உதயநிதி ஸ்டாலின் 2012ல் ஒரு கல் ஒரு கண்ணாடி ,2014ல் இது கதிர்வேலன் காதல், 2015ல் நண்பெண்டா என ஆரம்பத்தில் சந்தானத்துடன் இணைந்து ரொமாண்டிக் ,மெலோ டிராமாக்கள் தந்தாலும் 2016ல் மனிதன் 2020ல் சைக்கோ 2022ல் நெஞ்சுக்கு நீதி ( ஆர்ட்டிக்கிள் 15 ஹிந்திப்பட ரீமேக்) என மாறுபட்ட படங்களில் நடித்தார். உதயநிதி , அருள்நிதி இருவரிடமும் எனக்குப்பிடித்த அம்சங்கள் இருவரும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரபலங்களாக இருந்தாலும் படத்தில் ஓவர் பில்டப் செய்யாமல் அண்டர் ப்ளே ஆக்டிங்கில் அடக்கி வாசிப்பது
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு ஜாக்கி சான் அல்லது ப்ரூஸ்லீ தமிழில் படம் நடித்தால் அதற்கு திரைக்கதை அமைக்க சரியான நபர் மகிழ் திருமேனிதான் என அடித்துச்சொல்லி விடலாம். பத்தாயிரம் வித்தைகள் கற்றவனைப்பார்த்து எனக்கு பயம் இல்லை , நான் பயப்படுவது எல்லாம் ஒரே ஒரு வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனைப்பார்த்துத்தான் என கூஸ்பம்ப் வ்சனம் ஒன்று க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்டு இருக்கும்.. அருமையான சீன் அது
ஒரு கார்ப்பரேட் கம்பெனி புதிய கனரக வாகனம் ஒன்றை சந்தைக்குக்கொண்டு வர இருக்கிறது. அதன் பிரம்மிக்கத்தக்க மைலேஜ் பற்றிய நியூஸ் வந்ததும், அதன் ஷேர் விலை எக்குத்தப்பாக எகிறுகிறது. ஆனால் அது விடும் புகை அனுமதிக்கப்ப்ட்ட அளவை விட அதிகம் என்ற ரகசியம் எப்படியோ கசிந்து ஷேர் விலை இறங்குகிறது. இந்த ரகசியங்களை யார் எதற்காக கசிய விடுகிறார்கள், அவர்களைக்கண்டு பிடித்து அழிக்க மேலிடம் வில்லனை நியமிக்கிறது. வில்லன் எப்படி ஸ்கெட்ச் போட்டு ஹீரோவைக்கண்டு பிடிக்கிறான் என்பதே திரைக்கதை
கதையோட ஒன் லைன் கேட்கும்போது சர்வ சாதாணமாக இருந்தாலும், அதன் திரைக்கதை பிரம்மிக்கத்தக்க அளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைதான் பெரும்பலம்
நாயகனாக உதய நிதி ஸ்டாலின். பெண்களின் ஹேண்ட் பேக் பார்த்தே அவர்களின் கேரக்டரை கணித்து விடுவதும் நாயகியை உள்ளூரக்காதலிப்பதை வெளிப்படையாக சொல்லாமல் கண்களாலும், உடல் மொழியாலும் சொல்வது அருமை , க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனை எதிர்கொள்வதும் அழகு, நாயகியுடனான கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
வில்லனாக ஆரவ். ;பிக் பாஸ்ல ஓவியாவுக்கு துரோகம் செய்தவர் என்ற நெகடிவ் ஷேட் இருந்தாலும் இவருக்குக்கிடைத்த அருமையான வாய்ப்பு இந்தப்படம், நாயகனை விட வில்லனுக்குத்தான் ஸ்கோப் அதிகம் உள்ள மிகச்சில தமிழ்ப்படங்களில் இதுவும் ஒன்று. எதிராளியை சைக்கலாஜிக்கலாக பலவீனப்படுத்துவது , சித்ரவதை செய்வது என பயமுறுத்துகிறார், க்ளைமாக்ஸில் சிக்ஸ்பேக் ஜிம் பாடியைக்காட்டி அசத்தவும் தவற வில்லை
நாயகியாக நிதி அகர்வால் கச்சிதம். காதல் காட்சிகளில் யதார்த்தம். கலையரசன் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். நிறைவான நடிப்பு
தில்ராஜின் ஒளிப்பதிவும் , ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம்
சபாஷ் டைரக்டர்
1 ஹீரோ ரகசியங்களை எப்படி கை மாற்றுகிறார் என்பதை அறிய வில்லன் நடத்தும் அந்த பிராசஸ் செம த்ரில்லிங். இடைவேளைக்கு முன் அரைமணி நேரம் ஓடும் அந்த ரயில்வே ஸ்டேஷன் சீன் ஆங்கிலப்படங்களுக்கு சவால் விடும் தரத்தில் இருக்கிறது
2 இந்தப்படத்தில் வரும் லவ் போர்சன் தேவை இல்லாதது என பலரும் விமர்சனம் செய்திருந்தார்கள் , ஆனால் ரசிக்கும்படிதான் இருக்கிறது . ஜாக்கிசான் நடித்த ரிவஞ்ச் படம் போல முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருந்தாலும் திகட்டி விடும். அந்த ரொமாண்டிக் போர்சனில் ஹீரோ எந்த அளவு ஆட்களை அப்சர்வ் செய்கிறார் என்ற விஷயமும் காட்டப்படுவதால் சுவராஸ்யமாகவே இருக்கிறது
3 க்ளைமாக்ஸில் அந்த ஃபேக்டரியில் நிக்ழும் ஆக்சன் சீக்வன்ஸ் ஜாக்கிசானின் மிராக்கிள்ஸ் படத்தை நினைவூட்டினாலும் அட்டகாசமான ஆக்சன் சீன் அது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 க்ளைமாக்சில் அந்த ஃபேக்டரி சீனில் ஹீரோ மிக சுலபமாக வில்லன் க்ரூப்பை அழித்திருக்கலாம், ஃபேக்டரி ரகசியங்க்கள் தெரிந்த நபர் அவர் . எதுவுமே தெரியாத வில்லன் கோஷ்டி , அனைவரும் உள்ளே வந்த பின் மாஸ்க் அணிந்து விஷ வாயுவை லீக் செய்திருக்கலாம். இருவர் மட்டும் அட்டாக் ஆனதும் அவர்கள் உஷார் ஆகி விட்டார்களே?
2 தற்காப்புக்கலையில் வல்லவரான ஹீரோ ஒரு பெண்ணிடம் காலில் கத்திக்குத்து வாங்கும் காட்சி நம்ப முடியவில்லை . முதுகில் குத்தி இருந்தால் ஓக்கே ., கண் முன் காலில் குத்தும்போது அதை தடுக்க முயற்சியே செய்யவில்லை
3 க்ளைமாக்சில் ஹீரோவின் புத்திசாலித்தனத்தை முறியடிக்க வில்லன் போடும் பிளான் பக்கா, ஆனால் வில்லனை ஏமாற்ர ஹீரோ எந்த முயற்சியும் எடுக்க வில்லை
4 க்ளைமாக்ஸில் ஹீரோ - வில்லன் சோலோ ஃபைட் பிரமாதமாக வைத்திருக்கலாம். ரொம்ப சாதாரணமாக முடித்து விட்டார்கள் . ஒரு கூஸ்பம்ப் சீன் மிஸ் ஆன வருத்தம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒரு சீன் கூட போர் அடிக்காத விறு விறுப்பான ஆக்சன் த்ரில்லர் மாபெரும் வெற்றி பெற்று இருக்க வேண்டிய படம் மீடியம் ஹிட் தான் அடித்தது ஆச்சரியம். ஆனந்த விகடன் மார்க் 44 ( விஜய் நடித்த துப்பாக்கி இதே 44) ரேட்டிங் 3 / 5
0 comments:
Post a Comment