ  இருட்டா  இருந்தாலும்,  எவ்ளோ  மப்புல  இருந்தாலும் , மாறுவேஷத்தில்  இருந்தாலும் ஒரு  போலீஸ்காரனைப்பார்த்தா  உடனே  அடையாளம்  கண்டுக்கனும்


5  சாமார்த்தியமா  திருடுவதில்  உள்ள  த்ரில்  சரக்கு , பெண்  இதில்  எதிலும்  கிடைக்காது 


6  ஒரு  திருடன்  என்னைக்கும்  அவசரப்படக்கூடாது , நிதானம்  ரொம்ப  முக்கியம்


7  வீட்டுக்குள்ளே  திருடப்போகும்போது  ஒரு  வழி இருந்தாலும் ,  எமர்ஜென்சிக்கு  தப்பிக்க  ஒரு  வழி  ஆல்ரெடி  தெரிஞ்சு  வெச்சிருக்கனும் 


8  உய்ர் அதிகாரியா  இருக்கறவங்களுக்கு  திறமை  இல்லை , திறமை  இருப்பவர்களுக்கு  உயர்  பதவி  கிடைக்கறதில்லை , இதுதான்  உலகம் 


9 சிசிடிவியை  விட  சிறந்தது  எது  தெரியுமா?  நாய்  தான் ., சிசிடிவியால  திருடன்  வரும்போது  குலைக்க  முடியுமா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    ஹீரோ  பகலில்  போலீஸ்  ட்யூட்டி  நைட்டில்  திருடன்  ட்யூட்டி  பார்க்கறார். , எப்போ  தூங்குவார்? 


2   திருடனா  போகும்போது  சின்னதா  ஒரு  கர்ச்சீப்  மட்டும்  மாஸ்க்  போல  போட்டுட்டுப்போறார். நெத்தி  , புருவங்கள் , கண்  எல்லாம்  தெளிவா  வெளில  தெரியுது. யாருக்கும்  அடையாளம்  தெரியாதா?


3  திருடப்போகும்  இடத்திலெல்லாம்  செல்  ஃபோன்  டார்ச்  ஆன்  பண்ணி  வாய்ல  பிடிச்சுக்கறார், அந்த  வெளிச்சத்துல  ஆள்  அடையாளம்  காட்டிக்கொடுக்காதா? 


4   ஒருவரை  தூக்கில்  போடும்போது  அவரது  இரு  கைகளும்  கட்டப்பட்டிருக்கும். காரணம்  கயிறு  கழுத்தை  இறுக்கும்போது   கைகள்  கயிறைப்பிடிக்கும், ஆள்  எஸ்கேப்  ஆகிடுவான். ஆனா  க்ளைமாக்ஸ்  ல  வில்லன்  இரு  கைகளூம்  ஃப்ரீயாதான்  இருக்கு ,  ஹீரோ  கயிறால்  கழுத்தில்  சுருக்கு  போட்டு  மேலே  தூக்கும்போது  வில்லன்  ஏன்  தன்  கைகளை  யூஸ்  பண்ணவே  இல்லை?


5  க்ளைமாக்ஸ்  ல  குகைக்குள்ளே  சம்பவங்கள்  நடக்குது . கல்  தூண்  மாதிரி  ஆர்ட்  டைரக்சன்  ல  செட்  போட்டு  இருக்காங்க .  ஃபைட்  சீன்ல  அந்த  தூண்கள்  எல்லாம்  அட்டை  மாதிரி  சரியுது. 


6  திருடன்  ஆற்று  நீரில்  நீந்தி  தப்பிக்கும்போது  போலீஸ்  வேடிக்கை  பார்க்குது .  அவ்ளோ  போலீஸ்  ல  யாருக்குமே  நீச்சல்  தெரியாதா?  போலீஸ்  வேலைக்கு  நீச்சல்  தெரிஞ்சிருக்கனும்னு  புது  சட்டம்  போடனும் போல 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  த்ரில்லர்  ரசிகர்களுக்கு  அல்வா  மாதிரி  படம் க்ளைமாக்ஸ்  ல  மட்டும்  ம்ந்திரவாதி  ,நரபலினு  ஜல்லி  அடிப்பதை  பொறுத்துக்கனும்.  இந்தப்படத்தில்  வரும்  சம்பவங்கள்  எல்லாம்  உண்மை  சம்பவங்கள் 




Kooman
Kooman Poster.jpg
Poster
Directed byJeethu Joseph
Written byK. R. Krishna Kumar
Produced byListin Stephen
Allwin Antony
StarringAsif Ali
CinematographySatheesh Kurup
Edited byVS Vinayak
Music byVishnu Shyam
Production
companies
Magic Frames
Ananya Films
Distributed byMagic Frames
Release date
  • 4 November 2022
Running time
153 minutes
CountryIndia
LanguageMalayalam

0 comments: