Monday, November 07, 2022

THE GREAT INDIAN KITCHEN (2021) -( மலையாளம்) சினிமா விமர்சனம் ( கேரளாவின் தேசிய விருது பெற்ற படம்) # அமேசான் பிரைம்

 


நான்  சின்னப்பையனா  இருந்தப்போ  எங்க  அப்பா  தினமும்  காலைல  அம்மாவுக்கு  சமையல்ல  உதவி  செய்வார். காய்கறி, வெங்காயம், மிளகாய்  நறுக்குவது, தேங்காய்  துருவித்தருவது  போன்ற  சின்னசின்ன  வேலைகள்  செய்வார் . அப்போதெல்லா ம்  நான்  அப்பாவைக்கிண்டல்  செய்திருக்கிறேன். அப்பா, இதெல்லாம்  பெண்கள்  செய்ய  வேண்டிய  வேலை, நீங்க  ஏன்  இதை  செய்யறீங்க? அப்பொதெல்லாம்  சமையல்  வேலை  எவ்வளவு  கடினம்? அதை  விடக்கடினம்  பாத்திரங்களைத்துலக்குவது  நச்சுப்பிடிச்ச  வேலை  எனத்தெரியாது 

தலைவலியும் , திருகு வலியும்  தனக்கு  வந்தாதான்  தெரியும்பாங்க . அது  மாதிரி  நான்  தாலி  கட்டுன  என்  சொந்த்  சம்சாரம்  பிரசவத்துக்காக  அவங்க  அம்மா  வீட்டுக்குப்போனப்பதான் சொந்தமா  சமையல்  செய்ய  ஆரம்பித்து  அதுல  இருக்கற  கஷ்ட  நஷ்டங்களை  உண்ர்ந்தேன் . அப்போதான்  நினைச்சேன். நாம  ஒரு  ஆள்  சாப்பிட  சமைக்கவே  இவ்ளோ  அலுத்தகற,மே  ஒரு  குடும்பமே  சாப்பிட  சமைத்த  அம்மாவுக்கு  எவ்ளோ  சிரமம்  இருந்திருக்கும்,  நான்கு பேர்   சாப்பிட்ட  பாத்திரங்களை  துலக்க  எவ்ளோ  சிரமம்  என்பதை  இப்போ  நினைச்சுப்பார்க்கிறேன் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


நாயகிக்கு  திருமணம்  ஆகுது . வாக்கப்பட்டு  வந்த  இடம்  ரொம்ப  ஆச்சாரமான  குடும்பம். ரொம்ப  சுத்த  பத்தம்  பார்க்கறவங்க . .கணவன் , மாமனார்  இருவருக்கும்  சமைச்சுப்போடுவதுதான்  நாயகிக்கு  முக்கியமான  பணி . அப்புறம்  பாத்திரங்கள்  கழுவுவது ,  துணி  துவைப்பது , வீட்டை  சுத்தம்  செய்தல்   இந்த  வேலை  எல்லாம்  செய்யவே   முதுகு  பெண்டு  கழண்டுடும் 


இத்தனை  வேலை  செஞ்சாலும்  மாமனார்  ஏதாவது  குத்தம்  குறை  சொல்லிட்டே  இருப்பார் .  மிக்சில  அரைச்சா  ருசி  இருக்காது  .  அம்மிக்கல்லில்  அரைக்கனும் .   வாஷிங் மெஷின்ல  துவைக்கக்கூடாது  கல்லில்  அடிச்சுத்துவைச்சாதான்  அழுக்குப்போகும் 


 இதை  எல்லாம்  கூட  நாயகி  பல்லைக்கடிச்சுக்கிட்டு  பொறுத்துக்கறா. ஆனா    மாத  விலக்கான  அந்த  மூன்று  நாட்களில்  தீட்டு  என  ஒரு  அறையில்  அடைத்து  வைக்கப்படுவதை  அவளால்  ஜீரணிக்கவே  முடியலை 


  இப்படி  இருக்கும் தருணத்துல  கணவன்  சபரிமலை  சாமிக்கு  மாலை  போடறான் .  கடுமையான  கட்டுப்பாடுகள்  விதிக்கப்படுது .  தீட்டு  இருக்கும்  நாட்களில்  கணவனைத்தொடக்கூடாது  .  ஆண்கள்  வீட்டை  விட்டு  வெளில  போகும்போது  எதிரில்  வரக்கூடாது  (  அபசகுனமாம் ) 


  கிச்சன்   ரூம்ல  இருக்கும்  சிங்க்  அடைச்சுக்கிச்சு ,  ஒரு  பிளம்ப்பரை  வரச்சொல்லுங்க  என  மனைவி  பல  முறை  சொல்லியும்  கணவன்  காதுலயே  போட்டுக்கலை 


 நாயகி  காலேஜில்  ஒரு   டிகிரி  முடித்தவள் . டான்ஸ்  டீச்சர்  ஆக  ஆசைப்பட்டு  வேலைக்கு  அப்ளை  ப்ண்றேன்   என  கோரிக்கை  வைக்கும்போது  கணவன்  , மாமனார்  இருவருமே  எதிர்க்கிறார்கள் 


 இதுக்குப்பின்  நாயகி  எடுத்த  முடிவு  என்ன?  என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


நாயகியாக  நிமிஷா  சஞ்சயன்  அற்புதமான்  நடிப்பு .  இவர்   பல  படங்களில்  கொஞ்சம்  உம்மணா  முகமாகவே  இருப்பார் . இதில்  புன்னகைக்கும்  முகம் , கோப  முகம்,  ஆத்திர  முகம்  என  பல  முகங்களைக்காட்டி  நடித்திருக்கிறார்.பெண்களுக்கு   இழைக்கப்படும்    அநீதிகளை  பல  படங்களீல்  பர்த்திருக்கிறோம். ஆனால்  இது  எல்லா  வீட்டிலும்  நடப்பதுதான்  நாம்  உணராதது 


  நாயகனாக  சுராஜ்  வெஞ்சாரமூடு  என்ன  ஒரு  உடல்  மொழி  என்ன  ஒரு  நடிப்பு , ஆல்ரெடி  இவர்  நடிப்பை  நாம்   டிரைவிங்  லைசென்ஸ்  ,  ஹெவன்  போன்ற  படங்களில்  ரசித்திருக்கிறோம் . ஆனாலும்  சராசரி  கணவன்  ரோலில்  கனகச்சிதமாய்  பொருந்தி  இருக்கிறார்


  மாமனாராக  வருபவர்  நடிப்பும்  குட் .,  அவர்  பேசும்போதெல்லாம்  நமக்கு    எரிச்சல்  வருவதே  அந்த  கதாப்பாத்திரத்தின்   வெற்றி 


ஒளிப்பதிவு  சவாலான  வேலை . ஏன் எனில்  கதை  முழுவதும்   ஒரே  வீட்டில்  . காட்சி  அமைப்புகள்  பெரும்பாலும்  சமைப்பது  மட்டும்தான், அதை  போர்  அடிக்காமல்  காட்டுவது ச வாலான  வேலை . 


சபாஷ்  டைரக்டர் 


1   ஹோட்டலுக்குச்செல்லும் நாயகன்  நாயகி  இருவரும்  சாப்பிடும்போது  நாயகி “  வீட்டில்  இல்லாத  டேபிள்  மேனரிசம்  வெளில  வரும்போது  இருப்பது  எப்படி ? என  கேஷூவலாகக்கேட்க  அதைக்கேட்டதும்  நாயகன்  முகம்  மாறுவதும்,  மூடு  அவுட்  ஆவதும்  அருமையான  சிச்சுவேஷன் 


2 தலைவலி  , காய்ச்சல்  எனும்போது  வீட்டுத்தோட்டத்தில்  உள்ள   துளசிச்செடி  இலைகளைப்பறிக்கும் நாயகியிடம்  அய்யய்யோ  தீட்டு  என  மாமனார்  பதறும்போது  நாயகி  காட்டும்  முக  பாவனைகள்  கிளாசிக்


3   சாப்பிட்ட  தட்டைக்கூட  கழுவாமல்  கணவன் , மாமனார்  இருவரும்  அப்படியே  வைத்து  விட்டுப்போக  அதை  அருவெறுப்புடன்  பார்க்கும்  நாயகி  பொறுமையாக  அதை  சுத்தம்  செய்வது   பார்வையாளர்கள்  அனைவர்  மனதிலும்  பரிதாபத்தை  ஏற்படுத்துகிறது 


4   கூடலின்  போது  கணவன்  தன்  திருப்தியை  மட்டுமே  பார்க்கிறான்  நம்மைப்பற்றிக்கவலைபப்டவில்லை  என  மனவேதனையைப்பகிர்ந்து   ஃபோர் ப்ளே  எனப்படும்  முன் விளையாட்டுக்களில்  ஈடுபடலாம்  இல்ல? என  கேட்டதும்  கணவன்  ஓ அது  பற்றி  எல்லாம்  உனக்குத்தெரியுமா? என   நக்கலாய்  கேட்பது  டைரக்சன்  டச். புரியாத  புதிர்  ரகுவரன்  - ரேகா   சீன்  நினைவு  வருது 


5   க்ளைமாக்ஸ்  சீன்  தான்  பட்டாசு   படம்  முழுக்க  பொறுமையாய்  இருந்து  விட்டு  பின்  பொங்கும்  சீன்  செம 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   பிளம்ப்பரை  வரசொல்லி  சொல்லியும் கணவன்  கேட்காமல்  இருந்ததும்  அடுத்த  நாள்  காலையில்  சமையல்  செய்யாமல்  ஸ்ட்ரைக்  செய்திருக்கலாமே?  அதை  ரெடி  பண்ணினாத்தான்  சமையல்  என  கண்டிஷன்  போட்டிருக்கலாம்


2  கணவனுக்குத்தெரியாமல்  வேலைக்கு  அப்ளிகேஷன்  போடும்  நாயகி  தன்  அம்மா  வீட்டு  அட்ரசைத்தராமல்  கணவன்  வீட்டு  அட்ரசை  அதில்  பதிவு  செய்வது  ஏன் ?   எப்படியும்  இண்ட்டர்வ்யூ  கார்டு  வீட்டுக்கு  வ்ரும்போது  நாம  மாட்டிக்குவோம்  என  தெரியாதா? 



சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும்  இந்தப்படம்,  ஆனா  ஆண்கள்  பார்க்க  வேண்டிய  படம்,  படத்தில்  திரும்ப  திரும்ப  சமையல்  செய்வது ,  பாத்திரங்கள்  க்ளீன்  செய்வது  என  காட்டும்  காட்சிகள்  அதிகம்  என்பதால்  போர்  அடிக்கக்கூடும்,  ஆனால்  வேணும்னே  தான்  அப்படி  விஷுவலைஸ்  பண்ணி  இருக்காங்க  ரேட்டிங்  3 /. 5 


The Great Indian Kitchen
Movie poster of 2021 malayalam film 'The Great Indian Kitchen'.jpg
Promotional poster
Directed byJeo Baby
Written byJeo Baby
Produced byDijo Augustine
Jomon Jacob
Vishnu Rajan
Sajin S Raj
StarringNimisha Sajayan
Suraj Venjaramoodu
CinematographySalu K. Thomas
Edited byFrancies Louis
Music bySooraj S. Kurup
Mathews Pulickan
Production
companies
Mankind Cinemas
Symmetry Cinemas
Cinema Cooks
Distributed byNeestream
Amazon Prime Video
Release date
  • 15 January 2021
Running time
100 minutes
CountryIndia
LanguageMalayalam

0 comments: