Tuesday, December 27, 2022

THE FALL (2022) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


 அங்காடித்தெரு  அஞ்சலி  நாயகியாக  நடித்த  த  ஃபால் எனும் தமிழ்  வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்  ஸ்டாரில்  வெளியாகி  உள்ளது. மொத்தம்  7  எபிசோடுகள். ஒவ்வொன்றும் 30  நிமிடங்கள் ஆக  மொத்தம் ஒரே  சிட்டிங்கில்  மூன்றரை  மணி  நேரத்தில்  பார்க்கக்கூடிய  ஒரு  த்ரில்லர் . இது  வெர்ட்டிக்  எனும்  கனட  சீரிசின்  அஃபிசியல்  ரீமேக் 


நாயகி  திவ்யா நகரத்தில்  மெயின்  இடத்தில்  ஒரு  ஸ்போர்ட்ஸ்  செண்ட்டர்  நடத்தி  வருகிறார். . இட,ம் , பில்டிங்க் எல்லாம்  அவர்  பெயரில் தான்  இருக்கிறது .30 வயதான  இவருக்கு  இவருடைய  தங்கை  அட்மினிஸ்ட்ரேஷனில் உதவுகிறார். இவருக்கு  ஒரு  அண்ணன்  , அம்மா, அப்பா  உண்டு . இந்த  5 பேர்  கொண்ட குடும்பத்தில் நாயகிதான்  பொறுப்பானவர் , அதனால்  வீட்டில்  அவருக்குத்தான்  செல்வாக்கு 


அந்த  நகரம்  மெட்ரோ  சிட்டி  ஆக  டெவலப்  ஆக  உள்ளதாக  அமைச்சர்  மூலம்  முன்  கூட்டியே    தெரிய  வருகிறது . இதனால்  ஸ்போர்ட்ஸ்  செண்ட்டர்  இருக்கும்  இடம்  விலை  பல  மடங்கு  எகிற இருக்கிறது. இது  நாயகிக்குத்தெரியும்  முன்பே  குறைவான விலைக்கு  அதை  வாங்கி  லாபம்  பார்த்து  விடலாம்  என  சிலர்  நினைக்கிறர்ர்கள் 


இப்படி  இருக்கும்போது  ஒரு  நாள்  நாயகி  ஸ்போர்ட்ஸ்  செண்ட்டர்  மாடியிலிருந்து  கீழே  விழுந்து  கோமா  நிலைக்கு  சென்று  விடுகிறார். அவர்  தற்கொலை  செய்து  கொள்ள  முயன்றாரா?  யாரோ  தள்ளி  விட்டார்களா? அல்லது  கால்  ஸ்லிப்  ஆகி  விழுந்தாரா? என்பது  தெரியவில்லை 


ஆறு  மாதங்கள்  ஆகியும்  நாயகிக்கு  நினைவு  திரும்பாததால்  அவரைக்கருணைக்கொலை  செய்து  விடலாம்  என  அண்ணன்  சொல்கிறான். அதற்கு  ஆரம்பத்தில்  தங்கையும், அம்மா, அப்பாவும்  ஒத்துக்கொள்ளவில்லை . ஆனால்  அண்ணன்  அவர்களை  பிரைன்  வாஷ்  செய்து  ஒத்துக்கொள்ள  வைக்கிறான். ஏன்  எனில்  குடும்பத்தினர்  அனைவரின்  சம்மதம்  இருந்தால்தான்  சட்டப்படி  அவரைக்கருணைக்கொலை   செய்ய  முடியும் 


இப்படிப்பட்ட  நிலையில்  நாயகி  கோமா  நிலையில்  இருந்து  மீண்டு  வருகிறாள் , ஆனால்  அவளுக்கு  பழைய  சம்பவங்கள்  ஏதும்  நினைவில்  இல்லை 


தன்னை  இந்த  நிலைக்கு  ஆளாக்கியது  யார் ? என்பதை  அவர்  எப்படிக்கண்டுபிடிக்கிறார் ? என்பதே  கதை 


 நாயகி  திவ்யாவாக   அஞ்சலி தெளிவான  நடிப்பு , தனக்கு  ஒரு காதலன்  இருக்கும்போதே  இன்னொரு  இல்லீகல்  அஃபேர்  தனக்கு  இருந்ததாக  தன்  தங்கை  சொல்வதைக்கேட்டு  அதிர்ச்சி  அடைவது  சிறப்பான  நடிப்பு . தன்னை  விட  வயது  குறைந்த  அந்த  கோச்  யார்  என்பது  தெரிய  வரும்போது  அவர்  முகத்தில்  காட்டும்  எக்ஸ்பிரசன்ஸ்  பிரமாதம் , ஒரு  டிடெக்டிவ்  போல  அவர்  நகர்த்தும் மூவ்க்ள்  கச்சிதம் 


நாயகியின்  அண்ணியாக , தோழியாக  சோனியா  அகர்வால் , ஆரம்பத்தில்  இவர்  மட்டும்  தான்  நாயகிக்கு  ஆதரவு  என்பது  மாதிரி  காட்டி  ஒரு  கட்டத்தில் இவர்  வில்லியாக  இருப்பாரோ  என  சந்தேகம்  வர  வைக்கும்  அளவு  மாறுபட்ட  நடிப்பு  இவருடையது 


 நாயகியின்  அண்ணனாக  எஸ் பி பி  சரண். சூதாட்டத்தில்  ஈடுபட்டதால்  50  லட்சம்  ரூபாய்  கடன்  ஏற்பட்டதை  யாரிடமும்  சொல்ல  முடியாமல்  அவர்  செய்யும்  அண்டர்  கிரவுண்ட்  வேலைகள்  திடுக்கிட  வைக்கின்றன 


நாயகியின்  காதலன்  டேனியல்  ஆக சந்தோஷ்  பிரதாப்  வில்லத்தனம்  மிக்க  நடிப்பு ,  நாயகி , நாயகியின்  தங்கை ,  பார்ட்னர்  கிருத்திகா  என  மூன்று  பெண்களிடமும்  மாறி  மாறி  காதல்  வலை  வீசுவது   பயங்கரம், என்ன  ஒரு  கிரிமினல்  மூளை  என  வியக்க  வைக்கிறார் 


நாயகியின்  தங்கையாக  நமீதா  கிருஷ்ண,மூர்த்தி    அக்கா  மேல்  பொறாமை  கொள்வது  , அக்காவின்  காதலன்  மீது  ஆசைப்படுவது , அவரை  நம்பி  ஏமாறுவது , காதலன்  மோசடிப்பேர்வழி  என்பதை  உணர்ஃந்த  பின்  ஆத்திரப்படுவது  என  கச்சிதமான  நடிப்பு 


அம்மாவாக  பூர்ணிமா  பாக்யராஜ். நாயகி  சம்பந்தப்பட்ட    ரகசிய  ஃபைலைக்காட்டி  கோச்சை  லண்டனுக்கு  அனுப்ப  முற்படும்போது  வில்லி  முகம்  காட்டுகிறார்


அப்பாவாக  தலைவாசல்  விஜய் . கச்சிதமான  நடிப்பு 


இந்த  கேசை  விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபீசராக , அவருக்கு  ஜோடியாக  வரும் ஒரு  லேடி  எஸ்  ஐ  ஆக  நடித்த  இருவரும்  சுவராஸ்யம்  கூட்டுகிறார்கள் , இருவருக்கும்  ஓடும்  லவ்  டிராக்  அழகு 


பவர்  புரோக்கர்  கிருத்திகாவாக  வரும்  சஸ்திகா  ராஜேந்திரன்  வில்லித்தனமான  நடிப்பு 


நாயகியைத்தள்ளி  விட்டது  யார்? என்ற  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டோடு  அந்த  19  வயது  கோச்  யார் ?  என்பதிலும்  அதிர்ச்சி  காத்திருக்கிறது 


சித்தார்த்  ராமசாமிதான்  இயக்கம்.  ஒவ்வொரு  எபிசோடையும்  விறுவிறுப்பாக்ஜக்கொண்டு  போகிறார். கருந்தேள்  ராஜேஸ்  தான்  திரைக்கதை , அஜேசின்  இசையில்  பிஜிஎம்  த்ரில்லிங்  மூடில்  பயணிக்க  வைக்கிறது 


விறு விறுப்பான  ஒரு  த்ரில்லர்  தான் 


ரசித்த  வசனங்கள் 


1   எப்பவுமே  நம்ம  கூட  இருக்கறவங்க தான்  நம்ம  கழுத்தை  அறுப்பாங்க 


2  ஒவ்வொரு  பெண்ணுக்கும்  ஒரு  சிறப்பு  ஸ்பரிசம்  இருக்கும். ஒரு  சின்ன  டச்  ல  அதை  உணர்ந்துடுவாங்க . என்ன  நோக்கத்துக்காக  தொடறாங்க  என்பது  அவங்களுக்குத்தெரிஞ்சிடும், இது  பெண்களுக்கு  இயற்கை  அளித்த   வரம்


3  நம்ம  உணர்ச்சிகளை எமோஷன்களை  நாம  ஃபோர்ஸ்  பண்ண  முடியாது


4   ஒரு  ஆளை  லவ்  பண்றதுக்கும்  , ஆசைப்படறதுக்கும் வித்தியாசம்  இருக்கு


5   முதன்  முதலா  நாம  எதைக்கத்துக்கறோமா  அதை  கடைசில  தான்  ,மறப்போம் 


6  நாம  யார்  மேல  பாசம்  வெச்சிருக்கோமோ  அவங்களுக்கு  ஒரு  ஆபத்துன்னா  நம்மால  தாங்கிக்க  முடியாது 


7 கேள்வி  கேட்கும்  பெண்களை  ஆண்களுக்குப்பிடிக்காது 

8   பூனை  குட்டிகளை  ஈன்றதும்  தனோட  குட்டிகளில்  ஒன்றை  அது  சாப்ட்டுடும், அப்போதான்  மீதிக்குட்டிகளைக்காப்பாற்ற  அதுக்கு  தெம்பு  இருக்கும் 


9   எப்போ  நம்மை  விட  இன்னொரு  உயிர்  நமக்கு  முக்கியம்னு தோணுதோ  அங்கேதான்  காதலில்  விழுகிறோம், ஃபால்  ஆஃப்  லவ்  அதுதான் 


10  மேலே  ஒரு  ரிஷி சாப்பிட்டார்.. இதை எப்படி  ஒரே  வரில  சொல்வே?


 அப்  ரிஷி யேட்  (APRICIATE) 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  


1   கோமா  ஸ்டேஜ்ல  20  வருடங்கள்  கழித்து  எல்லாம்  மீண்டவங்க  இருக்காங்க , அப்படி  இருக்கும்போது  ஆறு  மாசத்துலயே  பொண்ணைக்கொலை  பண்ண  அம்மா, அப்பா  எல்லாரும் ஒத்துக்க  ரெடியா  இருப்பது  அதிர்ச்சியா  இருக்கு 


2   நாயகியின்  அண்ணன்  சரண் சூதாட்டம்  ஆடுவதை  மனைவியிடம்  மறைப்பதை  என்னமோ  சின்ன  வீடு  ரேஞ்சுக்கு  பில்டப்  தர்றாங்க .  


3   நாயகியின்  அண்ணன் , அண்ணி  இருவரும்  பேங்க்கில்  ஜாயிண்ட்  அக்கவுண்ட்  வைத்திருக்கிறார்கள், அதுல  பர்சனல்  லோனாக  50  லட்சம்  வாங்கி  இருக்கிறார். இது   மனைவிக்கே  தெரியாது  என்பது  எப்படி ?   மெசேஜ்  இருவரின்  செல்  ஃபோனுக்கும்  தானே  வ்ரும் ?


4   நாயகியின்  தங்கை  தினமும்  ரூ  10,000  ரூபாய்  ஸ்போர்ட்ஸ்  செண்ட்டரில்  ஆட்டையைப்போடுவதாக  சொல்கிறார்கள். ஒரு  பெண்ணுக்கு  அவ்ளவ்  பணம்  எதுக்கு ?  போதைப்பழக்கமா?  என்ன  செலவு? பதில்  இல்லை 


5  நாயகியின்  காதலன்  ஒரு  மாங்கா  மடையனாகவோ  அல்லது  மஞ்ச  மாக்கானாகவோ  இருக்க  வேண்டும்.   3  பெண்களை  லவ்  பண்ணுபவன்  அப்படியா  ஈசியா  மூவரிடமும்  மாட்டிக்கொள்வான் ? 


6  நாயகியின்  காதலன்  நாயகியைக்கல்யாணம்  பண்ணிக்கிட்டா  ஈசியா  சொத்து  கை  வசம்  வந்துடும். பின்  மச்சினியை  கரெக்ட்  பண்ணிக்கலாம். இப்படி  ஈசியான  வழி  இருக்கும் போது  மடத்தனமாக  பிளான்  எல்லாம்  போட்டுக்கிட்டு  இருக்கான், தண்டம் 


7  கோச்சாக  வரும்  இளைஞன்  உங்களுக்கும்  எனக்கும்  ஒரு  ஸ்பெசல்  உறவு  இருக்கு  என அடிக்கடி  சொல்றான், ஆனா  கடைசி  வரை  அவன்  வாயால  அது  என்ன  உறவு?னு  சொல்லவே  இல்லை 


8  நாயகி  குளிக்கும்போது  பாத்ரூம்  ஜன்னல்  வழியாக  எட்டிப்பார்த்த  ஒருவனை நாயகி  என்னமோ   மளிகைக்கடைல  பொட்டுக்கடலை  வாங்கிட்டு  வருவதற்குப்பதிலா  நிலக்கடலை  வாங்கிட்டு  வந்தவனை  ட்ரீட்  செய்வது  போல  சரி  சரி  உன்னை  மன்னிச்சுட்டேன்  என்கிறார். கனடாவில்  அது  சகஜமா  இருக்கலாம், தமிழில்  ரீமேக்கும்போது  ஒரு  தமிழச்சி  பொங்க  வேண்டாமா? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மூன்றரை  மணி  நேரம்  ஓடுவதை  இரண்டரை  மணி  நேரமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்,   மோசமில்லை , பார்க்கலாம்  . ரேட்டிங்  2. 5 / 5 


நன்றி = கல்கி  வார  இதழ் அப்டேட்டட்  ஆன்  26/12/2022  11 A,M

Monday, December 26, 2022

ROY (2022) மலையாளம் - திரை விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் மிஸ்ட்ரி த்ரில்லர்) @ சோனி லைவ் ஓ டி டி +அமேசான் பிரைம்




நாயகி ஒரு  நாவல்  எழுத்தாளர்.அவரது  காதல்  கணவர் அபூர்வ  சக்தி  கொண்டவர் . அவருக்கு  அது  வரமா? சாபமா? தெரியாது. அதாவது அவரது  கனவில்  வரும்  காட்சிகள் பின்னாளில்  நடக்கும், அல்லது  பின்னாளில்  நடக்கும்  நிகழ்வுகளுக்கான  க்ளூ  அந்த  கனவில்  காட்சிகளாகவோ, வசனமாகவோ  வரும். நூறாவது  நாள்  படத்தில்  நளினி  கேரக்டர்  டிசைன்  போல  இவரது  கேரக்டர்  ஸ்கெட்ச்  வடிவமைக்கப்ட்டிருக்கு 


நாயகி  இன்னொரு  பிரபல  எழுத்தாளரின்  சுயசரிதை  நூலை  எழுதிக்கொண்டு  இருக்கிறார். அதன்  இறுதி  அத்தியாயம்  எழுதும்  நேரத்தில்  அந்த  எழுத்தாளர்  காணாமல்  போகிறார். காணாமல்  போன  எழுத்தாளரைத்தேடி  நாயகி  ஒரு  ஃபாரஸ்ட்  ஏரியாவிற்குச்செல்கிறார். இவரும்  காணாமல்  போகிறார்


  நாயகியின் கணவன்  போலீசில்  புகார்  கொடுக்கிறார். ஆனால்  போலீஸ்  பெரிய  அளவில்  அக்கறை  காட்டவில்லை . ஒரு  கட்டத்தில்  நாயகனையே  சந்தேகிக்கிறார்கள் 


நாயகனுக்கும், நாயகிக்கும்  வயது  வித்தியாசம்  அதிகம்  இருக்கிறது , அதனால்  நாயகி  வேண்டும்  என்றேதான்  நாயகனை  விட்டு  விட்டு  சென்று  இருக்கலாம்  என  சந்தேகப்படுகின்றனர் 


 இவர்கள்  இனி  வேலைக்கு  ஆக  மாட்டார்கள்  என்பதை  உணர்ந்த  நாயகன்  தானே  தன்  மனைவியைதேடும்  படலத்தில்  இறங்குகிறார். அதற்குப்பின்  திரைக்கதையில்  ஏற்படும்  எதிர்பாராத  சம்பவங்கள்  தான்  கதை க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்  இருக்கிறது 


 நாயகனாக  சுராஜ்  வெஞ்சாரமூட் tத  கிரேட்  இண்டியன்  கிச்சன் , டிரைவிங் லைசென்ஸ்,ஹெவன் போன்ற  படங்களில்  மாறுபட்ட  நடிப்பை  வழங்கியவர் , கச்சிதமாக  கதாபாத்திரத்தின்  தன்மையை  உள்  வாங்கி  நடித்திருக்கிறார். தன்  முதல்  மனைவி  தன்னை  விட்டு  ஓடிப்போனது  பற்றி  நாயகியிடம்  சொல்லும்போது  அமைதியான  நடிப்பு , மனைவி  காணாமல்  போனது  பற்றி  போலீசில்  புகார்  அளிக்கும்போது  பதட்டம் , கனவில்  சில  காட்சிகள்  தோன்றி  க்ளூ  கிடைக்கும்போது  அது  கனவா? நினைவா?  என  குழம்புவது  என  பல  பரிமாணங்களில்  தன்  முத்திரையைப்பதிக்கிறார்


நாயகியாக சிஜா ரோஸ்   ஒரு  எழுத்தாளராக  காட்டப்பட்டாலும்  ஒரு  டூரிஸ்ட்  போலத்தான்  வருகிறார், பயணத்தில்  ஆர்வம்  உள்ளவராக  காட்டப்படுகிறார், ஃபிளாஸ்பேக்  சீனில்  ஜர்னலிஸ்ட்  ஆக  வரும்போது  நாயகனுடனான  அறிமுகம், தோழியிடம்  அவரைப்பற்றிய  கிண்டல்கள்  என  குறும்புத்தனங்களில்  மனம்  கவர்கிறார், இவர்கள்  இருவரும்  திருமணம்  ஆனவர்களா? லிவ்விங்  டுகெதராக  வாழ்கிறார்களா? என்பது  சரியாக  விளக்கப்படவில்லை, மெயின்  கதைக்கு  அது  தேவையும்  இல்லை 


போலீஸ்  ஆஃபீசராக ஷைன்  டாம் சாக்கோ , ஆபரேஷன்  ஜாவா, தள்ளுமாலா, க்ரூப்  போன்ற  பல  படங்களில்  கை  தட்டல்  வாங்கிய  நடிகர். தமிழில்  பீஸ்ட்  படத்தில்  தீவிரவாதியாக  வந்தவர் ,இவரது  போலீஸ்  கதாபாத்திரம்  ஆழமாக  எழுதப்படவில்லை  என்றாலும்  கொடுத்த  கேரக்டரை  சரியாக  செய்திருக்கிறார்


பி எம்  முன்னாவின்  இசையில்  இரண்டு  பாடல்கள்  கேட்கும்படி  உள்ளன, கோபி  சுந்தரின்  பின்னணி  இசையில்  பல  இடங்களில்  திகில்  ஊட்டுகிறது , ஒரு  சைக்கோ  த்ரில்லர்  அலல்து  ஒரு  மிஸ்ட்ரி த்ரில்ல்ருக்கு  எந்த  மாதிரி  பின்னணி  இசை  தேவையோ  அதை  உணர்ந்து  பிஜிஎம்  போட்டிருக்கிறார் 


ஜெயேஷ் மோகன்  ஒளிப்பதிவில் அதிகமான  காட்சிகள்  இரவு  நேரத்தைப்பிரதிபலிப்பதால்  சவாலான  வேலை தான்  வி சாஜ்ன்  எடிட்டிங்கில்  இரண்டு  மணி நேரத்தில்  படம்  முடிந்தாலும்  இன்னும்  க்ரிஸ்ப்  ஆக  ஒன்றரை  மணி  நேரத்தில்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்  என  தோன்றுகிறது 


சுனில்  இப்ராஹிம்  தான்  இயக்கம்.  மூன்று  முக்கியமான  கதாபாத்திரங்களை  வைத்து  கதையை  அதிகம்  குழப்பாமல்  சொன்ன  விதத்தில்  பாராட்டுக்கு  உரியவர்  ஆகிறார


இந்தப்படம் சோனி லைவ்  ஓ டி டி  +அமேசான்  பிரைம்  அகிய  தளங்களில்  காணக்கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள்


 1  நாம்  ஏற்கனவே  சந்தித்த  நபர்களை   அல்லது  கனவில்  கண்ட  நபர்களை  மீண்டும்  இப்போது  சந்திப்பதுதான்  தேஜாவு  என  சொல்லப்படுது 


2   நீங்க  ரொமாண்டிக்  பர்சனா?னு  செக்  பண்ண  ஒரு  கேல்வி  கேட்கிறேன். நீர், நிலம், ஆகாயம், நெருப்பு  இதுல  நீங்க  எதை  செலக்ட  பண்ணுவீங்க 


  தண்ணீர்

  வெரிகுட் . நீங்க  நல்ல  ரொமாண்டிக்  பர்சன் தான்


3   என்  வாழ்க்கல  என்னை  விட்டுட்டுப்போனவங்கதான்  அதிகம் , நீ தான்  என்  கூட  இருக்கே!



இவ்ளோ  ரொமாண்டிக்  பர்சனா  இருக்கும்  உங்களை  உங்க  மனைவி  ஏன்  விட்டுட்டுப்போனாங்க ?


 அவங்க  போனதுக்கும்  , ரொமான்ஸூக்கும்  சம்ப்ந்தம்  இல்லை , புரிதல்  இல்லாததுதான்  பிரிவுக்குக்காரணம் 


4 நம்ம  எல்லாருக்கும்  ஒரே  ஒரு  வாழ்க்கைதான், அதை ஏன் எல்லார்  மாதிரியும்  நார்மலா  நாம்  வாழனும் ? அதுல  என்ன  யூஸ்  இருக்கு ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  நாயகி  அந்த  ரைட்டரைத்தேடி  ஃபாரஸ்ட்  போகும்போது  தன்  கணவனையோ  அல்லது  தான்  பணி  புரியும்  இடத்தில்  இருந்து  யாரையாவதோ  அல்லது  தன்  தோழியையோ  கூட  அழைத்துச்செல்லாமல்  ஏன்  தனியாகப்போகிறார்  என்ற  கேள்விக்கு  விடை  இல்லை 


2  . அதே  போல  காணாமல்  போகும்  எழுத்தாளர்  பற்றிய  ஒரு  அறிமுகமே  ஆடியன்சுக்கு  அளிக்கப்படவில்லை , பொதுவாக்    ஒருவர்  மிஸ்  ஆகிறார் அல்லது  கொலை  செய்யப்படுகிறார்  என்றால்;  ஆடியன்சுக்கு  ஒரு  இண்ட்ரோ  வேண்டும்


3   நாயகன்    ஸ்பெர்ம்  கவுண்ட்  குறைவாக  உள்ளவர்  , அதனால்  நெருங்கிப்பழகினாலும்  ஆபத்தில்லை  என  தோழி  நக்கல்  செய்வது  அதற்கு  நாயகி  ரசித்து  சிரிப்பது  காமெடி  மாதிரி  தெரியவில்லை , பெண்களை  மட்டம்  தட்டுவது  போல  உள்ளது 


4  பொதுவாகவே  மலையாளப்படங்கள்  ஸ்லோதான்  என்றாலும்  இதில்  ரொம்ப  ஸ்லோ . நல்லா  தூக்கம்  வருது . நாயகன்  - நாயகி  ஃபிளாஸ்  பேக்  சீன்  வரும்போது  இது  ஃபிளாஸ்பேக்  என்று  ஒரு  லீட்  கொடுக்க  வேண்டாமா?  காணாமல்  போன  நாயகி  கிடைத்து  விட்டாரோ என  எண்ண  வைக்கிறது 



 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - பிரமாதமான  படமும்  இல்லை ,  மொக்கைப்படமும்  இல்லை , சராசரி  த்ரில்லர்  தான் , மலையாளப்படங்கள்  அதிகம்  பார்த்து  அதன்  ஸ்லோனெஸ்க்கு  மைண்ட்  செட்  ஆனவர்கள்  பார்க்கலாம்  ரேட்டிங்  2. 5 / 5 

Thursday, December 22, 2022

கலகத்தலைவன் (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் (ஆக்சன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


 இயக்குநர் மகிழ் திருமேனியின் திரைப்பயணம்  மெச்சத்தக்க  ஒன்று. 2010ல்  முன் தினம்  பார்த்தேனே  என ஒரு  ரொமாண்டிக்  ஃபிலிம்,2012ல் தடையறத்தாக்க  என  ஒரு  ஆக்சன் ஃபிலிம் ,2014ல்  மீகாமன்  என  மாறுபட்ட படம், 5 வருட  இடைவெளி. 2019ல்  டபுள் ஆக்சன் த்ரில்லர்  மூவியாக  தடம்  கலக்கல் வெற்றி. இவரது  படங்களில்  ஹீரோ, வில்லன்  இருவரது  கேரக்டர்  டிசைனும்  பிரமாதமாக  வடிவமைக்கப்பட்டு  இருக்கும்

உதயநிதி ஸ்டாலின்  2012ல் ஒரு  கல்  ஒரு  கண்ணாடி ,2014ல் இது  கதிர்வேலன்  காதல், 2015ல் நண்பெண்டா  என  ஆரம்பத்தில் சந்தானத்துடன்  இணைந்து  ரொமாண்டிக்  ,மெலோ  டிராமாக்கள்  தந்தாலும் 2016ல்  மனிதன் 2020ல் சைக்கோ  2022ல்  நெஞ்சுக்கு  நீதி ( ஆர்ட்டிக்கிள் 15  ஹிந்திப்பட  ரீமேக்)  என  மாறுபட்ட  படங்களில்  நடித்தார். உதயநிதி , அருள்நிதி  இருவரிடமும்  எனக்குப்பிடித்த  அம்சங்கள்  இருவரும்  செல்வாக்கு  மிக்க  அரசியல்  பிரபலங்களாக  இருந்தாலும்  படத்தில்  ஓவர்  பில்டப்  செய்யாமல்  அண்டர் ப்ளே  ஆக்டிங்கில் அடக்கி  வாசிப்பது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  ஜாக்கி சான் அல்லது  ப்ரூஸ்லீ  தமிழில்  படம்   நடித்தால்  அதற்கு  திரைக்கதை  அமைக்க  சரியான  நபர்   மகிழ்  திருமேனிதான்  என  அடித்துச்சொல்லி  விடலாம். பத்தாயிரம் வித்தைகள்  கற்றவனைப்பார்த்து  எனக்கு  பயம்  இல்லை , நான்  பயப்படுவது  எல்லாம்  ஒரே  ஒரு  வித்தையை  பத்தாயிரம்  தடவை  பயிற்சி  செய்தவனைப்பார்த்துத்தான்  என  கூஸ்பம்ப்  வ்சனம்  ஒன்று  க்ளைமாக்ஸ்  காட்சியில்  வைக்கப்பட்டு  இருக்கும்.. அருமையான  சீன்  அது 


ஒரு  கார்ப்பரேட்  கம்பெனி புதிய  கனரக  வாகனம்  ஒன்றை  சந்தைக்குக்கொண்டு  வர  இருக்கிறது. அதன்  பிரம்மிக்கத்தக்க   மைலேஜ்  பற்றிய  நியூஸ்  வந்ததும், அதன்  ஷேர்  விலை  எக்குத்தப்பாக  எகிறுகிறது. ஆனால்  அது விடும்  புகை  அனுமதிக்கப்ப்ட்ட  அளவை  விட  அதிகம்  என்ற  ரகசியம்  எப்படியோ  கசிந்து  ஷேர்  விலை  இறங்குகிறது. இந்த  ரகசியங்களை  யார்  எதற்காக  கசிய  விடுகிறார்கள், அவர்களைக்கண்டு  பிடித்து  அழிக்க  மேலிடம்  வில்லனை  நியமிக்கிறது. வில்லன்  எப்படி  ஸ்கெட்ச்  போட்டு  ஹீரோவைக்கண்டு  பிடிக்கிறான்  என்பதே  திரைக்கதை


  கதையோட  ஒன்  லைன்  கேட்கும்போது  சர்வ சாதாணமாக  இருந்தாலும், அதன்  திரைக்கதை  பிரம்மிக்கத்தக்க  அளவில்   அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைதான்  பெரும்பலம் 


 நாயகனாக  உதய நிதி  ஸ்டாலின். பெண்களின்  ஹேண்ட்  பேக் பார்த்தே  அவர்களின்  கேரக்டரை கணித்து  விடுவதும்  நாயகியை  உள்ளூரக்காதலிப்பதை  வெளிப்படையாக  சொல்லாமல்  கண்களாலும், உடல்  மொழியாலும்  சொல்வது  அருமை , க்ளைமாக்ஸ்  காட்சியில்  வில்லனை  எதிர்கொள்வதும்  அழகு, நாயகியுடனான  கெமிஸ்ட்ரி  நல்லா  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


 வில்லனாக  ஆரவ். ;பிக் பாஸ்ல  ஓவியாவுக்கு  துரோகம்  செய்தவர்  என்ற  நெகடிவ்  ஷேட்  இருந்தாலும்  இவருக்குக்கிடைத்த  அருமையான  வாய்ப்பு  இந்தப்படம், நாயகனை  விட  வில்லனுக்குத்தான்  ஸ்கோப்  அதிகம்  உள்ள  மிகச்சில  தமிழ்ப்படங்களில்  இதுவும்  ஒன்று. எதிராளியை  சைக்கலாஜிக்கலாக  பலவீனப்படுத்துவது , சித்ரவதை  செய்வது  என  பயமுறுத்துகிறார், க்ளைமாக்ஸில்  சிக்ஸ்பேக்   ஜிம்  பாடியைக்காட்டி  அசத்தவும்  தவற வில்லை 


 நாயகியாக நிதி  அகர்வால்  கச்சிதம். காதல்  காட்சிகளில்  யதார்த்தம். கலையரசன்  முக்கியமான  ரோலில்  நடித்திருக்கிறார். நிறைவான  நடிப்பு 


தில்ராஜின்  ஒளிப்பதிவும்  , ஸ்ரீகாந்த்  தேவாவின்  பின்னணி  இசையும்  படத்துக்கு  கூடுதல் பலம்


சபாஷ்  டைரக்டர்


1 ஹீரோ  ரகசியங்களை  எப்படி  கை  மாற்றுகிறார்  என்பதை  அறிய  வில்லன்  நடத்தும்   அந்த  பிராசஸ்  செம  த்ரில்லிங்.  இடைவேளைக்கு  முன்  அரைமணி  நேரம்  ஓடும்  அந்த  ரயில்வே  ஸ்டேஷன்  சீன்  ஆங்கிலப்படங்களுக்கு  சவால்  விடும்  தரத்தில்  இருக்கிறது 


2  இந்தப்படத்தில்  வரும்  லவ்  போர்சன்  தேவை  இல்லாதது  என  பலரும்  விமர்சனம்  செய்திருந்தார்கள் , ஆனால்  ரசிக்கும்படிதான்  இருக்கிறது . ஜாக்கிசான்  நடித்த  ரிவஞ்ச்  படம்  போல  முழுக்க  முழுக்க  ஆக்சன்  படமாக  இருந்தாலும்  திகட்டி  விடும். அந்த  ரொமாண்டிக்  போர்சனில்  ஹீரோ  எந்த  அளவு  ஆட்களை  அப்சர்வ்  செய்கிறார்  என்ற  விஷயமும்  காட்டப்படுவதால்  சுவராஸ்யமாகவே  இருக்கிறது 


3  க்ளைமாக்ஸில்  அந்த  ஃபேக்டரியில்  நிக்ழும்  ஆக்சன்  சீக்வன்ஸ்  ஜாக்கிசானின்  மிராக்கிள்ஸ்  படத்தை  நினைவூட்டினாலும்  அட்டகாசமான  ஆக்சன்  சீன்  அது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில   நெருடல்கள் 


1  க்ளைமாக்சில்  அந்த  ஃபேக்டரி  சீனில்  ஹீரோ மிக  சுலபமாக  வில்லன்  க்ரூப்பை  அழித்திருக்கலாம், ஃபேக்டரி  ரகசியங்க்கள்  தெரிந்த  நபர்  அவர் . எதுவுமே  தெரியாத  வில்லன்  கோஷ்டி , அனைவரும்  உள்ளே  வந்த  பின்  மாஸ்க்  அணிந்து  விஷ வாயுவை  லீக்  செய்திருக்கலாம். இருவர்  மட்டும்  அட்டாக்  ஆனதும்  அவர்கள்  உஷார்  ஆகி  விட்டார்களே? 


2  தற்காப்புக்கலையில்  வல்லவரான  ஹீரோ  ஒரு  பெண்ணிடம்  காலில்  கத்திக்குத்து  வாங்கும்  காட்சி  நம்ப  முடியவில்லை . முதுகில்  குத்தி  இருந்தால்  ஓக்கே ., கண்  முன்  காலில்  குத்தும்போது  அதை  தடுக்க  முயற்சியே  செய்யவில்லை


3  க்ளைமாக்சில்  ஹீரோவின்  புத்திசாலித்தனத்தை  முறியடிக்க  வில்லன்  போடும்  பிளான்  பக்கா, ஆனால்  வில்லனை  ஏமாற்ர  ஹீரோ  எந்த  முயற்சியும்  எடுக்க வில்லை 


4  க்ளைமாக்ஸில்  ஹீரோ - வில்லன்  சோலோ  ஃபைட்  பிரமாதமாக  வைத்திருக்கலாம். ரொம்ப  சாதாரணமாக  முடித்து  விட்டார்கள் . ஒரு  கூஸ்பம்ப்  சீன்  மிஸ்  ஆன  வருத்தம் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காத  விறு விறுப்பான  ஆக்சன்  த்ரில்லர்   மாபெரும்  வெற்றி  பெற்று  இருக்க  வேண்டிய  படம்  மீடியம்  ஹிட் தான்  அடித்தது  ஆச்சரியம்.  ஆனந்த  விகடன்  மார்க்  44 ( விஜய்  நடித்த  துப்பாக்கி  இதே 44)   ரேட்டிங்  3 / 5 

Wednesday, December 21, 2022

ELA VEEZHA POONCHIRA (2022) (மலையாளம்) - திரை விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)

 


இளவீழா  பூஞ்சிரா  என்பது  கோட்டயம்  மாவட்டத்தில்  உள்ள  மலை வாசஸ்தலம், இது ஒரு  சுற்றுலாத்தலமும்  கூட ,  இந்த  ஏரியாவில்  மழைக்காலங்களில்  இடி  விழும்  அபாயம்  இருக்கிறது. இதனால்  இந்த  ஹில் ஸ்டேஷனில்  ஒரு  ஒயர்லெக்ஸ் போலீஸ்  ஸ்டேஷன்  அமைக்கப்பட்டு  அங்கே  3   போலீஸ்கள்  பணிக்கு  அமர்த்தப்பட்டு  காவலுக்கு இருக்கிறார்கள் . அவர்கள்  பணி  அங்கே  வரும்  சுற்றுலாப்பயணிகளை  வர  விடாமல்  எச்சரித்து  அனுப்புவதே 

நாயகன்  அந்த  ஒயர்லெஸ்  போலீஸ்  ஸ்டேஷனில்  பணி செய்யும்  ஒரு  போலீஸ்..ட்யூட்டி  மாற்றி விட  இன்னொருவர்  வருவார். இருவரும்  மாறி  மாறி  ட்யூட்டி  பார்க்க  வேண்டும்


அந்த  போலீஸ்  ஸ்டேஷனில்  முன்பு  பணி  புரிந்த   ஒரு  போலீஸ்  கார்ரின்  மனைவி  தன்   வாரிசுகளுடன்  அங்கே  வ்ருகிறார். அப்பா  பணி  புரிந்த  இடத்தைப்பர்க்க  ஆசைப்பட்டு  அவரது  வாரிசுகள்  இருவர்  அங்கே  வந்திருக்கின்றனர் . அப்போது  மழை  பெய்து  இடி   இடித்ததில் ஒரு  மகன்  இறந்து  விடுகிறான்.அந்தப்பெண்ணும் , மற்ற  வாரிசும்  அனுப்பப்படுகின்றனர்


அடுத்த  நாள்  ஒரு  காதல்  ஜோடி  அங்கே  வருகின்றனர். சக  போலீஸ்   பைனாகுலர்  மூலம்  அவர்களை  நோட்டம்  பார்த்து  அவர்களை   ரசித்துக்கொண்டிருக்கிறான். இது  நாயகனுக்குப்பிடிக்கவில்லை . நாயகன்  அந்த  ஜோடியை அந்த இடத்தில்  இருந்து  அப்புறப்படுத்தி  விடுகிறான்


வாரம் ஒரு  முறை  ரொட்டீன்  செக்கிங்குக்காக  ஹையர்  ஆஃபீசர்  போலீஸ்  ஜீப்பில்  விசிட்  அடிப்பார் .  ஒரு  பெண்ணின்  இறந்து  கிடந்த  உடலின்  பாகங்கள்  அந்த  ஒயர் லெஸ்  ஸ்டேஷன்  ஏரியாவில்  ஆங்காங்கே  கிடைக்கிறது


ஒயர்லெஸ்  ஸ்டேஷனில்  பணி  புரியும்  போலீஸ்களில்  யாராவது  ஒருவருக்கு  இந்த  கொலையில் பங்கிருக்கலாம்  என  உயர்  அதிகாரி  சந்தேகப்படுகிறார்

இதற்குப்பின்  என்ன  நிகழ்ந்தது  என்பதே  திரைக்கதை



நாயகனாக சவுபின் சாஹிர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். நம்ம  ஊர்  வடிவேலு  எப்படி  காமெடியிலும் கலக்கி  விட்டு  பொற்காலம், தேவர்  மகன்  ஆகிய  படங்களில்  குணச்சித்திர  வேடங்களிலும்  கலக்கினாரோ  அதே  போல  பேசிக்கலா  ஒரு  காமெடி  நடிகரான  இவர்  இதில்  குணச்சித்திர  வேடத்தில்    கதாநாயகனாக  பிரமோஷன். இது  வரை  காட்டாத  மாறுபட்ட  முகத்தைக்காட்டி  இருக்கிறார்  . 


ஓப்பனிங்  ஷாட்டில்  பஸ்சில்  பயணிக்கும்போது  அருகில்  ஒரு  கர்ப்பிணிப்பெண்  அமர  அது  பிடிக்காமல்  அவர்  விலகி  வேறு  ஒரு  சீட்டில்  அமரும்போதே   ஏதோ  குறியீடு  அந்த  சம்பவத்தில்  இருப்பது  தெரிந்தது.


கர்ப்பமான  தன்  மனைவி  தற்கொலை  செய்து  கொண்ட  தகவல்  கிடைத்ததும்  அவ்ர்  முகத்தில்  காட்டும்  அதிர்ச்சி   அருமை . 


வில்லனாக  சுதி  கோப்பா. இவர்  லேடி  போலீசிடம்  வ்ழிவது , இளம்  காதல்  ஜோடியை  வேடிக்கை  பார்ப்பது  என   தன்  பலவீனத்தை  வெளிப்படுத்தும்  காட்சியிலும்  சரி , நாயகன்  தன்னைக்கொல்லப்போகிறான்  என்பதை  அறிந்து  ஒயர்லெக்ஸ்  ஃபோனை  ஆஃப்  பண்ணி  போலீசை  வர  வைக்கும்போதும்  சரி  துடிப்பான  நடிப்பு 


படத்தின்  மிகப்பெரிய  பலம்  சவுண்ட்  டிசைனிங்  தான் . டால்பி விஷன் 4 கே  ஹெச் டி ஆர்  ஒலி  அமைப்பில்  வெளியாகும்  முதல்  மலையாளப்படம்  இது. மகேஷ்  மாதவன்  ஒளிப்பதிவில்  மழை  வரும்  காட்சிகள் , இடி  விழும்  காட்சிகள் பிரமாதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளது அனில்  ஜான்சன்  இசையில் பல  இடங்களில்  மர்மமாகவும்  சில  இடங்களில்  திகிலாகவும்  ஒலிக்கிறது 


ஷாஹி  கபீர்  தான்  இயக்குநர் .  முக  மெதுவாக  செல்லும்  படம்  இடைவேளைக்குப்பின்  க்ரைம் த்ரில்லராக  டோன்  அப்  ஆகிறது 


தன்  மனைவி  தனக்கு  துரோகம்  செய்து  விட்டாள்  என  உணர்ந்த  ஒரு  போலீஸ்  உயர்  அதிகாரி  அதே  போல  பிரச்சனையில் கொலை  செய்த  கொலைகாரனை  அடையாளம்  கண்டும் சரி  தப்பிப்போகட்டும்  என  விட்டு  விடுவது  மட்டும்  உறுத்துகிறது ., மற்றபடி  இது மாறுபட்ட  க்ரைம்  த்ரில்லர் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஒருவருக்கு  ஆண்மைக்குறைபாடு  இருக்கிறது  என்பது  19  வயதிலேயே  தெரிந்து  விடும். திருமணம்  ஆகி  சில  நாட்கள்  கழித்துத்தான்  அது  ஒருவருக்குத்தெரிய  வருகிறது  என  சொல்வது  நம்பும்படி  இல்லை 


2  திருமணம்  ஆன  ஒரு  பெண்  கள்ளக்காதலனுடன்  உறவில்  இருந்தால்  எச்சரிக்கையாக  இருப்பார்,  முதல்  மாதம் தேதி  தள்ளிப்போனதும்  உஷார்  ஆகி  கலைத்து  விடுவார். ஆனால்  ஒரு  பெண்  நான்கு  மாத  கர்ப்பிணி  ஆன  பின்  தான்  சுதாரிப்பது  நம்பும்படி  இல்லை 


3  எக்ஸ்ட்ரா  மேரிட்டல்  ரிலேஷன்ஷிப்பில்  இருக்கும்  ஒரு  திருமணமான  பெண்  எல்லாப்பின் விளைவுகளையும்  யோசித்துத்தான்  அதில்  இறங்குவார். கர்ப்பம்  ஆனதும்  பயந்து  போய்  தற்கொலை  செய்ய  முடிவு எடுப்பது  நம்பும்படி இல்லை. இத்த்னைக்கும்  கணவன்  விஷயம்  தெரிந்தும்  அவரை  ஏற்றுக்கொள்ளத்தயாராக  இருந்தும்  அப்படி  முடிவு  எடுப்பது  ஏனோ? 


4  இடி விழும்  ரிஸ்க்   ஆன  ஏரியாவில்   எதற்கு  ஆட்களை  வர  விட்டு  பின்  வர  வேண்டாம்  என  எச்சரிக்க  வேண்டும் ?  அடிவாரத்துலேயே  செக்  போஸ்ட்  போட்டுத்தடுக்கலாமே? 


5   கேரளாவில்  வருடா  வருடம்  ஜூன்  3  முதல்   டிசம்பர் 28  வரை  தினசரி  மழை  உண்டு. இது  தெரிந்தும்  அந்த  ஆபத்தான  ஏரியாவுக்கு  போலீசின்  மனைவி  தன்  வாரிசுகளுடன்  வருவது  ஏன் ?  வீணாக  ஒரு  உயிர்ப்பலி . ஜனவரி  முதல்  மே  வரை  வெய்யில்  காலத்தில்  வந்திருக்கலாமே?   


6   பெண்ணின்  உட;லை  துண்டு  துண்டாக  வெட்டி  தனக்கு  வேண்டாதவ்ர்  சென்று  வரும்  வழிகள்  எல்லாம்  அவற்றை  வீசி  விட்டு  வருவது  ரொம்ப   ரிஸ்க்.,  அதுக்குப்பதிலாக  டெட்  பாடியை  மொத்தமாக  அந்த  ஆள்  வீட்டில்  வைத்து  விட்டு  வந்திருக்கலாம் 


7  ஒரு  போலிஸ்  ஸ்டேஷனில்  பணியாற்றும்  சக  லேடி  போலீசிடம்  ஒரு  போலிஸ்  ஜொள்ளு  விடுவது  ஓக்கே , ஆனால்  உயர்  அதிகாரியுடன்  ஜீப்பில்  வரும்  லேடி  போலீசிடம்  வேறொரு  ஸ்டேஷன்  போலீஸ்  பம்முவது  நம்பும்படி  இல்லை , அவர்  மாட்டி  விட  மாட்டார்  என்பது  என்ன  நிச்சயம் ? 


8   ஒரு  போலீஸ்  உயர்  அதிகாரியின்  மனைவியைக்கூட்டிக்கொண்டு  ஒரு  டிரைவர்  ஓடி  விடும்  கிளைக்கதை  நம்பும்படி  இல்லை. ஒரு  முறை  தப்புப்பண்ண  வேணா  ஆண்கள்  ரிஸ்க்  எடுப்பார்கள், ஆனா  ஹையர்  ஆஃபிசர்  மனைவியை  காலம்  பூரா  வெச்சுக்காப்பாத்த  ஒரு  டிரைவர்  ரெடியாக  இருப்பாரா?  அவர்  நம்மை  முடிச்சுகட்டிடுவார்னு  தெரியாதா? 

 ( மெயின்  கதைக்கும்  இக்கிளைக்கதைக்கும்  சம்பந்தம்  இல்லை ) 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  முதல்   பாதி  மிக  மிக  மெதுவாகச்செல்லும்  படம் .  பின்  பாதியில்  தான்  விறுவிறுப்பு  இருக்கும். மலையாளப்படங்கள்  ரெகுலராகப்பார்ப்பவர்களுக்கும்  , மலையாளம்  புரிந்தவர்களுக்கும்  மட்டும்  தான்  திரைக்கதை   புரியும், சப்  டைட்டில்  இல்லாமல்  படம்  பார்த்தால்  புரியாது .  ரேட்டிங்  3 / 5 


Ela Veezha Poonchira
Ela Veezha Poonchira film poster.jpeg
Directed byShahi Kabir
Written byNidhish G
Shaji Maarad
Produced byVishnu Venu
Starring
CinematographyManesh Madhavan
Edited byKiran Das
Music byAnil Johnson
Production
company
Kadhaas Untold
Release date
  • 15 July 2022
CountryIndia
LanguageMalayalam

Tuesday, December 20, 2022

GOD'S CROOKED LINES (2022) ( ஸ்பானிஷ்) - திரை விமர்சனம் (சைக்காலஜிக்கல் த்ரில்லர் @ நெட் ஃபிளிக்ஸ்


 2016ல்  ரிலீஸ்  ஆன  த  இன்விசிபிள்  கெஸ்ட்  படத்தை  அவ்வளவு  சீக்கிரம்  யாரும்   மறக்க  முடியாது. வித்தியாசமான  க்ரைம்  த்ரில்லர். அந்தப்படத்தின்  அஃபிசியல்  ரீமேக்கான  பதலா  ஹிந்திப்படம்  அமிதாப்  பச்சனுக்கு  நல்ல  பெயர்  பெற்றுத்தந்தது. எவரு  தெலுங்குப்படம்  கூட  க்ளைமாக்ஸ்  மற்றும் சில  காட்சிகள்  மட்டும்  மாற்றி  எடுக்கப்பட்ட  அஃபிசியல்  ரீமேக்கே/. தமிழில்  ரிலீஸ்  ஆன  தேஜாவு  அந்தப்படத்தின்  சில  காட்சிகளை  நினைவுபடுத்தியது. அப்பேர்ப்பட்ட  புகழ்  பெற்ற  த  இன்விசிபிள்  கெஸ்ட்  படத்தின்  இயக்குநர் ORIOL PAULO  வின்  லேட்டஸ்ட்  படம்தான்  இது 

1979ல்  எழுதப்பட்ட  ஸ்பானிஷ்  நாவலின் அஃபிஷியல்  திரையாக்கம்தான்  இந்தப்படம் . நாவலின்  பெயர்   LOS RENGIONES FORCIDAS DE DIOS . நாவல் ஆசிரியர்  பெயர்   FORCUATE LUCE DE TENE.கதை  நட்க்கும்  கால கட்டமும் 1979


 ஒரு முழுப்படமும்  மனநல  மருத்துவமனையிலேயே   படமாக்கப்பட்டவை  கே  பாக்யராஜின் ஆராரோ  ஆரிராரோ, பிரபு  நடித்த  மனசுக்குள்  மத்தாப்பூ, ஷட்டர்  ஐலேண்ட் , சைலன்ஸ்  ஆஃப் த  லாம்ப்ஸ் ,த சிக்ஸ்த்  சென்ஸ் , குட் வில் ஹண்ட்டிங், பாட்ச் ஆடம்ஸ். அதே  போல  திரைக்கதை   முழுக்க  ஒரு  மெண்ட்டல்  ஹாஸ்பிடலில்  நடக்கும்  சைக்கலாஜிக்கல்  த்ரில்ல்ர்  இது 


ஒரு  மன  நல  மருத்துவமனைக்கு  நாயகி  வருகிறாள். அவள்  கொண்டு  வந்த  கடிதத்தில்  டாக்டர்  எழுதிய    வரிகள் - இவள்  தன்  கணவனைக்கொலை  செய்ய  பல  முறை  முயற்சித்தவள் ., மனநிலை  தவறியவள், ஆனாலும்  மிக    இண்ட்டெலிஜெண்ட்டான  பெண். கேட்பவர்  நம்பும்படியாக  பொய்களை திரித்துப்பேசுவதில்  வல்லவள் . யாராவது  இவள்  பொய்யைக்கண்டுபிடித்து  விட்டால் அந்தப்பொய்யை  ஏன்  சொன்னேன்? என  கச்சிதமாக  விளக்கி கன்வின்ஸ்  செய்து  விடும்  ஆற்றல் படைத்தவள். இவளை  ஜாக்கிரதையாகப்பார்த்துக்கொள்ள  வேண்டும் 


நாயகி  ஹாஸ்பிடலில்  அட்மிட்  செய்யப்படுகிறாள்.அவள்  தன்னுடன்  சில  பேப்பர்  கட்டிங்ஸ்களை  ஒரு  புக்கில்  மறைத்து  வைத்துக்கொண்டு  வருகிறாள். . அங்கே  இருக்கும்  ஒரு  டாக்டரிடம்  அவள்  அளிக்கும்  ஸ்டேட்மெண்ட் - நான்  பேஷண்ட்  அல்ல,  ஒரு  பிரைவேட்  டிடெக்டிவ், இந்த  ஹாஸ்பிடலில்  மர்மமான  முறையில்  இறந்த  ஒரு  ஆளின்  சாவைப்பற்றித்துப்பு  துலக்க  வந்திருக்கிறேன்  என்கிறாள்


உண்மையில்  நாயகி  யார் ? நாயகியை  அவள்  கணவன்  கொல்ல  முயன்றதாக  அவள்  சொல்வது  உண்மையா?  அல்லது  நாயகிதான்  தன்  கணவனைக்கொல்ல  முயன்றாளா?  ஹாஸ்பிடலில் நடந்த  மர்ம  மரணத்தைப்பற்றி  துப்பு  துலக்கினாரா? அந்த  ஒரு  மரணம்  மட்டும்  அல்ல, வேறு  சில  மர்ம  மரணங்களும்  அங்கே  நிகழ்கிறது. எல்லாவற்றுக்கும்  விடை  கண்டுபிடிப்பதுதான்  திரைக்கதை 


 ரெண்டரை  மணி  நேரம்  ஓடும்  இந்தப்படத்தில்  ஒரு  காட்சியை  மிஸ்  செய்தாலும்  படம்  புரியாது . அருமையான  திரைக்கதை . சைக்கலாஜிக்கல்  டிராமா  த்ரில்லர்  என்பதால்  காட்சிகள்  ,மெதுவாகத்தான்  நகரும் , பொறுமையாகப்பார்க்க  வேண்டும் 


நாயகியாக  நடித்த பர்பாரா  லென்னி என்ன  ஒரு  நடிப்பு?!!  தன்  கண்கள்  மூலமே  எதிராளியை  வசப்படுத்தி  தான்  சொல்வதை  நம்ப  வைக்கும்  கேரக்டர் முழுப்படத்தையும்  தன்  ஒற்றைத்தோளில்  தாங்கி  நிற்கிறார். அவரது  ஹேர்  ஸ்டைல் , உடை  அணிந்திருக்கும்  விதம்  எல்லாமே  ரசிக்க  வைக்கிறது . மன நலம்  குன்றிய  ஒரு  நபர்  இவரை  அம்மாவாக  நினைப்பது  நல்ல  செண்ட்டிமெண்ட்  சீன் 


டாக்டரிடம்  உங்க  பாத்ரூமை  யூஸ்  பண்ணிக்கிறேன்  என  சொல்லி  அங்கே  போய்  சில  தகிடுதித்த  வேலைகள்  செய்து  ஏதோ  லீக் ஆகுது  என  ரிப்போர்ட்  பண்ணும்  இடம்  அதிர  வைக்கிறது  எனில். மொத்த  ஹாஸ்பிடலையும்  தனி  ஒரு  ஆளாக  தீவிபத்து  ஏற்பட  வைப்பது அசத்தல்  ரகம் 


நாயகிக்கு  ஷாக்  ட்ரீட்மெண்ட்  தரப்படும்போது  அவரது  உடல்  உதறும்போது  நமக்கு  ஜெர்ஜ்  ஆகிறது , அதே  போல  கணவனால்  விஷம்  கலந்த  பானம்  குடிக்க வைக்கப்படுகையில்  அவர்  காட்டும்  பாவனைகள்  ஏ கிளாஸ்  ரகம் 


 ட்வின்சாக  வரும்   நோயாளி  கேரக்டருடன்  நாயகிக்கான  பாண்டிங்  சிறப்பு , நாயகி  ஃபிளாஸ்பேக்  சீனில்  பல  உருவங்கள்  எடுத்து  என்ன  நடந்தது  என  அந்தக்கால கட்டத்துக்கே  அழைத்துச்செல்லும்  காட்சியும்  தரமான  இயக்கம் 


இந்த  மாதிரி  த்ரில்லர்  படத்துக்கு  இசை  எவ்வளவு  முக்கியம்  என்பதை   ஃபெர்னாண்டோ   நிரூபிக்கிறார். பல  இடங்களில்  அடக்கி  வாசித்து  தேவையான  இடத்தில்  பொங்கி  வழிகிறது  பின்னணி  இசை 


பெர்னட்  போஸ் அழகிய  ஒளிப்பதிவில்  காட்சிகளைப்படம்  பிடித்து  கண்ணுக்கு  விருந்தளிக்கிறார்


1979  கால  கட்டத்து  உடை  வடிவமைப்பு  , ஹேர்  ஸ்டைல்  எல்லாம்  பார்த்துப்பார்த்து  செதுக்கி  இருக்கும்  ஆர்ட் டைரக்சன்  டிபார்ட்மெண்ட்க்கு  ஒரு  சல்யூட் 

ஜாம்  மார்ட்டி  தன்  எடிட்டிங்கில்   க்ச்சிதமாய்  ட்ரிம்  செய்திருக்கிறார்

க்ளைமாக்ஸின்  கடைசி  நொடி   வரை  ட்விஸ்ட்  என்ன  என்பதை  வெளிப்படுத்தாமல்  கட்டிக்காத்த  இயக்குநர்  பலே . 

\

 ரசித்த  வசனங்கள் 


1  சாதாரண  இடங்களில்  தான்  அழகான  விஷயங்கள்  நடக்கின்றன 


2  இவனுக்கு  வித்தியாசமான  மனநோய்  இருக்கு, இவன்  என்ன  சொன்னாலும்  ஆமோதிச்சுடனும், ஒத்துக்கலைன்னா  கொன்னுடுவான் 


3  பைத்தியமா  நடிப்பதில்  பல  விஷயங்கள்  பல  நன்மைகள்  கிடைக்கும் 


4  ஒரே ஒரு  புது  விபரம்  நாம்  இதுவரை  நம்பி  வந்த  பல  விஷயங்களை  மாற்றி  விடும் 


5 காதலைத்தவிர  வேறு  எந்த  உணர்வாலும் இப்படி  ஒரு  மனோதிடத்தை  அளித்து  விட  முடியாது, ஒருவன்  மனதை  செலுத்தி  விட  முடியாது ., உலகில்  நிகழும்  பெரும்பான்மையான  குற்றங்களுக்கான  பின்  புலம்  காதல்  தான் 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  சைக்கோ டிராமா  த்ரில்லர்  பட்ங்களுக்கே  உரித்தான்  ஸ்லோனெஸ்  உண்டு , படம்  முழுக்க  உரையாடல்  இருக்கு . எல்லோருக்கும்  பிடிக்காது . ரேட்டிங் 3.25 / 5 


God's Crooked Lines
SpanishLos renglones torcidos de Dios
Directed byOriol Paulo
Screenplay by
  • Oriol Paulo
  • Guillem Clua
  • Lara Sendim
Based onLos renglones torcidos de Dios
by Torcuato Luca de Tena
Starring
CinematographyBernat Bosch
Edited byJaume Martí
Music byFernando Velázquez
Production
companies
Distributed byWarner Bros. Pictures España
Release dates
  • 24 September 2022 (Zinemaldia)
  • 6 October 2022 (Spain)
CountrySpain
LanguageSpanish

Monday, December 19, 2022

DOCTOR G (2022) (ஹிந்தி) - திரை விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


கொரானாவின் ஆதிக்கம் 2020ல் தான்  இந்தியாவில்  தொடங்கியது, ஆனால்   ஆயுஷ்மான் குரானாவின்  ஆதிக்கம் 2012ல்  விக்கி டோனார் படத்தில்  தொடங்கியது. மாறுபட்ட காமெடி  மெலோ டிராமா,  இது  தமிழில்  தாராளப்பிரபு  என  ரீமேக்  ஆனது /2018 ல்  ரிலீஸ்  ஆன  அந்தாதூன்  த்ரில்லர்  மூவி  இந்தியாவிலேயே  அதிக  மொழிகளில்    ரீமேக்  செய்யப்பட்ட  இரண்டாவது  படம்  என்ற  பெருமை  பெற்றது. தமிழில் அந்தகன்  என  பிரசாந்த்  நடித்து  வெளி  வர  இருக்கும்  படம் ,அதே  2018ல் ரிலீஸ்  ஆன  பதாய்  ஹோ  தான்  சத்யராஜ்- ஆர் ஜே  பாலாஜி   நடிப்பில்   வீட்ல விசேஷம்  என தமிழில் ரீமேக்  ஆனது  2019ல் வந்த  ஆர்ட்டிகிள்  15  எனும்  க்ரைம்  இன்வெஸ்ட்ஃபிகேஷன்  ஃபிலிம்  தான் உதய நிதி  நடிக்க  நெஞ்சுக்கு  நீதி  ஆனது   ஆயுஷ்மான் குரானா  பட்ங்கள்  என்றாலே  வித்தியாசமான  சப்ஜெக்ட்  இருக்கும்  என்ற  நம்பிக்கை  பிறந்தது 

நாயகனுக்கு  ஆர்த்தோ  டாக்டர்  ஆகத்தான்  ஆசை , ஆனால்  அவருக்குக்கிடைப்பது என்னவோ  கைனகாலஜிஸ்ட்  சீட் தான். அந்த  பேட்ஜில் எல்லோரும்  பெண்கள் , இவர்  மட்டும்  தான்  ஆண். அதனால்  எல்லாரும்  அவரைக்கலாய்க்கிறார்கள் . 


நாயகனுக்கு  பர்சனல்  லைஃப்ல  ஆல்ரெடி  ஒரு  பிரேக்கப்  ஆகப்போகும்  காதல்  உண்டு .  அவரது  காதலியிடம்  அடிக்கடி  இப்போ  யார்  கிட்டே  பேசிட்டு  இருக்கே?  போன்ற  பொசசிவ்னெஸ்  சந்தேகங்களால்  பிரேக்கப்  நடக்கிறது


இப்போ  காலேஜில்  ஒரு  பெண்ணுடன்  நட்பு  ஏற்படுகிறது,, ஆனால்  அவருக்கு  ஆல்ரெடி  ஒரு  காதலன்  இருக்கிறான், இருந்தாலும் இந்தப்பெண்  எப்போதும்  நாயகனுடன்  சுற்றிக்கொண்டு  இருப்பதால்  அவனுக்கு சந்தேகம்  வருகிறது . ஒரு  சந்தர்ப்பத்தில்  நாயகன்  அந்தப்பெண்ணுக்கு  இதழ்  முத்தம்  தந்து  விடுகிறான், அப்போதைக்கு  அதற்கு  உடன் பட்டாலும்  அடுத்த  நாளே  அவள்  நாம்  இருவரும்  நண்பர்கள்  மட்டுமே, அந்த  முத்த  சம்பவத்தை  மொத்தமாக  மறந்து  விடு  என்கிறாள்


நாயகனுக்கு  ஒரு  நண்பன்  உண்டு, திருமணம்  ஆனவன், ஆனாலும்  அவனுக்கு திருமணம்  தாண்டிய  ஒரு  உறவு  உண்டு . அவள்  மைனர்  பெண். அவள்  கர்ப்பம்  ஆகிறாள் , கருவைக்கலைக்க  வேண்டி  நாயகன்  உதவியை  நாடுகிறான், நேரடியாக  அவன்  அவள்  கூட  ஹாஸ்பிடல்  போனால்  அவன்  பெயர்  ரிப்பேர்  ஆகி  விடும், அதனால்  நாயகன்  பொறுப்பில்  அவளை  விட்டு விடுகிறான்


இந்த மூன்று  பெண்களும்  நாயகன்  வாழ்வில்  ஏற்படுத்திய  பாதிப்புகள்  என்ன ? என்பதே  திரைக்கதை 


 மேலோட்டமாகப்பார்க்கும் போது  மம்முட்டி நடித்த  அழகன்  படத்தின்  கதை  போல தோன்றினாலும் இதன்  திரைக்கதை  புதியது. 


வசூல்  ராஜா  எம் பி பிஎஸ்  படத்துக்குப்பின்  முழுக்க  முழுக்க  டாக்டர்கள் , ஹாஸ்பிடல்கள் , நோயாளிகள்  சம்பந்தப்பட்ட  படமாக  இது  அமைகிறது 


நாயகன் உதய்  ஆக  ஆயுஷ்மான்  குரானா  அபாரமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். இவரது  கெட்டப்  மைக்கேல்  மதன காமராஜன்  படத்தில்  வரும்  பணக்கார  மதன்  கேரக்டர்  போல  இருக்கிறது, சில  இடங்களில்  பேசும்  படம்  கமல்  கெட்டப்  போலவும்  உள்ளது . முதல்  காதலியிடம்  பொசசிவ்  ஆக  இருந்து  பிரேக்கப்  ஆகும்போதும்  சரி , இரண்டாவது  காதலியுடன்  பேசும்போதும்  சரி  அனாயசமாக  நடிக்கிறார். நண்பனின்  காதலியுடன்  இருக்கும்பொழுது  பொறுப்பான  அண்ணன்  போல  நடந்து  கொள்வது  சிறப்பு


நாயகனின்  சீனியர்  ஆக  டாக்டர்  ஃபாத்திமாவாக  ரகுல் ப்ரீத்தி  சிங்  கச்சிதமான  நடிப்பு . ஒரு  கட்டத்தில்  உணர்ச்சி  வசப்பட்டு  முத்தத்துக்கு  ஒத்துழைத்தாலும்  அடுத்த  நாளே  பதறிப்போய்  என்க்கு  ஆல்ரெடி  எங்கேஜ்   ஃபிக்ஸ்  ஆகி  விட்டது   என  சொல்லும் இடத்தில்  துடிப்பான  நடிப்பு 


நாயகன்  பணி  புரியும்  ஹாஸ்பிடலில்  ஹெச் ஓ டி  ஆக  ஷெஃபாலி ஷா  கம்பீரமான  நடிப்பு , டெல்லி  கிரைம்  வெப்  சீரிசில்  கமிஷனராக  அசத்தியவ்ர்தான் . இவரது  கண்களே  பாதி  நடிப்பை  வழங்கி  விடுகிறது , இவரது  உடல்  மொழி  கனகச்சிதம் 


நாயகனின்  மூன்று  தோழிகளுடனான  சம்பவங்களும் , ஹாஸ்பிடலில்  நடக்கும்  காமெடி  சம்பவங்களும்தான்  மெயின்  கதை  என்றாலும்  கிளைக்கதையாக  வரும்  நாயகனின்  அம்மாவின்  காதல்  கதை  அற்புதம் 


நாயகனின்  அம்மாவாக ஷீபா  ஷத்தா அட்டகாசமான  நடிப்பு ., சோசியல்  மீடியாக்களில்  அப்டேட்டாக  இருப்பது  என்ன?  தன்  ஃபேஸ்  புக்  நண்பருடன்  வீட்டில்  பார்ட்டி  கொண்டாடும்போது  மகன்  வந்து  முகம்  மாற  நண்பரை  அன் ஃபிரண்ட்  செய்வ்து  என்ன?  பின்  மகன்  மனம்  மாறியதும்  தாங்க்ஸ்  சொல்லும்  தொனி  என்ன? மொத்தப்படத்தின்  சுவராஸ்யத்தையும்  அசால்ட்டாக  ஓவர்  டேக்  செய்து  விடுகிறார்


நாயகனின்  முதல்  டெலிவரி  பார்க்கும்  காட்சியில்  இயக்குநர்  டச்  தெரிகிறது . முதன்  முதலாக  இரட்டைக்குழந்தைக்கு  டெலிவரி  பார்க்கும்போது  நாயகன்  முகத்தில்  தோன்றும்  பரவ்சம்  அட போட  வைக்கிறது நாயகனுக்கு  எதிராக   ஒரு  புகார்  வரும்போது   அவர்  பதை  பதைப்பது  திரைக்கதைக்கு  நல்ல  வலு  சேர்க்கிறது 


  இயக்குநர்   ஒரு  பெண் .  அனுபுதி கஷ்யாப்.  கச்சிதமாக  காட்சிகளை  அடுக்கி  கதை  சொல்லும்  பாணி  நன்றாக  உள்ளது . ஓப்பனிங்  காட்சிகளில்  நாயகனை  ரேக்கிங்  செய்யும்  சீனியர்கள்   சம்பந்தப்பட்ட  காட்சிகளில்  மட்டும்  கொஞ்சம்  சென்சார்  செய்திருக்கலாம்

கேதான்  சவ்தா  இசையில்  எட்டு  பாடல்கள் , எல்லாம்  சின்னச்சின்ன  பாடல்களே. பின்னணி  இசை  கனகச்சிதம் பிரேர்னா  கைகல்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  இரண்டு  மணி  நேரத்தில்  கட்  செய்து  இருக்கிறார்கள் 


குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  ஒரு  ஃபீல்  குட்  மூவி 


சபாஷ்  டைரக்டர்


1  திருடா  திருடா  க்ளைமாக்ஸில்  இயக்குநர்  மணிரத்னம்  ஒரு  புத்திசாலித்தனமான  எஸ்கேப்  நடத்தினார். ஹீரா  யாருக்கு  ஜோடி ?   என்ற  கேள்விக்கு  நேரடியாக  முடிவைச்சொல்லாமல்   ஹீரோயின்  இருவரையும்  துரத்துவது  போல  முடித்திருந்தார், அதே  போலத்தான்  இதன்  க்ளைமாக்சும்


2  அ,ம்மா  வேறொரு  ஆண்  நண்பருடன்  இருப்பதைப்பார்த்து  கோபப்படும்  நாயகன்  பின்  மனம்  மாறி   அம்மாவிடம்  சாரி  கேட்பதும்  அந்த  நண்பரிடம்  அம்மாவை சமாதானப்படுத்த  ஐடியா   தருவதும்  கச்சிதம்


3   நாயகனின்  முதல்  காதல்  பிரேக்கப்பை  காட்சியாக  விளக்காமல்  வசனமாகவே  விளக்கிய்து, இந்த  புத்திசாலித்தனத்தை  மணிரத்னம்  தன்  பம்பாய்  படத்தில்  லவ்  போர்சனைக்குறைத்து  ஓப்பனிங்கில்  டேக்  அஃப்  ஆவது  போல  காட்டி  இருந்தார்


4  மகப்பேறு  மருத்துவமனைக்காமெடிகள்  எல்லாம்  இந்திய  சினிமாவுக்கே  புதுசு 


ரசித்த  வசனங்கள் 


1   என்ன  லட்டு  சுட்டு  இருக்கே?   ஒரு  லட்டு  கூட  வட்டமாவே  இல்லை


 ல்ட்டு  ஸ்வீட்டா  இருந்தா  போதாதா?  ரவுண்டா  வேணுமா?


2  ஒரு  விவாதத்தில்  யார்  குரலை  உயர்த்துகிறார்களோ  அவங்க  தோற்கப்போறாங்கனு  அர்த்தம் 


3    ஒரு    பெண்  நோயாளியை  ஆண்  டாக்டர்  செக்கப்  செய்யனும்னா  பக்கத்துல  ஒரு  லேடி  நர்ஸ்  இருக்கனும், இது   ரூல் 


4  டாக்டர், எனக்கு  ஊசின்னா  அவ்ளோ  பயம் 


  ஏம்மா, இவ்ளோ  சின்ன  ஊசிக்கு   பயப்படறியே, ஹஸ்பெண்ட்  அவ்ளோ  பெரிய  ஊசி  போட்டப்ப  பயப்படலையே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஒரு  மைனர்  பெண்ணை  ஒரு  டாக்டர்  கருக்கலைப்புக்காக  கூட்டிட்டுப்போறார். ரகசியமா  கார்ல  கூட்டிட்டுப்போகாம  இப்படியா  பைக்ல  கூட்டிட்டுப்போவாங்க ? 


2   டைம்  தாண்டிடுச்சு , இனி  அபார்ஷன்  டேஞ்சர்னு  தெரிஞ்சும்  டாக்டர் , அந்த  சின்னப்பொண்ணு  இருவருமே  பயமே  இல்லாம  எப்படி  ரிஸ்க்  எடுக்கறாங்க ? 


3   நாயகனின்  அம்மாவின்  ஃபேஸ்புக்  நண்பர்  அவ்ர்  வீட்டில் தனியாகத்தான்  இருக்கிறார் . அங்கே  சந்திக்காமல்  மகன்  இருக்கும்  தன்  வீட்டில்  சந்திப்பது  ரிஸ்க் இல்லையா? 



சிபிஎஸ்   ஃபைனல்  கமெண்ட்  -  ஆயுஷ்மான்  ரசிக்ர்கள்  அவசியம்  கான  வேண்டிய  காமெடி  கம் செண்ட்டிமெண்ட்  ஃபிலிம்   ரேட்டிங்  3 / 5 


Doctor G
Doctor G film poster.jpg
Theatrical release poster
Directed byAnubhuti Kashyap
Written bySumit Saxena
Saurabh Bharat
Vishal Wagh
Anubhuti Kashyap
Story bySaurabh Bharat
Vishal Wagh
Produced byJunglee Pictures
Starring
CinematographyEeshit Narain
Edited byPrerna Saigal
Music byKetan Sodha
Production
company
Distributed byAnand Pandit Motion Pictures
PVR Pictures
Viacom18 Studios
Release date
  • 14 October 2022
Running time
124 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹35 crore[2]
Box officeest. ₹41 crore[3]

Sunday, December 18, 2022

விட்னஸ் (2022) (தமிழ்) -திரை விமர்சனம்( கோர்ட் ரூம் டிராமா) @ சோனி லைவ் ஓடி டி


 நாயகி ஒரு  துப்புறவுப்பணியாளர். ஒற்றைத்தாய்.(சிங்கிள் மதர்) அவருக்கு  கல்லூரி  இறுதி ஆண்டில்  படிக்கும்  மகன்  உண்டு கணவன்  இறந்து விட்டதால்  தன் ஒரே  ஆதரவான  தன்  மகனைப்படிக்க  வைத்துப்பெரிய  ஆள் ஆக்க  வேண்டும்   என்ற  அவர்  கனவு  கானல்  நீர்  ஆகிறது

ஒரு  அபார்ட்மெண்ட்டில்  செஃப்டிக்    டேங்க்   அடைத்து  விடுகிறது. அதை  நீக்க  நாயகியின்  மகன்  நிர்ப்பந்திக்கப்படுகிறான். மனிதக்கழிவுகளை  மனிதனே  அகற்ற  சட்டத்தில்  தடை  இருந்தும்  நடைமுறை வாழ்வில்    அது  நீடிக்கிறது. விஷ வாயு தாக்கி  மகன்  இறக்கிறான்


அபார்ட்மெண்ட்  செகரட்டரி  இந்த  கேசை  நைசாக  ஒன்றும்  இல்லாமல்  ஆக்க  முயற்சி  செய்ய  நாயகி  ஒரு  கம்யூனிஸ்ட்  தோழரின்  உதவியோடு  வழக்கு  தொடுக்கிறாள் 


நாயகியின்  மகன்  குடி  போதையில்  இருந்ததால்  மூச்சுத்திணறி இறந்ததாக  பொய்யாக  போஸ்ட்  மார்ட்ட்ம்  ரிப்போர்ட்  ரெடி  ஆகிறது


அந்த  அபார்ட்மெண்ட்டில்  குடி  இருக்கும்  ஒரு  பெண் நாயகியின்  மகனின்   தோழி . அவளுக்கு  நீச்சல்  பயிற்சியாளராக  இருந்தவன்  . அபார்ட்மெண்ட்டில்  இருக்கும்  சிசிடிவி  கேமரா  க்ளிப்பிங்க்ஸ்  அந்தப்பெண்ணின்  மூலம்  கிடைக்கிறது 

அந்த  சாட்சியை    வைத்து  நாயகி  கோர்ட்டில்  அந்தக்கேசை  வென்றாரா? என்பது  தான்  திரைக்கதையின்  சாராம்சம் 


நாயகியாக  ரோகினி  அந்தப்பாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார் கே பாக்யராஜின்  பவுனு  பவுனு தான்  படத்துக்குப்பின்  அவருக்குக்கிடைத்திருக்கும்  அழுத்தமான  பாத்திரம்  இது . உயிர்ப்புடன்  வாழ்ந்திருக்கிறார். சூப்பர்வைசர்  தன்னிடம்  தகாத  முறையில்  பேசும்போது  பளார்  என  அறை  கொடுக்கும்போது  அவரது  துணிச்சல்  அசத்துகிறது 


சாட்சியை கொண்டு  வந்து  தரும்  அபார்ட்மெண்ட்  பெண்ணாக  ஷ்ரத்தா  ஸ்ரீநாத்  கச்சிதமான  நடிப்பு . நேர்  கொண்ட  பார்வை  படத்துக்குப்பின்   வலுவான  கதாபாத்திரம்  அவருக்கு . அபார்ட்மெண்ட்  வாசிகள்  அனைவரும்  அவரை  எதிர்க்கும்போது  தனி  ஒரு  ஆளாய்  துணிச்சலாய்  எதிர்ப்பதெல்லாம்  பிரமாதம். அம்மாவுடனான  உரையாடலில்   நெகிழ  வைக்கிறார்


கேசை  ஏற்று  நடத்தும்  வக்கீலாக  சண்முகராஜன் அசத்தலான  வாதங்கள். வழக்கமாக  அவ்ரை வில்லனாகவே  பார்த்து  இதில்  நல்லவராகப்பார்ப்பதில்  மகிழ்ச்சி 


ஒரு  காட்சியில்  வந்தாலும்  உயர்  அதிகாரியாக  வரும்  அழகம்பெருமாள்  தெனாவெட்டாக  நடித்திருக்கிறார்


மகனாக  வரும் ஜி  செல்வாவின்  நடிப்பு  கனகச்சிதம்


ஜட்ஜ்  ஆக  நடித்தவர்  கலக்கி  விட்டார் . நா தான்  கேஸ்  கொடு  எனும்  மலையாளப்படத்தில்  இப்படித்தான்  ஒரு  ஜட்ஜின்  நடிப்பு  மிகவும்  சிலாகிக்கப்பட்டது


ரமேஷ்  தமிழ்  மணியின்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  கச்சிதம்  பிலோமின்  ராஜ்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  கட்  செய்திருக்கிறார்

ஒளிப்பதிவு , இயக்கம்  இரண்டையும்  செய்திருப்பவர்  தீபக்,  சமூக  விழிப்புணர்வுக்கான  கதையை  துணிச்சலாக  கோர்ட்  ரூம்  டிராமாவாக படைத்திருக்கிறார்.படத்தின்  க்ளைமாக்ஸ்  எதிர்பாராத  ஒன்று., அது  பற்றி  இரு  வேறு  கருத்துகள்  இருக்கக்கூடும், ஆனால்  இதுதான்  நிதர்சனம்


நாயகி  தன்  கடைசி  மாத  ச்ம்பளம் , பிஎஃப்  பணத்துக்காகப்போராடும்  காட்சி  தீர்ப்பு  வரும்  நேரத்தில்  காட்டப்படுவதால்  சரியாக அந்தக்காட்சியுடன்  ஒன்ற  முடியவில்லை , அதே  போல்  ஷ்ரத்தா  ஸ்ரீநாத்  தன்  அம்மாவின்  ஃபிளாஸ்பேக்  கதை  பற்றி  அம்மாவிடம்  உரையாடும்  காட்சி  மெயின்  கதைக்கு  தேவைப்படாதது


அனைவரும்  காண வேண்டிய  சமூக  விழிப்புண்ர்வுப்படம். சோனி  லைவ்  ஓடி டி  யில்  காணக்கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள் 

1  பீச்சுக்குப்போனியே? என்ன  விசேஷம் ?


 கடல்  மட்டும்  தான்  காசு  கொடுக்காம  பார்க்க  முடியுது 


2   எப்போ  அவங்க  வருமானம்  தடை  படுதோ  அப்போதான்  நாம  அவங்க  கண்ணுக்குத்தெரிவோம்


3  செஃப்டிக்  டேங்க்  க்ளீன்  பண்ண  எக்யூப்மெண்ட்ஸ்  உள்ள  வண்டி  வ்ந்தா  5000  ரூபா  செலவு  ஆகும்,  தனி ஆள்னா  1500 ரூபா  செல்வில்  வேலையை  முடிச்சுடலாம்’’ 


அடப்பாவிகளா,  3500  ரூபா   மிச்சம்  பிடிக்க  ஒரு  உயிரைப்பலி  கொடுத்துட்டீங்களா? 


4    நாங்க  பண்ண  வேண்டிய  வேலைகளை  எல்லாம்  நீங்களே  பண்ணிட்டா  அப்புறம்  போலீஸ்  நாங்க  எதுக்கு ?


 யாராவது  ஒருத்தர்  வேலை  செய்யனுமில்ல? 


5  என்னம்மா  உன்  வாய்  ரொம்ப  நீளுது ?

 உன்  கை  நீளும்போது  என்  வாய்  நீளக்கூடாதா?


6  தனக்கான  பொறுப்பைத்தட்டிக்கழிக்க  அடுத்தவங்க  மீது  பழிபோடும்  அதிகாரிகள்  தான்  இங்கே  அதிகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   சிசிடிவி  கேமராவில்  பதிவான  தன்  மகன்  சம்பந்தப்பட்ட  காட்சி  பற்றி  நாயகி  ரோகினி  ஆர்வமாகக்கேட்கும்போது  ஷ்ரத்தா    தன்  மொபைல் ஃபோனில்  மெமரி  கார்டில்  ஏற்றி  ஏன் அதைக்காட்டவில்லை ? அதே  போல்  வக்கீல்  ஆஃபீசில்  அதை ஒப்படைக்கும்போது  அவராவது    லேப்டாப்பில்  தான்  பார்த்த  காட்சியை  அவருக்குக்காட்டி  இருக்கலாம் 


2  அப்போலோ  ஹாஸ்பிடல்  அட்மின்க்கு  இருக்கும்  அறிவு  கூட  அப்பார்ட்மெண்ட்  செகரட்ரிக்கு  இல்லை ., பிரச்ச்னை  வந்ததும்  அந்த  சிசிடிவி  ஃபுட்டேஜை  அழித்திருக்கலாம், அல்லது  இது   கட்ந்த  சில  நாட்களாக  ரிப்பேர்  என  சாணக்கியத்தனமாய்  பதில்  சொல்லி  இருக்கலாம் 


3   அபார்ட்மெண்ட்  வாசிகள்  ஷ்ர்த்தாவை  காலி  பண்ணிடுங்க  என  சொல்லாமல்  உங்க  அபர்ட்மெண்ட்டை  யாருக்காவது  விற்று  விட்டு  நீங்க  கிளம்புங்க  எனத்தானே  மிரட்டனும் ? அவர்  என்ன  வாடகைக்கா  இருக்கார் ?  காலி  பண்ண ?


4  நாயகியின்  மகன்  தனக்கு  தோழன் ,  நீச்சல் பயிற்சியாளன்  என்பதை  ஷ்ரத்தா   சொல்லும்போது   நமக்கு  சரியாக  கனெக்ட்  ஆகவில்லை . முதலிலேயே  அந்தக்காட்சிகளைக்காட்டி  இருக்க  வேண்டும். அதே  போல   ஓப்பனிங்  சீனிலேயே  மகன்  இறப்பதாகக்காட்டும்  முன்  மகனைப்பற்றி  சில  காட்சிகள்  காட்டனும், அப்போதான்  நமக்கு  அந்த  கேரக்டர்  இறக்கும்போது  ஒரு  பரிதாபம்  பிறக்கும் . இல்லாவிட்டால்  யாரோ இறந்துட்டாங்க, நமக்கு  என்ன  ? என்றுதான்  ஆடியன்சுக்கு  தோன்றும் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - ட்விஸ்ட்  அண்ட்  டர்ன்ஸ்  எல்லாம்  எதுவும்  இல்லாத  ஆனால்  சமூக  விழிப்புணர்வு  ஊட்டக்கூடிய  கோர்ட்  ரூம்  டிராமா ., ஆனந்த  விகடன்  மார்க்  44    ரேட்டிங்  3 / 5 

Saturday, December 17, 2022

YASODA (2022) ( TELUGU)-யசோதா ( தமிழ்) - திரை விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


 ஒரு  அழகிப்போட்டில ஒரு  மினிஸ்டர்  சீஃப்  கெஸ்ட்டாக கலந்துகொள்கிறார்.போட்டியில்  கலந்து  கொள்ள  வந்த  அழகிகளில் ஒருவரைப்பார்த்து  அவர்  மீது  ஆசைப்படுகிறார். அதே  அழகி  மீது  ஒரு சயிண்ட்டிஸ்ட்டும்  ஆசைப்படுகிறார். ஆனால்  அழகி  தேர்ந்தெடுத்தது  மினிஸ்டரை, காரணம்  பணம்


சில  மாதங்களில்  திடீர்  என  ஏதோ  நோயினால்  அந்த  அழகி  ஐ  பட  நாயகன்  விக்ரம்  போல  சின்ன  வயதிலேயே  முகம்  மூப்படைந்து  போகும்  வியாதிக்கு  ஆளாகிறாள், அழகு  போனதால்  மினிஸ்டர்  அந்த  அழகியை  விட்டு  விலக  முற்படுகிறார், ஆனால்  அந்த  சயிண்ட்டிஸ்ட்  அழகியை  பழையபடி  அழகாக்க  தன்  ஆராய்ச்சி  மூலம்  முயற்சி  செய்து  வெற்றி  அடைகிறார்


இந்த  அழகாக்கும்  ஃபார்முலாவை  வைத்து  பணம்  சம்பாதிக்க  அழகி , மினிஸ்டர் , சயிண்ட்டிஸ்ட்  மூவரும்  கூட்டணி  சேருகிறார்கள்.அந்த  ஆராய்ச்சிக்கு  முக்கியத்தேவை  கர்ப்பத்தில்  இருக்கும்  சிசு. அந்த  சிசுவின்  பிளாஸ்மா  செல்களை  வைத்துத்தான்  அழகாக்கும்  ஃபார்முலா  வெற்றி  அடையும் 


 அதற்காக  அவர்கள்  செய்யும்  திட்டம்தான்  வாடகைத்க்தாய்  திட்டம்., அதன்படி  ஏழைப்பெண்களுக்கு  அதிக  பணம்  தருவதாக  ஆசை காட்டி  வாடகைத்தாயாக  பணிபுரிய  சம்மதிக்க  வைத்து  அவர்களை  உபயோகிக்க  முடிவு  செய்கிறார்கள் 


 நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  முயற்சி  செய்பவர், அவருக்கு  ஒரு  தங்கை  உண்டு . போலீஸ்  ஆஃபீசர்  ஆக  லஞ்சமாக  ஏகப்பட்ட  பணம்  கேட்கிறார்கள். அந்தப்பணத்துக்காக  நாயகியின்  தங்கை  வாடகைத்தாய்  ஆக  சம்மதிக்கிறாள்நாயகிக்கே  தெரியாமல்  அவள்  தங்கை  வாடகைத்தாய்  ஆக  அந்த  ஹாஸ்பிடல்  செல்கிறாள் 


காணாமல்  போன  தங்கையைத்தேடி  நாயகி  தானும்  வாடகைத்தாய்  ஆக  உள்ளே  நுழைகிறாள். அந்த  ஹாஸ்பிடலில்  நுழைந்து  அவர்  எப்படி  தன்  தங்கையை  காப்பாற்றி  வில்லன்கள், வில்லியை  சட்டத்தின்  பிடியில்  சிக்க   வைக்கிறார்  என்பதே  திரைக்கதை ‘’

 


 நாயகியாக  சமந்தா. நீதானே  என்  பொன்  வசந்தம்  படத்துக்குப்பின்  சமந்தா  செய்த  பெஸ்ட்  ரோல்  இதுதான். முதல்  பாதி  முழுக்க  அப்பாவி  கர்ப்பிணி  பெண்  போல  நடந்து  கொள்ளும்  பாங்கு  ஆகட்டும், பின்  பாதியில்  ஆக்சன்  அவதாரம்  எடுக்கும்  துணிச்சல்  ஆகட்டும் , கலக்கலான  நடிப்பு 


வில்லி  ஆக    அழகி  ஆக  வரலட்சுமி  சரத்குமார் . தாரை  தப்பட்டை  படத்துக்குப்பின்  அவர்  ஏற்று  நடித்திருக்கும்  பிரமாதமான  ரோல்  இது


 போலீஸ்  ஆஃபீசராக  வரும்  சம்பத் ராஜ்  கவனம்  ஈர்க்கிறார். , வில்லியின்  காதலனாக  , சயிண்ட்டிஸ்ட்  ஆக  வரும்  உன்னி  முகுந்தன்  நல்ல  நடிப்பு 


பின்னணி  இசை  மணி  சர்மா, பல  இடங்களில்  சுவராஸ்யத்தைக்கூட்டுகிறது சுகுமாரின்  ஒளிப்பதிவு  கண்களுக்கு  இதம் மார்த்தாண்ட்  கே   வெங்கடேஷின்  எடிட்டிங்  கனகச்சிதமாக  ரெண்டே  கால்  மணி  நேரத்தில்  ஷார்ப்பாக  கட்  செய்திருக்கிறது 


  நிறை  மாத  கர்ப்பிணியான  படத்தின்  நாயகி  அத்தனை  பேரை  ஆக்சன்  அவதாரம்  எடுத்து  வீழ்த்துவது  எல்லாம்  நம்ப  முடியவில்லை ., சிசிடிவி  கேமராவை  ஏமாற்ற  நாயகி  சமந்தா  ஒளிந்து  ஒளிந்து  செல்வதெல்லாம்  லாஜிக்கே  இல்லை 


வாடகைத்தாய்   என்ற  வார்த்தை  நயன் தாரா  திருமணத்துக்குப்பின்  ஃபேமஸ்  ஆகி  விட்டது . அந்த  சமயம்  பார்த்து  ப்டம்  வெளி  வந்தது  ஒரு  கூடுதல்  விளம்பரம் .  பெண்களுக்கான  விழிப்புணர்வுப்படமாக  பெண்களும், ஆண்களுக்கான  மெடிக்கல்  க்ரைம்  த்ரில்லராக  ஆண்களும்  இந்தப்படத்தைப்பார்க்கலாம்.


ரசித்த  வசனங்கள் 


1    ஒரு  பெண்  தன்  அழகுக்காக  தன்  கடைசி பைசா  வரை  செலவு  பண்ணத்தயாரா  இருப்பா 


2 ராஜா  ஆகனும்னா  யுத்தத்துல  ஜெயிக்கனும், ராணி  ஆகனும்னா  ராஜாவை  ஜெயிச்சாலே ( வளைச்சுப்போட்டாலே )  போதும் 


3  அரசியல்வாதியான  என்  கிட்டே  பணம் மட்டும்  தான்  கறுப்பா  இருக்கும் ( பிளாக்  மணி )  ஆனா  லைஃப்  கலர் ஃபுல்லா  இருக்கும் 


4  நாம  வணங்கற  கடவுள்  கூட  அழகானதா  இருக்கனும்னுதான்  விரும்பறோம், அதனால  நாம  மேக்கப்  போட்டு  அழகா  காட்டிக்கொள்வதில்  தப்பில்லை 


5   ஷாரூக்  கான் , அமீர்  கான் , ஷில்பா  ஷெட்டி ,சன்னிலியோன் இவங்க  எல்லாருமே  வாடகைத்தாய்  வயிற்றில்  பிறந்தவங்க தான் 


6  பையன்  இருந்தைருந்தா  கடனை  அடைச்சிருப்பான்னு  அப்பா  வருத்தப்பட்டார் , பெண்ணா  இருந்தும்  பையனால்  செய்ய  முடியாத  ஒரு  வேலையைச்செஞ்சு  கடனை  அடைக்கப்போறேன், அதுதான்  வாடகைத்தாய்  ஃபார்முலா 


7  மிஸ் 1  உன்க்கு  பொட்டு  அழகா  இருக்கு 


  ஸோ,  நீ டெய்லி  என்னை  வாட்ச்  பண்றே.  நான்  பொட்டு  வெச்சிருக்கேனா? இல்லையா?  என்பதை  நோட்  பண்றே!


8   என்னோட  டேப்  காணோம்


 டேப்லெட்  பற்றிப்பேசும்போது  டேப்  பற்றி  பேசறே 


9  இந்த  ஆப்பத்தைப்பார்த்தா  மாசமா  இருக்கும்  தோசை  மாதிரி  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  நிறை  மாத  கர்ப்பமா  இருக்கும்  நாயகி  க்ளைமாக்ஸ்  காட்சிகளில்  வயிறு  உப்பாமல்  நார்மலாக  இருப்பது  எப்படி ?


2  ஒரு  தனி  நபர்  ஒரு  மாபெரும்  கூட்டத்தையே  எதிர்த்து  வெற்றி  பெறுவது  எப்படி ? அர்னால்டு  ஸ்வார்செனேகர் , ரஜினி  படங்கள்  போல  லாஜிக்கே  இல்லை 


3  நம்ம  ஊர்  நடிகைகள்   அவுட்டோர்  போனாலே  கூட  செக்யூரிட்டிக்கு  அம்மா,  உட்பட  பல  செக்யூரிட்டிகள்  கூடப்பாறாங்க , பிரபல  ஹாலிவுட்  ஹீரோயின்  தனியா  துணை  இல்லாம  ஸ்விம்மிங்  பூலில்  இருப்பதும்  அவரது  கூல்டிரிங்க்சில்  அசால்ட்டா  மருந்து  கலந்து  மயக்கமடைய  வைத்து  ரேப்  பண்ண   ட்ரை  பண்ணுவதும்  காட்சிப்படுத்திய  விதத்தில்  நம்பும்படி  இல்லை 


4  வில்லியின்  கையாளான  ஒரு  பெண்  தான்  கர்ப்பிணி  அல்ல  என்பதை  நாயகியிடம்  சொல்வதே  ஓவர், ஆனால்  இடம்  சுட்டிப்பொருள்  விளக்குவது  போல   அந்த  கர்ப்பிணிபேடை  எடுத்துக்காட்டுவது  எல்லாம்  ஓவரோ  ஓவர் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்

  போன  மாதம்  திரைக்கு  வந்த  படம்  இப்போது  அமேசான் பிரைம்ல  கிடைக்கிறது . பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும், வரலட்சுமி  ரசிகர்கள்  பார்க்கலாம்  , ரேட்டிங் 2.75 / 5